Monday, 11 May 2009
ஈழம் - 4 சர்வதேச அமைப்புக்கள் ஜப்பானியப் பிரதமருக்கு கடிதம்
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கடுமையாக விமரிசித்து சர்வதேச் மனித உரிமகள் கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை காப்பதற்கான பொறுப்புடைய பூகோள மையம் சர்வ தேச நெருக்கடிக் குழு ஆகிய 4 அமைப்புக்களும் கடிதம் எழுதியுள்ளன. கடிதத்தில் தெரிவிக்கப் பட்ட முக்கியமானவற்றின் சாராம்சம்:
.
இலங்கையில் மனித உரிமைகள் ஆபத்திற்குள்ளாகி இருப்பதுடன் மோசமடைந்து வருகிறது.
.
இப்போது செய்வது போல் உலகம் பாராமுகமாகத் தொடர்ந்து இருக்குமானால் மனித உரிமைகள் தொடர்பாக உலகம் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்ததாக வரலாற்றில் பதியப்படும்.
..
பல்லாயிரக் கணக்கான மக்கள் "பாது காப்பு வலயம்" எனப்படும் பிரதேசத்தில் இப்போதும் அகப்பட்டுள்ளனர். சென்றமாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்திற்கான செயலர் ஜோன் ஹொல்ம்ஸ் அவர்கள் மாபெரும் இரத்தக் களரி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
.
நான்கு நிறுவனங்களும் சேகரித்த தகவல் களின் அடிப்படையில் ஜப்பான் உட்பட செல்வாக்கு மிக்க நாடுகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாம் நம்புகிறோம்.
. .
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பற்றிய அறிஞர்கள் இலங்கையில் மக்களுக்கு உணவிற்கும் நீருக்குமான உரிமை இருப்பதாக வலியுறுத்தினர்.
.
இலங்கை அரசிற்கு பொறுப்பும் பிறருக்கு தெரியும்படியான செயற்பாடும் அவசியம்.
.
இலங்கை அரசு செய்யும் மோசமான மனித உரிமை மீறல்களை அது சொல்லும் பயங்கரவாத ஒழிப்பு நியாயப் படுத்த மாட்டாது.
.
ஜப்பானின் காத்திரமான நடவடிக்கைகளை நாம் வலியுறுத்துகிறோம்.
.
ஐநா பாது காப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஜப்பான் ஆதரவு வழங்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறோம்.
.
ஐநாவில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நிலத்திற்கு கீழுள்ள அறையில் முடிய கதவுகளுக்குள் நடக்காமல் பாது காப்புச் சபையில் பகிரங்கமாகவும் உடனடியாகவும் நடக்க ஜப்பான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
. .
மே மாதம் 11ம்திகதி நடக்கவுள்ள பாதுகாப்புச்சாபைக் கூட்டத்தில் இலங்கையில் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உடன் நிவாரண உதவிகள் கிடைக்கவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அங்கு செல்ல அநுமதி கிடைக்கவும் ஜப்பான் வழி வகை செய்யுமென்று நம்புகிறோம்.
.
நடவடிக்கைகள் அவசரமானதும் அவசியமானதுமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment