Thursday, 19 March 2009
ஐநா தடுமாறுகிறது! தயங்குகிறது! இரட்டை வேடம் போடுகிறது?
ஐநாவை வறுத்தெடுக்கும் Inner City Press
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையினரிடம் பல இக்கட்டான எதிர்பாராத கேள்விகளைத் தொடுத்து Inner City Press ஐநாவின் பல விடயங்களை அம்பலப் படுத்தியுடள்ளது.
ஐநாவின் தடுமாற்றம்
Inner City Press பிலிப்பைன்ஸில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கிறீர்கள் ஆனால் இலங்கையில் நடக்கும் பத்திரிகையாளர் கொலை கைது தொடர்பாக எதுவும் செய்யவில்லை என்று Nicholas Burnett, Assistant Director-General for Education at UNESCO, அவர்களிடம் வினவியபோது பதில் அவரால் உடனடியாகக் கூறமுடியாமல் தடுமாறி பின்னர் பதிலளிப்பதாகக் கூறித்தப்பித்துக் கொண்டார்.
ஐநாவின் தயக்கம்
ஐநா இலங்கையின் தமிழ்மக்கள் கொலையின் எண்ணிக்கை தொடர்பாக முன்பர் கேட்டபோது தாம் பிரேதங்களை எண்ணுவதில்லை என்று பதிலளித்திருந்தது. ஆனால் ஐநாவின் பத்திரத்ததை வெளிப்படுத்திய Inner City Press ஐநாவிடம் எண்ணிக்கை இருந்தும் வெளியிடத் தயங்குவதை அம்பலப்படுத்தியது.
ஐநாவின் இரட்டைவேடம்
சர்வதேச நியமங்களுக்கு முரணான வகையில் இலங்கை அரசு இடைத்தங்கல் முகாம் என்ற போர்வையில் நடாத்தும் வதை முகாம்களுக்கு ஐநா நிதி உதவி வழங்குவதையும் Inner City Press அம்பலப்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment