Wednesday, 18 March 2009

ஐநா இலங்கையில் நடக்கும் இனக்கொலையை உன்னிப்பாக கவனிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை உன்னிப்பாகக் கவனிப்பதாகவும் வன்னிப்பகுதியில் நடக்கும் மனித அவலத்தை சொந்தமாக கணீப்பீடு செய்வதாகவும் Inner City Press ஐநாவின் இரகசியத் தகவல்களை அறிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஐநாவின் கணிப்பீட்டின் படி சனவரி 20ம் திகதியில்இருந்து மார்ச் 7ம் திகதிவரை வன்னியில் 2683 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 7241 பொது மக்கள் காயப்பட்டுள்ளனர். அதேவேளை 150,000 இருந்து 190,000 வரையிலான மக்கள் தொகையினர் போர்முனையில் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிககப்பட்டுள்ளது.

இலங்கை அரசுடன் முரண்படுவதை தவிர்க்கும் ஐநா
ஐநாவின் மேற்கூறிய கணிப்பீடுகள் இலங்கை அரசு தெரிவிக்கும் எண்ணிக்கையிலும் இரு மடங்காக இருப்பதால் இலங்கை அரசின் கண்டனத்தையும், ஐநா இல்ங்கையிலிருந்து வெளியேற்றப் படுவதையும் தவிர்க்கும் நோக்கத்துடன் ஐநா இத்தகவல்களை இரகசியமாக வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஜோன் ஹொல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி
ஏற்கனவே ஐநாவின் ஜோன் ஹொல்ம்ஸ் அவர்களை இலக்கை அரசு பயங்கரவாதி என விமர்சித்திருந்தது. இலங்கை மனிதாபிமானப் பணியாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு என்ற உண்மையை அவர் வெளியிட்டதற்கு பதிலடி கொடுக்கு முகமாகவே இலங்கை இப்படித் தெரிவித்திருந்தது.

ஐநாவிற்கு இலங்கையில் மிரட்டல்
இலங்கைப் பேரினவாதிகள் அண்மையில் கொழும்பு ஐநா அலுவலகத்தை சுற்றிவளைக்கப் போவதா மிரட்டல் விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிட வேண்டும். அதேவேளை இலங்கை அரசு Inner City Press இலங்கை தொடர்பாக ஐநாவிடம் கேள்வி எழுப்புவதை தடை செய்யவேண்டும் என்றும் கேட்டிருட்ந்த்தது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...