சிரியாவில் பல உயிரிழப்புக்களைச் சந்திப்பதால் ஈரானின் படையணியினர் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். ஈரானின் படையான Iranian Revolutionary Guard Corpsஇன் சிறப்புப் படையணியான Quad Forcesஐச் சேர்ந்த 7000 பேர் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாகப் போர் புரியவும் ஆலோசனைகள் வழ்ங்கவும் அனுப்பப்பட்டனர். தற்போது அவர்களின் தொகை 700ஆகக் குறைந்துவிட்ட்டது.
சுனி இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகாக் கொண்ட சிரியாவில் சியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான அலவைற் இனக் குழுமத்தைச் சேர்ந்த பஷார் அல் அசாத் பதவியில் இருக்கின்றார். அவரது உதவியுடன் சியா முஸ்லிம் நாடான ஈரான் லெபனானில் உள்ள சியா முஸ்லிம் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கு தொடர்ந்து உதவி செய்கின்றது. அசாத்தின் ஆட்சி அகற்றப்பட்டால் அது ஈரானுக்கு ஒரு கேந்திரோபாய இழப்பாகும். இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு ஈரானுக்கு சிரியாவில் ஈரானுக்கு ஆதரவான ஆட்சி இருப்பது அவசியமாகின்றது. இந்த கேந்திரோபாய அவசியம் மதவாத ஈரானிய ஆட்சியாளர்களையும் மதசார்பற்ற ஆட்சி செய்து வரும் அல் அசாத்தையும் இணைத்து வைத்துள்ளது.
2011-ம் ஆண்டில் அரபு வசந்தத்துடன் உருவான அசத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையினராவர்கள் சுனி இஸ்லாமியர்கள் என்பதால் மக்களாட்சி வேண்டிச் செய்யப்பட்ட கிளர்ச்சி சிய-சுனி இஸ்லாமியர்களிடையான மோதலாக மாறிவிட்டது. சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என சவுதி அரோபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் ஆகிய நாடுகள் முயல்கின்றன.
சிரியாவில் இரசிய விமானங்கள் தாக்குதல் செய்யத் தொடங்கியதில் இருந்து ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force of the Revolutionary Guard Corps சிரியப் போர் முனையில் பெரும் ஈடுப்பாடு காட்டுகின்றது. 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிரியப் படைகள் பெரும் ஆளணி இழப்புக்களால் நிலை குலைந்து போயிருந்தன. அவர்களது உள்ள வலுவும் குறைந்து போயிருந்தது. இந்த நிலையிலேயே ஈரானும் இரசியாவும் சிரியாவில் அதிக ஈடுபாடுகள் காட்டின. ஈரானியப் படையினரின் சிரிய நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான தகவல்களை ஈரானிய அரசு தன் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை.
ஈரானியப் படைகளுக்கு அண்மைக்காலங்களாக சிரியப் போர் முனையில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. ஈரானில் இருக்கும் கடுமையான செய்திக் கட்டுப்பாடுகளால் ஈரானியப் படைகளுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பான செய்திகள் வெளிவருவதில்லை. ஆனால் ஈரானியப் படையினருக்கு நடக்கும் இறுதிக் கிரியைகளில் இருந்தும் உச்சத்தலைவர் கொமெய்னியின் இரங்கற் செய்திகளில் இருந்தும் ஈரானியப் படைகளுக்கு ஏற்படும் உயிழப்புக்கள் அதிகரித்து வருவதை அவதானிக்கும் போது 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து 67ஈரானியப் படைகள் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகின்ற்து. இது முன்னைய மாதங்களில் ஏற்பட்ட இழப்புகளிலும் பார்க்க அதிகமானதாகவும் இருக்கின்றது.
அமெரிக்க வெளியுறவுக்குப் பொறுப்பான அரசுச் செயலர் ஜோன் கெரி 2015-டிசம்பர் -15-ம் திகதி செவ்வாய்க் கிழமை இரசியா சென்று சிரியா தொடர்பாகா இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் வேற்பாடுகள் மற்றும் ஒற்றுமைஇ தொடர்பாக ஆராயவிருக்கின்றார்.
சிரிய அரச படைகள் போர் புரிந்து கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றாத நிலையில் அவர்களுடன் ஒரு பேச்சு வார்த்தையின் மூலம் ஹொம்ஸ் நகரை சிரிய அரசு பெற்றுக் கொண்டது. அதற்குப் பதிலாக Free Syrian Army உட்பட்ட மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் செய்வதில்லை என்ற உறுதி மொழி வழங்கப்பட்டது. இதை உறுதி செய்யும் முகமாக Free Syrian Armyயின் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு இரசியா விமானக் குண்டு வீச்சு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் இரசியா படைக்கலன்களும் வெடிபொருட்களும் Free Syrian Armyக்கு வழங்கப் போவதாக புட்டீன் அறிவித்துள்ளார். ஹொம்ஸ் நகரில் இரசியா ஒரு விமானத் தளதையும் உருவாக்கவுள்ளது. Free Syrian Army போராளிகளை இதுவரை பயங்கரவாதிகள் என அழைத்து வந்த இரசியா இப்போது அவர்களுடன் இணைந்து ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகப் போராடுவது ஒரு திருப்பு முனையாகும்.
Saturday, 12 December 2015
Tuesday, 8 December 2015
இஸ்லாமிய அரசு அமைப்பின் தசாவதாராம்.
ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பில் முப்பதினாயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. அதில் பதினையாயிரம் பேர் 90இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து போய் ஐ எஸ் அமைப்பில் இணைந்துள்ளார்கள். அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் ஐ எஸ் அமைப்பு தற்போது சிரியாவின் கிழக்குப் பகுதியிலும் ஈராக்கின் மேற்குப் பகுதியிலும் பெரு நிலப்பரப்புக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
வடிவங்களைமாற்றிக் கொண்டிருக்கும் ஐ எஸ்
முதல் அவதாரம் அல் கெய்தாவின் கிளை:
2003-ம் ஆண்டு சதாம் {ஹசேயின் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை வைத்திருக்கின்றார் எனப் பொய் சொல்லி ஈராக்கை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்தன. அப்போது ஈராக்கிற்கான அல் கெய்தா என ஒரு அமைப்பு ஈராக்கில் ஜோர்தானியரான அபு முசாப் அல் ஜர்காவியினால் உருவாக்கப்பட்டு அது அமெரிக்கப்படைகளுக்கு எதிராகப் போராடியது. பின்னர் 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அது அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாக மாற்றப்பட்டது. சுனி முசுலிம் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பவர்களையும் சியா முசுலிம்களையும் கொன்று குவித்தது. இந்த அமைப்பால் ஈராக்கில் சுனி முசுலிம்களுக்கும் சிய முசுலிம்களுக்கும் இடையிலான மோதல் உருவாகி அதில் பல அப்பாவிகள் கொல்லபப்ட்டனர். பின்னர் இந்த அமைப்பு தனது தாக்குதல்களை ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தியது.
இரண்டாவது அவதாரம் ஐ எஸ் ஐ எஸ்:
ஈராக்கிற்கான அல் கெய்தா பின்னர் தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக் கொண்டது. இஸ்லாமிய முறைப்படியான அரசு ஒன்றை தாம் நிறுவுவதாக அவர்கள் பிரகடனப் படுத்தினர். அல் கெய்தா அமெரிக்காவை ஒழித்துக் கட்டிய பின்னர் இஸ்லாமிய அரசு உருவாக்கப் பட வேண்டும் என்ற கொள்கையுடையது. ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய மார்க்கப் படி ஆட்சியை நிறுவி அதன் மூலம் அமெரிக்காவை ஒழித்துக் கட்ட வேண்டும் எனக் கூறுகின்றது. இஸ்லாமிய அரசை உருவாக்கியதாக ஐ எஸ் அமைப்பு அறிவித்த பின்னர் உலகெங்கும் இருந்தும் பல இளையோர்கள் அதில் இணைந்து வருகின்றனர்.
மூன்றாவது அவதாரம் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள்:
சிரியாவில் அரபு வசந்தம் ஆரம்பித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனால் அசாத்திற்கு எதிரான மத்திய கிழக்கு சுனி ஆட்சியாளர்களிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிதியையும் படைக்கலன்களையும் பெற்றது.
நான்காம் அவதாரம்: அல் கெய்தாவிற்கு எதிரான அமைப்பு
சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகப் போராடும் இன்னும் ஒரு அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜப்ரத் அல் நஸ்ராவிற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தது. இதனால் சிரிய உள்நாட்டுப் போர் ஒரு மும்முனைப் போராக மாறியது.
ஐந்தாம் அவதாரம்: மரபுப் படையணி
சிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஈராக்கியப் படையினருக்கு அமெரிக்கா வழங்கியிருந்த பல படைக்கலன்களையும் பார ஊர்திகளையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியதுடன் சதாம் ஹசேயினின் முன்னாள் படைத்துறை வீரர்களையும் நிபுணர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
ஆறாவது அவதாரம்: நிதிவளமிக்க அமைப்பு
ஈராக்கில் ஐ எஸ் கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்து பெரும் நிதியை அவர்கள் வங்கிகளில் இருந்தும் வேறு நிறுவனங்களில் இருந்தும் தமதாக்கிக் கொண்டனர். சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள பல எரிபொருள் உற்பத்தி நிலையங்களும் அவர்கள் வசமானது. மாதம் ஒன்றிற்கு நாற்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் வருமானமாகப் பெறுகின்றார்கள். சிரிய அரச படைகள் கூட அவர்களிடம் இருந்தே தமக்குத் தேவையான எரிபொருளைப் பெறுகின்றன. இதில் முப்பது மில்லியன் அமைப்பிற்காகப் போர் புரிபவர்களுக்கும் பணி புரிபவர்களுக்கும் ஊதியமாக வழங்கப் படுகின்றது.
ஏழாவது (ஐயப்படும்) அவதாரம்; இஸ்ரேலிய உளவாளிகள்
ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்தர் அல் பக்தாதி ஒரு யூதப் பெற்றோர்க்குப் பிறந்தவர் என்றும் அவரது உண்மையான பெயர் எலியட் சைமன் என்றும் அமெரிக்காவில் இருந்து உளவு இரகசியங்களுடன் இரசியாவிற்குத் தப்பிச் சென்றவரான எட்வேர்ட் ஸ்நோடன் தெரிவித்ததாகச் சில செய்திகள் தெரிவித்தன. ஈரனிய உளவுத் துறையும் இதையே நிழற்பட ஆதாரங்களுடன் தெரிவித்தது. கலிபா அரசர் என அழைக்கப்படும் அபு பக்தாதி என்னும் எலியட் சைமன் அரபு பிரதேசங்களைக் கைப்பற்றி பின்னர் அதை இஸ்ரேலுக்குக் கையளித்து ஒரு அகன்ற யூத அரசை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப் படுகின்றது. பலஸ்த்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கோ ஐ எஸ் அமைப்புத் துணை போவதில்லை.
எட்டாவது அவதாரம்: இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொலைக்களம்
அல் கெய்தா அமைப்பு போராளிகளைப் பயிற்றுவித்து மேற்கு நாடுகளுக்கு தாக்குதல்கள் செய்ய அனுப்பும் கொள்கையைக் கொண்டது. ஆனால் ஐ எஸ் அமைப்பு உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிர ஈடுபாடுடையவர்களை தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அழைத்து வைத்துள்ளது. இது மேற்கு நாடுகளில் இருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை அகற்றிச் சுத்தப் படுத்தியுள்ளது. அத்துடன் அத்தனை பேரும் விமானக் குண்டு வீச்சுக்களால் கொல்லப் படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒன்பதாவது அவதாரம்: பல நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள்.
ஈராக்கிலும் சிரியாவிலும் அதிக கவனம் செலுத்தி வந்த ஐ எஸ் அமைப்பு திடீரென இரசியப் பயணிகள் விமானத்தை வானில் வைத்துக் குண்டு வைத்து தகர்த்தும் லெபனானிலும் பிரான்ஸ்லும் தீவிரவாதத் தாக்குதல்களை நடாத்தியும் உலகை உலுப்பியது. அது போதாது என ஐக்கிய அமெரிக்காவிலும் ஓர் இளம் தம்பதியினர் துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களைக் கொன்றவர்கள் ஐ எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என நம்பப்படுகின்றது.
பத்தாவது அவதாரம்: உலகெங்கும் ஐ எஸ்
தற்போது ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடையும் நிலையில் அவர்களால் உலகெங்கும் உள்ள பல நாடுகளிற்குத் தப்பிச்செல்ல முடியும். துருக்கியில் அவர்களுக்கு பேராதரவு உண்டு. பாரிஸ் குண்டு வெடிப்பின் பின்னர் துருக்கியில் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நடந்த நட்புக் காற்பந்தாட்டப் போட்டியின் போது பாரிஸில் கொல்லப் பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய போது மைதானத்தில் இருந்த பலரும் கூச்சலிட்டும் ஐ எஸ்ஸிற்கு ஆதரவாக அல்லாஹு அக்பர் என்று குலரெழுப்பியும் குழப்பம் விளைவித்தனர். துருக்கியினூடாக ஐ எஸ் அமைப்பினரால் தப்பி பல நாடுகளுக்குச் செல்ல முடியும்.
நெரிசலில் தப்பும் ஐ எஸ் அமைப்பு
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் அமைப்பினருக்கு ஒன்றுடன் ஒன்று பல் வேறு வகைகளில் முரண்படும் பல தரப்பினர் தாக்குதல் நடத்துகின்றார்கள். சிரிய அரச படைகளுக்கு எதிராக நூற்றிற்கு மேற்பட்ட அமைப்புக்கள் போராடுகின்றன. ஒரு புறம் சிரிய அரச படைகள், இரசியப் படைகள், ஈரானியப் படைகள், ஹிஸ்புல்லா அமப்பு ஆகியன ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றன. இரசிய விமானத் தாக்குதல்கள் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகச் செய்வதிலும் பார்க்க மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகவும் சிரிய அரச படைகளுக்கு எதிராகவும் செயற்படும் அமைப்புக்களுக்கு எதிராகவே அதிக தாக்குதல்களைச் செய்கின்றன. துருக்கியப் படைகள் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் செய்வதிலும் பார்க்க குர்திஷ் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதில் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். இரசியா குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. அமெரிக்கா கடந்த சில மாதங்களாக குர்திஷ் போராளி அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றது. சிரியாவில் வாழும் துருக்கியர்களின் போராளி அமைப்பு மீது இரசியா தாக்குதல் செய்வது துருக்கியை ஆத்திரப் படுத்தி அது இரசிய விமானத்தைச் சுட்டு விழுத்தியது. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்துவதை விட்டு ஒன்றின் மீது ஒன்று சேறு வீசிக் கொண்டிருக்கின்றன. மேற்காசியாவிலோ வட ஆபிரிக்காவிலோ ஒரு பிரச்சனை என்றால் முதலில் போய் இறங்குவது பிரான்ஸ்தான். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் இதுவரை வெற்றியளிக்கவில்லை.
அமெரிக்கா மேலும் ஐம்பது சிறப்புப் படையினரை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே 3400 அமெரிக்கப் படையினர் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலுக்கு அறிவுரை வழங்க அனுப்பப்பட்டுள்ளனர். சிறப்புப் படையினர் சிறு குழுக்களாகச் சென்று தெரிவு செய்யப் பட்ட இலக்குகள் மீது, தெரிவு செய்யப் பட்ட ஐ எஸ் தலைவர்கள் மீது நன்கு திட்ட மிட்ட துணிகரத் தாக்குதல்கள் செய்வர். . ஆனால் டிசம்பர் முதலாம் திகதி வெளிவந்த வாஷிங்டன் போஸ்ற் தினசரியில் பல ஈராக்கியர்கள் அமெரிக்கா ஐ எஸ் அமைப்பினருக்கு ஆதரவு வழங்குவதாக நம்புகின்றார்கள். பலர் அமெரிக்க உழங்கு வானூர்திகள் ஐ எஸ் அமைப்பினருக்கு படைக்கலன்களும் நீர்ப் போத்தல்களும் வழங்குவதை நேரில் கண்டதாகவும் வாஷிங்டன் போஸ்ற் தெரிவித்துள்ளது. ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்லும் பார ஊர்திகளை அமெரிக்காவால் இலகுவாக விமானத் தாக்குதல் மூலம் அழிக்க முடியும் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதை அமெரிக்கா செய்யவில்லை. இப்போது அந்தப் பார ஊர்திகளுக்கு எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரம் வீசி அதன் ஓட்டுனர்களைத் தப்பி ஓடச் சொல்லி விட்டுத் தாக்குதல் செய்கின்றன. அமெரிக்காவின் நட்பு நாட்டுக் குடிமக்களைக் கொல்லாமல் இருக்கவே இப்படி அமெரிக்கா செய்கின்றதாம்.
இதுவரை காலமும் பிரித்தானியா ஈராக்கில் மட்டும் ஐ எஸ் அமைபினருக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தியது. இத்தாக்குதல்கள் ஈராக்கிய அரசின் வேண்டுதலின் பேரில் நடந்த படியால் பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதி பெறாமல் தாக்குதல் செய்யக் கூடியதாக இருந்தது. சிரிய அரசு அப்படி ஒரு வேண்டுதலை விடுக்காதப் படியால் பிரித்தானியா சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலைச் செய்யவில்லை. டிசம்பர் இரண்டாம் திகதி பத்து மணித்தியால விவாதத்தின் பின்னர் பிரித்தானியப் பாராளமன்றம் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த பிரித்தானியப்பாரளமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வெறும் விமானத் தாக்குதல் மட்டும் ஒரு கரந்தடிப் போர் செய்யும் படையை அழிக்க முடியாது. அதை அடக்க மட்டும் முடியும். ஐ எஸ் அமைப்பினர் தமது தளங்களை வேறு பல இடங்களுக்கு மாற்ற முடியும்.

Monday, 7 December 2015
சீனாவின் உலக நாயகன் கனவும் உலக நாணயக் கனவும்
உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை, மிகப் பெரிய ஏற்றுமதி, மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், இரண்டாவது அதிக படைத்துறைச் செலவு, மிகப் பெரிய படையினர், பெரிய நீர்மின் உற்பத்தி அணை, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு, அதிக அளவு உற்பத்தித்துறை ஆகியவற்றைக் கொண்ட சீனா உலகின் மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் என்றும் அதனது நாணயம் உலக நாணயமாக வரவேண்டும் என்றும் நினைப்பதில் குறை ஒன்றும் இல்லை.
கூடையின் சீனாவின் றென்மின்பி
2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி கூடிய பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு யுவான் என்றும் றென்மின்பி என்றும் அழைக்கப்படும் சீனாவின் நாணயத்தை நிதியத்தின் நாணயக் கூடைக்குள் அனுமதித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பு நாணயங்கள் நாணயக் கூடை எனப்படும். இந்த அனுமதி 2016-ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும். சீன நாணயத்தை நாணயக் கூடைக்குள் அனுமதித்தது பெருமிதமடைய வேண்டிய வெற்றி என சீன ஆட்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஒரு வளர்முக நாடு முதற்தடவையாக இந்த நிலையை எட்டியுள்ளது. இதுவரை முதலாளித்துவ நாடுகளே இந்த நிலையைப் பெற்றிருந்தன. முதற்தடவையாக ஓர் அரச முதலாளித்துவ நாடு இந்த நிலையை எட்டியுள்ளது.
பன்னாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பு
பன்னாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பாக அமெரிக்க டொலரும் தங்கமும் இருந்தன. பின்னர் 1969-ம் ஆண்டு சிறப்புப் பணம்பெறும் உரிமை (special drawing rights ) உருவாக்கப் பட்டது. நிதியத்தின் உறுப்பு நாடுகள் இதிலிருந்து கடன் பெறலாம். சிறப்புப் பெறும் உரிமையில் அமெரிக்க டொலர், பிரித்தானியப் பவுண், பிரெஞ்சு பிராங், மேற்கு ஜேர்மனியின் மார்க் ஆகிய நாணயங்களே முக்கிய பங்கு வகித்தன. இந்த நாணயங்களுக்குக் கொடுக்கப் படும் பாரமதிப்பு சிறப்புப் பணம்பெறும் உரிமத்தின் பெறுமதியைக் தீர்மானிக்கும். தற்போது அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானியப் பவுண், ஜப்பானிய யென் ஆகிய நான்கு நாணயங்களே சிறப்புப் பணம்பெறும் உரிமையின் மதிப்பை நிர்ணயிக்கும் கூடை நாணயங்களாக இருக்கின்றன 2016-ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து சீனாவின் யுவான் ஐந்தாவது நாணயமாக இணைகின்றது. சிறப்புப் பணம் பெறும் உரிமை ஒரு நாணயமாகக் கருதப்படா விட்டாலும் அது ஒரு நாணயமாகச் செயற்படுவதுண்டு. எகிப்தின் சூயஸ் கால்வாயினூடாகச் செல்லும் கப்பல்களுக்கான கட்டணம் சிறப்புப் பணம்பெறும் உரிமையிலேயே அறவிடப்படுகின்றது. அமெரிக்க டொலர் 41.73விழுக்காடும், யூரோ 30.93 விழுக்காடும், சீன றென்மின்பி (அல்லது யுவான்) 10.92விழுக்காடும் ஜப்பானிய யென் 8.33விழுக்காடும் பிரித்தானியப் பவுண் 8.09விழுக்காடும் நாணயக் கூடையில் இருந்து சிறப்புப் பணம்பெறும் உரிமையின் பெறுமதியைத் தீர்மானிக்கும்.
யென்னையும் பவுணையும் பின் தள்ளிய சீன யுவான்
2007-ம் ஆண்டில் இருந்து சீனா உலகிலேயே அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கின்றது. உலக அரங்கில் சீனாவின் வர்த்தகம் அதிகமாக நடைபெறுவதால் அதன் பாவனை பிரித்தானியப் பவுணிலும் ஜப்பானிய யென்னிலும் பார்க்க அதிகரித்துள்ளது. சீன நாணயமான யுவான்(றென்மின்பி) உலகில் நான்காவது அதிகம் பாவிக்கப் படும் நாணயமாக இப்பொது இருக்கின்றது. இதனால் இந்த இரு நாணயங்களுக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நாணயக் கூடைக்குள் கொடுக்கப் பட்டுள்ள பாரமதிப்பு குறைக்கப் பட்டுள்ளது. இனி உலகில் மற்ற நிதி நிறுவனங்களும் நடுவண் வங்கிகளும் தமது நாணய காப்பொதுக்க வைப்பீட்டை யுவானில் செய்யும் என சீனா எதிர்பார்க்கின்றது. இதுவரைகாலமும் அமெரிக்க டொலரிலேயே பெருமளவு நாணய காப்பொதுக்க வைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. சீனா தனது நாணயத்தை உலகமயமாக்கும் முயற்ச்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவும் சீன ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள். மேலும் இது சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு கிடைத்த உலக அங்கீகாரம் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள்.
நிபந்தனையில் விட்டுக் கொடுத்த நாணய நிதியம்
ஒரு நாணயம் பன்னாட்டு நிதியத்தின் நாணயக் கூடைக்குள் சேர்க்கப்படுவதாயின் அந்த நாணயம் முக்கியமாக இரண்டு நிபந்தனைகளைத் திருப்தி செய்ய வேண்டும். முதலாவதாக அந்த நாணயம் பரவலாக உலக அரங்கில் பாவிக்கப் படவேண்டும், இரண்டாவதாக அந்த நாணயம் சுதந்திரமாகப் பாவிக்கப் படக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த நாணயத்தின் நாட்டின் மொத்தப் பொருளாதார் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படும். பரவலாகப் பாவிக்கப் படும் நிலையை சீன நாணயம் பல ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று விட்டது. உலகில் 120 நாடுகளின் பெரிய வர்தகப் பங்காளியாக சீனா இருக்கின்றது. இரண்டாவது நிபந்தனையான சுதந்திரமாகப் பாவிக்கக்க் கூடிய தன்மை பற்றி வாதப் பிரதிவாதங்கள் நிலவுகின்றன. 2010-ம் ஆண்டு சீனா பன்னாட்டு நாணய நிதியத்தின் நாணயக் கூடையில் தனது நாணயத்தையும் இணைக்க முயன்ற போது அதன் யுவான் நாணயத்தை சுதந்திரமாக மாற்ற அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதிக்கின்றது என ஐக்கிய அமெரிக்காவும் ஜப்பானும் எதிர்த்தன. அதனால் யுவான் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு சீனா தனது நாணயத்தின் பாவனையின் மீது உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இனிவரும் மாதங்களில் சீனா தனது நாணயத்தின் பாவனைமீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த வேண்டி வரும் அத்துடன் சீனா தனது நாணயத்தின் மதிப்பைக் குறைந்து செல்ல அனுமதிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஆனாலும் சீனா தனது நாணயம் மற்ற நாணயங்களாக மாற்றப் படுவதையோ அல்லது மற்ற நாணயங்கள் யுவானாக மாற்றப்படுவதையோ நூறு விழுக்காடு சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப் போவதில்லை. சுதந்திரமாக மாற்றப்படும் தன்மை வரும் போது பல சீனச் செல்வந்தர்கள் சீனாவில் இருந்து பெருமளவு நிதியுடன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளில் குடியேறுவார்கள். ஏற்கனவே சீனாவில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு களவாக 600பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வெளியேறுகின்றது. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இது மேலும் அதிகரிக்கும் போது சீனாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு வீழ்ச்சியடையும். சீன அதிபர் ஜி ஜின்பிங் தமது நாணயம் தொடர்பான தமது கொள்கையில் பெரும் மாற்றம் வரப் போவதில்லை என்றும் ஆனால் தமது பொருளாதாரச் சீர் திருத்தங்கள் தொடர்ந்தும் செய்யப்படும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
சீனா இலகு கடன் பெறலாம்
சீன நாணயத்திற்கு கொடுக்கப் பட்டுள்ள பாரமதிப்பால் அது குறைந்த வட்டிக்கு பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறலாம். இதனால் சீனா தனது உட்கட்டுமான அபிவிருத்திக்குத் தேவையான பணத்தை பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து கடனாகப் பெறலாம். கட்ந்த பல ஆண்டுகளாக சீனாவின் ஏற்றுமதியால் கிடைத்த மிகையான அமெரிக்க டொலர்களை அமெரிக்காவின் கடன் முறிகளை வாங்குவதிலும் சீனா ஆபிரிக்க நாடுகளில் விவசாய நிலங்களை வாங்குவதிலும் பாக்கிஸ்த்தானிலும் இலங்கையிலும் துறைமுகங்களைக் கட்டுவதிலும் நியூசிலாந்தில் பாற்பண்ணைகளை வாங்குவதிலும் கனடாவில் எரிபொருள் நிறுவனங்களை வாங்குவதிலும் ஐஸ்லாந்தின் வடதுருவப் பிரதேசத்தில் பனிப்பாறைகளை ஆய்வு செய்வதிலும் செலவழித்தது. அத்துடன் புதிய அபிவிருந்தி வங்கி, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி எனப் பன்னாட்டு வங்கிகளையும் ஆரம்பித்தது. மேலும் பட்டுப்பாதை, புதியபட்டுப்பாதை, பட்டுப்பதையை ஒட்டிய பொருளாதார வலயம் எனவும் பெரும் நிதிகளை முதலீடு செய்தது. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 272விழுக்காடாக இப்போது இருக்கின்றது. இந்தக் கடனில் பெரும்பான்மையானவை சீனாவின் கூட்டாண்மைகளின் கடனாகும். அதில் பெரும் பகுதி அமெரிக்க டொலரில் பெற்ற கடனாகும். அமெரிக்கா இந்த மாதம் தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. அப்படிச் செய்யும் போது சீனா யுவானிற்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இது சீனாவில் டொலரில் கடன் பட்ட பெரு நிறுவனங்களைக் கலங்கச் செய்யும். சீனா தனது நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாக்க தன்னிடமுள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பான் 3.5ரில்லிய்யன் டொலரை விற்று யுவானை வங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் கரைக்கும்.
கனவே கலையாதே
சீனா உலகின் தன்னிகரில்லாத பெரு வல்லரசாக வேண்டும் என்ற கனவுடனும் சீன நாணயம் உலக நாணயமாக்கப் பட வேண்டும் என்ற கனவுடனும் சீன ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். உலக வர்த்தகத்தில் தற்போது 2.79 விழுக்காடு மட்டுமே சீன நாணயத்தில் செய்யப்படுகின்றது. சீனாவின் சொந்த வர்த்தகத்தில் 24.6 விழுக்காடு மட்டுமே சீன நாணயத்தில் செய்யப் படுகின்றது. சீன நாணயம் உலகில் மற்ற எல்லா நாணயங்களையும் விட அதிக அளவு பாவிக்கப் படுவதற்கு சீன இன்னும் மிக நீண்ட தூரம் போக வேண்டி இருக்கின்றது. சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டுக் கடன் முறிகளில் முதலீடு செய்வதற்குக் கட்டுப்பாட்டு உண்டு. சீன பல நாடுகளுடன் தனது வர்த்தகத்தை அமெரிக்க டொலர்களில் செய்யாமல் யுவான் நாணயத்தில் செய்வதற்கான பேச்சு வார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
ரெம்பத்தூரம் போக வேண்டும்
உலகின் முதற்தர வல்லரசு ஆவதற்கு அதிக அளவு படையினரும் படைக்கலன்களும் இருந்தால் மட்டும் போதாது. அடிக்கடி போரில் ஈடுபட்டு களமுனை அனுபவம் உள்ள படையினர் இருக்க வேண்டும். உலகெங்கும் செயற்படும் உளவுத் துறை இருக்க வேண்டும். பல நாடுகளுடன் நட்பும் படைத்துறை ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். பல நாடுகளில் தேவை ஏற்படின் ஆட்சி மாற்றம் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்திலும் பர்மா எனப்படும் மியன்மாரில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மாற்றத்திலும் சீனா ஓரம் கட்டுப்பட்டுவிட்டது என எண்ணத் தோன்றுகின்றது.நாடுகளில் ஆட்சி மாற்றம் கொண்டு வரக்கூடிய ஒரு நிலையைச் சீனா அடைய இன்னும் பல தூரம் சீனா பல தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியும் இருக்கும்.

Wednesday, 25 November 2015
இரசிய விமானத்தை ஏன் துருக்கி சுட்டு விழுத்தியது?
சிரிய உள்நாட்டுப் போரின் புவிசார் அரசியல் போட்டியின் ஓர் அம்சமாக இரசியாவின் SU-24 போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. துருக்கிய வான் பரப்பினுள் இரசிய விமானங்கள் பறப்பதற்கு எதிரான ஆட்சேபனை 2015 செப்டம்பர் மாதம் இரசியப் படையினர் சிரியாவில் இறங்கியதில் இருந்தே துருக்கியால் தெரிவிக்கப் பட்டுள்ளன. வெறும் வான் வெளி அத்து மீறல்களுக்காக மட்டும் இரசிய விமானம் சுட்டு வீழ்த்தப் படவில்லை.
துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையிலான புவிசார் ஆதிக்கப் போட்டி பல நூற்றாண்டுகள் நீண்டது. போல்கன் பிராந்தியம் முதல் கருங்கடல் வரை பரந்தது. இரசியா கிறிமியா்வைத் தன்னுடன் இணைத்ததில் உக்ரேனுக்க்குக்கு அடுத்த படியாக அதிக அதிருப்தி அடைந்த நாடு துருக்கியே. கிரிமியாவில் வாழும் துருக்கி மொழி பேசும் டார்ட்டர் சமூககத்தவர்களை இரசியா நடத்தும் விதமும் துருக்கியை ஆத்திரமடைய வைத்தது. பல டார்ட்டர் அறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் கிறிமியாவில் இருந்து நாடுகடத்தப் பட்டுள்ளனர்.1516-ம் ஆண்டில் இருந்து 1923-ம் ஆண்டுவரை சிரியா துருக்கியின் உதுமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு நாடாகும். தற்போது உக்ரேனில் இருந்து இரசியா பறிக்க முயலும் டொன்பாஸ் பிரதேசமும் துருக்கியின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசமாகும்.
