ஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ஒன்றும் தெரியாது. முதலில் ஒரு சிறு புற்தரையைக் கண்டு அதிசயித்தது நின்றது அப்போது ஒரு பெண் முயல் அதனிடம் வந்தது.
தன்னிடம் வந்த பெண் முயலை ஆச்சரியத்துடன் ஆய்வுகூட முயல் பார்த்தது. தனக்கு வெளி உலகம் பற்றித் தெரியாது என்று தன் கதையைச் சொன்னது. அதற்கு அந்தப் பெண் முயல் உலகம் மிகவும் இனிமையானது என்று சொல்லி முயலை ஒரு தோட்டத்திற்கு கூட்டிச் சென்று அங்கு உள்ள கரட்களை எப்படித் தோண்டி வெளியில் எடுப்பது என்பதைக் காட்டிக் கொடுத்தது. இரண்டும் நிறையக் கரட்களை உண்டு மகிழ்ந்தன. இந்தக் கரட் மட்டும்தானா உலகம் என்று ஆய்வுகூட ஆண் முயல் கேட்டது. பின்னர் அந்தப் பெண் முயல் ஒரு மலையும் ஒரு தடாகமும் உள்ள இடத்திற்கு ஆய்வு கூட முயலை அழைத்துச் சென்று உலகம் மிகவும் அழகானது என்றது. ஆய்வுகூட முயலும் இயற்கை அழகுகளைப் பார்த்து இரசித்தது. பின்னர் இவ்வளவு தான உலகம் என்று ஆய்வு ஆண் கூட முயல் கேட்டது. பின்னர் வேறு இரு முயல்கள் ஒன்றுடன் ஒன்று காதல் புரிவதைக் காட்டியது பெண் முயல். பின்னர் ஆய்வுகூடமுயலும் பெண் முயலும் காதல் புரிந்தன. இப்போது இந்த உலகம் உண்மையில் மகிழ்ச்சி நிறைந்ததுதான் என்றது ஆய்வுகூட ஆண் முயல். அப்போ என்னுடன் இனி வாழ்நாள் பூராவும் இருப்பாயா என்று கேட்டது பெண் முயல். அதற்கு ஆண் முயல் இல்லை நான் மீண்டும் ஆய்வு கூடம் போகப்போகிறேன் என்றது. பெண் முயல் ஆச்சரியப்பட்டு ஏன் என்றது. அதற்கு அந்த ஆய்வுகூட ஆண் முயல் என்னால் சிகரட் இல்லாமல் இருக்க முடியவில்லை என்றது.
Six stages of married life:
1: Tri-weekly
2: Try weekly
3: Try weakly
4. Try oysters
5: Try anything
6: Try to remember
ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியை கடைசிப்பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார். தான் சொல்லும் கூற்றுகளை யார் சொன்னார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்பவர்கள் உடனே வீடு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொல்லி முத்லாவதாக "இது இங்கிலாந்தின் உன்னதமான தருணம்" என்ற கூற்றை யார் சொன்னார்கள் எனக் கேட்டார். ஒரு மாணவி எழுந்து வின்ஸ்டன் சேர்ச்சில் எனப்பதிலளித்தாள். சரியான பதில் நீ உடன் வீடு செல்லலாம் என்றார் ஆசிரியை. அடுத்து "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேட்டுப்பார்." என்ற கூற்றை யார் சொன்னார் என வினவினா? ஒரு மாணவி எழுந்து ஜோன் எஃப் கெனடி என்றாள் அவளைப் பாராட்டி வீட்டுக்கு அனுப்பினார் ஆசிரியை. தனக்குத் தெரிந்த பதிலை இரு மாணவிகள் தன்னை முந்திக் கொண்டு சொல்லிவிட்டார்கள் என ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் "இரண்டு தேவடியாளும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என்றான். அது யார் சொன்னது என ஆத்திரத்துடன் கேட்டார் ஆசிரியை. இன்னொரு மாணவி எழுந்து பில் கிளிண்டன் என்றாள். ஆசிரியை முழு வகுப்பையும் வீடு செல்லச் சொன்னார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment