Thursday 8 December 2011

நினைத்தால் கண்கள் பனிக்கும்

கருவில் என்னைச் சுமந்து
கன துயரங்கள் பொறுத்து
என்னைப் பாலூட்டிச்
தாலாட்டி சீராட்டி

அன்பு பாராட்டி
வளர்த்தாள் என் அன்னை
அவள் பெயர் எனக்குப் பிடிக்கும்
அவளுக்கென  இதயம் துடிக்கும்


அன்புமலர் என்றொரு
முன்பள்ளி ஆசிரியை
மென் மொழி பேசி
கருணைப் பார்வை வீசி
அறிவூட்டிய தேவதை
அவர் பெயர் இன்றும்
நெஞ்சில் இனிக்கும் -
நினைத்தால்
கண்கள் பனிக்கும்


தாயக விடுதலைப்  போரில்
நாயகத்து அமைதிப்படையை
எதிர்த்தாள் போரில் குதித்தாள்

நிகரில்லாமல் இப்பாரில்
மாலதி என்றொருபோராளி
கோப்பாயில் வீரச்சாவடைந்தாள்
முதல் தமிழ்ப் பெண் தியாகி
அவள் பெயரை மனம் மதிக்கும்
என்றும் எண்ணித் துதிக்கும்

அன்பிற்க்கே ஒரு திரு உருவாய்
சேவையின் எண்ணக் கருவாய்
எழைகளுக்கு கரம் கொடுத்தாள்
உலக அன்னை தெரெஸா
அவள் பெயர் என்றும் நிலைக்கும்
எழைகள் நெஞ்சில் இனிக்கும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...