Monday, 16 March 2009

இந்தியப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடும் உலகத் தமிழர்கள்


ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் இப்போது சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்தின் பயனாகவே சர்வதேச அரங்கத்திற்கு இது வந்துள்ளது. கொட்டும் மழையிலும் குளிரிலும் தமிழ்நாடு முதல் ரொறன்டோ வரை பல்லாயிரக் கணக்கான மக்களின் பலகாலப் போராட்டத்தால் ஐக்கிய நாடுகள் சபைவரை ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் கொண்டு செல்லப் பட்டுள்ளது. சர்வதேச அரசியலை அறிந்தவர் பலரும் இப்போதுஈழத்தமிழரின் பிரச்சனையை அறிவர்.

மெக்சிக்கோவின் ஈழத் தமிழர் இன்னல்களை ஐநாவில் விவாதிக்க எடுத்த முயற்சி ரஷ்யாவின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. ரஷ்யாவின் எதிர்ப்பின் பின்னணியில் இந்தியாவே இருந்தது.

சிங்கள-தமிழ் மோதலை வளர்த்த இந்தியா
1977 இற்குப் பின் இலங்கை அமெரிக்க சார்பானதாக மாறியபோது தமிழ்க்குழுக்கழுக்கு ஆயுதங்களும் பயிற்ச்சிகளும் வழங்கி சிங்கள-தமிழ் மோதலை வளர்த்த இந்தியா இன்று தமிழர்களைக் கொன்றொழிக்க சிங்களவர்களுக்கு பல விதத்திலும் உதவுவது மட்டுமல்ல சர்வதேச அரங்கிலும் பல சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் நம்புகின்றனர். தனது பிராந்திய நலனைப் பாதுகாப்பதற்கு தமிழர்கள் முதுகில் இந்தியா சவாரி செய்தது. இதனால் இன்று உலகத் தமிழர் சர்வதேச அரங்கில் இந்தியாவை எதிர்ப்பதில் பலத்த சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

சிவசங்கர மேனன் – ஹிலரி கிளின்டன் சந்திப்பு
ஹிலரி கிளின்டன் அமெரிக்காவில் பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழர் தரப்பில் பலத்த நம்பிக்கை உருவானது. அண்மையில் சிவசங்கர மேனன் – ஹிலரி கிளின்டன் சந்திப்பு இந்த நம்பிக்கையை தகர்த்தெறிவதாகவே அமைந்திருந்தது.

ஆக மொத்தத்தில் உலகத் தமிழர் ஈழப் பிரச்சினையில் இந்தியப் பேரினவாதத்தின் பலத்த சவாலை எதிர் கொள்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...