Monday, 15 December 2008

Who is who?


Terrorists are those who kill their burn daughters in law alive
Terrorists are those who kill the girl-baby embryo
Terrorists are those who earns money in the name of god
Terrorists are those who misuse public funds

Terrorists are not those who fight for self-determination
Terrorists are not those who kill the evil forces
Terrorists are not those who sacrifice their life for freedom
Terrorists are not those who live their life for others.

யுத்தமே எமைச் சேர்த்தது! யுத்தமே பிரித்தது!


எங்கிருந்து எனை நினைக்கிறாயோ நானறியேன்
இங்கிருந்து நான் நினையே நினைப்பதை நீயறியாய்
அன்றொருநாள் பலாலி வீதியில் வெடித்தது ஒரு கண்ணிவெடி
இந்திய இராணுவம் கண்ட படி சுட்டது பலரைக் கொன்றது
தலை தெறிக்கச் சிதறி ஓடியோரில் நானும் ஒருவன்
தெரியாத ஒரு ஒழுங்கைக்குள் திசை மாறி ஓடிச்சென்றேன்
ஒழுங்கையின் முடிவில் தடுமாறித் திகைத்து நின்றேன்
யன்னலால் பார்த்து சடுமென வந்து கதவு திறந்தாய்
அன்று எனக்கு உயிர் கொடுத்தவள் நீ
என்னுயிரிலும் உடலிலும் அன்றே புகுந்து நிறைந்தாய்
அமைதிப் படையின் அட்டூழியங்கள் தொடரந்தன
துரோகக் குழுக்களும் கை கொடுத்து நின்றன
அப்பாவித் தமிழர் உயிர்கள் பலவும் அநியாயமாய் அழிந்தன
உனைத் தேடி நான் அலைந்த நாட்கள் பலப் பல
ஒருநாள் தரிப்பிடத்தில் பேரூந்து யன்னலில் நின் முகம்
மெலிதான ஒரு புன்னகை ஏதோ சொல்கின்ற பார்வை
என் திகைப்புத் தெளிய முன் உனைப் பிரித்தது பேரூந்து
பின்பும் தேடியலைந்தேன் குடும்பமே வெளிநாடு சென்றதாம்.
யுத்தமே எமைச் சேர்த்தது யுத்தமே எமைப் பிரித்தது

பகவான் பார்த்துக்குவார்.


காலையில் சுப்ரபாதம் பாடுவேள்
கேட்க நன்னாத்தான் இருக்கும்
சந்தியா வந்தனம் பண்ணுவேள்
சாந்திரப்படி நன்னதுங்கோ
காயத்திரி ஜெபம் சொல்லுவேள்
பாவத்தினை தீர்த்திடுமுங்காணும்
கணபதி ஹோமம் செய்வேள்
விக்னங்கள் போயிடும் பாரும்
லக்ஷ்மி பூஜை பண்ணுவேள்
சகல செளபாக்கியம் கிட்டும்
குபேர பூசை செய்வேள்
சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்
அகத்திக் கீரை சாப்பிடுவேள்
ஷேமமாய் இருப்பீள் அம்பி
துளசித் தீர்த்தம் பருகிடுவீள்
குடலுக்கு நல்லது கேளும்
ஈழத் தமிழனுக்கு அள்ளி வைக்கிறேளே
நீங்க நன்னா இருப்பேளா?
நாசமாய்த்தான் போயிடுவீர்!!
வயிறெரிஞ்சு சொல்றேன்னா
பகவான் பார்த்துக்குவார்!

கயவர் இருவர்



வைகுண்ட வாசா சிறிமன் நாராயணா
வையகம் வாழ வைப்பாயாம் ரமணா
நின் பெயரில் ஒரு நாதாரிப் பயலண்ணா
டெல்லியில் தமிழனை அழிக்கிறான் கண்ணா.

ஐயையோ அரகர மஹாதேவா சிவசங்கரா
சினம் கொண்டால் சீறுவாயாம் சிங்காரா
உன் நாமம் தன்னோடு கொண்டு ஒரு மேனன்
டெல்லியில் தமிழனை அழிக்கிறான் பாராய் பாராய்.

கன்னி வெடிகள்


காலை வீட்டிலிருந்து வேலைக்கென்று வெளியே வந்தால் - தன்
காலை மெட்டாக அசைத்து முன் மெல்லெனப் போவாள்
பாலைக் கடைந்தாற்போல் மேனியுடன் ஒரு குஜராத்திக் குமரி – என்
வாலை மனதைச் சிதறாமல் காப்பாய் மஞ்சவனப் பதி கந்தா கடம்பா

பேருந்து தரிப்பிடத்தில் கரிபியக் கன்னி யொருத்தி – சிலையென
இருந்து கையில் ஓர் காதல் நாவல் கையேந்தி – போதை
மருந்து போலொரு கண்ணால் ஓரப் பார்வை விடுகிறாள் - என்
குருத்து மனதைச் சிதறாமல் காப்பாய் நல்லைக் குமரா வேலா

வேலையில் போய் அமர்ந்தால் ஆங்கொரு ஐரிஸ் பெண்
வேலைக் கண்ணில் எடுத்து உரசிக் கொண்டு அருகில் வந்து
கொலை செய்கின்றாள் ஐயா என்தன் வாலிபத்தை – என்
காளை மனதைச சிதறாமல் காப்பாய் சந்நிதி முருகா முருகா

இத்தாலி உணவகம் மதியம் சென்றால் அங்கொரு – போலந்து
இளவழகி உணவுதரக் குனிந்து பவள மார்பு காட்டி
களவுவழி என்னை மனதைக் கவர்கின்றாள் ஐயா – என்
சிறு மனதைச சிதறாமல் காப்பாய் மாமங்காடு ஆண்டவா


Facebookஇல் பேசி எனை வாட்டுகிறாள் ஒரு பிரெஞ்சுப் பெண்
சொற்களால் செய்யும் சில் மிஷங்கள் சொல்வொணாது
வார்த்தைகளால் காட்டுகிறாள் அவள் இங்கு நீலப் படம் - வாலிப
மனதைச சிதறாமல் காப்பாய் கோணமாமலை அமர்ந்த ஈசா

Sunday, 14 December 2008

நம்பிக் கை கொடு நம்பிக்கையோடு

வன்னிக்கள நிலை பாரீர் - எம்மவர்
எண்ணிக்கை யிலாத் துயர் கேளீர் - அங்கு
குண்டோடும் செல்லோடும்
நீரோடும் பாம்போடும் - தினம்
போராட்டம் - பெரும்
திண்டாட்டம்

விண்ணில் ஒரு விமானம் பறக்கும் -உடன்
மண்ணில் பல தமிழ் உயிர் இறக்கும்
தாயென்றும் சேயென்றும் - சிறு
சிசுவென்றும் பசுவென்றும் - பல்லுடல்
சிதறும் - மனம்
கதறும்

கொக்கரிக்குது அந்த பேரினவாதம் - அது
எச்சரிக்குது எமைத் தினந்தோறும்
பொய்யோடும் புரட்டோடும்
புளுகோடும் உருட்டோடும்
கதைபல கூறும்
பத்திரிகைகள் நாறும்

கோசலை மகன் பெயரோடு ஒரு நாயோன்
கோள்கள் பல கூறும் கோணல் வாயோன் - அந்த
சிங்களரத்தினா எத்தனைநாள் - எமக்கெதிராய்
கத்தினான் கதைபல சுத்தினான் - தருணம்
பார்ப்பான் - பழி
தீர்ப்பான்

அப்பன் முருகன் பெயரொடு ஒரு சாமி
வந்தான் அந்த பெரும் புரட்டு ஆசாமி – அந்த
ஆரியன் பெரும் பேயன்
முழுவிசரன் கடும் பொய்யன் - நிற்ப்பான்
சிங்களப் பக்கம் - செல்வான்
கீழப்பாக்கம்

முட்டைக் கண்ணோடு ஓரெழுத்து நாமன்
தமிழர் நெற்றியில் போடுவான் நாமம் - அந்தக்
கோமாளி கொடுங் கேப்மாரி
மெய்மாதிரிப் பொய்மாரி
பொழிவான் - ஒருநாள்
அழிவான்

தமிழர் போராட்டமிங்கு வெல்லும் - உந்த
உலுத்தர்க்கு நல்ல பதில் சொல்லும்
பொழுது புலரும் ஈழம் மலரும் - எம்
துயர் தீரும் இடர் போகும் - பெரும்
புகழ் சேரும் தமிழ் வாழும்
நம்பிக் கை கொடு – மன
நம்பிக்கையோடு

Are you the Srilankan Army?

Your smile attacking me like shells
Your style blasting me like landmines
Am I an innocent Tamil baby?
Are you the Srilankan Army?

Your stare blowing me up like bombs
Your glare setting me ablaze
Am I an innocent Tamil child?
Are you the Srilankan Air Force?

I am drifting alone in the sea of sorrow
Your reluctance makes me to sink to death
Am I an innocent Indian fisherman?
Are you the Srilankan cruel Navy?

I am looking for you everywhere
You are evading me forever
Am I Indian Indra Radar?
Are you the plan of Tamil Tiger?

When Manmadhan runs out him ammunitions
You replenish him with your beauty to attack me
Am I the Liberation Tigers of Tamil Eelam?
Are you Pakistan or Red China?


I never did anything against you
You ignore me for no reason
Am I freedom fighting movement?
Are you the Unites States of America?


You are ignorance of my woe
Always, you do not care
Am I the Tamils of Eelam?
Are you the Indian government?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...