ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதற்கான இல்மனைற் பதனிடும் நிலையங்களை நிலத்திற்கு கீழ் அமைத்துள்ளது. அவற்றில் மிகப்பெரிய இல்மனைற் பதனிடும் நிலையம் Fordow என்னும் இடத்தில் அமைந்துள்ளது. அங்கு பெரும் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக கடந்த வாரம் செய்திகள் பல இணையத் தளங்களில் இடம் பெற்றன. ஆனால் எந்த ஒரு செய்தி நிறுவனமும் அதை செய்தியாக வெளியிடவில்லை.
ஈரானிய அணுகுண்டையிட்டு இஸ்ரேலிலும் பார்க்கவும் அமெரிக்காவிலும் பார்க்கவும் அதிக கரிசனை கொண்ட நாடு சவுதி அரேபியா. சவுதியில் சுனி முசுலிம்கள் வாழ்கின்றார்கள். ஈரானில் சியா முசுலிம்கள் வாழ்கிறார்கள். இருவருக்கும் இடையில் பரம் விரோதம். சவுதி அரச குடும்பத்திற்கு ஈரானிய மதவாதிகளைப் பிடிக்காது.
ஈரானின் Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையத்தில் உள்ள centrifuges எனப்படும் பெரிய சுற்றும் குழாய்கள் பல வெடித்ததாகச் செய்திகள் இணையங்களில் உலாவின. இந்த வெடிப்பு 21-01-2013 திங்கட் கிழமை காலை 11.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. அங்கு பணிபுரிந்த 240 பேர் உள்ளே அகப்பட்டு இருந்ததாகச் சொல்லப்பட்டது. Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையம் ஒரு மலைத் தொடரில் நிலமட்டத்தின் கீழ் 240 அடிக்குக் கீழ் உள்ளது. இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே இந்த ஏற்பாடு.
ஈரானிய இல்மனைற் பதனிடும் நிலையங்களை இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட், பிரித்தானிய உளவித்துறையான சிஐஏ, பிரித்தானிய உளவுத் துறையான எம் ஐ 5 ஆகியன உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. இவற்றை நிர்மூலப் படுத்தும் செயலில் அவை ஈடுபட்டும் வருகின்றன. 11-01-2012இலன்று பட்டப் பகலில் ஈரானிய அணு விஞ்ஞானியான முஸ்தபா அஹ்மதி
றொஸானன் அவரது வாகனத்தின் அடியில் பொருத்தப்பட்ட காந்தக் குண்டு
வெடித்தமையில் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்ட மூன்றாவது ஈரானிய அணு
விஞ்ஞானி. இன்னொருவர் மீதான கொலை முயற்ச்சியில் இருந்து அவர்
தப்பிவிட்டார். மொத்தமாக முன்று ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்,
2010இல் Stuxnet வைரஸ் தாக்குதல்
இஸ்ரேல் உருவாக்கியதாக நம்பப்ப்டும் கணனி வைரஸ் 2010ஜூனில் தவறுதலாக
வெளிவந்து உலகெங்கும் பல கணனிகளைத் தாக்கியிருந்தது. த ஈரானிய
விஞ்ஞானியின் மடிக்கணனியிக்குச் செலுத்தப்பட்ட வைரஸ் அவரது மடிக்கணனியில்
இருந்து உலகெங்கும் பரவியது. அந்த வைரஸ் Stuxnet என்று அழைக்கப்படிருந்தது.
இந்த வைரஸ் ஜெர்மானிய எந்திரவியல் நிறுவனமான சீமன்ஸைத் தாக்கியிருந்தது.
சீமன்ஸ் நிறுவனம் ஈரானிற்குத் அணுக்குண்டு உற்பத்திக்குக் தேவையான
உபரகரணங்களை உற்பத்தி செய்து வருகின்றது. அத்துடன் பல ஈரானியக் கணனிகளையும்
செயலிழக்கச் செய்தது. ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி
நிலையத்தில் இருந்த கண்காணிப்பு காணொளிப்பதிவுக் கருவிகளில் இருந்து
கிடைத்த தகவல்களின்படி Stuxnet வைரஸ் 900முதல் 1000வரையிலான
மையநீக்கிக்(centrifuges) கருவிகள் பிரித்தெடுத்து அகற்றிச் செயலிழக்கச்
செய்தது. நிலமையைச் சரிவரப் புரியாத ஈரானிய ஆட்சியாளர்களுக்கு தங்கள்
விஞ்ஞானிகளின் திறமை மீது ஐயம் ஏற்படவும் செய்தது.
Flamer வைரஸ் தாக்குதல்
இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் ஈரானிய அணுக்குண்டு
உற்பத்தி நிலையங்கள் மீது தொடர்ந்து பல கணனி வைரஸ் தாக்குதல்களை நடாத்தி
வருவதாக நம்பப்படுகிறது. 2012 மே மாதம்31-ம் திகதி இன்னும் ஒரு
இணையவெளித் தாக்குதல் ஈரானிய அணு ஆராய்ச்சி நிலைகள் மீது
நடாத்தப்பட்டுள்ளது. Flamer என்னும் பெயர் கொண்ட இந்த வைரஸ் Stuxnet
வைரஸிலும் பார்க்க 40மடங்கு வலுக்கொண்டதாக நம்பப்படுகிறது. அத்துடன் முதல்
தடவையாக ஒரு வைரஸ் bluetooth capabilityஉடன் வந்துள்ளது. கணனியை
இயக்குபவர்களின் உரையாடல்களையும் Flamerவைரஸ் ஒற்றுக்கேட்டு ஒளிப்பதிவு
செய்துவிடும்.ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள
கணனிகள் இணைய வெளியுடன் தொடர்பற்ற முறையில் இயங்குகிறது. ஆனால் அங்கு
உளவாளிகள் மூலம் Flamer வைரஸ் உட்புகுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அது
அங்கு உள்ள உபகரணங்களை வழமையான தவறுகளால் பழுதடைவது போல் பழுதடையச்
செய்திருக்கிறது. அதனால் நடந்த தவறுகள் பிழையான உதிரிப்பாகங்களால் நடந்தவை
என ஈரானியர்களை நம்பவைக்கப்பட்டது.
செய்தியைப் பரப்பிய சிஐஏ இன் முன்னாள் முகவர்
ஈரானின் Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையத்தில் 21-01-2013இலன்று வெடிப்பு நிகழ்ந்ததாக செய்தியை வெளிவிட்டவர் அமெரிக்காவில் வாழும் ஈரானியக் குடிமகனான ரெஜா கஹிலிலி (Reza Kahlili) என்பவர். அமெரிக்காவில் படித்த இவர் ஈரான் திரும்பி அங்கு ஈரானியப் புரட்சியில் இணைந்தவர். பின்னர் அமெரிக்க உளவுத் துறை சிஐஏயின் முகவராகச் செயற்பட்டவர். பின்னர் மீண்டும் அமெரிக்கா சென்று அங்கு வாழ்ந்து வருகிறார். இப்போது இவர் ஈரானைப் பற்றி எழுதுவதிலும் உரைகள் நிகழ்த்துவதிலும் தனது பிழைப்பை நடாத்தி வருகிறார்.
இஸ்ரேலால் உறுதி செய்ய முடியவில்லை
ஈரானின் Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஹாரெட்ஸ் பத்திரிகை அப்படி ஒரு வெடிப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கின்றது. இஸ்ரேலிய செய்மதிகள் தொடர்ந்து ஈரானிய இல்மனைற் பதனிடும் நிலையங்களை கண்காணித்து வருகின்றன. அவற்றின் படப்பதிவுகளின்படி Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையத்தை நோக்கி ஈரானிய படையினரின் வாகனங்கள் பெருமளவில் நகர்ந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை என்கிறது இஸ்ரேலின் ஹாரெட்ஸ் பத்திரிகை.
அமெரிக்கப் பத்திரிகை மேற்படி வெடிப்புத் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. செய்தியை மறுக்கவுமில்லை.
செய்தியை வெளியிட்ட ஈரானியக் குடிமகனான ரெஜா கஹிலிலி (Reza Kahlili)தனக்கு இப்போதும் ஈரானின் பல மட்டத்திலும் தொடர்புகள் இருக்கிறது என்று சொல்கிறார். ஈரானிய உச்சத் தலைவர் கொமெய்னியின் மாளிகையிலும் தமக்குத் தொடர்பு இருக்கிறது என்கிறார். இவர் பழி வாங்கலுக்கு அஞ்சி தன் முகத்தை ஒரு நாளும் வெளிவிட்டது இல்லை. உரைகள் நிகழ்த்தும் போது தொப்பியும் கண்ணாடியும் அணிந்து வாயையும் மூடிக் கட்டிக் கொள்வாராம். இவர் ஏன் இப்படி ஒரு செய்தியை வெளிவிட்டார் என்ற கேள்விக்கு விடை இவர் எப்போது இப்படி ஒரு செய்தியை வெளிவிட்டார் என்பதைப் பார்க்கும் போது கிடைக்கும். இவர் செய்தியை வெளிவிட்டது (21-01-2013) இஸ்ரேலின் தேர்தலின் இறுதிக்கட்டத்தின் போது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
good Article ,Am a suuni follower but i like IRAN because of the Humanitarian acts and the long friendship with india.
Post a Comment