Saturday, 10 December 2011

மனித உரிமைகளும் எருமைகளும்


பறவைகளுக்கும் சரணாலயங்கள் உண்டு
மிருகங்களை அழிவிலிருந்து காப்பதுண்டு
தன்னினச் சேர்க்கையாளர்க்கும் உரிமையுண்டு
தமிழினத்தை அழிப்பவரைத் தண்டிப்பதில்லை

மனித உரிமைகள் தினமாம் இன்று
அறிக்கைகளும் விடுகிறார்கள்
உரைகளும் ஆற்றுகிறார்கள்
உதவாக்கரை நாடுகள் கூட்டம்

குழந்தைகளைக் கொதிதாரில் போட்டதும்
குமரிகளை மார்பறுத்துக் கொன்றதும்
குருக்களை உயிரோடு கொழுத்தியதும்
மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.

பாராளமன்றின் முன் அறப் போர் புரிந்த
தமிழ்த் தலைவர்களை காடையரை ஏவி
அடித்து உதைத்து அரை நிர்வாணமாக்கிய
அரச பயங்கர வாதக் கோர தாண்டவம்

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.



அமைதிப் படை என்று சொல்லி வந்த
கொலைவெறிக் கும்பல் ஒன்று
ஏழாயிரம் அப்பாவிகளைக் கொன்று
மூவாயிரம் பெண்களைக் கெடுத்தது

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.

பாதுகாப்பு வலயம் என்று சொல்லி
உணவு மறுத்து நீர்மறுத்து
நோய் தீர்க்கும் மருந்து மறுத்து
சிற்றிடத்தில் திரட்டியெடுத்து
கொத்தணிக் குண்டுகளை வீசி
இலட்சம் பேரைக் கொன்று குவித்தது

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.



மனித உரிமையெனக் கூவுவதெல்லாம்
உமக்கு ஒத்து வராத கடாஃபி போன்ற
ஆட்சியாளர்களை விரட்டவும்
தேவைப்படின் கொல்லவுமே



பலகொலைகள் செய்த இலங்கையைப் பாராட்டிய
ஐநா மனித உரிமைக்கழகம மன்றில்
உரிமைகளை வென்றெடுக்கவும் வேண்டுமோ
ஈன்றெடுக்க வேண்டும் எம் உரிமையை நாமே

Friday, 9 December 2011

என் உயிருக்கு உன் புன்னகை வேண்டும்

நினைவில் நிலையாய் நிறைந்தாள்
உதட்டில் பெயரால் இனித்தாள்
வானுக்கு நிலவு வேண்டும்
பயிருக்கு நீர் வேண்டும்
என் உயிருக்கு உன் புன்னகை வேண்டும்

என் கண்களை உற்றுப் பார்
உன் விம்பம் தெரியும்
என் உடலைத் தொட்டுப் பார்
உன்னை நீ உணர்வாய்
என் இதயத் துடிப்பைக் கேட்டுப்பார்
உன் பெயரை அது சொல்லும்


வன் நிறைய நட்சத்திரங்களுண்டு
விடி வெள்ளி போல் வருமா
உலகெல்லாம் பெண்கள் உண்டு
உன் போல் வருமா

இரு விழிகளை
ஒரு முறை பார்தது
இருபத்தி நான்கு
மணி நேரம்
நினைவில் நிறைந்தது

Thursday, 8 December 2011

நினைத்தால் கண்கள் பனிக்கும்

கருவில் என்னைச் சுமந்து
கன துயரங்கள் பொறுத்து
என்னைப் பாலூட்டிச்
தாலாட்டி சீராட்டி

அன்பு பாராட்டி
வளர்த்தாள் என் அன்னை
அவள் பெயர் எனக்குப் பிடிக்கும்
அவளுக்கென  இதயம் துடிக்கும்


அன்புமலர் என்றொரு
முன்பள்ளி ஆசிரியை
மென் மொழி பேசி
கருணைப் பார்வை வீசி
அறிவூட்டிய தேவதை
அவர் பெயர் இன்றும்
நெஞ்சில் இனிக்கும் -
நினைத்தால்
கண்கள் பனிக்கும்


தாயக விடுதலைப்  போரில்
நாயகத்து அமைதிப்படையை
எதிர்த்தாள் போரில் குதித்தாள்

நிகரில்லாமல் இப்பாரில்
மாலதி என்றொருபோராளி
கோப்பாயில் வீரச்சாவடைந்தாள்
முதல் தமிழ்ப் பெண் தியாகி
அவள் பெயரை மனம் மதிக்கும்
என்றும் எண்ணித் துதிக்கும்

