Monday, 15 December 2008
யுத்தமே எமைச் சேர்த்தது! யுத்தமே பிரித்தது!
எங்கிருந்து எனை நினைக்கிறாயோ நானறியேன்
இங்கிருந்து நான் நினையே நினைப்பதை நீயறியாய்
அன்றொருநாள் பலாலி வீதியில் வெடித்தது ஒரு கண்ணிவெடி
இந்திய இராணுவம் கண்ட படி சுட்டது பலரைக் கொன்றது
தலை தெறிக்கச் சிதறி ஓடியோரில் நானும் ஒருவன்
தெரியாத ஒரு ஒழுங்கைக்குள் திசை மாறி ஓடிச்சென்றேன்
ஒழுங்கையின் முடிவில் தடுமாறித் திகைத்து நின்றேன்
யன்னலால் பார்த்து சடுமென வந்து கதவு திறந்தாய்
அன்று எனக்கு உயிர் கொடுத்தவள் நீ
என்னுயிரிலும் உடலிலும் அன்றே புகுந்து நிறைந்தாய்
அமைதிப் படையின் அட்டூழியங்கள் தொடரந்தன
துரோகக் குழுக்களும் கை கொடுத்து நின்றன
அப்பாவித் தமிழர் உயிர்கள் பலவும் அநியாயமாய் அழிந்தன
உனைத் தேடி நான் அலைந்த நாட்கள் பலப் பல
ஒருநாள் தரிப்பிடத்தில் பேரூந்து யன்னலில் நின் முகம்
மெலிதான ஒரு புன்னகை ஏதோ சொல்கின்ற பார்வை
என் திகைப்புத் தெளிய முன் உனைப் பிரித்தது பேரூந்து
பின்பும் தேடியலைந்தேன் குடும்பமே வெளிநாடு சென்றதாம்.
யுத்தமே எமைச் சேர்த்தது யுத்தமே எமைப் பிரித்தது
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment