Tuesday, 29 January 2013
சேலைக் கடையில் பயங்கரவாதம் சமையலறையில் தீவிரவாதம்
ரஜனியையோ கமலையோ சல்மான் கானையோ
ரித்திக் ரோசனையோ மாதவனையோ
அஜித்தையோ விஜய்யையோ
திருமணம் முடிக்க முடியாமல் போனதால்
யாரையோ திருமணம் செய்து
திண்டாடும் மனைவிகள்
ஆயிரமாயிரம் இங்குண்டு
சேலைக் கடையில் பயங்கரவாதம்
சமையலறையில் தீவிரவாதம்
படுக்கையறையில் பணவிவகாரவாதம்
எனப் பலவாதம் புரியும் மனைவியர்
ஆயிரமாயிரம் இங்குண்டு
onlineஇல் Paypal செய்வதிலும் பார்க்க
விரைவாக offline இல் பணப்பரிமாற்றம் செய்து
மாதக் கடைசியில் வந்த சம்பளத்தை விரைவில்
ஒரு வாரத்தில் காலியாக்கும் மனைவியர்
ஆயிரமாயிரம் இங்குண்டு
இந்தச் சில ஆயிரங்களை ஒதுக்கிவிட்டால்
துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழனாக
சோர்வில் மடி கொடுக்கும் தாயாக
தவறினால் நல் வழிப்படுத்தும் தந்தையாக
ஐங்கணைகள் தாக்கும் போது
அணைத்துக் காக்கும் அணையாக
அனைத்திலும் நல்ல துணையாக
வந்து எம்மை மகிழ்விக்கும்
நல்ல மனைவியரும் ஆயிரமாயிரம் உண்டு
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment