
முல்லைத்தீவில் 3000 தமிழர்களை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்திப் படு கொலை செய்ததை சன் மற்றும் கலைஞர் தொலைக் காட்சிகள் மூடி மறைத்துவிட்டன. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கு கலைஞர் உண்ணா விரத நாடகத்தின் பின் பிரச்சனைகள் குறைந்துது விட்டன என்று பறை சாற்றுகின்றன. ஈழப்பிரச்சனையை சர்வதேச அரங்கில் பகிரங்கப் படுத்த பலத்த பிரயத்தனம் செய்யும் ஈழத் தமிழர்களுக்கு இது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு சர்வ தேசிய மட்டத்தில் பெருமளவு பணம் செலவு செய்து வரும் இலங்கைக் கொடுங்கோலரசு பல ஊடகங்களுக்கு கையுட்டு மற்றும் சிங்கள ரத்னா பட்டங்கள் வழங்குவது உண்டு.
இப்போது சன் தொலைக்காட்சி சர்வதேசரீதியில் தாம் ஈழத் தமிழர்களுக்கான தாயகச் செய்திகளை ஒலிபரப்பவிருப்பதாக விளம்பரம் செய்கிறது.
2 comments:
மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் சன் தொலைக்காட்சியை உலகில் இருந்து இல்லாமல் செய்யவேண்டும்.. இதை ஈழத்தமிழர்கள் செய்வார்கள், தமிழக தமிழர்கள் செய்வீர்களா?????
சன் தொலைக்காட்சியை அனைவரும் ஒதுக்கிவிட வேண்டும் என்று நிறையபேர் வெளிநாடுகளில் தூக்கியெறிந்து வருகின்றனர்.
Post a Comment