
மதிவதனியின் முக அமைப்புடன் ஒரு பெண்
சென்ற மாதம் 24-ம் திகதி இலங்கை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்குத் தப்பியோடிய அகதிகள் படகொன்றில் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் முக அமைப்புக் கொண்ட ஒரு பெண்ணும் இருந்ததாகவும் இவர் பிரபாகரனின் மகள் துவாரகா இருக்கலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபா மகள் துவாரகா
மூத்த கடற்படை அதிகாரி படகில் இருந்த ஒரு பெண் மதிவதனியின் முக அமைப்பைக் கொண்டிருப்பதாக கருதியபடியால் அவரைத் தீவிர விசாரணக்குட்படுத்தியதாகவும் அப் பெண் தமக்கும் பிரபா குடும்பத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியதாகவும் தமிழர் தேசியப் போராட்டத்திற்கு எதிராக பொய்பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிடும் சக்திகள் ஒரு செய்தியைக் கசிய விட்டுள்ளது.
பிரபா மகள் துவாரகா அயர்லாந்திலாம்!
பிரபா மகள் துவாரகா அயர்லாந்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார் என்றும் அதே பிரச்சார இயந்திரம் செய்தி கசிய விட்டுள்ளது. பிரபா தப்பி வெளிநாடு சென்றார், சூசை கொல்லப்பட்டார், பொட்டு சரணடைந்தார் போன்ற செய்திகளை வெளியிட்ட இத்தீய சக்திகள் அண்மையில் இளம்பருதி தப்பி ஓடுகையில் கொல்லப்பட்டார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.
என்ன பொய் சொல்வது என்று அறை வாடகைக்கு எடுத்து இருந்து யோசிப்பார்களோ? ( றுாம் போட்டு யோசிப்பாங்களோ?)
3 comments:
நாம் ஏன் இவைகள் பாணியில் (பொய் சொல்லாமல் )தற்போதைய இலங்கை அரசின் நிதி நிலைமை போரிட்டுக் கொண்டிருக்கும் /இறந்து போன சிங்கள வீரர்கள் குடும்பங்களுக்கு அரசு வைக்கப் போகும் ஆப்பு .சரணடைந்தால் விடுதலை புலிகள் தரப் போகும் கவ்ரவம்!ஒரு பிரச்சினை வந்தால் அமெரிக்காவில் மீதி வாழ்கையை நடத்த வாய்ப்புள்ள ராஜபக்ஷே போன்றவைகளை சொல்லலாமே!
இவங்க திருந்தவே மாட்டாங்களா?
தமிழ்ச்செல்வன் உயிரோடிருக்கிறார். விரைவில் ரம்புட்டான் மூஞ்சியோன் அறிக்கைவிடுவார்.
Post a Comment