சிரியாவில் 22 இலட்சம் முதல் 30இலட்சம் வரையிலான துருக்கியர்கள் வசிக்கின்றார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல துருக்கியர்கள் அரபுக்காளாக மாற்றப்படுவாதால் உண்மையான துருக்கியர் தொகையை அறிய முடியவில்லை. சிரியாவில் முதல் படைக்கலப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் துருக்கியர்களே. 2011-ம் ஆண்டு உருவான அரபு வசந்தத்தை ஒட்டி சிரியாவில் உருவான உள்நாட்டுப் போரை குர்திஷ் மக்களைப் போலவே சிரியாவில் வாழும் துருக்கியர்களும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு துருக்கியிடமிருந்து படைக்கல உதவி பண உதவி கிடைக்கின்றன. 1st Coastal Division, the 2nd Coastal Brigade and the Sham Brigade ஆகியவை சிரியாவில் வாழும் துருக்கியர்களுக்காகப் போராடும் முக்கிய அமைப்புகளாகும்.
சிரியாவில் உள்ள துருக்கியர்களில் அதிகமானோர் லதக்கியா மாகாணத்தில் வாழ்கின்றார்கள். அங்கு அதிபர் பஷார் அல் அசாத்தின் இனக் குழுமமான அலவைற் மக்களே பெரும்பான்மையினராகும். லதக்கியாவிலேயே இரசியாவின் படையினர் போய் இறங்கியுள்ளனர். அங்கிருந்தே இரசியப் போர் விமானங்கள் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இரசியப் போர்விமானங்கள் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதிலும் பார்க்க சிரியாவில் உள்ள அமெரிக்கா ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் மீது துருக்கியர்கள் மீதும் அதிக தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். இவர்கள் வசம் அமெரிக்காவின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் பல உள்ளன. இவை சிரிய அரச படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. அதனால் இந்த ஏவுகணைகளைக் கொண்ட இடங்களில் இரசியா அதிக தாக்குதல்களை மேற்கொள்கின்றன. இதனால் பல அப்பாவி துருக்கியர்கள் சிரியாவில் கொல்லப் படுவது துருக்கிய மக்களை ஆத்திரப் படுத்துகின்றது . 2015 நவமபர் 22-ம் திகதி துருக்கியில் உள்ள இரசியத் தூதுவரை அழைத்த துருக்கிய அரசு லதக்கியா மாகாணத்தில் வாழும் துருக்கியர்கள் மீது இரசிய விமானங்கள் குண்டு வீசுவதற்கு தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. பின்னர் 24-ம் திகதி இரசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது. வெறும் வான் வெளி அத்து மீறல் மட்டும் இரசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதற்குக் காரணம் அல்ல.
சிரியாவில் உள்ள துருக்கியப் போராளிகளுக்கு அமெரிக்காவின் சிஐஏயும் ஆதரவு வழங்கி வருகின்றது. ஆனால் அசாத்தின் எதிரிகள் எல்லோரும் ஐ எஸ் அமைப்பின் ஆதரவாளர்களே என்பதே சிரியாவின் நிலைப்பாடு. இரசியாவும் அதையே கருதுகின்றது. இரசியாவிற்கு மத்தியதரைக் கடலில் உள்ள ஒரே பிடி சிரியாவாகும். அதை இழக்க அது விரும்பவில்லை. மத்திய தரைக்கடலில் ஒரு வல்லரசாக வேண்டும் சிரியாவில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் நிலப்பரப்புகளை அபகரிக்க வேண்ட்டும் என்பது துருக்கியின் நீண்ட நாள் கனவு.
துருக்கி சுட்டு வீழ்த்திய இரசியாவின் எஸ்யூ-24 போர் விமானங்கள் 23மில்லி மீட்டர் துப்பாக்கிகள் மூன்று பொருத்தப்பட்டவை. அத்துடன் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நான்கு லேசர் வழிகாட்டி ஏவுகணைகளையும் கொண்டவை. தேவை ஏற்படின் தொலைக்காட்சி வழிகாட்டி ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லக் கூடியவை. அதில் சிறந்த ரடார் வசதிகளும் உண்டு. இப்படிப் பட்ட இரசிய விமானத்தை அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானத்தைப் பாவித்து துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. விமானத்தில் இருந்து இரு விமானிகள் பரசூட்டின் உதவியுடன் தரையிறங்க முற்பட்ட வேளையில் துருக்கிக்கு ஆதரவான சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களில் ஒருவரை ஜெனிவா உடன்படைக்கைக்கு மாறாகச் சுட்டுக் கொன்றனர். மற்றவருக்கு என்ன நடந்தது என அறியச் சென்ற இரசிய எம் ஐ - 17 உழங்கு வானூர்தி சிரியாவில் உள்ள துருக்கியர் படையணியால் அமெரிக்கா வழங்கிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவின் F-16 போர் விமானங்கள் 1978-ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கின்றன. பல தடவைகள் இவை மேம்படுத்தப் பட்டன. The Fighting Falcon என்னும் குறியீட்டுப் பெயரால் அழைக்கப் படும் F-16 போர் விமானத்தை அதன் ஒட்டிகள் அது பாம்பின் தோற்றத்தில் இருப்பதால் அதை Viper என அழைக்கின்றனர். விமான ஓட்டிகளின் பார்வை வீச்சம் அதிக முள்ள இந்தப் போர் விமானத்தில் M61 Vulcan cannon என்னும் சுடுகலனும் 11 பல்வேறு தரப்பட்ட ஏவுகணைகள் பொருத்தக் கூடிய வசதியும் உண்டு. எல்லாக் காலநிலையிலும் செயற்படக்கூடிய F-16 எதிரி இலக்குகளை இலகுவாக அறிவதுடன் எதிரி விமானங்களையும் விரைவில் இனம் கண்டு தாக்கும் திறன் கொண்டது. புவியீர்ப்பு விசையின் எட்டு மடங்கு உந்து வலுவைக் கொண்டதால் இது மற்ற எல்லா விமானங்களிலும் பார்க்க மேன்மையானதாகக் கருதப் படுகின்றது.
இரசியாவின் F-24 விமானம் மணித்தியாலத்திற்கு 1315கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது. துருக்கியின் எல்லையை அண்மித்தவுடன் அதன் விமானி திசை திருப்பும் செய்கைகளைச் செய்ய முற்பட முன்னர் அது சில கிலோ மீட்டர்களைக் கடந்துவிடும். விழுத்தப் பட்ட விமானத்தின் வழிகாட்டி தனது விமானத்திற்கு எந்த வித எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றார். ஆனால் துருக்கி பத்துத் தடவைகள் எச்சரிகைகள் விடப்பட்டதாகச் சொல்கின்ற்து.
இரசிய விமானத்தை அமெரிக்காவின் ஆசி இல்லாமால் துருக்கி சுட்டு வீழ்த்தியிருக்க மாட்டாது. சிரியாவில் உள்ள துருக்கியர்களின் நிலைகள் மீது இரசியப் போர் விமானங்கள் அநியாயத்திற்குத் தாக்குதல் செய்கின்றன எனக் கருதும் துருக்கியர்களுக்கு இருக்கும் ஆத்திரத்தை அமெரிக்கா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது எனக் கருத இடமுண்டு. இரசிய அதிபர் விளடிமீன் புட்டீனிற்கு ஒரு இழப்பீட்டைச் செய்வதன் மூலம் இரசியர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கைச் சரிக்க தக்க தருணத்தை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு உரிய இடம் சிரியாவே.
இரசியாவிற்குப் பக்கத்தில் உள்ள உக்ரேனில் செய்ய முடியாத ஒன்று தொலைவில் உள்ள சிரியாவில் வைத்துச் செய்யப் பட்டுள்ளது.

Tuesday, 17 November 2015
அமெரிக்க கடற் படை உருவாக்கும் வான்வழி அடுத்த தலைமுறை குமையி (next generation jammer)
அமெரிக்க வான் படையினரும் Raytheon என்னும் தொழில் நுட்ப நிறுவனமும் இணைந்து இலத்திரனியல் போர் முறையின் முக்கிய அம்சமாக அடுத்த தலைமுறை குமையியை (next generation jammer) உருவாக்குவதற்கான முதற்படி வடிவமைப்பு வேலைகளை வெற்றிகரமாக முடித்துள்ளன. இது ஒரு வான்வழி இலத்திரனியம் தாக்குதல் முறைமையாகும் ( airborne electronic attack system)
இரு வகையான குமையிகள் உள்ளன. முதலாவது பொறிமுறைக் குமையிகள்(mehcanical jammers) இரண்டாவது இலத்திரனியல் குமையிகள் (elctronic jammers). பொறிமுறைக் குமையிகள்.
