Tikka, Jalfrezi, Madras, Balti, Tandoori, Rogan Josh, Kurma, Vindaloo போன்ற இந்திய உணவுகளின் பெயர்கள் இங்கிலாந்தில் ஒரு உதைபாந்தாட்ட அணியினர் தமது வீரர்களின் ரி-ஷேர்ட்டில் அவர்களின் பெயர்களுக்குப் பதிலாக எழுதப்பட்டுள்ளது.
Bollington United என்னும் காற்பந்தாட்டக் கழகம் தனது 7 பேர் கொண்ட 9வயதுக்கு உட்பட்ட வீரர்கள் அணியில் விளையாடுபவர்களுக்கு அவர்களது குடும்பப் பெயர்களுடன் இந்திய உணவுகளின் பெயர்களை இணைத்துப் புதுமை செய்துள்ளது. Tikka’ Hall, Oliver ‘Jalfrezi’ Gaunt, Jackson ‘Madras’ Mather, Will ‘Tandoori’ Richardson, Caleb ‘Rogan Josh’ Rogers, Sam ‘Bhuna’ Baistow, Paddy ‘Kurma’ Watts and Tom ‘Vindaloo’ Boyd. என்பன அவர்களின் பெயர்க்ளாக இருக்கிறது. அவர்களின் ரி-ஷேர்ட்டில் உணவுகளின் பெயர்களே பதியப்பட்டுள்ளது.
இப்படிச் செய்வது ஒரு காரணத்துடன் தான் அவர்களது விளையாட்டுக் கழகத்திற்கு அண்மையில் இருக்கும் Viceroy restaurant என்னும் இந்திய உணவகம் அவர்களுக்கான பண உதவியைச் செய்கிறது. இந்தப் பெயர்கள் அந்த Viceroy restaurant உணவகத்திற்கு விளம்பரமாகிறது. Viceroy restaurant உணவகம் நீண்டகாலமாக Bollington United காற்பந்தாட்டக் கழகத்திற்கு நிதி உதவி செய்து வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டல் நடந்துள்ளது. பெயர் சூட்டலும் காரணத்துடன்தான் செய்யப்பட்டுள்ளது. காரசாரமாக விளையாடும் hot striker எனப்படும் Tom Boyd என்பவர் Vindaloo’ Boyd எனப் பெயரிடப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment