ஐக்கிய அமெரிக்காவின் விமானப் படைகள் குண்டு மழை பொழிய ஐ எஸ்
போராளிகளிடமிருந்து பிரதான நெடுஞ்சாலை-47ஐ குர்திஷ் போராளிகள்
கைப்பற்றியுள்ளார்கள். குர்திஷ் போராளிகளுடன் இணைந்து யதீஷீயப் போராளிகளும்
சிரியாவைச் சேர்ந்த சுனி அரபுக்களும் போராடுகின்றார்கள். இன்னொரு புறம்
ஈராக்கிய சியா படையினரும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகத் தாக்குதல்
செய்கின்றார்கள். இத்தனைக்கும் மேலாக இரசியப் போர் விமானங்கள் சிரியாவில்
உள்ள ஐ எஸ் போராளிகள் மேல் குண்டுகளை வீசுகின்றார்கள். அது போதாது என்று
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானியப் படையினர் ஆகியோரும் ஐ எஸ் அமைப்பினருக்கு
எதிராகப் போர் புரிகின்றார்கள்.
பல முனைகளில் பலதரப்பட்ட
எதிரிகளால் தாக்கப்படும் சுனி முஸ்லிம் அமைப்பான ஐ எஸ் அமைப்பினர் சிரியப்
படைகளுடன் இணைந்து போராடும் லெபனான் தலைநகரை ஒட்டியுள்ள ஹிஸ்புல்லாவின்
கோட்டையாகக் கருதப்படும் ஒரு புறநகர்ப் பகுதியில் இரட்டைத் தற்கொடைத்
தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். ஹிஸ்புல்லாவின் அல் மனார் தொலைக்காட்சி இத்
தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டதாகவும் இரு நூற்றிற்கு மேற்ப்பட்டோர்
காயமடைந்ததாகவும் தெரிவித்தது. இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என
அஞ்சப்படுகின்றது.
சிரியாவில் உள்ள ராக்கா நகரையும் மேற்கு
ஈராக்கில் உள்ள மொசுல் நகரும் ஐ எஸ் அமைப்பினரின் கோட்டைகளாகும். ரக்கா
நகரிலேயே அவர்களின் தலைமைச் செயலகம் இருக்கின்றது. இரு நகர்களையும்
இணைக்கும் நெடுஞ்சாலை-47 சின்ஜார் மலைப்பகுதியூடாகச் செல்கின்றது. இந்த
மலைப் பகுதியைக் கைப்பற்றினால் ஐ எஸ் அமைப்பினரின் நிலப்பரப்ப்பைப்
பொறுத்தவரை அதன் முதுகெலும்பை முறித்தது போலாகும். ஈராக்கின் இரண்டாவது
பெரிய நகரான மொசுல் நகரில் உள்ள எண்ணெய் கிணறுகள் ஐ எஸ் அமைப்பினரின்
தங்கச் சுரங்கங்களாகும். அவர்கள் அவற்றில் இருந்து பெரும் தொகைப்பணத்தை
வருமானமாகப் பெறுகின்றார்கள். அமெரிக்க விமானங்கள் தற்போது சிரியாவில் ஐ
எஸ் அமைப்பினர் வசமுள்ள
எண்ணெய்க் கிணறுகள் மீது தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்க விமானங்கள் செய்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை ஐ எஸ்
இன் பொறியியலாளர்கள் இலகுவாகச் சீர் செய்து விட்டனர். இதனால் இப்போது
கடுமையான சேதங்களை விளைவிக்கக் கூடிய தாக்குதல்கள் செய்யப்படுவதுடன்
எரிபொருள்களை எடுத்துச் செல்லும் பெரிய வண்டிகள் மீதும் தாக்குதல்கள்
நடாத்தப்படுகின்றன.
ஈராக்கின் ஒரு பகுதியான சின் ஜான் மலைப்
பகுதியை 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ எஸ் அமைப்பினர் அதிரடியாகக்
கைப்பற்றினர். இதனால் அங்கு வாழ்ந்த யதீஷீயர்கள் சொல்ல முடியாத
கொடுமைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் கண்டபடி கொல்லப்பட்டு சிறுமிகள் உட்படப்
பல பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப் பட்டனர். இது யதீஷியர்களின் நெஞ்சி ஆறாத
வடுவாக இருக்கின்றது. இவர்கள் ஐ எஸ் அமைப்பினரைப் பழிவாங்கத் துடித்துக்
கொண்டு இருந்தார்கள். இவர்களின் ஆத்திரத்தை ஐக்கிய அமெரிக்கா தனக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அத்துடன் தமக்கு என ஒரு அரசு வேண்டும் என
நீண்டகாலமாகப் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்களையும் அமெரிக்கா
தனது பக்கம் சேர்த்துக் கொண்டது. சிரியாவில் உள்ள சுனி முஸ்லிம்களிற்குப்
போர்ப்பயிற்ச்சி கொடுத்து அது பயனற்றதாகிப் போனதால் அமெரிக்கா குர்திஷ்
மக்கள் பக்கம் அதிக கவனம் செலுத்தியது.
2015-ம் ஆண்டு நவம்பர்
12-ம் திகதி வியாழக் கிழமை குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா படையினர் ஆறாயிரம்
பேரும் 1500 யதீஷியர்களுமாக 7500 போராளிகள் அமெரிக்க வான் படையினரின்
உதவியுடன் சின்ஞார் நகரில் உள்ள ஐ எஸ் போராளிகளின் நிலைகள் மீது கடும்
தாக்குதல்களை மும்முனைகளில் நடத்தினர். அவர்கள் மீது பதில் தாக்குதல்
தொடுக்க மகிழூர்திகளில் வந்த ஐ எஸ் தற்கொடைப் போராளிகள் மீது தாங்கி
எதிர்ப்பு ஏவுகணைகள் வீசி அவர்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
முதலில் சின் ஞார் நகரை அடுத்த கபாரா கிராமம் ஐ எஸ் போராளிகளிடமிருந்து
கைப்பற்றப்பட்டது. பின்னர் பல முனைகளிலும் பெஷ்மேர்காப் படையினர் துரிதமாக
முன்னேறினர். ஐ எஸ் அமைப்பினர் பின் வாங்கி ஓடினர். இறுதியில் எந்தவித எதிர்ப்பும் இன்றி சின்ஜார் நகரத்தை பெஷ்மேர்காப் படையினரும் யதீஷீயர்களும் கைப்பற்றினர்.
குர்திஷ்
மக்களிடையே பல போராளிகள் அமைப்புக்கள் உள்ளன. அதில் பெஷ்மேர்கா
போராளிகளும் PKK எனப்படும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியும்
முக்கியமானவை. ஐ எஸ் நிலைகளின் மீது தாக்குதல் நடத்த முன்னர் கைப்பற்றப்
படும் இடங்களை யார் வைத்திருப்பது எனபது தொடர்பாக இவர்களிடையே பெரும்
முறுகல் ஏற்பட்டது. தாக்குதலில் PKK போராளிகள் பங்குபற்ற வேண்டாம் என
பெஸ்மேர்காப் போராளிகள் தெரிவித்தனர். இதனால் தாக்குதல் தாமதப் பட்டது.
அமெரிக்கப் படைத் துறை நிபுணர்கள் கால நிலையை துல்லியமாக முன் கூட்டியே
கணித்து தமது தாக்குதல் வியூகத்தை வகுத்தனர். மேகமற்ற வானம் பொதுவாக வான்
தாக்குதலுக்கு உகந்தது. அத்துடன் பாலைவனத்தில் வான் தாக்குதல் செய்வதற்கு
காற்று வேகமாக வீசக் கூடாது. பாலை வனத்தில் காற்று வீசும் போது புழுதி
கிளம்பி இலக்குகளை இனம் காண்பதை கடினமாக்கும். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக
அமெரிக்கா நெறிப்படுத்தும் பல முனைத் தாக்குதலுக்கு Tidal Wave II எனப்
பெயரிடப்பட்டுள்ளது.
IED எனச் சுருக்கமாக அழைக்கப்படும் improvised
explosive device என்னும் கண்ணி வெடிகளை ஐ எஸ் போராளிகள் பெருமளவில்
பாவிக்கின்றனர். அவற்றை அகற்றும் கவச வண்டிகளை அமெரிக்கா குர்திஷ்
போராளிகளுக்கு வழங்கியிருந்தது. ஆனால் அவை போதிய அளவில் வழங்கப்படவில்லை.
அது மட்டுமல்ல அமெரிக்கா மற்றப் படைக்கலன்களைப் போதிய அளவில் குர்திஷ்
போராளிகளுக்கு வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்
படுகின்றது. இப்படிப்பட்ட மட்டுப்படுத்தப் பட்ட அமெரிக்க ஆதரவுடன் குர்திஷ்
போராளிகளும் யதீஷியப் போராளிகளும் தீரத்துடன் தமது எதிரிகளான ஐ எஸ்
போராளிகளுக்கு எதிராகப் போராடி நெடுஞ்சாலை-47இல் 35கிலோ
மீட்டர்(22மைல்கள்) தூரமான நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர்.2015 நவம்பர் 13-ம் திகதி வெள்ளிக் கிழமை சின் ஜார் நகரில் உள்ள பல உயரிய கட்டிடங்களில் குர்திஷ் போராளிகள் தமது கொடிகளைப் பறக்க விட்டனர்.
ஏற்கனவே
பைஜீ என்னும் எரிபொருள் வளம் மிக்க ஈராக்கிய நகரை ஐ எஸ் அமைப்பினர்
இழந்துள்ளனர். ஈராக்கிய அரச படையினர் ரமாடி நகரை ஐ எஸ்
அமைப்பினரிடமிருந்து முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் திணறுகின்றனர்.
ஈராக்கியப் படையினர் போதிய தீரத்துடன் போராடுவதில்லை என்ற குற்றச் சாட்டும்
முன்வைக்கப்பட்டுள்ளது.