பொறிமுறைக் குமையிகள் எதிரியின் கதுவிகளை(Radars) பிழையான வகையில் செயற்படச் செய்யும்.
இலத்திரனியற் குமையிகள் எதிரியின் கதுவிகளிற்கு(Radars) செறிவான வலுமிக்க சமிக்ஞைகளை அனுப்பி அவற்றைச் செயலிழக்கச் செய்யும்.
அடுத்த தலைமுறை இலத்திரனிய்ற் குமையிகள் எதிரி விமானங்களுக்கு ஒரு போலியான விமானத்தை உணரவைக்கும் (creating "ghost" aircraft)
Forbes இல் வெளிவந்த கருத்தின்படி The Next Generation Jammer advances the day when all of the frequencies on the spectrum currently used for communication and sensing will be subject to management and manipulation by U.S. warfighters. If ever there was an example of high-leverage innovation in military technology, this is it.

Sunday, 15 November 2015
பிரெஞ்சுத் தலைநகரில் நடந்த தாக்குதலின் பின்னணியும் பின் விளைவுகளும்.
பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக்கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும் என்ற வேளையில் பரிஸில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல்கள் உலகத்தை உலுப்பியுள்ளது. ஐரோப்பாவில் ஐந்து கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். இது ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் வெற்றி பெறுவதற்கு அல்லா வழிசெய்வார் என்பதைக் காட்டுகின்றது என்முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி சொன்னது நினைவிற்கு வருகின்றது.
சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஈராக்கின் மேற்கிலும் வடக்கிலும் உள்ள நகங்களில் செயற்பட்டு வந்த ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப்பட்டு வந்த இஸ்லாமிய அரசு அமைப்பு தனது செயற்பாட்டை உலகெங்கும் விரிவு படுத்தப் போகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல பாகங்களிலும் இருந்து 30,000 போராளிகளைத் திரட்டிய ஐ எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது தனது போராளிகளை உலகெங்கும் அனுப்பித் தாக்குதல் செய்ய முடியும்.
ஒட்டுக்கேட்பவர்களை ஏமாற்றினார்கள்
பல்வேறு உளவுத் துறையினர் தம்மை ஒட்டுக் கேட்பார்கள் என்பதை உணர்ந்த ஐ எஸ் தாக்குதலாளிகள் தமது தொடர்பாடல்களை சோனியின் PlayStation 4 ஊடாக தமது தாக்குதல் திட்டங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். தமக்கு எதிரான உளவாளிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு அவர்கள் புதுப் புது முறைகளைக் கையாள்கின்றார்கள்.
ஐக்கிய அமெரிக்கா இரண்டு ஆண்டுகளாக ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றது இரசியா தாக்குதல் தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் இரசிய விமானம் எகிப்தில் விழுத்தப்பட்டது எப்படி? இது அமெரிக்காவின் சதியா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சி எஸ் போராளிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் செய்யும் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரத்தில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. சிரியாவில் ஐ எஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்தது. அம்ஸ்ரேடம் நகரில் இருந்து பரிஸுக்குச் செல்லும் தொடரூந்தில் ஐ எஸ் போராளி என ஐயப் படும் ஒருவர் குண்டு வைத்ததால் அவர்களுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் ஆரம்பித்தது.
பரிசின் பயங்கர இரவு
9.20 -கால்பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் - ஒருவர் கொலை.
9-25 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - 15 பேர் கொலை
9-30 - கால் பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் 9 பேர் கொலை.
9-32 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொலை,
9-36 - உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொலை
9-40 - உணவகம் ஒன்றில் தற்கொடைத் தாக்குதல். காயம் மட்டும்.
9-40 - இசை அரங்கில் துப்பாக்கிச் சூடும் தற்கொடைத் தாக்குதலும் 89பேர் கொலை
9-53 - கால்பந்தட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் காயம் மட்டுமேஎ
மொத்தமாக இருபது பேர் தாக்குதலில் சம்பத்தப் பட்டுள்ளார்கள் என நம்பப்படுகின்றது. தாக்குதலாளிகள் எவரும் இதுவரை உயிருடன் பிடிபடாதது அவர்களுக்கு வெற்றியே.தாக்குதலில் மூன்று சகோதரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என நம்பப்படுகின்றது.
பிரெஞ்சு அதிபரை இலக்கு வைத்தனர்.
1988-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகர் Lockerbieஇல் அமெரிக்க விமானம் 258 பயணிகளுடன் குண்டு வெடிப்பால் தகர்க்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 3000 பேர் கொல்லப்பட்டனர். 2004-ம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நான்கு தொடரூந்துக்களில் ஒரே நேரட்தில் நடந்த குண்டு வெடிப்புக்களில் 191 பேர் கொல்லப்பட்டு 1841பேர் காயப்பட்டனர். 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் இலண்டனில் நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 42 பேர் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் மூவர் கொல்லப்பட்டனர். இவை எல்லாவற்றிலும் பார்க்க பரிஸில் நடந்த தாக்குதல் மக்களை அதிக அச்சமடைய வைத்துள்ளது. பிரெஞ்சு அதிபர் இருந்த உதைபந்தாட்ட மைதானத்தினுள் தாக்குதல் செய்ய எடுத்த முயற்ச்சி தீவிரவாதிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர் என எண்ணத் தோன்றுகின்றது. மூன்று தடவைகள் மைதானத்திற்குள் நுழைய முயன்ற தற்கொடையாளர்கள் தடுக்கப்பட்டதால் வாசலில் வைத்தே அவர்கள் தமது பட்டிக் குண்டுகளை வெடிக்க வைத்தனர். மைதானத்தினில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருந்த படியால் குண்டு வைப்பவர்களால் உள்ளே செல்ல முடியாமல் போனது. அதனால் அவர்கள் வெளியில் குண்டை வெடிக்க வைத்தனர். இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times பத்திரிகையில் 2007-ம் இலண்டலில் செய்யப் பட்ட குண்டுவெடிப்பின் போது இலண்டன் மக்கள் கலவரவடையாமல் இருந்ததாகவும் ஆனால் பரிஸ் மக்கள் கலவரமடைந்துள்ளனர் என்றும் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் பரிஸில் இருந்து எழுதிய கட்டுரையாளர் பரிஸ் ஒரு உன்னதமான நகர் என்றும் தானும் தனது பிள்ளைகளும் அங்கு வாழ்வதை விரும்பியதாகவும் ஆனால் பரிஸ் ஒரு பாதுகாப்பான இடமாக இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் பிரித்தானிய ஊடகங்கள் பிரெஞ்சு மக்கள் மீது சேறு வீசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எப்போதும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். 1999-செஸ்னியப் போராளிகள் மொஸ்கோவில் செய்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அவர்களைத் தொலைத்துக் கட்டுவேன் என விளடிமீர் புட்டீன் வெகுண்டு எழுந்தார். இரசியர்கள் கலக்கமடையவில்லை.
பிரான்ஸின் உளவுத்துறையின் வலுவின்மையா?
பல ஊடகங்கள் பிரான்ஸின் உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்கள் பிரான்ஸில் வாழ்கின்றார்கள். பிரித்தானியா ஒரு தீவாக இருப்பதாலும் அமெரிக்கா மேற்காசியாவில் இருந்து தொலைவில் இருப்பதாலும் தீவிரவாதிகளுக்கு அங்கு நுழைவது சிரமம். பிரான்ஸில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. இருந்தும் இரசியாவில் இருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பரிஸிற்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்களைக் கொண்ட பிரான்ஸில் இருந்துதான் அதிக அளவு போராளிகள் ஐ எஸ்ஸில் இணைந்து கொண்டனர். பிரான்ஸின் படை முகாம்களில் இருந்து ஐ எஸ் போராளிகள் பல வெடிபொருட்களைத் திருடியுள்ளனர். இதில் 200 வெடிக்கவைக்கும் கருவிகள்(detonators) உள்ளடங்கும்.
சதிக் கோட்பாடு
அமெரிக்க உளவுத்துறை சிஐஏயின் முன்னாள் இயக்குனர் John Brennan, பிரெஞ்சு உளவுத்துறை DGSE இயக்குனர் Bernard Bajolet, பிரித்தானிய உளவுத்துறை MI6 இன் உயரதிகாரி John Sawers , இஸ்ரேலிய உளவுத்துறை DMIஇன் முன்னாள் இயக்குனரும் இஸ்ரேலின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான, Yaacov Amidror ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 2015 ஒக்டோபர் 27-ம் திகதி மேற்காசியாவின்(மத்திய கிழக்கின்) எதிர்காலம் தொடர்பாக ஒரு மாநாட்டை நடாத்தினர். இந்த இரகசியக் கூட்டம் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் வதிவிடத்தில் நடந்தது. இந்த இரகசியக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என சில சதிக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இனி மேற்காசியாவில் நடக்க விருக்கும் படை நடவடிக்கைகளுக்கும் இந்தக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கின்றது என நம்பப்படுகின்றது.பரிஸ் நகரம் பாதுகாக்கப்படுவதாயின் ஐ எஸ் ஒழித்துக் கட்டப்படவேண்டும் என்ற தலைப்பில் நியூயோர்க் ரைம்ஸ்ஸில் வந்த கட்டுரை நடக்கப் போவதற்குக் கட்டியம் கூறுகின்றது.
குடிகெடுத்த குடியேற்ற ஆட்சியாளர்கள்
முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் பிரித்தானியாவும் The Sykes–Picot Agreement இன்படி வட ஆபிரிக்க, மேற்காசிய நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டன. அதன் முலாவது நோக்கம் உதுமானையப் பேரரசு போல் இனி ஓர் இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது. கிறிஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட லெபனான் என்ற ஒரு நாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எகிப்து, லிபி்யா போன்ற நாடுகளின் எல்லைகள் நேர் கோடுகளாக இருப்பதற்கு இதுதான் காரணம். இனப் பரம்பலைக் கருத்தில் கொள்ளாமல் தேச எல்லை களை அடிமட்டமும் பென்சிலும் வைத்து பூகோளப்படத்தில் வரைந்தனர். இது அங்கு பல பிரச்சனைகளை உருவாக்கியது. ஐ எஸ் அமைப்பு அந்த எல்லைகளை மீளமைக்க முயல்கின்றது. ஈழத் தமிழர்கள் தமது ஆட்சிய் உரிமையை இழந்தமைக்கு ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியாளர்களைக் குற்றம் சுமத்துகின்றோமோ அத்தனைக்கும் மேலாக பிரான்ஸின் மீது குற்றம் சுமத்த பல இஸ்லாமிய இனக் குழுமங்களுக்கு உரிமை உண்டு. சில இஸ்லாமியர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கள்:-
பின் விளைவுகள்
பரிஸில் நவமபர் 30-ம் திகதி முதல் நடக்கவிருக்கும் உலகத்தலைவர்கள் பங்கு கொள்ளும் உலகச் சூழல் தொடர்பான மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். 2016-ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளிடையிலான கால்பந்தாட்டப் போட்டி பிரான்சில் நடக்கவிருக்கின்றது. பரிஸ் தாக்குதலால் முதலில் பாதிக்கப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவுக் கொள்கையே. தாக்குதலாளிகளுள் ஒருவர் சிரியாவில் இருந்து புகலிடத் தஞ்சம் கோருபவராக வந்தவர் என நம்பப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தேசியவாதக் கட்சிகளிற்கான ஆதரவு அதிகரிக்கும். நேட்டோவின் உறுப்பு நாடான பிரான்ஸின் மீது நடந்த தாக்குதலை மற்ற 27 நேட்டொ நாடுகளும் தம்மீது நடந்த தாக்குதல் போல் கருதிச் செயற்பட வேண்டும். பிரான்ஸிற்கு அவை இனி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இது நேட்டோ உடன்படிக்கையின் முக்கிய அம்சம். நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி இதுவரை காலமும் ஐ எஸ் போராளிகளுக்கு மறை முகமாக உதவி வந்தது. அதில் இணைவதற்கு போராளிகள் உலகெங்கிலும் இருந்து துருக்கி ஊடாகவே செல்கின்றனர். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய துருக்கி ஒத்துழைக்கத் தயக்கம் காட்டி வந்தது. இனி அது முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளின் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தயக்கம் காட்டியது. அதற்கான அனுமதி பிரித்தானியப் பாராளமன்றத்தில் கிடைக்காது என பிரித்தானிய வெளியுறவுத் துறை கணிப்பிட்டது. அதனால் அந்த முன்மொழிவு பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை. ஏற்கனவே நேட்டோ உடன்படைக்கையைப் பிரித்தானியப் பாராளமன்றம் ஏற்றுக் கொண்டபடியால் பிரித்தனியப் பாராளமன்றத்தின் சம்மதம் பெறாமல் பிரித்தானியாவால் சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய முடியும்.மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்புக்கான செலவுகளையும் உளவுச் செலவுகளையும் அதிகாரிக்க வேண்டியிருக்கும். இத்துடன் போர் மூளக்கூடய அபாயமும் அதிகரித்திருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிப்படையும். பங்கு விலை வீழ்ச்சி, நாணயங்கள் மதிப்பிழத்தல், தங்கம் விலை ஏறுவது போன்றவை நடக்கலாம்.
ஐ எஸ்ஸின் முடிவின் ஆரம்பமா?
சிரிய அரசு, அமெரிக்கா உட்பட்ட 28 நேட்டோ நாடுகள், இரசியா, ஈரான், ஹிஸ்புல்லா அமைப்பு, குர்திஷ் போராளிகள், யதீஷியர்கள் இப்படி பலதரப்பட்ட எதிரிகள் மத்தியில் ஐ எஸ் போராளிகளால் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்?

"God is great and thank God for these lone wolf attacks. At least 100 hostages and countless wounded."
"Oh God, burn Paris as you burned the Muslims in Mali, Africa, Iraq, Syria, and Palestine."

Friday, 13 November 2015
ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் போராளிகள் கடும் தாக்குதல்
ஐக்கிய அமெரிக்காவின் விமானப் படைகள் குண்டு மழை பொழிய ஐ எஸ்
போராளிகளிடமிருந்து பிரதான நெடுஞ்சாலை-47ஐ குர்திஷ் போராளிகள்
கைப்பற்றியுள்ளார்கள். குர்திஷ் போராளிகளுடன் இணைந்து யதீஷீயப் போராளிகளும்
சிரியாவைச் சேர்ந்த சுனி அரபுக்களும் போராடுகின்றார்கள். இன்னொரு புறம்
ஈராக்கிய சியா படையினரும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகத் தாக்குதல்
செய்கின்றார்கள். இத்தனைக்கும் மேலாக இரசியப் போர் விமானங்கள் சிரியாவில்
உள்ள ஐ எஸ் போராளிகள் மேல் குண்டுகளை வீசுகின்றார்கள். அது போதாது என்று
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானியப் படையினர் ஆகியோரும் ஐ எஸ் அமைப்பினருக்கு
எதிராகப் போர் புரிகின்றார்கள்.
