
காதலிப்பதை நிறுத்திப்பார்
உன்னை மறக்க மாட்டாய்
உலகையும் மறக்க மாட்டாய்
ராத்திரிகள் நிம்மதியாகும்
நித்திரை தானாய் வரும்
கண்ட கவிதைகள் எழுத மாட்டாய் -
உன் தலை எழுத்து தானாக சீராகும்
கடிதங்கள் எழுதிக் காகிதங்கள் கிழியாது
தபால் செலவுக்கு அழத் தேவையில்லை
கண்ணாடி முன் காலம் வீணாகாது
கண்கள் தெளிவாகும் எண்ணம் சீராகும்
காதலிப்பதை நிறுத்திப்பார்
படுக்கை ஒழுங்காயிருக்கும்
தலையணை சீரழியாது
பற்பசை வீணாகாது
சீப்பு பிய்யாது
ஒழுங்காக சாப்பிடுவாய்
தொண்டை நோகாது
வயிறு வலிக்காது
குடல் பிரளாது
இதயம் ஒழுங்காயத் துடிக்கும்
நாடித் துடிப்பு நன்றாயிருக்கம்
படிப்பு ஒழுங்காயப் போகும்
பரீட்சையெல்லாம் சித்தியாகும்
காதலிப்பதை நிறுத்திப்பார்.
No comments:
Post a Comment