2015 நவம்பர் 11-ம் 12ம் திகதிகளில் இரசிய விமானங்கள் சிரியாவில் 107 பறப்புக்களை மேற்கொண்டு ஐ எஸ் போராளிகளின் 289 நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தின. 34 கட்டளை நிலைகள், 16 படைக்கலன்கள் எரிபொருள் கொண்ட குதங்கள், இரு தொழிற்சாலைகள், 50 முகாம்கள், 184 காப்பரண்கள் ஆகியவற்றை தாக்கி அழித்ததாக இரசியா தெரிவித்துள்ளது.
குர்திஷ் இனத்தின் முதுகில் ஏற்கனவே ஐக்கிய அமெரிக்கா பலதடவைகள் குத்தியுள்ளது. இனி ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அவர்களைப் பாவித்த பின்னர் அமெரிக்கா நேரடியாகக் குத்துமா அல்லது துருக்கியினூடாகக் குத்துமா? சில குர்திஷ் விடுதலைப் போராளிகளின் அமைப்புக்களை ஏற்கனவே அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்ற போலி முத்திரை குத்தியுள்ளது.
முப்பதினாயிரம் போராளிகளைக் கொண்ட ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட நீண்ட காலம் எடுக்கும்.
Friday, 13 November 2015
Tuesday, 10 November 2015
மியன்மாரிலும் இலங்கையைப் போலவே ஆட்சி மாற்றம்
சீனாவின் பிடியில் இருந்து இன்னும் ஒரு நாடு ஆட்சிய மாற்றம் என்னும் பெயரில் மீட்கப்படுகின்றது. கொதிக்கும் எண்ணெயில் இருந்து விடுபட்டு எரியும் நெருப்புக்குள் இன்னும் ஒரு நாடு விழுகின்றதா? இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் மியன்மாரில் நடக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மியன்மாரிலும் சீனா முதலீடுகள் செய்ததுண்டு. சரியாகச் சொன்னால் நாட்டுக்குப் பயன்தராத முதலீடுகள். மியன்மாரிலும் சீனவின் முத்து மாலைத் திட்டத்தில் ஓர் அம்சமாக சிட்வே துறைமுகம் மேம்படுத்தப் பட்டுள்ளது. மியன்மார் சீனாவின் strategic corridor into the Indian Ocean.
கேந்திர முக்கியத்துவம்
பர்மா என முன்னர் அழைக்கப்பட்ட மியன்மார் ஐந்து கோடியே இரண்டு இலட்சம் (52 மில்லியன்) மக்களைக் கொண்டது. கனிம வளம் மிக்க மியன்மார் சீனா, இந்தியா, பங்களாதேசம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. இந்து மாக்கடலின் வங்காள விரிகுடாவை மேற்கு எல்லைகளாகக் கொண்டது. உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மியன்மார் இருக்கின்றது. அதன் அரசியலமைப்பின் படி வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்களைக் கொண்ட இரு மகன்களைக் கொண்ட ஆங் சூ கீ அதன் தலைவராக முடியாது. அந்த அரசியலமைப்பை மாற்ற 75 விழுக்காட்டிற்கு மேலான ஆதரவு அவசியம். 1990-ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டிய ஆங் சூ கீயை ஆட்சியமைக்க விடாமல் சிறையில் அடைத்தனர் மியன்மாரின் ஜுண்டா எனப்படும் ஆட்சியாளர்கள். ஆங் சூ கீயின் வலதுகரமாகத் திகழ்பவர் வின் தீன் என்னும் ஒரு முன்னாள் படைத்துறை அதிகாரி. இவர் படைத்துறையில் இருந்து விலகி பல பல்தேசிய நிறுவனங்களுக்கு இரகசியத் தரகராகச் செயற்பட்டதன் மூலம் பெரும் பொருள் ஈட்டியவர். படைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிகரட் பெட்டியும் விஸ்க்கிப் போத்தலும் கொடுத்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொண்டவர். இந்தப் பல்தேசிய நிறுவனங்களுடனான தொடர்பு அவரை பன்னாட்டுச் சமூகம் என்றும் அரச சார்ப்பற்ற தொண்டு நிறுவனங்கள் என்றும் பல உளவுத் துறைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அதுவே அவரை ஆங் சூ சீயின் வலது கரமாக்கியும் இருக்கலாம்.
மியன்மாரின் பாராளமன்றம் 224 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையையும் 440 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையையும் கொண்டது. இரண்டிற்குமான தேர்தல் 2015 நவம்பர் 7-ம் திகதி நடைபெற்றது. மக்களவையின் 440உறுப்பினர்களில் 110 பேரை படைத்துறையின் நியமிப்பர் எஞ்சிய 330 உறுப்பினர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
ஒரு குட்டை ஒரே மட்டைகள்
இலங்கையில் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டு இனக்கலவரங்கள் தூண்டப்படும். பர்மாவிலும் அப்படியே நடக்கும். இலங்கையில் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் பர்மாவில் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் இடையில் தொடர்பு உண்டு. இரு நாட்டிலும் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் நோர்வே, மோஸாட், சி ஐ ஏ ஆகியவற்றுடன் தொடர்பு உண்டு எனக் குற்றம் சாட்டப்படுவதும் உண்டு. நாட்டில் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைக் குறைக்க பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியிருந்தார். ஆனாலும் சில வேறுபாடுகளும் உண்டு. மஹிந்த ராஜபக்ச போல் பர்மாவின் படைத்துறை ஆட்சித் தலைவர் தெயின் செயின் முரண்டு பிடிக்கவில்லை. அமெரிக்காவின் சொற்படி கேட்கத் தொடங்கினார். அதனால் அவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக்கழகத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. பக்கத்து நாட்டில் இருந்து படைகள் வந்து இறங்கும் என்ற மிரட்டலும் விடத்தேவையில்லாத ஒரு நிலைமை ஏற்பட்டது. இப்படி தெயின் செயின் வளைந்து கொடுத்ததால் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தும் கொடுக்கப்பட்டது.
ஆட்சி மாற்றமும் இனக்கொலையும்
ஒரு நாட்டில் இனக்கொலை நடந்தால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அங்கு இனக்கொலை நடக்குமா என்பதை ஒரு கேள்விக்குறியாக்கியுள்ளது மியன்மார் எனப்படும் பர்மாவில் நடப்பவை. மியன்மாரில் சீனாவும் அமெரிக்காவும் பெரும் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இலங்கையைப் போல பர்மாவிலும் தேரவாத பௌத்த மதம் அங்குள்ள மக்களில் பெரும்பான்மையோரால் கடைப்பிடிக்கப் படுகின்றது. அது மட்டுமல்ல இலங்கையில் மஹாவம்சம் போல் பர்மிய பௌத்தர்கள் சாஸன வம்சம் என்னும் வரலாற்று நூலை எழுதியுள்ளார்கள். வெளியாரின் நிர்பந்தங்களாலும் இயக்கத்திலும் அமைதியான தேர்தல் இலங்கையைப் போலவே மியன்மாரிலும் நடந்துள்ளது.
சீன முதலீடு
சீனாவிற்கான எரிபொருள் இறக்குமதியில் பெரும் பகுதி மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்கா நீரிணையூடாக நடை பெறுகின்றது. உலக வர்த்தகத்தின் முக்கிய திருகுப் புள்ளிகளில் (choking points) ஒன்றான மலாக்கா நீரிணையில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் சீனாவின் ஏற்றுமதியையும் தடை செய்ய முடியும். இதற்கு மாற்றீடாக பர்மாவினூடாக தனக்கு ஒரு விநியோகப் பாதையை சீனா உருவாக்கியது. இந்தப் பாதை சீனாவின் யுனன் மாகாணத்தில் ஆரம்பித்து பர்மாவின் இரவாடி நதியூடாகச் சென்று பர்மாவின் தலைநகர் சென்று பின்னர் இந்துமாக்கடலை அடைகின்றது. இது மட்டுமல்ல சீனாவின் முத்து மாலைத் திட்டம் பர்மாவின் சிட்வே துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. பர்மாவின் கனிம வளங்களும் வெளிநாட்டுக் கொள்கையும் சீனாவின் கரங்களிலேயே இருந்தன என விமர்சிப்பதுண்டு. பர்மாவின் கனிம வளங்களை அகழ்வு செய்யும் உரிமத்தையும் இராவாடி நதியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் உரிமையையும் சீனா தனதாக்கிக் கொண்டது. 2007-ம் ஆண்டு பர்மாவின் கடலில் இயற்கைவாயு ஆய்விற்கான ஒப்பந்தத்தையும் பர்மாவுடன் செய்து கொண்டது. 2009ம் ஆண்டு 2.5பில்லியன் டொலர் பெறுமதியான 2380 கிலோ மீட்டர் நீளமான எரிபொருள் வழங்கல் குழாயையும் நிர்மானிக்கும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் செய்து கொண்டன. இரவாடி நதி மின் உற்பத்தியில் 90 விழுக்காடு சீனாவிற்கே செல்லும் என்பதால் அதற்குப் பலத்த எதிர்ப்பு மியன்மாரில் உருவானது. இதனால் அந்தத் திட்டம் இடை நிறுத்தப்பட்டது. இந்த எதிர்ப்புக்கு யார் தூபமிட்டார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
2011-ம் ஆண்டு மியன்மாரில் சீன ஆதிக்கமும் முதலீடும் உச்சத்தை அடைந்தது. மியன்மாருக்கான அந்நிய நேரடி முதலீட்டில் 70 விழுக்காடு சீனாவில் இருந்தே வந்தது. இப்போதும் மியன்மாரின் ஏற்றுமதியில் 37 விழுக்காடு சீனாவிற்கானதே. மியன்மாரின் இறக்குமதியில் 30 விழுக்காடு சீனாவில் இருந்தே வருகின்றது.
பரிசு கெட்ட பரிசு பெற்ற ஆங் சூ கீ
மேற்கு நாட்டு ஊடகங்கள் பல தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சூ கீயை ஒரு மக்களாட்சியின் தேவதையாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. இதே சித்தரிப்பு மைத்திரிக்கும் ரணிலுக்கும் அவ்வப்போது செய்யப்படுவதுண்டு. சீனா தனது ஆதிக்கத்தை பர்மாவில் அதிகரிக்க அதற்கு எதிரான அமெரிக்காவின் காய் நகர்த்தல்களும் அங்கு ஆரம்பித்தன. அமெரிக்காவின் முக்கிய காயாக திகழ்பவர் ஆங் சூ கி என்னும் பெண்மணி. ஆங் சூ கீயின் தந்தை பிரித்தானிய ஆட்சியின் கீழ் பர்மா இருந்த போது தலைம அமைச்சராக இருந்தவர். பின்னர் 1947இல் இவர் கொலை செய்யப்பட்டார். ஆங் சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாக்கரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்ற பர்மியப் பெண்மணி. ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது 1990ம் ஆண்டு ஆங்சான் சூ கீ சிறையில் இருந்த போது அவருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு அவ்விருதினை 2013இல் ஆங் சான் சூ கீ பெற்றுக் கொண்டார். 1992 இல் இந்திய அரசின் சவகர்லால் நேரு அமைதிப் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2007 இல் கனடா அரசு இவரை அந்நாட்டின் பெருமைக்குரிய குடிமகளாக அறிவித்தது. இத்தனை பரிசுகளையும் பெற்ற ஆங் சூ கீ பர்மாவில் வாழும் இஸ்லாமியர்களான ரொஹிங்கியர்கள் படுகொலை செய்யப் படும் போதோ நாட்டை விட்டு விரட்டப்படும் போதோ கண்டன அறிக்கை ஏதும் விடவில்லை. அதற்கு அவர் சொல்லும் விளக்கம் "நான் ரொஹிங்கியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும். " ஆனால் அவர் வாக்கு வேட்டை அரசியலுக்காகத்தான் மௌனமாக இருக்கின்றார்.
2014-ம் ஆண்டு பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது.
பர்மாவா மியன்மாரா?
பர்மாவில் பல முசுலிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் இருந்தார் அதிபர் தெயின் செயின். அந்த இனக்கொலையாளியை பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்தித்தார். படைத்துறை ஆட்சியாளர்கள் பர்மாவிற்கு வைத்த மியன்மார் என்னும் பெயரை வெள்ளை மாளிகை ஏற்க மறுத்திருந்தது. பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி மியன்மார் எனச் சொல்லத் தொடங்கிவிட்டது. தீண்டத்தகாத ஆட்சியாளர் என "பன்னாட்டுச் சமூகத்தினரால்" கருதப்பட்ட தெயின் செயின் திடீரென நல்லவராகி விட்டது எப்படி? பத்திரிகைகளில் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவரை அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டன வழங்கியவரை ஒபாமா எப்படி வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்? பர்மாவில் சில அரசியல் சீர்திருத்தங்கள் செய்தது உண்மைதான் ஆனால் இப்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை படைத்துறையினரால் கலைக்க முடியும். பர்மாவை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து அமெரிக்காவின் சார்பாக மாற்றும் முயற்ச்சிக்கு பர்மிய அதிபர் தெயின் செயின் இணக்கப் பட்டதுதான் இந்த அமெரிக்க பர்மிய ஆட்சியாளர்களுக்கு இடையிலான உறவை உருவாக்கியது.
ராகினிய மாகாணத்தில் இனச் சுத்திகரிப்பு
பர்மாவின் ராகினி மாகாணத்தில் வாழ்ந்த முசுலிம்களை அங்குள்ள பௌத்தர்கள் அரச படையினரின் உதவியுடன் கொன்று குவித்து வீடுகளைக் கொழுத்தித் தரைமட்டமாக்கி பெரும் இனச் சுத்திகரிப்பைச் செய்தனர். பல மனித உரிமை அமைப்புக்கள் இதை ஒரு மானிடத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதுகின்றன. ராகினி மாகாணத்தில் இருக்கும் எரிபொருள் வளமே அங்கு வாழ்ந்த முசுலிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தது. "பன்னாட்டுச் சமூகம்" சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது. மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாக இலங்கை அரசு நம்பியது ஞாபகத்திற்கு வருகிறது. புத்த பிக்குக்க்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான தாக்குதலை முன்னின்று நடாத்துகின்றனர். 2007இல் இலங்கையில் போர் வேண்டாம் என படையினரும் போர் வேண்டும் என பிக்குகளும் கருதுவதாக ஆய்வுகள் தெரிவித்தன. மிதிவண்டியில் சென்ற இசுலாமியப் பெண் ஓர் 11 வயது பிக்குவின் மீது மோதி அவரது கையில் இருந்த பிச்சாபாத்திரத்தை உடைத்ததால் இனக்கலவரம் மூண்டது எனச் சொல்லப்படுகிறது.
கச்சின் மாகாணத்தில் இனக்கொலை
பர்மாவின் கச்சின் மாகாணத்தில் சிறுபான்மைக் கிருத்தவர்கள் பெரும்பானமை பௌத்தர்களின் அடக்கு முறைக்கு எதிராக பிரிவினைப் போரை ஆரம்பித்தனர். பின்னர் போர் நிறுத்தம் செய்து சுயநிர்ணய உரிமை கோரி சமாதானப் பேச்சு வார்த்தையை 1994இல் ஆரம்பித்தனர் (ஈழத் தமிழர்களைப் போலவே). 14 ஆண்டுகள் இழுபட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் கச்சின் போராளிகளை படைக்கலன்களை ஒப்படைத்து விட்டு பர்மியப் படையினருடன் இணையும் படி வற்புறுத்தினர். பின்னர் பேச்சு வார்த்தை 2011இல் முறிந்து போர் மூண்டது. (ஈழத்தைப் போலவே). போர் முனைக்கு உணவு மற்றும் மருந்துகள் செல்வதை பர்மியப் படைகள் தடுத்தன. (ஈழத்தைப் போலவே). போர் முனையில் அகப்பட்ட மக்களுக்கு உணவு போடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கொண்டு பர்மிய விமானங்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசின. ( பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்பதற்கான போர் என இலங்கை அரசு பொய் சொல்லிக் கொண்டு அப்பாவிகளைக் கொன்று குவித்தது போல். ) போர் நடக்கும் போது அமெரிக்காவும் சீனாவும் தமது கரிசனையைத் தெரிவித்தன. ( ஈழத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் செய்தது போல்). நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூயி அம்மையார் தான் இந்த இனக்கொலையில் தலையிடப்போவதில்லை என்றார். (வாக்கு வேட்டை அரசியல்). 2013 ஜனவரியில் கச்சின் மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றது ஐக்கிய நாடுகள் சபை. கடுமையான விமானத் தாக்குதலையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்கா பிரச்சனைக்கு படைத்துறத் தீர்வு கிடையாது எனவும் கூறியது. ( ஈழத்திலும் இதையே சொன்னார்கள்).
மனிதக் கடத்தலாகக் காட்ட முயற்ச்சி
மியன்மாரில் இனக்கொலைக்குத் தப்பி ஓடிய ரொஹிங்கியா மக்களின் பிரச்சனையை வெறும் மனிதக் கடத்தல் செய்பவர்களின் பிரச்சனையாகக் காட்ட மேற்கத்தைய ஊடகங்கள் காட்ட முயன்றன. நடுகடலில் தத்தளிக்கும் ரொஹிங்கியோ மக்கள் தொடர்பாகச் செய்தி வெளிவிட்ட நியூயோர்க் ரைம்ஸ் தெற்காசியாவில் மனிதக் கடத்தல் பயங்கரம் எனத் தலைப்பிட்டுச் செய்தியை வெளிவிட்டது. பர்மாவில் இடப்பெயர்வுக்கு உள்ளான ரொஹிங்கிய இஸ்லாமியர்கள் மனிதக் கடத்தல்காரர்கள் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுகின்றார்கள் என நியூயோர்க் ரைம்ஸ் கூறுகின்றது. பர்மாவில் இருந்து மட்டுமல்ல பங்களாதேசத்தில் இருந்தும் மக்கள் தப்பி ஓடுகின்றார்கள் என்பது பெரிதுபடுத்தப் படுகின்றது.
பர்மாவுடன் மனித உரிமைப் பிரச்சனையை எழுப்பினால் அது மீண்டும் சீனா பக்கம் சார்ந்து விடும் என ஐக்கிய அமெரிக்கா அஞ்சியது. வட கொரியாவுடன் மனிதப் பிரச்சனையை எழுப்பிய படியால் அது அமெரிக்காவின் மோசமான எதிரியாக மாறியது. அது போல் பர்மாவும் மாறக் கூடாது என அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள். இதானால் மனித உரிமை மீறிய தெயின் செயினை வைத்துக் கொண்டே அவரின் எதிர்ப்பின்றி மியன்மாரில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டது. சீனாவுடன் ஆறாயிரம் மைல்கள் எல்லையைக் கொண்ட மியன்மாரில் சீன ஆதிக்கத்தை இல்லாமற் செய்வது இலகுவான செயல் அல்ல. மியன்மார் 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்தே மியன்மாரின் Wa எனவும் Kachin எனவும் அழைக்கப்படும் ஈர் இனக்குழுமங்களுடன் சீனா நெருங்கிய உறவைப் பேணிவருகின்றது. சீனா நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு செயற்படுவதில் தனது திறமையை பல துறைகளில் நிரூபித்துள்ளது. இலங்கையிலும் மியன்மாரிலும் அதன் நீண்ட காலத் திட்டம் எப்படி இருக்கப் போகின்றது என்பதைப் பார்க்க இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் எடுக்கலாம்.

Sunday, 8 November 2015
சீனாவும் தாய்வானும்: ஈர் அரசுகள் ஒரு நாடு!
1949-ம் ஆண்டு சீனக் குடியரசு என்றும் சீன மக்கள் குடியரசு என்றும் சீனா பிளவு பட்ட பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதற் தடவையாக 2015 நவம்பர் மாதம் 7-ம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து உரையாடியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என இருவரும் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் தவறுதலாக மோதல்கள் ஏற்படாமல் இருக்க இரு
நாடுகளுக்கும் இடையில் அவசரத் தொடர்பாடல் வசதிகள் செய்வதாக இருவரும்
ஒத்துக் கொண்டனர்.
தாய்வானில் எதிர்ப்பு
தாய்வான் ஒரு முழுமையான சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் தாய்வான் தலைநகர் தாய்ப்பேயில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். சீனாவின் ஒரு பகுதியே தாய்வான் என சீனப் பொதுவுடமைக் கட்சியினரும் ஆட்சியாளர்களும் கருதுவதற்கு தாய்வானில் பலத்த எதிர்ப்பு உண்டு. சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு கொள்வதற்கு அதனுடன் இணைய வேண்டும் எனக் கருதுவோரும் சீனாவில் உண்டு. சீனாவின் பொதுவுடமை ஆட்சியில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. அங்கு எத்தனை பிள்ளைகள் பெறுவது ஒருவர் எந்த நகரத்தில் வேலை செய்வது போன்றவற்றிற்கு அரச கட்டுப்பாடுகள் உண்டு. இதனால் சீனாவுடன் இணைவதை எதிர்ப்பவர்கள் தொகை தற்போது தாய்வானில் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
சீனாவின் ஒரு பகுதியே தாய்வான என சீனத் தலைவர் ஜி ஜின்பிங் தாய்வான் தலைவர் மா யின் ஜியோ (Ma Ying-jeou) அவர்களிடம் தெரிவித்ததாக செய்திகள் கசிந்துள்ளன. இருவரும் சந்தித்த போது ஒருவரை ஒருவர் Mister அதாவது திருவாளர் என்று சொல்லியே அழைத்தனர். ஒருவரை ஒருவர் Mr president என அழைத்திருக்க வேண்டும். சீனா தாய்வானை ஒரு தனிநாடாக ஏற்றுக் கொள்ளாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சீனாவை மாவோ சேதுங் பொதுவுடமைப் புரட்சியின் மூலம் 1949-ம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் அவரால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட சியாங் கே ஷேக் தாய்வான் தீவிற்குத் தப்பிச் சென்று அங்கு ஒரு அரசை அமைத்தார். இருவரும் முழுச் சீனாவும் தம்முடையதே என உரிமை கொண்டாடினர். புரட்சிக்குப் பின்னரும் தாய்வானையே உண்மையான சீனா என ஐக்கிய நாடுகள் சபையும் பல நாடுகளும் அங்கீகரித்திருந்தன. தாய்வான் சீனக் குடியரசு என்றும் பொதுவுடமை ஆட்சி நிலவிய பிரதான சீனா சீன மக்கள் குடியரசு என்றும் அழைக்கப்பட்டன. மேற்கத்தைய ஊடகங்கள் மாவோ சே துங்கின் பொதுவுடமைச் சீனாவை செஞ்சீனா எனவும் அழைத்தன.
1971-ம் ஆண்டு சீனா ஐக்கிய நாடுகள் சபையில் இணைக்கப்பட்டு தாய்வான் வெளியேற்றப்பட்டது. தற்போது தாய்வானை ஒரு நாடாகப் பெரும்பாலான நாடுகள் அங்கிகரிக்கவில்லை. ஆனால் 23 நாடுகள் தாய்வானுடன் சிறப்பு அரசுறவியல் தொடர்புகளைப் பேணுகின்றன.
1979-ம் ஆண்டு சீனா ஐக்கிய அமெரிக்காவிடனும் மற்ற மேற்கு நாடுகளுடனும் சிறந்த உறவை உருவாக்கியது. சோவியத் ஒன்றியம் சீனாவைத் தாக்கலாம் என்ற ஒரு நிலைமை அப்போது நிலவியதால் அமெரிக்காவும் செஞ் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன. அப்போது சீனாவுடன் அமெரிக்க தனது உறவுக்கான பரிசாக தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒத்துக் கொள்ளவிருந்தது. ஆனால் தாய்வான் அரசு அமெரிக்கப் பாராளமன்றமான கொங்கிரசின் இரு அவைகளான மக்களவையிலும் மூதவையிலும் செய்த கடும் பிரச்சாரத்தின் விளைவாக தாய்வான் தனித்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. சீனாவிடமிருந்து தாய்வானை ஐக்கிய அமெரிக்கா பாதுகாக்க ஐக்கிய அமெரிக்கப் பாராளமன்றம் 1979இல் தாய்வான் உறவுச் சட்டம் என்று ஒரு சட்டத்தை உருவாக்கியது. தாய்வான் உறவுச் சட்டத்தில் சீனக் குடியரசு என்ற பதம் பாவிக்காமல் தாய்வானை ஆளும் அதிகாரம் என்ற பதம் பாவிக்கப்பட்டது. ஆனால் அச்சட்டத்தின் படி தாய்வான் ஒரு நாடாக கருதப்பட்டு ஒரு நாட்டுடன் வைத்துக் கொள்ளக் கூடிய இராசதந்திர உறவுகள் யாவும் மேற்கொள்ளலாம். வெளி அச்சுறுத்தல்களில் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்கிறது அமெரிக்காவின் இந்த தாய்வான் உறவுச் சட்டம். அதனால் இன்று வரை அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கின்றது. 1984-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க சீன உறவில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. அமெரிக்கா தாய்வான் மீதான சீனாவின் இறைமையை ஏற்க மறுத்து வருகிறது. அமெரிக்கப் பாராளமன்றம் 2007-ம் ஆண்டு வெளிவிட்ட ஆய்வறிக்கை தாய்வான் மீதான சீனாவின் இறைமையை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மீள் உறுதி செய்தது. அமெரிக்காவின் தாய்வான் உறவுச் சட்டம் சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு எனச் சீனா கருதுகிறது.
தாய்வானைக் கைப்பற்ற முயன்ற சீனா
1995இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தாய்வான் மீதான சீனப் படையெடுப்பைத் தடுப்பதற்கு அமெரிக்காவின் இரு பெரும் கடற்படைப் பிரிவுகளை தாய்வானுக்கு அனுப்பினார். ஆனால் இன்று சீனா படைத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. தாய்வானில் அமெரிக்கா இரகசியமாகப் பல நவீன சக்தி மிக்க ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தாய்வான் அதனது மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல். அமெரிக்காவிடமிருந்து தாய்வான் பல போர் விமானங்களை வாங்கிக் குவித்துள்ளது.
தாய்வானின் சரித்திரம்
தாய்வானை 1623-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சிய் செய்தனர். பின்னர் 1662-ம் ஆண்டு சீனா டச்சுக்காரர்களை விரட்டி தனது ஆட்சியின் கீழ் தாய்வானைக் கொண்டு வந்தது. 1894-ம் 1895-ம் ஆண்டு நடந்த போரில் ஜப்பான் தாய்வானையும் கொரியாவையும் சீனாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பானிடம் இருந்து 1952இல் செய்த சான் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி தாய்வானை ஜப்பானிடம் இருந்து விடுவித்தன. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டபோது சீனக் குடியரசு என்று அழைக்கப்பட்ட தாய்வான் அதன் உறுப்பினராக இருந்தது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிக அபிவிருத்தியடைந்த நாடான தாய்வான் உலக வங்கியின் ஓர் உறுப்பினர் அல்ல. கூறிவருகிறது. எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலோ அல்லது கூட்டங்களிலோ தாய்வானின் பிரதிநிதிகள் பங்கு பற்றுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.
உறவை வளர்த்த இரு சீனாக்கள்
தாய்வான் தன்னை சீனக் குடியரசு என்றும் தாய்வானை சீனா தனது நாட்டின் ஒரு மாகாணம் என்றும் சொல்லி வந்தன. 1992இல் இரு நாடுகளும் உறவுகளை உருவாக்கி வளர்க்க முயன்றன. இதற்காக தாய்வானும் சீனாவும் ஒரு நாடுகள் ஆனால் இரு அரசுகள் என்ற நிலைப்பாட்டை தாய்வான் எடுத்தது. ஆனாலும் இன்று வரை ஒன்றை ஒன்று சந்தேகக் கண்களுடனேயே பார்க்கின்றன.காலப் போக்கில் தாய்வானைத் தன்னுடன் இணைக்கலாம் என சீனா உறுதியாக நம்புகிறது. வளம் குறைந்த தாய்வானிய மக்களிக்கு பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனா இணைய வேண்டிய ஒரு நாடாக மாறலாம் என சீனா நம்புகின்றது.
தாய்வானை நோக்கிய சீனாவின் வியூகம்
இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சீன ஏவுகணைகள் தாய்வானைக் குறிபார்த்து நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சீனா புதிதாக உருவாக்கிய விமானம் தாங்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய DF-21D ஏவுகணைகள் முக்கியமானவை. இவற்றை Anti-Ship Ballistic Missile (ASBM) என அழைப்பர். 35 அடி உயரமும் 15 தொன் எடையும் கொண்ட DF-21D ஏவுகணைகள் 1200மைல்கள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குகள் வேகத்தில் பாயக் கூடியவை. இவை அமெரிக்கக் கடற்படைக்குப் பெரும் சவாலாகும். அமெரிக்கா 2013 மே மாதம் உருவாக்கிய RIM-162 ESSM "Evolved Sea Sparrow," ஏவுகணைகள் சீனாவின் DF-21D ஏவுகணைகளை அவற்றின் பறப்பின் போது இடை மறித்து அழிக்கக் கூடியவை.
2013-ம் ஆண்டு சீனா 2013A, 2013B, 2013C என்னும் பெயரில் தனத் பெருமளவு படையினரைக் கொண்ட தாய்வான் ஆக்கிரமிப்புப் பயிற்ச்சிகளைச் செய்துள்ளது. சீனாவின் முப்படைகளும் இதில் ஈடுபடுத்தப் பட்டு உண்மையான சூடுகளுடன் பயிற்ச்சிகள் செய்யப்பட்டன. பெருமளவு படைக்கலன்கள் நகர்வும் இதன் போது பரீட்சிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் சந்தித்துக் கொண்ட சீனாவினதும் தாய்வானினதும் தலைவர்கள் எந்த வித உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை எந்த கூட்டறிக்கையையும் வெளிவிடவில்லை. தற்போது தாய்வானில் ஆட்சியில் இருக்கும் கட்சி சீனாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய கட்சியாகும். எதிர்க் கட்சி தாய்வான் முழுமையான சுதந்திரம் உள்ள நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையது. அதன் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. 2016-ம் ஆண்டு ஜனவரியில் நடக்க விருக்கும் தேர்தலில் அது வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
தாய்வானிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாட்டை தாய்வானியப் பாராளமன்றம் நிறைவேற்ற முயன்றபோது சூரியகாந்தி இயக்கம் என்னும் இளைஞர்களின் அமைப்பு கடும் எதிர்ப்புக் காட்டியது. அது ஒரு மாதமாக பாராளமன்றத்தை ஆக்கிரமித்திருந்தது.
இரு நாடுகளிற்கும் இடையிலான இடைவெளி நூறு மைல் அகலமான கடலிலும் அகலமனானது.

Tuesday, 3 November 2015
உலகப் பொருளாதாரத்தை வளர்முக நாடுகள் முன்னேற்றுமா?
2007-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் உலகப் பொருளாதாரத்தை மீளவும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்முக நாடுகள் பக்கம் தம் பார்வையைத் திருப்பின. அப்போது பொருளாதார வீழ்ச்சியில் இருந்து வளர்முக நாடுகளான சீனாவும் இந்தியாவும் விரைவில் தம்மைச் சுதாகரித்துக் கொண்டன. பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பும் துருக்கி, இந்தோனேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா போன்ற நாடுகளும் வளர்ச்சிப் பாதையில் இயங்கி உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு உந்து வலுவைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் 2015-ம் ஆண்டு நிலைமை வேறுவிதமாக இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் சில மேற்கு உலக நாடுகளும் தமது பொருளாதாரங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றன. ஆனால் வளர்முக நாடுகள் தமது வளர்ச்சி வேகத்தை இழந்து கொண்டிருக்கின்றன.
2015-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.5 விழுக்காடு வளரும் என 2015 ஏப்ரலில் எதிர்வு கூறிய பன்னாட்டு நாணய நிதியம் அதை ஒக்டோபரில் 3.1 எனக் குறைத்துள்ளது.
ஏற்றுமதியும் முதலீடும்
2007-ம் ஆண்டின் பின்னர் எல்லா நாடுகளும் ஏற்றுமதி மூலம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபட முயன்றன. எல்லோரும் ஏற்றுமதி செய்வதாயின் யார் இறக்குமதி செய்வது? இந்த ஏற்றுமதிப் போட்டியால் இன்றுவரை பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி குன்றிப் போய் இருக்கின்றன. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் 19 முன்னணி வளர்முக நாடுகளில் இருந்து தொண்ணூறு கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் வெளியேறியுள்ளன. மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 9700மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை 2015-ம் ஆண்டில் விற்றுள்ளனர். ஆசியாவிலேயே அதிக அளவு முதலீட்டு வெளியேற்றம் இந்த மூன்று நாடுகளில்தான் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு மலேசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருபது விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. அதன் ரிங்கிட் நாணயத்தின் பெறுமதியும் அமெரிக்க டொலருக்கு எதிராக இருபது விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் மலேசிய ஆட்சியாளர்கள் தங்களிடம் இன்னும் 100பில்லியன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருப்பதாகவும் தமது நாட்டின் வெளியகக் கடன்பளு மொத்தத் தேசிய உற்பத்தியின் 70 விழுக்காடு மட்டுமே என்கின்றனர். அத்துடன் தமது நாட்டின் கடன்படு திறனை எந்த ஒரு நிறுவனமும் குறைத்து மதிப்பிடவில்லை என்கின்றனர். தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தோனேசியாவின் கடன்பளு மொத்தத் தேசிய உற்பத்தியின் 32 விழுக்காடு மட்டுமே. அத்துடன் அது 112பில்லியன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பைக் கொண்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிலிப்பைன்ஸின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சிறந்த நிலையில் இருக்கின்றது. வெளிநாடுகளில் பண்புரியும் பிலிப்பைன்ஸ் குடிமக்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தால் அதன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சிறந்த முறையில் இருக்கின்றது. மலேசியாவில் அரசியல் சூழ் நிலையும் உகந்ததாக இல்லை. மலேசியத் தலைமை அமைச்சரின் கணக்கில் 700மில்லியன் அமெரிக்க டொலர்கள்ள் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தை அதிக அளவு கொண்ட மலேசியாவின் பொருளாதாரத்தை சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தமை மட்டுமல்ல எரிபொருள் விலை வீழ்ச்சியும் பெரிதாகப் பாதித்துள்ளது. மலேசியாவின் ஏற்றுமதி வருமானத்தில் 40 விழுக்காடு எரிபொருள் ஏற்றுமதியில் இருந்தே கிடைக்கின்றது.
இந்தோனிசியாவில் வெளிநாட்டு நாணயம்
இந்தோனிசியாவில் வெளிநாட்டு நாணயங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துச் சென்றன. இது ஆண்டு ஒன்றிற்கு 73 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. மொத்தத் தேசிய உற்பத்தி 900 பில்லியன் டொலர்களைக் கொண்ட இந்தோனிசியாவிற்கு இது ஒரு அதிகமான தொகையாகும். பல முதலீட்டாளர்கள் அடிக்கடி பெறுமதி மாறும் இந்தோனேசிய நாணயமான ருப்பியாவில் தமது நாணய இருப்பை வைத்திருக்காமல் வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருக்க விரும்பியதால் இந்த நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்தோனேசியாவின் நாணய மதிப்பும் வீழ்ச்சி கண்டது. 2014-இந்தோனேசியாவின் பொருளாதாரம் அதற்கு முன்னைய ஐந்து ஆண்டுகளில் மிக்கக் குறைவான வளர்ச்சியைக் கண்டது. ருப்பியா நாணயத்தின் மதிப்பு கடந்த 17 ஆண்டுகளில் மோசமான தாழ்நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. இந்தோனேசிய மைய வங்கி அது ஏற்றுமதிக்கு உதவும் என நம்பியது. ஆனால் நிலக்கரியையும் சமையல் எண்ணெய்யையும் ஏற்றுமதி செய்வதில் அதிக ஏற்றுமதி வருமானம் ஈட்டும் இந்தோனெச்சியாவிற்கு உலக எரிபொருள் விலை வீழ்ச்சியும் பண்டங்களின் விலை வீழ்ச்சியும் மோசமான விளைவுகளைக் கொடுத்தன.
விலைகள் அதிகரிக்கவில்லை என்றதும் கவலைதான்
உலகில் பல நாடுகள் போதிய பணவீக்கம் இன்றி அல்லது எதிர்மறையான பணவீக்கத்தால் அவதிப் படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பணவீக்கம் 1.5விழுக்காடாகவும் 2017-ம் ஆண்டு 1.8விழுக்காடாகவும் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இரண்டு விழுக்காட்டிலும் சற்றுக் குறைவான ஒரு பணவீக்கத்தையே ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்கள் விரும்புகின்றார்கள். பொருளாதாரத்தில் பணப் புளக்கத்தை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றிய மைய வங்கி 1.2 ரில்லியன் டொலர்கள் பெறுமதியான தனது கடன் முறிகளை வாங்க இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் மற்ற வளார்ச்சியடைந்த நாடுகளும் தமது பொருளாதாரத்தை வளர்முக நாடுகளிற்கான ஏற்றுமதி மூலம் சீர் செய்யலாம் என 2010-ம் ஆண்டு நம்பியிருந்தன. 2015-ம் ஆண்டு அவர்களின் நம்ப்பிக்கை ஈடேறவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சீனா
சீனப் பொருளாதாரம் சீன மக்களின் அதிக சேமிப்பாலும் சீன அரசின் மிகையான முதலீட்டாலும் கிராமப்புறத்து மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து உற்பத்தித் திறன்மிக்க துறைகளில் வேலைகள் பெற்றதலும், மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்தாலும் வளர்ந்து கொண்டிருந்தது. பொருளாதாரம் பெரிதும் ஏற்றுமதியில் தங்கியிருந்தது. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்ததால் சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அரச நிறுவனங்களின் இலாபம் 24.7 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததாக சீன அரசு அறிவித்திருந்தது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததால் உலகச் சந்தையில் சீனா தனது உற்பத்திக்காக வாங்கும் மூலப்பொருளகளின் விலை குறைந்தது. சீனாவிற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வருமானம் குறைந்தது. இதனால் இந்த நாடுகளின் கொள்வனவு குறைந்தன. இதனால் வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஏற்றுமதி குறைந்தது. அவற்றின் வருமானம் குறைந்ததால் வளர்முக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் செய்யும் ஏற்றுமதி குறைகின்றது. இப்படி ஒரு சுழற்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
சீனாவும் பில்ம் காட்டப்போகின்றது.
சீனாவின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் வேளையில் சீனாவின் ஒரு புள்ளி விபரம் முன்னேற்றத்தைக் காட்டியது. சீனாவின் திரைப்படத் துறையே அதுவாகும். சீனத் திரைப்படத்துறையின் வருமானம் அமெரிக்காவின் திரைப்படத் துறையின் வருமானத்தை 2020-ம் ஆண்டு முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தனது பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த சீனா முயல்கின்றது. தனது நிபுணர்களை அமெரிக்காவின் ஹொலிவூட்டிற்கு அனுப்பி திரைப்படத்துறையை எப்படி முன்னேற்றலாம் என ஆய்வும் செய்தது. Demand Institute இன் கணிப்பீட்டின் படி சீனப் பொருளாதாரம் அடுத்த பத்து ஆண்டுகளில் 60 விழுக்காடு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கருத்துப் படி சீனாவில் நிகழ்ந்த பங்குச் சந்தை விலை வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தமையும் சீனப் பொருளாதாரத்திற்குத் தேவையான ஒன்றாகும் என்கின்றது. சீனாவில் ஒரு பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது எனச் சொல்ல இது தருணம் அல்ல என்கின்றது ப நா நிதியம். சீனாவின் அடுத்த ஐந்தாட்டுத் திட்டம் சீனப் பொருளாதாரம் ஒரு கடுமையான தரையிறக்கத்தைத் தடுப்பதையும் சீன நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதையும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வைத்திருப்பதையும் நோக்க மாகக் கொண்டிருக்கும். சீனாவின் இந்த 13வது ஐந்தாண்டுத் திட்டம் அதற்கு ஒரு திருப்பு முனையாக அமையும்
சொன்னதைச் செய்யாத மோடி
இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. ஊழல் ஒழிக்கப்படவில்லை, சிவப்பு நாடா தளர்த்தப்படவில்லை. வெளிநாட்டு முதலீடுகளுக்கு உரிய சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை இந்தியப் பொருளாதாரத்திற்கு இன்னும் உந்து வலுவைக் கொடுக்கவில்லை.
பிரேசிலினதும் இரசியாவினதும் பொருளாதாரம் 2015-ம் ஆண்டு சுருங்கும் என்பது உறுதியாகிவிட்டது. இரசியப் பொருளாதாரம் 2016-ம் ஆண்டிலும் சுருக்கமடையும். இரசியா தன்வசமுள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு மூலம் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றது. பிரச்சனைக் குரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி முதலாம் இடத்தில் இருக்கின்றது. ஆனால் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தமது உற்பத்தியைத் துருக்கியில் செய்கின்றன.
ஆபிரிக்கா
சீனாவின் பொருளாதாரத்தால் பாதிக்கப்படாத பிரதேசமாக ஆபிரிக்கா இருக்கின்றது. சேரா லியோன் மட்டும் விதி விலக்காக இருக்கின்றது. ஆபிரிக்காவின் அமெரிக்கா செய்யும் முதலீட்டிலும் பார்க்க மூன்று மடங்கு முதலீட்டை சீனா செய்கின்றது. ஆனால் பல ஆபிரிக்க நாடுகள் தமது நாட்டின் பாதீட்டைச் சமன் செய்ய முடியாமல் திண்டாடுகின்றன.
2007-ம் ஆண்டு எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்ததால் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்ததாகச் சொல்லப்பட்டது. இப்போது எரிபொருள் விலை ஐம்பது விழுக்காட்டிலும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதை வைத்து உலக மக்களின் கொள்வனவுகளோ அல்லது உலக உற்பத்தியோ அதிகரிக்க வில்லை. அது மட்டுமல்ல மைய வங்கிகள் வட்டி விழுக்காட்டை பூச்சியம் வரை குறைத்தல், கடன் முறிகளை வாங்கிப் பணப்புளக்கத்தை அதிகரித்தல் என பல நடவடிக்கைகளை எடுத்தும் பொருளாதார வளர்ச்சி இன்னும் எட்டப்படாத ஒன்றாகவே இருக்கின்றது.
பன்னாட்டு நாணய நிதியம் 2015-ம் ஆண்டு வளர்முக நாடுகளின் பொருளாதாரம் 4.2விழுக்காடாக மட்டுமே இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வளர்முக நாடுகள் 7.4 விழுக்காட்டில் வளர்ந்தது.
2050-ம் ஆண்டு வளர்முக நாடுகளின் கொள்வனவு உலகக் கொள்வனவில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும். அப்போது உலகப் பொருளாதாரம் வளர்முக நாடுகளினுடையதாக

Wednesday, 28 October 2015
சீனாவின் தீவுகளுக்கு சவால் விடச் சென்ற அமெரிக்க நாசகாரிக் கப்பல்
தென் சீனக் கடலின் பவளப் பாறைகள் மீது கடலடி மணலை வாரி இறைத்து சீனா உருவாக்கிய தீவுகளுக்குச் சவால் விடும் வகையில் அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான USS Lassen அத்தீவுகளின் ஆதிக்கக் கடற்பரப்புக்குள் சென்றது. ஸ்பிரட்லித் தீவுக் கூட்டத்தில்
(Spratly Island chain ) உள்ள Subi and Mischief reefs என்னும் பவளப்பாறைகளில் உருவாக்கப் பட்ட தீவுகளைச் சுற்றி உள்ள 12 கடல் மைல்கள் கொண்ட கடற்பரப்பு தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என சீனா தெரிவித்திருந்தது.
ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் படி ஒரு நாட்டின் தரையை ஒட்டிய் 12கடல் மைல் நீளக் கடற்பரப்பு அந்த நாட்டின் படைத்துறை ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது அந்த நாட்டுக்குச் சொந்தமான தீவுகளுக்கும் பொருந்தும். கடல் வற்றும் போது தெரிந்தும் கடல் பெருக்கத்தின் போது நீருள் மூழ்கியும் போகும் சிறுதீவுகளுக்கு இந்த 12 கடல் மைல் ஆதிக்கப் பரப்பு செல்லுபடியாகாது. ஏற்கனவே தமக்குச் சொந்தமான தீவை நாம் மேடுறுத்தியுள்ளோம் என்கின்றனர் சீனர்கள். ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தை சீனர்கள் Nansha Islands என அழைக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் முன்னரே சீனா தென் சீனக்கடல் தன்னுடையது எனச் சொல்லியிருந்தது. 1980களில் சீனர்கள் அங்கு குடியிருந்தார்கள்.
இரசியா கிறிமியாவில் செய்தது நில அபகரிப்பு என்றும் சீனா தென் சீனக் கடலில் செய்வது கடல் அபகரிப்பு என்றும் சொல்கின்றனர் அமெரிக்கர்கள்.
தென் சீனக் கடலை ஒட்டியுள்ள மற்ற நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சீனா நிர்மாணிக்கும் தீவுகளுக்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்திருந்தன. அமெரிக்கப் பராளமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலரும் அதை ஆதரித்திருந்தனர். சீனா பன்னாட்டுக் கடற்பரப்பிலே தீவுகளை நிர்மாணிக்கின்றது அது சுதந்திர உலகக் கப்பற் போக்கு வரத்துக்கு சவால் விடுக்கின்றது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தப் பன்னாட்டுக் கடற்பரப்பில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் பயணிக்கும் உரிமை எமக்கு உண்டு என்கின்றது அமெரிக்கா. அமெரிக்கா ஒரு வலிமை மிக்க நாசகாரிக் கப்பலை அனுப்பியது தென் சீனக் கடல் தொடர்பாக அதன் உறுதிப் பாட்டை எடுத்துக் காட்டுகின்றது என்றனர் படைத் துறை ஆய்வாளர்கள்.
உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.
தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் இருந்தே தென் சீனக் கடல் கடற்போக்குவரத்து தொடர்பாக பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஸ்பிரட்லி தீவுகளுக்கு அடியில் மட்டும் 5.4பில்லியன் எண்ணெயும் 55.1 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கு சவால் விட்ட அமெரிக்கா
கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் திகதி அறிவித்தது. அந்த வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் அனும்தி பெறவேண்டும் என்றது சீனா. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக 2013நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது. அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம் சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களை சீனா அறிவித்த வான் பரப்புக்குள் பறக்க விட்டன. தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகள் தமது கப்பல்களை சீனாவின் ஸ்பிரட்லி தீவுகளுக்கு அனுப்புமா?
2015-ம் ஆண்டு ஒக்டோபர் 27-ம் திகதி உள்ளூர் நேரம் காலை 06-40இற்கு அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் USS Lassen தனது ஆதிக்கக் கடற்பரப்பினுள் வந்தமை சட்ட விரோதமானது என்றும் தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தாலனது என்றும் சீன அதிகாரிகள் சினத்துடன் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்கா தனது சுதத்திரக் கடற்பயண நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் என அறிவித்துள்ளது. பன்னாட்டு விதிகளுக்கு ஏற்ப "ஒழுங்கை" நிலைநாட்டுவது தமது பணி என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் படைத்துறை உயர் அதிகாரிகள் இப்படி நாசகாரிக் கப்பல்களை அனுப்புவது சீனாவின் தீவு கட்டும் பணியைப் பாதிக்காது என்கின்றனர்.
போர் தொடுக்க முடியாத பங்காளிகள்
சீனாவின் மிகப்பெரிய வர்தகப் பங்காளி அமெரிக்காவாகும். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கும் அணுப் படைக்கலன்களின் பரவலாக்கத் தடைக்கும் சீனா பங்காளியாகும். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஒஸ்ரேலியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தாய்வான் சீனாவின் ஸ்பிர்ட்லி தீவிக் கூட்டங்களுக்கான உரிமையை நிராகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களாகா சீனா இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தில் மீட்டுள்ளது. தென் சீனக் கடலை ஒட்டிய மற்ற நாடுகள் சீனாவின் அச்சுறுத்தலால் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பராட்டுகின்றன. இரு பெரும் வர்த்தகப் பங்காளிகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிவதைத் தவிர்க்கும். தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு தீவை நிர்மாணித்தால் சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கும்? அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்தை நோக்கிய நகர்வு பசுபிக் நாடுகளுடன் செய்து கொண்ட பசுபிக் தாண்டிய வர்த்தக ஒப்பந்தத்தால் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது. நேட்டோவைப் போல் ஒரு படைத்துறை கூட்டணியும் அங்கு உருவாகும் போது சீனாவின் நிலை மேலும் சிக்கலாகும்.
அமெரிக்கத்தூதுவரை அழைத்த சீனா
சீனாவிற்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவின் நகர்வு மிகவும் பொறுப்பற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இப்படியான ஆத்திர மூட்டும் நடவடிக்கைகள் சீனாவின் தீவு கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடலின் 80 விழுக்காடு கடற்பரப்பை சீனா தன்னுடையது என அடம் பிடிப்பதற்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஹொலண்ட் நகர் ஹேக்கில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பாயத்திற்கு தென் சீனக் கடல் தொடர்பாக விசாரிக்கும் நியாய ஆதிக்கம் இல்லை என்றது சீனா. ஆனால் 22015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29-ம் திகதி Permanent Court of Arbitration தீர்ப்பாயத்திற்கு விசாரிக்கும் உரிமை உண்டு எனத் தீர்மானித்துள்ளது. அதன் தீர்ப்புக்கு சீனா கட்டுப்படவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது. இறுதித் தீர்ப்பு 2016-ம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவரும். ஆனால் அதன் தீர்ப்பிற்ற்கு சீனா கட்டுப்படுமா?