அன்பிற்க்கே ஒரு திரு உருவாய்
சேவையின் எண்ணக் கருவாய்
எழைகளுக்கு கரம் கொடுத்தாள்
உலக அன்னை தெரெஸா
அவள் பெயர் என்றும் நிலைக்கும்
எழைகள் நெஞ்சில் இனிக்கும்

Wednesday, 7 December 2011

இலண்டனில் சீக்கியக் காதலனை மரணப் பொறிக்குள் வீழ்த்திய அழகி

ககண்டிப் சிங் Sikh TV என்னும் தொலைக்காட்சி சேவையின் உரிமையாளரான 21வயது மிடுக்கான இளைஞன். மில்லியன் பவுண்கள் பெறுமதியாளரான அவனுக்கு  ஒரு மிக அழகான மருத்துவக் கல்லூரி மாணவி மஹில் மீது அளவற்ற காதல். யாரையும் கிறங்கடிக்க வைக்கும் அந்த இருபது வயது அழகி மஹில் ககண்டிப் சிங்கை திணறடித்தாள். செல்வந்தனான அவளும் கவர்ச்சீகரமான அவளும் ஒன்றாக பழகினர். காதலராகினர்.

மஹில் தங்கியிருக்கும் வீட்டிற்கு ஒரு நாள் சென்ற ககண்டிப் சிங் அவள் அழகில் போதை ஏறி வரம்பு மீறி அவளைக் கற்பழிக்க முயன்றான். அவனைப் பிடித்து வெளியே தள்ளிக் கதைவைச் சாத்தினாள் மஹில். ஏமாற்றத்தால் விரக்தியுற்ற ககண்டிப் சிங் வெளியில் நின்று தன்னை மன்னிக்கும்படி அழுதான். மஹிலின் வீட்டுக்கதவும் இதயக் கதவும் திறக்கவில்லை.

தன்னுடன் தகாத வரம்பு மீறி நடக்க முயன்றதால் ககண்டிப் சிங்மீது அதிக ஆத்திரம் கொண்டிருந்தாள் மஹில். அவளது காவாலி நண்பன்களிரிடமும் முறையிட்டாள்.

ஒரு நாள் மஹலிடமிருந்து தன்னை இரவு 11மணிக்கு வந்து தன் விஇட்டில் சந்திக்கும்படி கைப்பேசிக் குறுந்தகவல்கள் பல ககண்டிப் சிங்கிற்கு வந்தன. மிகச் சிலிர்ப்படைந்த ககண்டிப் சிங் பல வசந்த நினைவுகளோடு மஹில் வீடு சென்றான். அங்கு அவன் மஹிலின் காவாலி நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டான். தாக்கப்படும் போது மஹில் மஹில் மஹில் உதவி செய் என்று கத்தினான். அவனைத் தாக்கியவர்கள் அத்துடன் நிற்கவில்லை ஒரு பென்ஸ் காரின் பின் டிக்கிக்குள் அவனைக் கட்டிப் போட்டு அவன் மீது பெற்றோல் ஊற்றிவிட்டு மூடிப் பின்னர் காரு முழுவதும் பெற்றோல் ஊற்றி காரோடு சேர்த்து ககண்டிப் சிங்கையும் கொழுத்தினர். மஹில் மஹில் என்று அலறியபடி உயிர் விட்டான் ககண்டிப் சிங்.

மஹில் இப்போது நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ளாள்

மோக்கை காந்தியின் பிரதம மந்திரிக் கனவு

மொக்கை காந்தி ஒருநாள் தேர்தல் பிரச்சாரம் முடிந்து வரும் போது அவனது வாகனம் ஒரு சிறுவனை மோதிக் கொன்றுவிட்டது. ஊருக்கு தெரிந்தால் தன் பிரதம மந்திரிக் கனவு அம்போ ஆகிவிடும் என்றுபயந்த மொக்கை காந்தி அவசர அவசரமாக சிறுவனின் பிணத்தை வாகனத்துள் ஏற்றி விட்டு தன் நெற்றியில் உள்ள குங்குமப் பொட்டை அழித்து விட்டு முழங்காலில் இருந்து புனித மேரியை தொழத் தொடங்கினான்.

