உலகத்தின் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டு வருகிறது என்ற அச்சம் பலரிடையே நிலவுகிறது. சீனர்களின் நடவடிக்கைகளைப் பற்றி மற்றவர்களின் விமர்சனத்தை அவர்கள் கருத்தில் எடுப்பதில்லை. இதனால் சீனாவின் ஆதிக்கம் உலகில் வளருமிடத்தி நிலை எப்படி இருக்கும் என்ற அச்சம் வளர்ந்து வருகிறது.
தனது நாட்டில் பிறக்கும் பிள்ளைகள் பிறக்க சீனா பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான புத்திசாலிகளின் DNA மாதிரிகள் பற்றிய தகவல்களை சீனா சேகரித்து. அதி்ல் புத்திசாலிகளுக்கான DNA மாதிரிகளின் பொதுத் தன்மை போன்றவற்றை அறிந்து கொண்டது சீனா. அத்துடன் எந்த DNA மாதிரிகள் புத்திசாலிகளுக்குரியது என்பதை அறிந்து கொள்வதில் சீனா பெரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
ஒரு தாயின் சூல்கள் பலவற்றையும் தந்தையின் விந்துகள் பலவற்றையும் தனித்தனி இணைத்து பல கருக்களை சோதனைக் குழாய்களில் வளர வைத்து அவற்றின் DNA மாதிரிகளை ஆய்வு செய்து அது புத்திசாலிகளுக்கான DNA மாதிரிகளுடன் ஒத்துப் போகும் கருவை மட்டும் தாயின் கர்பப்பையில் செலுத்தி விடுவார்கள். இதனால் பிறக்கும் பிள்ளை புத்திசாலியாக இருக்கும்.

No comments:
Post a Comment