Tuesday, 27 October 2015
ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கடலோனியர்கள்
இங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாந்தும், ஸ்பெயினில் இருந்து கடலோனியாவும், இத்தாலியில் இருந்து வெனிசும், டென்மார்க்கில் இருந்து பரோத் தீவுகளும், பிரான்ஸில் இருந்து கோர்சிக்காவும், பெல்ஜியத்தில் இருந்து பிளண்டேர்சும், ஜேர்மனியில் இருந்து பவரியாவும் பிரிந்து செல்ல வேண்டும் என அவ்வப்பகுதிகளில் வாழும் மக்களில் கணிசமான அளவு மக்கள் விரும்புகின்றார்கள். இதில் அண்மைக்காலங்களாக செய்திகளில் கடலோனியாவின் பிரிவினைவாதம் அதிகமாக அடிபடுகின்றது. 2010-ம் ஆண்டு கடலோனியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக இருந்தனர். 2013-ம் ஆண்டு 48விழுக்காட்டினர் ஆதரித்தனர்.
மொழிப்பிரச்சனைதான் முதற்பிரச்சனை
பொருளாதார அடிப்படையில் உலகின் 14வது நாடான ஸ்பெயின் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியில் மோசமாகப் பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்றாகும். அந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கையில் அங்கு கடலோனிய மக்களின் பிரிவினைவாதம் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. 1714-ம் ஆண்டு கடலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கடலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கடலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். இவருக்கு இத்தாலியிலும் ஜேர்மனியிலும் உள்ள பாசிஸ்ட்டுகளின் ஆதவரவும் இருந்தது. ஸ்பெயினில் 190 சித்திரவதை முகாம்களை வைத்திருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோ நான்கு இலட்சம் பேரைக் கொன்று குவித்தவர். பொது இடங்களில் கடலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கடலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கடலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்க்ளின் பெயர்கள் உட்பட எல்லாக் கடலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கடலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். முதலில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சிக்கு நாஜிகள் ஆதரவு வழங்கினாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது.
வருமான மீள்பங்கீடு
ஏனைய ஸ்பானியப் பிரதேசத்தை மேற்கிலும் பிரான்சை வடக்கிலும் மத்திய தரைக் கடலைக் கிழக்கிலும் கொண்ட ஒரு முக்கோண வடிவப் பிராந்தியமே கடலோனியா ஆகும். ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு மாகாணமாகும். அங்கு 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயற்பட வேண்டும் என்ற விருப்பம் 19-ம் நூற்றாண்டில் இருந்து உருவாகியது. இதற்கான போராட்டங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. 2012-ம் ஆண்டு ஸ்பானியத் தலைமை அமைச்சர் ரஜோய்யிற்கும் கடலோனிய மாநில ஆட்சியாளர் ஆதர் மார்ஸிற்கும் இடையிலே முறுகல் நிலை தோன்றியது. தலைமை அமச்சர் கடலோனிய மாநிலத்தின் வருவாயில் இருந்து ஸ்பெயின் வறுமை மிக்க மற்றப் பிராந்தியங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என வேண்டியது முறுகலை உருவாக்கியது.
வளம் மிக்க கடலோனியா
ஸ்பெயின் மற்றப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கடலோனியாவில் தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள பார்சலோனாவில் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய விமான நிலையம் உள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3 ஆவது பெரிய துறைமுகமாகும். உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் மத்தியதரைக்கடற் கரைப் பிரதேசமும் கடலோனியாவில் உண்டு. ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகையில் கடலோனியர்கள் 16 விழுக்காடாகும். ஆனால் அவர்களது உற்பத்தி மொத்தத் தேசிய உற்பத்தியில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். ஸ்பானிய ஏற்றுமதியில் இருபத்தைந்து விழுக்காடு கடலோனியாவினதாகும். கடலோனியா பிரிந்து சென்றால் ஸ்பெயின் நாட்டின் கடன் பளு அதிகரிக்கும் எனச் சொல்லப் படுகின்றது. ஸ்பெயின் நாட்டின் கடன்பளுவில் எத்தனை விழுக்காட்டை கடலோனியா ஏற்கும் என்பது பேச்சு வார்த்தைகளால் மட்டும் தீர்கப்பட வேண்டிய ஒன்று. ஸ்பானிய அரசு பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத நிலையில் பேச்சு வார்த்தை மூலம் கடன் பளு பகிரப்படாமல் விட்டால் ஸ்பெயினின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 125 விழுக்காடாக அதிகரிக்கும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனையால் ஏற்பட்ட பாதிப்பு மேலும் மோசமாகலாம்.
கலந்தாலோசனையான கருத்துக் கணிப்பு
2014-ம் ஆண்டு கடலோனியப் பிராந்திய அரசு ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த முன்வந்தது. அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு அரசமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு என்ற் பெயரை பொதுக் கலந்தாலோசனை என்னும் பெயரில் கடலோனியா பிரிந்து செல்வதா இல்லையா என வாக்கெடுப்பு நடந்தது. அதையும் அரசு தடை செய்த போது கடலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடாத்தியது. வாக்களித்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் கடலோனியப் பிராந்திய அரசு எத்தனை விழுக்காடு மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர் என்பதை அறிவிக்கவில்லை. மொத்தக் கடலோனிய மக்களில் 42 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்களிப்பில் பங்கு பற்றியதாகச் சொல்லப் படுகின்றது. பதினெட்டு வயதிற்குக் குறைந்தோரும் வந்தேறு குடிகளும் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டிருந்தனர்.
Barcelonaவை மிரட்டும் Madrid
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலோனியப் பிராந்தியக் கட்சிகள் தமக்குள்ளே ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. அதில் முக்கியமாக வலதுசாரி கொன்வேர்ஜென்சியாக் மக்களாட்சிக் கட்சியும் எஸ்கியூரா குடியரசு இயக்கமும் ஒத்துழைக்க முடிவு செய்தது முக்கியமானதாக அமைந்தது. அவர்கள் 2015 செப்டம்பர் 27-ம் திகதி நடந்த பிராந்திய அவைக்கான தேர்தலை தாம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக கருதி மக்கள் தமக்கு ஆணையத் தரவேண்டும் எனச் சொல்லிப் போட்டியிட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் அவர்கள் காத்திரமான வெற்றியைப் பெறவில்லை என ஸ்பானிய நடுவண் அரசு அறிவித்தது. ஆனால் கடலோயினப் பிரிவினைவாதிகள் தேர்தல் முடிந்தவுடன் தாம் 18 மாதங்களுக்குள் தனிநாட்டுப் பிரகடனம் செய்வோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் ஸ்பானிய நடுவண் அரசு அப்படி ஒரு பிரகடனம் செய்யுமிடத்து நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோயினியப் பிராந்திய அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தது. அத்துடன் வாக்கெடுப்புச் செய்தமைக்காக கடலோனிய அதிபர் ஆதர் மாஸிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொது நிதியைத் தவறாகக் கையாண்டமை போன்ற குற்றங்களுக்காக ஆதர் மாஸ் மீது வழக்கும் தொடுத்துள்ளது.
ஸ்கொட்லாந்து பிரிவதா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு பிரித்தானிய அரசின் அனுமதியுடன் நடந்தது. அது கடலோனியர்களுக்கு ஒரு உந்து வலுவாக அமைந்தது. கடலோனியர்களின் பிரிவினை இனி ஸ்கொட்லாந்திற்கு உந்து வலுவாகலாம்.

Monday, 26 October 2015
இரசியக் குண்டு வீச்சிலும் சிரியப் படைகள் பின் வாங்குகின்றனவா?

இரசிய விமானங்களில் இருந்தும் உழங்கு வானூர்திகளிலும் இருந்தும் செய்யப் படும் குண்டு வீச்சுக்கள் மத்தியில் சிரிய அரச படைகள் எதிரிகள் மீது தரைவழித் தாக்குதல் நடாத்தி முன்னேறாமல் இருப்பது இரசியப் படைத்துறை நிபுணர்களை விரக்தியடைய வைத்துள்ளது. சிரியாவில் நடந்த படைத்துறை நிபுணர்களின் கூட்டம் ஒன்றில் ஈரானிய நிபுணர்கள் சிரியப் படையினர்மீது பெரும் கூச்சலிட்டுக் குற்றம் சுமத்தினர். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைத் தக்க வைக்க அவரது சிரிய அரபுப் படை என்னும் பெயர் கொண்ட அரச படைகளுடன் இரசியப் போர் வீரர்கள் இரண்டாயிரம் பேர், லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரானியப் படைகள் ஆகியவை போர் புரிகின்றன. 2015 செப்டம்பர் 30-ம் திகதியில் இருந்து இரசியப் போர் விமானங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போர் புரியும் அமைப்புக்களின் நிலைகள் மீது குண்டுகளை வீசி வருகின்றன.
மூன்று இலட்சம் உயிர்களைப் பலிகொண்டும் பத்து இலட்சம் பேருக்கு மேற்பட்டோரை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் இரசியத் தலையீடு நிலைமை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றது. இரசியா நேரடியாகத் தலையிட முன்னர் இருந்தே ஐக்கிய அமெரிக்கா நான்கு வகைகளில் சிரியப் போரில் தலையிடத் தொடங்கி விட்டது.
முதலாவது நேரடியாக ஐ எஸ் அமைப்பின் நிலைகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல் செய்வது. ஓராண்டுகளாகச் செய்யும் தாக்குதல் பெரியளவில் ஐ எஸ் அமைப்பினருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.
இரண்டாவது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் சுதந்திர சிரியப் படை என்னும் அரச எதிர்ப்புக் குழுவினருக்கும் அதன் ஆதரவுக் குழுவினருக்கும் ஐந்து மில்லியன் டொலர் செலவில் பயிற்ச்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது. இக்குழுக்களிடையே இருந்து போராளிகளைத் தெரிவு செய்து பயிற்ச்சியளித்து துருக்கி ஊடாக அனுப்பப் பட்ட 60 போராளிகள் சிரியாவிற்குள் நுழைந்தவுடன் அவர்கள் மேல் சிரியக் கிளர்சிக் குழுக்களில் ஒன்றான ஜபத் அல் நஸ்ரா அவர்கள் மீது ஓர் அதிரடித் தாக்குதல்களைச் செய்தது. முதலாவது தாக்குதலில் அவர்களின் தலைவரான நதீம் அல் ஹஸன் உட்படப் 18 பேரைக் கைப்பற்றிக் கடத்திச் சென்றது. அவர்களிடமிருந்து படைக்கலன்கள் பாதுகாப்பு வண்டிகளையும் தனதாக்கியது. இரண்டாவது தாக்குதலில் ஐந்து பேரைக் கொன்று 16பேரைப் படுகாயப் பட்டுத்தியது. அமெரிக்கா சிரியாவிற்கு பயிற்ச்சி கொடுத்து அனுப்பிய இன்னும் ஒரு தொகையினர் அரச படைகளிடம் சரணடைந்தனர். இத்துடன் பெண்டகன் தனது 500மில்லியன் பயிற்ச்சியும் படைக்கலன் வழங்குதலும் திட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தது.
மூன்றவதாக அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக் காரர்களுக்கு படைக்கலங்களை வழங்குதல்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கிய BGM-71 TOW என்னும் ஏவுகணைகளே சிரியாவில் அரச படைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தன. இந்த ஏவுகணைகளுக்கு அசாத்தை அடக்கிகள் எனப் பெயரிடப்பட்டன. சிரியாவின் வடபிராந்தியத்தில் கிளர்ச்சிக்காரர்கள் இந்த ஏவுகணைகளைப் பெரிதும் பயன்படுத்தினர். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் இந்த ஏவுகணைகளைப் பாவிக்கும் காணொளிகள் யூரியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவற்றால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அரச படையினரின் இரசியத் தயாரிப்பு தாங்கிகளையும் கவச வண்டிகளையும் துவம்சம் செய்தனர். இந்த ஏவுகணைகளைப் பாவிக்கத் தொடங்கிய முதல் நாளிலேயே 24 தாங்கிகளும் கவச வண்டிகளும் கிளர்ச்சிக்காரர்களால் அழிக்கப்பட்டன. BGM-71 TOW என்னும் ஏவுகணைகள் சவுதி அரேபியாவின் படைக்கல இருப்பில் இருந்தே துருக்கியூடாக கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட படைக்கலன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு கவனமாகத் திட்டமிடப்பட்டே வழங்கப்படுகின்றன. அவர்கள் ஒரு முழுமையான வெற்றி ஈட்டி அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றாமல் அசாத்தின் படைகளுக்கு இழப்பை ஏற்படுத்தி ஒரு பேச்சு வார்த்தை மூலம் அசத் பதவியில் இருந்து விலகுவதை அமெரிக்கா விரும்பியது. சிஐஏயின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சிரியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தையை மையப்படுத்தியதாக இருந்தன. எண்பதுகளில் சோவியத் படைகளுக்கு எதிராக சிஐஏ முஜாஹிதீன் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கிய Stinger என்னும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சோவியத்தை நிலை குலையச் செய்தது போல் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்குக் கொடுத்த BGM-71 TOW ஏவுகணைகள் சிரியப் படைகளைத் திக்கு முக்காட வைத்தன.
நான்காவதாக ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் போராளி அமைப்புக்கும் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களை வழங்கியது. ஆனால் துருக்கி தனது எல்லையில் குர்திஷ் மக்கள் தமது கட்டுப்பாட்டில் ஒரு பிராந்தியத்தையும் படையினரையும் வைத்திருப்பதைக் கடுமையாக எதிர்த்தது. ஐ எஸ் போராளிகள் வெற்றி பெறுவதையே துருக்கி விரும்பியது.சிரியாவில் உள்ள எல்லாப் போராளிக் குழுக்களிலும் சிறந்த முறையில் போராடுவது குர்திஷ் பெண்போராளிகளே.
இரசியப் படைகள் சிரியவினுள் வந்த பின்னர் சிஐஏ தனது ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கும் படைக்கலன்களின் அளவை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. இவையாவும் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா விற்பனை செய்யும் படைக்கலன்களில் இருந்தே செல்கின்றன. இதனால் அமெரிக்காவின் வருமானம் அதிகரிக்கின்றது. அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கு எதிராக இப்போது ஐ எஸ் அமைப்போ அல்லது ஜபத் அல் நஸ்ரா அமைப்போ தாக்குதல்கள் நடாத்துவது குறைவு. இரசியத் தலையீடு இவர்களுக்கு இடையிலான போரை நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிப் படைகள் சிரிய அரச படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தி முன்னேறி வருகின்றனர். லதக்கியாவில் தங்கியுள்ள மூன்று இரசியப் படையினரும் இவர்களின் எறிகணை வீச்சால் கொல்லப் பட்டுள்ளனர் என வெளிவந்த செய்தியை இரசியா மறுத்துள்ளது. அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படையினருக்கு மேற்கு நாடுகளினதும் பல அரபு நாடுகளினதும் உளவுத் துறையினர் பெருமளவில் உதவி செய்கின்றனர். சவுதி அரேபியா குரோசியாவிடமிருந்து வாங்கிய RBG-6 என்னும் பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் இப்போது கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இரசியப் படைகள் சிரியா வந்த பின்னர் சுதந்திர சிரியப்படையினர் Meaar Kabi, Lahaya ஆகிய இரு நகரங்களை அரச படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த இரசியப் படையினர் இவர்களின் மருத்துவ மனைமீது தாக்குதல்களை நடாத்தியதாகக் கிளர்ச்சிக் காரர்கள் தெரிவித்தனர்.
அலெப்பே பிராந்தியத்தில் ஐ எஸ் போராளிகள் பல முனைகளில் சிரியப் படைகளைக் குழப்பும் விதத்தில் தாக்குதலைத் தொடுத்து சில பகுதிகளில் முன்னேறி சிரியப் படைகளை விரட்டியடித்தனர். மஸ்கோவில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைச் சந்தித்த விளடிமீர் புட்டீன் சிரியப் படைகளின் தரை நகர்வை வலியுறுத்தினார். அவரைச் சந்தித்த பின்னர் எகிப்த்தின் அல் சிசி, சவுதி அரசர் சல்மன், ஜோர்தானிய அதிபர் அப்துல் ஃபட்டா, துருக்கியத் தலைமை அமைச்சர் எர்டோகன போன்ற சுனி முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இரசிய விமானங்கள் ஒக்டோபர் 23-ம் திகதிவரை 934 பறப்புக்களைச் (sorties) செய்து "பயங்கரவாதிகளின்" 819 நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தியுள்ளன. ஆனால் அதற்கு ஏற்ப காத்திரமான முன்னகர்வுகள் எதையும் சிரிய அரச படைகள் செய்யவில்லை. இரசிய வான் தாக்குதல்களுக்குப் பின்னர் தரை நகர்வு செய்யும் சிரியப் படைகளுக்குக் காத்திருப்பவை நிலக் கண்ணி வெடிகளும் இரசியத் தயாரிப்பு Konkurs ஏவுகணைகளும் அமெரிக்காவின் சிஐஏ வழங்கிய TOW ஏவுகணைகளும் ஆகும். இரசிய விமானிகள் பாலைவனப் புழுதியில் விமானங்களை ஓட்டுவதற்குச் சிரமப் படுகின்றார்கள் தாக்குதல் விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அடிக்கடி இடையில் தமது பறப்புக்களைத் திசை மாற்றி தளம் திரும்புகின்றன. படைக்கலன்களைத் தாங்கிச் செல்லும் விமானங்களில் பாதி தமது பறப்பை முழுமையாக மேற்கொள்ளாமல் இடையில் திரும்புகின்றன. இரசிய விமனங்களிற்கான உதிரிப்பாகங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றன. அமெரிக்கப் படைத்துறையினர் தமது விமானங்கள் 80 விழுக்காடு பறப்புக்கள் முழுமையாக நடக்கின்றன என்கின்றனர்.
அமெரிக்காவின் தரைநகர்வு ஆதரவு விமானங்களான சுடுதிறன்மிக்க A-10 Warthogs துருக்கியில் வந்து இறங்கியுள்ளன. இவை சிரியக் குர்திஷ் போராளிகள் ஐ எஸ் அமைப்பினரின் சிரியத் தலைமையகம் இருக்கும் ரக்கா நகரைக் கைப்பற்ற உதவி செய்யும். இவர்களுடன் சிரிய கிறிஸ்த்தவப் போராளிகளும் இணைந்து கொள்வார்கள்.
இரசியப் படைகள் சிரியாவிற்கு வரும்வரை இஸ்ரேல் அசாத் ஆட்சியில் இருப்பதை விரும்பியது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கைகளிற்கு சிரியா போவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆனால் இரசியப் படையினரின் வருகையின் பின்னர் இஸ்ரேல் கலக்கமடைந்துள்ளது. ஒன்று சிரியா கோலான் குன்றுகளைக் கைப்பற்றுமா என்ற அச்சம். மற்றது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிக படைக்கலங்களை லெபனானிற்கு எடுத்துச் செல்லப் போகின்றார்கள் என்ற அச்சம்.
இந்தப் பன்னாட்டுத் தலையீடுகள் சிரியப் போரை எந்த விதத்திலும் முடிவுக்கு கொண்டு வந்து அவர்களுக்கு ஒரு விடிவையோ விமோசனத்தையோ தரப்போவதில்லை. மாறாக சிரியா பல துண்டுகளாகப் பிளவுபடப்போகின்றது.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...