பல முனைகளில் பலதரப்பட்ட எதிரிகளால் தாக்கப்படும் சுனி முஸ்லிம் அமைப்பான ஐ எஸ் அமைப்பினர் சிரியப் படைகளுடன் இணைந்து போராடும் லெபனான் தலைநகரை ஒட்டியுள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் ஒரு புறநகர்ப் பகுதியில் இரட்டைத் தற்கொடைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். ஹிஸ்புல்லாவின் அல் மனார் தொலைக்காட்சி இத் தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டதாகவும் இரு நூற்றிற்கு மேற்ப்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்தது. இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
சிரியாவில் உள்ள ராக்கா நகரையும் மேற்கு ஈராக்கில் உள்ள மொசுல் நகரும் ஐ எஸ் அமைப்பினரின் கோட்டைகளாகும். ரக்கா நகரிலேயே அவர்களின் தலைமைச் செயலகம் இருக்கின்றது. இரு நகர்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை-47 சின்ஜார் மலைப்பகுதியூடாகச் செல்கின்றது. இந்த மலைப் பகுதியைக் கைப்பற்றினால் ஐ எஸ் அமைப்பினரின் நிலப்பரப்ப்பைப் பொறுத்தவரை அதன் முதுகெலும்பை முறித்தது போலாகும். ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரில் உள்ள எண்ணெய் கிணறுகள் ஐ எஸ் அமைப்பினரின் தங்கச் சுரங்கங்களாகும். அவர்கள் அவற்றில் இருந்து பெரும் தொகைப்பணத்தை வருமானமாகப் பெறுகின்றார்கள். அமெரிக்க விமானங்கள் தற்போது சிரியாவில் ஐ எஸ் அமைப்பினர் வசமுள்ள எண்ணெய்க் கிணறுகள் மீது தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே அமெரிக்க விமானங்கள் செய்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை ஐ எஸ் இன் பொறியியலாளர்கள் இலகுவாகச் சீர் செய்து விட்டனர். இதனால் இப்போது கடுமையான சேதங்களை விளைவிக்கக் கூடிய தாக்குதல்கள் செய்யப்படுவதுடன் எரிபொருள்களை எடுத்துச் செல்லும் பெரிய வண்டிகள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன.
ஈராக்கின் ஒரு பகுதியான சின் ஜான் மலைப் பகுதியை 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ எஸ் அமைப்பினர் அதிரடியாகக் கைப்பற்றினர். இதனால் அங்கு வாழ்ந்த யதீஷீயர்கள் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் கண்டபடி கொல்லப்பட்டு சிறுமிகள் உட்படப் பல பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப் பட்டனர். இது யதீஷியர்களின் நெஞ்சி ஆறாத வடுவாக இருக்கின்றது. இவர்கள் ஐ எஸ் அமைப்பினரைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டு இருந்தார்கள். இவர்களின் ஆத்திரத்தை ஐக்கிய அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அத்துடன் தமக்கு என ஒரு அரசு வேண்டும் என நீண்டகாலமாகப் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்களையும் அமெரிக்கா தனது பக்கம் சேர்த்துக் கொண்டது. சிரியாவில் உள்ள சுனி முஸ்லிம்களிற்குப் போர்ப்பயிற்ச்சி கொடுத்து அது பயனற்றதாகிப் போனதால் அமெரிக்கா குர்திஷ் மக்கள் பக்கம் அதிக கவனம் செலுத்தியது.
2015-ம் ஆண்டு நவம்பர் 12-ம் திகதி வியாழக் கிழமை குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா படையினர் ஆறாயிரம் பேரும் 1500 யதீஷியர்களுமாக 7500 போராளிகள் அமெரிக்க வான் படையினரின் உதவியுடன் சின்ஞார் நகரில் உள்ள ஐ எஸ் போராளிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதல்களை மும்முனைகளில் நடத்தினர். அவர்கள் மீது பதில் தாக்குதல் தொடுக்க மகிழூர்திகளில் வந்த ஐ எஸ் தற்கொடைப் போராளிகள் மீது தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வீசி அவர்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. முதலில் சின் ஞார் நகரை அடுத்த கபாரா கிராமம் ஐ எஸ் போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது. பின்னர் பல முனைகளிலும் பெஷ்மேர்காப் படையினர் துரிதமாக முன்னேறினர். ஐ எஸ் அமைப்பினர் பின் வாங்கி ஓடினர். இறுதியில் எந்தவித எதிர்ப்பும் இன்றி சின்ஜார் நகரத்தை பெஷ்மேர்காப் படையினரும் யதீஷீயர்களும் கைப்பற்றினர்.
குர்திஷ் மக்களிடையே பல போராளிகள் அமைப்புக்கள் உள்ளன. அதில் பெஷ்மேர்கா போராளிகளும் PKK எனப்படும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியும் முக்கியமானவை. ஐ எஸ் நிலைகளின் மீது தாக்குதல் நடத்த முன்னர் கைப்பற்றப் படும் இடங்களை யார் வைத்திருப்பது எனபது தொடர்பாக இவர்களிடையே பெரும் முறுகல் ஏற்பட்டது. தாக்குதலில் PKK போராளிகள் பங்குபற்ற வேண்டாம் என பெஸ்மேர்காப் போராளிகள் தெரிவித்தனர். இதனால் தாக்குதல் தாமதப் பட்டது. அமெரிக்கப் படைத் துறை நிபுணர்கள் கால நிலையை துல்லியமாக முன் கூட்டியே கணித்து தமது தாக்குதல் வியூகத்தை வகுத்தனர். மேகமற்ற வானம் பொதுவாக வான் தாக்குதலுக்கு உகந்தது. அத்துடன் பாலைவனத்தில் வான் தாக்குதல் செய்வதற்கு காற்று வேகமாக வீசக் கூடாது. பாலை வனத்தில் காற்று வீசும் போது புழுதி கிளம்பி இலக்குகளை இனம் காண்பதை கடினமாக்கும். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா நெறிப்படுத்தும் பல முனைத் தாக்குதலுக்கு Tidal Wave II எனப் பெயரிடப்பட்டுள்ளது.
IED எனச் சுருக்கமாக அழைக்கப்படும் improvised explosive device என்னும் கண்ணி வெடிகளை ஐ எஸ் போராளிகள் பெருமளவில் பாவிக்கின்றனர். அவற்றை அகற்றும் கவச வண்டிகளை அமெரிக்கா குர்திஷ் போராளிகளுக்கு வழங்கியிருந்தது. ஆனால் அவை போதிய அளவில் வழங்கப்படவில்லை. அது மட்டுமல்ல அமெரிக்கா மற்றப் படைக்கலன்களைப் போதிய அளவில் குர்திஷ் போராளிகளுக்கு வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப் படுகின்றது. இப்படிப்பட்ட மட்டுப்படுத்தப் பட்ட அமெரிக்க ஆதரவுடன் குர்திஷ் போராளிகளும் யதீஷியப் போராளிகளும் தீரத்துடன் தமது எதிரிகளான ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகப் போராடி நெடுஞ்சாலை-47இல் 35கிலோ மீட்டர்(22மைல்கள்) தூரமான நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர்.2015 நவம்பர் 13-ம் திகதி வெள்ளிக் கிழமை சின் ஜார் நகரில் உள்ள பல உயரிய கட்டிடங்களில் குர்திஷ் போராளிகள் தமது கொடிகளைப் பறக்க விட்டனர்.
ஏற்கனவே பைஜீ என்னும் எரிபொருள் வளம் மிக்க ஈராக்கிய நகரை ஐ எஸ் அமைப்பினர் இழந்துள்ளனர். ஈராக்கிய அரச படையினர் ரமாடி நகரை ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் திணறுகின்றனர். ஈராக்கியப் படையினர் போதிய தீரத்துடன் போராடுவதில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
2015 நவம்பர் 11-ம் 12ம் திகதிகளில் இரசிய விமானங்கள் சிரியாவில் 107 பறப்புக்களை மேற்கொண்டு ஐ எஸ் போராளிகளின் 289 நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தின. 34 கட்டளை நிலைகள், 16 படைக்கலன்கள் எரிபொருள் கொண்ட குதங்கள், இரு தொழிற்சாலைகள், 50 முகாம்கள், 184 காப்பரண்கள் ஆகியவற்றை தாக்கி அழித்ததாக இரசியா தெரிவித்துள்ளது.
குர்திஷ் இனத்தின் முதுகில் ஏற்கனவே ஐக்கிய அமெரிக்கா பலதடவைகள் குத்தியுள்ளது. இனி ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அவர்களைப் பாவித்த பின்னர் அமெரிக்கா நேரடியாகக் குத்துமா அல்லது துருக்கியினூடாகக் குத்துமா? சில குர்திஷ் விடுதலைப் போராளிகளின் அமைப்புக்களை ஏற்கனவே அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்ற போலி முத்திரை குத்தியுள்ளது.
முப்பதினாயிரம் போராளிகளைக் கொண்ட ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட நீண்ட காலம் எடுக்கும்.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...