Sunday, 27 January 2013

குவாட்டர் தத்துவங்கள்

கணவன்மார் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்??
புத்திசாலிகள் திருமணம் செய்து கொள்வதில்லை.

ஒரு கிளாஸ் அடிச்சவுடன் நான் கிக்கின் உச்சத்திற்குப் போய்விடுவேன். ஆனால் அது நாலாவதா ஆறாவதா என்று தெரியவில்லை.

A man hath no better thing under the sun, than to eat, and to drink, and to be merry.
Bible - Ecclesiastes 8.15

கவலையா? தண்ணியடிச்சு மற. இன்பமா? தண்ணியடிச்சுக் கொண்டாடு. போரடிக்குதா? தண்ணியடிச்சு உல்லாசமாயிரு. பொழுது போகவில்லையா தண்ணியடிச்சு  ஜாலியாயிருங்க.  எங்கும் எப்போது அடி தண்ணி.

அமெரிக்காவில் குவாட்டர் என்னா காசு, நம்ம ஊரில் குவாட்டர் என்றால் தண்ணி. ரெண்டுமே மனிசனுக்கு தேவை மச்சி....

“The battle with the bottle is nothing so novel.”
― Elvis Costello

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணியடிப்பதை நிறுத்தினேன். அப்பப்பா......... நாலு நாட்கள் நரக வேதனை.

வாழ்க்கையிலேயே கவலையான விசயம் என்னைத் தண்ணியடிக்க வைச்சவளுக்கு ஒரு தாங்ஸ் கூட சொல்லலை.

தண்ணியடிக்கிறது கூடாது என்று ஒரு புத்தகதில் வாச்சிசேன். அன்றிலிருந்து விட்டுட்டன் புத்தகம் வாசிக்கிறதை.

தண்ணியடிச்சவுடன் தூங்கி விடுவேன். தூங்குவதால் நான் பாவங்கள் செய்வதில்லை. பாவங்கள் செய்யாததால் நான் சொர்க்கம் செல்வேன்.

ஒரு நாளில் 24 மணித்தியாலத்தையும் ஒரு பெட்டியில் 24 பியர் குவளைகளையும் வைத்தது ஏன்?

நான் தண்ணியடிப்பதில் நிறையப் பணததைச் செலவளித்தேன். மிச்சம் எல்லாம் வேஸ்டாப் போயிடுச்சு.

அநேகமான பாடல்கள் தண்ணி, பெண், கடவுள் ஆகிய மூன்றையும் பற்றித்தான்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...