Tuesday, 12 May 2009

இத்தாலிச் சனியாள் சென்னையில் சொல்லிப் புட்டுப் போன சேதி என்ன?

சேலையணிந்த்தொரு முசொலினி சென்னை வந்தாள்!!!
அவள் சொன்ன சேதிகள் என்ன? என்ன??????


இழவு வீட்டில் வந்து
பாயாசம் என்ன பாயாசம்
பொணத்தில் உட்கார்ந்து
பிரியாணியே சாப்பிடுவேண்டா!!
பொத்திக்கிட்டுப் போங்கடா
போக்கத்த பயலுகளா!!


இலங்கையில் தமிழர்க்கு சமத்துவம் பெற்றுக்
கொடுப்பேன் என்று நான் சொன்னா
கேட்டுப் புட்டு கை தட்டுங்கடா கையாலாகாத நாய்களா!!!

முடிச்சவிக்கி கெழட்டுப் பயல் தின்னாமல் இருந்தான்!!
நான் சொன்னேன் ஓட்டைவாய ராஜபக்சேவிற்கு
நிறுத்தடா மொள்ள மாரியே சண்டை எண்டு!!!
நிறுத்திட்டாங்க அவங்க என்று நான் சொன்னா
நம்புங்கட நாதியற்ற நாதாரிப் பயலுகளே

Monday, 11 May 2009

தமிழர்களை கள்ளத்தனமாக "ரவுண்டு கட்டித்" தாக்கிய இலண்டன் காவல் துறையினர்.











நேற்றைய தினம் -11ம் திகதி - பிரித்தானிப் பாராளமன்றத்தின் முன் கூடி நாலு பெருந்தெருக்களை முடக்கி அங்குள்ள தமிழர்கள் இலங்கையில் 3200ற்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டதற்கு எதிராக மறியல் போராட்டம் செய்தனர்.
.
மூன்று காவல் வலயம்
ஒரு மாதத்திற்கு மேல் தமிழர்கள் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் இரவு பகலாக தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவர்களைச் சுற்ற மூன்று வலயமாக காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதல் வலயம் ஆயுதம் தரிக்காத நகரக் காவல் துறையினர். இரண்டாவது வலயம் குண்டாந்தடி போன்ற சிறு ஆயுதங்கள் தாங்கிய கலகம் அடக்கும் காவல் துறையினர். இவர்கள் ஆர்ப்பாட்டக் காரர்களிலிருந்து தொலைவில் நிற்கின்றனர். மூன்றாம் வலயம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு. இவர்கள் செந்நிற வாகனங்களுக்குள் இருப்பார்கள் இவர்கள் என்ன ஆயுதம் வைத்திருப்பார்கள் என்று காண்பது கடினம். இத்தனை காவல் வலயங்களுக்கு மத்தியிலும் ஒருமாதத்திற்கு மேல் தொடர் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர் தமிழர்கள்.
,
நேற்று தமிழர்கள் 3200 தமிழர்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து கொதித்து எழுந்து பாராளமன்றத்தின் முன் உள்ள நான்கு தெருக்களில் மறியல் செய்தனர். காலை 11-30 இற்கு இது ஆரம்பமானது. பலத்த வாகன நெரிசல் இலண்டன் நகர் முழுக்க ஏற்பட்டது. பாராளமன்றத்திற்கான பிரதான வாசல் மூடப் பட்டது. காவல் துறையினர் முதலில் பேச்சு வார்தை மூலம் தீர்க்க முற்பட்டனர். தாம் 3 நாள்கள் தொடர்ந்து மறியல் செய்யப் போவதாக தமிழர்கள் அறிவித்தனர்.

புதிய உத்தியைக் கையாண்ட காவல் துறையினர்
இப்படிப்பட்ட மறியல்களை கண்ணீர்ப்புகை அல்லது தண்ணிர்த் தாரை அடித்து கலைப்பது முடியாவிட்டால் குதிரைகளில் வந்து தாக்கிக் விரட்டுவது போன்றவற்றை காவல் துறையினர் செய்வது வழக்கம். இதில் மரணங்களும் நிகழ்வதுண்டு. இது இளையோரை மட்டும் கொண்ட கூட்டங்களில் செய்யலாம். ஆனால் தமிழர்கள் மத்தியில் முதியோரும் கைக்குழந்தைகளும் நிறைந்து காணப்பட்டனர். பலர் மரணமடைவதையும் பத்திரிகைகளின் கண்டனங்கள் அரசியல் வாதிகளின் அறிக்ககைள் ஆகியவற்றைத் தவிர்க்க காவல் துறையினர் புது உத்தியைக் கையாண்டனர். பெருமளவில் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டு உள் நுழைந்து ஒருவர் அல்லது இருவரை சுற்றி வளைத்து இரும்புக் கம்பிகளால் இடுப்புக்குக் கீழ்த் தாக்கியும் காலால் உதைத்தும் கைது செய்தனர். இதைப் பத்திரிகையாளர்களால் படம் பிடிக்க முடியவில்லை. ஒரு வயதும் நிறையாத குழந்தையுடன் நின்ற ஒரு 19 வயதுத் தாய் தன்னை நான்கு காவல் துறையினர் சூழ்ந்து நின்று தாக்கியதாகவும் குழந்தையை இழுத்துப் பறித்ததாகவும் கூறினார். இப்படியான தாக்குதல் மூலம் மூன்று வீதிகளிலிருந்து தமிழரக்ளை அப்புறப் படுத்தினர். தமிழர்களின் ஆத்திரத்தை தணிக்கு முகமாக அவர்களை ஒரு வீதியில் அமர்ந்து மறியல் செய்ய அனுமதித்தனர். பின்னர் அவர்களைச் சுற்றி வளைத்து நின்று வேறு தமிழர்கள் உட்செல்லாதவாறு தடுத்து வருகின்றனர். உள் நிற்பவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர். உள்நிற்பவர்கள் சாப்பிட நீர் அருந்த இயற்கைக் கடன்கள் செய்ய எப்படியும் வெளியே வந்துதானே ஆகவேண்டும். இப்படி அவர்களின் தொகையைக் குறைத்து விட்டு பின்னர் அப்புறப் படுத்தும் திட்டமாக இருக்கலாம்.






காணொளி - Skynews

ஈழதுக் கொடூரங்கள்!!

இலண்டனில் மீண்டும் சாலை மறியல்






இலங்கையில் 3200ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து 10,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் உள்ள சாலை நடுவே அமர்ந்து மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இம்மாதிரியான போராட்டம் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் சாலை மறியல் பெரும் வாகன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நகரக் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டுள்ளனர்.

தடை செய்யப் பட்ட புலிக்கொடிகள்
மீண்டும் இலண்டனில் பறக்கின்றன.

ஈழம் - 4 சர்வதேச அமைப்புக்கள் ஜப்பானியப் பிரதமருக்கு கடிதம்


இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கடுமையாக விமரிசித்து சர்வதேச் மனித உரிமகள் கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை காப்பதற்கான பொறுப்புடைய பூகோள மையம் சர்வ தேச நெருக்கடிக் குழு ஆகிய 4 அமைப்புக்களும் கடிதம் எழுதியுள்ளன. கடிதத்தில் தெரிவிக்கப் பட்ட முக்கியமானவற்றின் சாராம்சம்:
.
இலங்கையில் மனித உரிமைகள் ஆபத்திற்குள்ளாகி இருப்பதுடன் மோசமடைந்து வருகிறது.
.
இப்போது செய்வது போல் உலகம் பாராமுகமாகத் தொடர்ந்து இருக்குமானால் மனித உரிமைகள் தொடர்பாக உலகம் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்ததாக வரலாற்றில் பதியப்படும்.
..
பல்லாயிரக் கணக்கான மக்கள் "பாது காப்பு வலயம்" எனப்படும் பிரதேசத்தில் இப்போதும் அகப்பட்டுள்ளனர். சென்றமாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்திற்கான செயலர் ஜோன் ஹொல்ம்ஸ் அவர்கள் மாபெரும் இரத்தக் களரி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
.
நான்கு நிறுவனங்களும் சேகரித்த தகவல் களின் அடிப்படையில் ஜப்பான் உட்பட செல்வாக்கு மிக்க நாடுகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாம் நம்புகிறோம்.
. .
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பற்றிய அறிஞர்கள் இலங்கையில் மக்களுக்கு உணவிற்கும் நீருக்குமான உரிமை இருப்பதாக வலியுறுத்தினர்.
.
இலங்கை அரசிற்கு பொறுப்பும் பிறருக்கு தெரியும்படியான செயற்பாடும் அவசியம்.
.
இலங்கை அரசு செய்யும் மோசமான மனித உரிமை மீறல்களை அது சொல்லும் பயங்கரவாத ஒழிப்பு நியாயப் படுத்த மாட்டாது.
.
ஜப்பானின் காத்திரமான நடவடிக்கைகளை நாம் வலியுறுத்துகிறோம்.
.
ஐநா பாது காப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஜப்பான் ஆதரவு வழங்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறோம்.
.
ஐநாவில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நிலத்திற்கு கீழுள்ள அறையில் முடிய கதவுகளுக்குள் நடக்காமல் பாது காப்புச் சபையில் பகிரங்கமாகவும் உடனடியாகவும் நடக்க ஜப்பான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
. .
மே மாதம் 11ம்திகதி நடக்கவுள்ள பாதுகாப்புச்சாபைக் கூட்டத்தில் இலங்கையில் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உடன் நிவாரண உதவிகள் கிடைக்கவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அங்கு செல்ல அநுமதி கிடைக்கவும் ஜப்பான் வழி வகை செய்யுமென்று நம்புகிறோம்.
.
நடவடிக்கைகள் அவசரமானதும் அவசியமானதுமாகும்.



புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தைக் குறிவைக்கும் சன் தொலைக்காட்சி


முல்லைத்தீவில் 3000 தமிழர்களை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்திப் படு கொலை செய்ததை சன் மற்றும் கலைஞர் தொலைக் காட்சிகள் மூடி மறைத்துவிட்டன. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கு கலைஞர் உண்ணா விரத நாடகத்தின் பின் பிரச்சனைகள் குறைந்துது விட்டன என்று பறை சாற்றுகின்றன. ஈழப்பிரச்சனையை சர்வதேச அரங்கில் பகிரங்கப் படுத்த பலத்த பிரயத்தனம் செய்யும் ஈழத் தமிழர்களுக்கு இது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு சர்வ தேசிய மட்டத்தில் பெருமளவு பணம் செலவு செய்து வரும் இலங்கைக் கொடுங்கோலரசு பல ஊடகங்களுக்கு கையுட்டு மற்றும் சிங்கள ரத்னா பட்டங்கள் வழங்குவது உண்டு.

இப்போது சன் தொலைக்காட்சி சர்வதேசரீதியில் தாம் ஈழத் தமிழர்களுக்கான தாயகச் செய்திகளை ஒலிபரப்பவிருப்பதாக விளம்பரம் செய்கிறது.

Sunday, 10 May 2009

தமிழர்களைத் துரத்தி விட்டு சிங்களப் படைகள் குடியமர்வு


போரில் பல இராணுவத்தினர் காய மடைந்து வருவதால் அவர்களைப் பராமரிப்பதில் இலங்கை அரசு நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. இலங்கை அரசுக்கு நெருக்கடி என்றால் தமிழர்களுக்கு பேரிடிதானே.
.
இரத்தினபுரியில் வாழும் தமிழர்களை விரட்டிவிட்டு அங்கு காயமடைந்த இராணுவத்தினரை குடி அமர்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது.தமிழர்கள் 70வது வருடங்களுக்கு மேலாக வாழந்து வரும் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப் படவுள்ளனர்.
.
இது தொடர்பாக பாராளமன்ற உறுப்பினர் திரு மனோ கணேசன் அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
...
...
..
முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...