மொக்கை காந்தியின் முன் ஒரு தேவதை தோன்றியது. மவனே உனக்கு இன்னா பிரஸ்னை என்று கேட்டது அந்த தேவதை. நான் ஆத்தா மேரியைத் தொழுதேன் நீயார் இடையில் வந்து நிற்கிறாய் கஸ்மாலம் என்றான் மொக்கை காந்தி. அதற்கு அந்த தேவதை மவனே கூல் டவுன். ஆத்தா எந்தக் காலத்தில் எல்லா இடமும் போனா. அவ தாண்டா என்னை உன்னிடம் அனுப்பு வைத்தா. அதற்கு மொக்கை காந்தி இந்த இறந்த சிறுவனை உயிர் கொடுத்து எழுப்பு என்றான். அதற்கு தேவதை இது ஆவாத காரியம். வேறு எதாவது கேள் என்றது. உடனே மொக்கை காந்தி என்னை அடுத்த இந்தியப் பிரதம மந்திரியாக்கு என்றான். என்னடா உன்னோடு பெரும் பேஜரா இருக்கு. இதுவும் என்னால் ஆவாத காரியம் எதற்கும் புனித மேரியுடன் தொடர்பு கொண்டு பார்க்கிறேன் என்று தனது பிளக்பெரியை எடுத்து புனித மேரிக்கு இந்தப் பாவி மவனை இந்தியாவின் பிரதம மந்திரியாகக முடியுமா என்று ஒரு text அனுப்பினாள். புனித மேரியிடம் இருந்து வந்த பதில்: அந்தப் படுபாவகரமான காரியத்தை நான் செய்ய விரும்பவில்லை. உனக்கு தற்காலிகமாக இறந்தவர்களை உயிருடன் எழுப்பும் சக்தியை வழ்ங்குகிறேன். அந்தப் பாவியின் முதலாவது வேண்டுதலை நிறைவேற்றி வை.

Tuesday, 6 December 2011

ஈரானில் அமெரிக்க விமானம் வீழ்த்தியதில் சீனவின் பங்களிப்புண்டா?

அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயின் பணிக்காக ஈரானுக்கு வேவு பார்க்கச் சென்ற  ஆளில்லாப் போர்விமானம் ஒன்று காணாமற் போனதாக 2011 டிசம்பர் மாத ஆரம்பத்தில் அறிவித்தது. டிசெம்பர் 4-ம் திகதி ஈரான் அமெரிக்க ஆளில்லாப் போர்விமானமொன்றை தனது இணையவெளிப் போராளிகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. இந்த முரண்பட்ட செய்தியில் அடிபடுவது அமெரிக்காவிடமுள்ள மிக நவீன  வேவுபார்க்கும் ஆளில்லா விமானமான RQ-170 வகையைச் சேர்ந்தது. இது அமெரிக்காவிடம் உள்ள மிக உயர்தர உணர்திறனுடைய கருவிகளைக் கொண்டது. இந்த சம்பவம் இரு அம்சங்களை உணர்த்துகிறது: 1. எதிர்காலப் போர் முனைகளில் ஆளில்லாப் போர்விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது. 2. எதிர்காலப் போர் இணையவெளியிலும் நடக்க விருக்கிறது.

இரு வகையான ஆளில்லாப் போர் விமானங்கள்
முதலில் வேவு பார்க்க மட்டும் பாவிக்கப்பட்டு வந்த ஆளில்லப் போர் விமானங்கள் இப்போது ஏவுகணைகள் வீசித் தாக்குவதற்கும் பயன் படுகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மிகச் சிறந்த ஆயுதமாக ஆளில்லாப் போர்விமானங்கள் கருதப்படுகின்றன. பல நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக புதிய ஆராச்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பெருமளவில் ஆளில்லா விமானங்களைப் பாவித்து வருகிறது. சீர்வேக ஏவுகணைகள் (Cruise missiles) ஓரளவு நிலையான இலக்குக்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கே பெரிதும் பயன்படும். அசைந்து கொண்டிருக்கும் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஆளில்லா விமானங்களில் இருந்து வீசப்படும்  ஏவுகணைகள் பெரிதும் பயன்படுகின்றன.

அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்களின் கருத்துப்படி அமெரிக்காவின் ஆளில்லா விமானமான RQ-170வீழ்த்தும் திறன் ஈரானிய இணைய வெளிப் போராளிகளிடம் இல்லை. யார் இந்த இணைய வெளிப் போராளிகள்? இப்போது பல நாடுகளும் கணனி வல்லுனர்களை தமது படையில் இணைத்து அவர்கள் மூலம் எதிரி நாட்டு படைத்துறையின் கணனிகளை ஊடுருவித் தகவல்களை அறிதல் எதிரி நாட்டு கணனிகளைச் செயலிழக்கச் செய்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். பல நாடுகளிலும் இதற்கு என கணனி வல்லுனர்களைக் கொண்ட சிறப்பு படையணிகள் உண்டு. 2011 செப்டம்பரில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களில் ஒரு வகை வைரஸ் பரவியது. இதனால் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் சில நாட்களாக ஆப்கானிஸ்த்தானிலும் சூடானிலும் செயற்பட முடியாமற் போனது.

அமெரிக்காவின் படைத்துறையினரினதும் அமெரிக்கப் படைத்துறைக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களினதும் கணனிகள் மீது அண்மைக்காலங்களாக பல ஊடுருவல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டவை என்று நம்பப்படுகின்றன. சீனா பல அமெரிக்கத் தனியார் நிறுவனங்களின் தொழில் நுட்பத் தகவல்களைத் திருடியது என்றும் தொடர்ந்தும் திருடி வருகிறது என்றும் குற்றச் சாட்டுக்கள் பல அமெரிக்க ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.

அமெரிக்க ஆளில்லாப் போர் விமானம் ஈரானில் பழுதடைந்து விழுந்ததால் அல்லது சுடப்பட்டு  விழுந்ததால் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களில் தொழில் நுட்ப இரகசியங்கள் எதிரி கைக்குப் போய்விடுமா என்ற அச்சமும் அமெரிக்கப் படைத்துறையினரிடம் நிலவுகிறது. அமெரிக்கப் படைத் துறையினர் ஈரானிடம் தமது   ஆளில்லா வேவு  விமானமான RQ-170வீழ்த்தும் திறன் இல்லை என்று அடித்துச் சொல்கின்றனர்.  Lockheed Martin நிறுவனம் உறபத்தி செய்யும் RQ-170 ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பல அழிவுகளை எதிரிகளுக்கு ஏற்படுத்தியதால் Beast of Kandahar என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும். ஒசமா பின் லாடனைத் தேடிப் பிடிப்பதிலும் இந்த RQ-170 பெரும் பங்காற்றியது. பின் லாடனின் மளிகைமீது தாக்குதல் நடக்கும் போது அதை நேரடி ஒளிபரப்பில் வெள்ளை மாளிகையில் இருந்து பார்க்க இந்த RQ-170 ஆளில்லா விமானமே பாவிக்கப்பட்டது.  எதிரிகளின் ரடார்களின் "கண்களில்" மண் தூவிவிட்டு எதிரியின் விண்பாதுகாப்புக் கட்டமைப்பிற்குத் தெரியாமல் ஊடுருவி எதிரியின் பிரதேசத்து படை நிலைகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க வல்லது RQ-170. எதிரியின் கைகளில் அகப்படாமல் தன்னைத் தானேயும் தன்னிடம் உள்ள தகவல்களையும் அழிக்கும் திறன் கொண்டது RQ-170. அமெரிக்கா இந்த RQ-170ஆளில்லா விமானங்கள் தொடர்பான தகவல்களை மிக மிக இரகசியமாகவே வைத்திருந்தது. இது ஈரானிடம் சிக்கியிருப்பது இரு பெரும் பாதகத்தை அமெரிக்கப் படைத்துறைக்கு ஏற்படுத்தும். ஒன்று அதில் உள்ள அதி உயர் உணர் கருவிகள்  பற்றிய தொழில் நுட்பம் எதிரிகள் கையிச் சேர்ந்து விடும். மற்றது அதன் தகவல் திரட்டும் திறனில் இருந்து பாதுகாக்கக்கூடிய தொழில் நுட்பத்தை எதிரிகள் பெற்று விடுவர்.

அமெரிக்காவிற்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடிய சாத்தியப்பாடு: குறிப்பிட்ட ஆளில்லா விமானத்திற்கும் அதை இயக்குபவர்களுக்கும் இடையிலான தொடர்பை சீன நிபுணர்கள் குழப்பம்(jam) செய்து துண்டித்து அதை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தரையிறக்குவது. அமெரிக்காவின் ஆளில்லா வேவு  விமானமான RQ-170 ஐ சீனா வீழ்த்தியாதா அல்லது அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தரை இறக்கியதா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்த சீனாவிற்கு இரண்டு நோக்கங்கள் இருந்திருக்கலாம்:

1.பிராந்திய முக்கியத்துவம்.
சிரியப் புரட்சியில் பஸார் அல் அசாத் கவிழ்க்கப்படுவதையோ ஈரானுக்கு எதிராக அணு ஆயுத உறபத்தியைச் சாட்டாக வைத்துக் கொண்டு அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது படை எடுப்பதையோ சீனா விரும்பவில்லை. அவை இரண்டும் நடந்தால் ஆபிரிக்காவும் குறிப்பாக எண்ணெய் வள அரபு நாட்டிலும் சீன நலன்களுக்குப் பெரும் பாதகம் ஏற்படும். சீன படைத்துறை வல்லுனர்கள் குறிப்பாக இணைய வெளிப் போராளிகள் ஈரானில் இருந்து செயற்படலாம்.

2. தொழில் நுட்பம் பெறுதல்
எதிர்காலப் போர்முனையில் ஆளில்லப் போர் விமானங்கள் பெரும் பங்கு வகிக்கவிருப்பதால் சீனா தனது ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் பெரும் கவனம் செலுத்துகிறது. 2010இல் சீனாவில் நடந்த விமானக் கண்காட்சியில் சீனா தனது சீறும் யாளி என்னும் பெயர் கொண்ட ஆளில்லாப் போர் விமானங்களைக் காட்சிப்படுத்தியது. அதில் சீனா தனது ஆளில்லாப் போர் விமானங்கள் எப்படி தாய்வான் கரைகளில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை இனம் கண்டு தாக்கும் நிலையங்களுக்கு தகவல்களை அனுப்புவதை தெளிவு படுத்தியது. ஆளில்லாப் போர் விமானங்கள் பாவனையில் அமெரிக்கப் படைத்துறை கண்ட வெற்றியை உணர்ந்த சீனா தான் அந்தத் துறையில் மற்றைய நாடுகளை விட முந்திச் செயற்படுகிறது அமெரிக்காவின் ஆளில்லா வேவு  விமானமான RQ-170 ஐ சீனா இணைய வழி ஊடுருவினதால் அது ஈரானில் விழவேண்டிய சூழ் நிலை உருவாகி இருக்கலாம். வீழ்ந்த விமானத்தில் உள்ள தொழில் நுட்பங்களை சீனா பெற இது ஒரு வழி.


தொலைக்காட்சிப் பெட்டி என்னிடம் ரிமோட் பக்கத்து வீட்டில்?
இஸ்ரேலிய ஊடகங்கள் அமெரிக்க ஆளில்லா விமானங்களை ஈரான கைப்பற்றியதாகவே செய்தியை வெளியிட்டன. அப்படியாயின் ஒரு கட்டத்தில் RQ-170 கட்டுப் பாட்டை ஈரான் இணையவழியாகத் தன்வசமாக்கி தரையிறக்கியதா? அமெரிக்காவின் ரடார் தவிர்ப்புத் தொழில் நுட்பம் (stealth technology), காணொளிப் பதிவுத் தொழில் நுட்பம், உணரிகளின் தொழில் நுட்பம் போன்றவை சீனாவசமானதா?

Monday, 5 December 2011

வரும் காலத்தை எதிர்வு கூறும் supercomputer வருகிறது.

உலகத்தில் நடக்கப் போகும் சகல சமூக பொருளாதார நிகழ்வுகள் அனைத்தையும் எதிர்வு கூறக்கூடிய பாரிய கணனித் தொகுதிகளை  உருவாக்கும் முயற்சிகளில் சுவிட்சலாந்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் The Living Earth Simulator Project (LES) எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்தான் உருவாக்கப்படும் மிகுமேன்மைக் கணனி(supercomputer) உலகின் சகல நிகழ்வுகளையும் ஒப்புச் செயாலாக்கும் (simulate) வல்லமையுடையதாகும்.

மேற்படி மிகுமேன்மைக் கணனி(supercomputer) டுவிட்டர் பதிகளில் இருந்து அரச செலவீனங்கள் ஈறாக சகல உலகத் தகவல்களையும் திரட்டி அடுத்த பொருளாதாரச் சரிவு உட்பட பல உலக எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறனுடையது. இந்த மிகுமேன்மைக் கணனி(supercomputer)உலகப் பந்தின் நரம்பு மண்டலம் போல் செயற்படும் என்று கூறப்படுகிறது.

மிகுமேன்மைக் கணனி(supercomputer)திட்டத்தின் தலைவராகச் செயற்படும் Zurichஇல் உள்ள Swiss Federal Institute of Technology இனது பேராசிரியர் Dirk Helbing அவர்கள் தாம் உருவாக்கும் கணனி உலகின் பல தகவல்களைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்து உலக நிகழ்வுகளை எதிர்வு கூறும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பின் லாடன் தொடர்பான சகல செய்திகளையும் செய்திச் சுரங்கமிடல் - News Mining என்னும் தொழில் நுட்பம் மூலம் ஆய்வு செய்திருந்தால் அவர் இருந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்திருந்திருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

செய்திச் சுரங்கமிடல் - News Mining பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...