2012-ம் ஆண்டு ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு இன்னும் ஒரு மோசமான ஆண்டாக அமைந்தது. ஒன்றிய நாடுகளின்
கடன் பிரச்சனை, யூரோ நாணயத்தின் பிரச்சனை, வேலையில்லாப் பிரச்சனை,
சமூகப்பிரச்சனை போன்றவற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. உலக வல்லரசு
நாடுகள் ஐந்தில் இரண்டு நாடுகளான பிரித்தானியாவும் பிரான்சும் ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளில் இருக்கின்றன. ஐநூறு மில்லியன் (ஐம்பது கோடி) மக்களைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரம். ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தின் நிலை உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைகிறது.
ஐரோப்பிய வேலையில்லாப் பிரச்சனை
வேலையில்லாதவர்களின்
விழுக்காடு ஜப்பானில் 4.2% ஆகவும் அமெரிக்காவில் 7.6%ஆகவும்
பிரித்தானியாவில் 7.7% ஆகவும் இருக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின்
சராசரி விழுக்காடு 10.7% ஆக இருந்தது. தொடர்ந்து 19 மாதங்களாக வேலையற்றோர் தொகை
உயர்ந்து கொண்டிருப்பது அரசியல் தலைவர்களைச் கவலையடைய வைக்கிறது. 26
நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 26மில்லியன் பேர்
வேலையற்றிருக்கின்றனர். யூரோ வலய நாடுகள் எனப்படும் யூரோ
நாணயக் கட்டமைப்புக்குள் இருக்கும் 17 நாடுகளில் வேலையில்லாப் பிரச்சனை
ஏற்றுக் கொள்ள முடியாத அளவு உயர்வாக இருக்கிறது. யூரோவலய நாடுகளின் சராசரி
விழுக்காடு 2012 ஒக்டோபரில் 11.6% ஆக இருந்தது நவம்பரில் 11.7% ஆக உயர்ந்தது. 1999இல் ஆரம்பிக்கப்பட்ட யூரோ நாணய நாடுகளைப் பொறுத்த வரை இந்த 11.7% மிகக்கூடிய விழுக்காடாகும்.
நாணயம் மனிதனுக்கு அவசியம்
ஐரோப்பிய
ஒன்றியத்தில் உள்ள 26 நாடுகளில் 17 நாடுகள் யூரோ நாணயக் கட்டமைப்பில்
இணைந்திருக்கின்றன. யூரோ வலய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனை மற்ற 9
நாடுகளின் பிரச்சனையிலும் பார்க்க மோசமாக இருக்கின்றது. யூரோ
நாணய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியான ஐரோப்பிய மத்திய
வங்கியின் நிபந்தனைகளுக்கு அமைய தமது நாட்டின் நிதிக் கொள்கையை வகுக்க
வேண்டும். யூரோ நாணய நாடுகள் தமது அரச கடன், அரச செலவீனம், பணவீக்கம்
போன்றவற்றை யூரோ நாணயக் கட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு அமைய நிர்வகிக்க
வேண்டும். ஆனால் இந்த அரச நிதி நிர்வாக நிபந்தனைகளை விதிப்பதிலும்
கட்டுப்படுத்துவதிலும் ஜெர்மனி அதிக செல்வாக்கு வகிக்கிறது. ஒரு
நாட்டுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அந்நாடு தனது நாணய
மாற்று வீதத்தையும் வங்கிக் கடன் வட்டி வீதத்தையும் பொருளாதார சூழ்
நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும். கிரேக்கம் 17 நாடுகளைக் கொண்ட யூரோ
கட்டமைப்பில் இருப்பதனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகளைச் செய்ய முடியாது.
யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதமும் அதில் உள்ள 17 நாடுகளில்
பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனியின் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே
நிர்ணயிக்கப் படுவதாக குற்றச் சாட்டு உண்டு. யூரோ நாணயக் கட்டமைப்பில்
இருக்கும் நாடு தனது கடன் பளு பண வீக்கம் போன்றவற்றை சில வரையறைகளுக்குள்
வைத்திருக்க வேண்டும்.
ஐரோப்பியாவில் தெற்கு தேய வடக்கு வாடுகிறது
உலக
நாடுகள் பொருளாதார ரீதியில் ஒன்றில் ஒன்று தங்கி இருக்கின்றன. இந்தப்
பின்னிப் பிணைவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடை இன்னும் நெருக்கமாக இருக்கிறது.
அவை ஒரு பொருளாதாரக் கட்டமைப்பில் இருப்பதால் ஒரு நாட்டில் ஏற்படும்
பொருளாதாரப் பிரச்சனை மற்ற நாட்டைப் பாதிக்கும். வடக்கு ஐரோப்பிய நாடுகளான
ஒஸ்ரியாவில் 4.5%ஆகவும், லக்சம்பேர்க்கில் 5.1%ஆகவும் ஜேர்மனியில் 5.4%
ஆகவும் நெதர்லாந்தில் 5.6% ஆகவும் இருக்கும் வேலையற்றோர் விழுக்காடு தெற்கு
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயினிலும் கிரேக்கத்திலும் 26% ஆக இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே கிரேக்கத்தில்தான் வேலையற்றோர் எண்ணிக்கை
,மிகப் பெரும் அதிகரிப்பை கண்டுள்ளது. அங்கு வேலையற்றோர் விழுக்காடு
18.9%இல் இருந்து 26% ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினையும் கிரேக்கத்தையும்
யூரோ நாணயக் கட்டமைப்பில் கட்டாயமாகத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய
கட்டாயம் மற்ற நாடுகளுக்கு இருக்கிறது. இந்த இரு நாடுகளும் யூரோ நாணயக்
கட்டமைப்பில் இருந்து வெளியேறினால் அது ஐரோப்பியப் பொருளாதாரத்தில்
மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டு
நாடுகளும் வெளியேறினால் அந்த நாடுகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள்
முறிவடையும் அது ஒரு தொடர் டொமினோ சரிவை ஐரோப்பியப் பொருளாதரத்திலும் உலகப்
பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும். இவ்விரு நாடுகளுக்கும் பெரும் பொருளாதார
உதவிகள் வெளியில் இருந்து தேவைப்படுகிறது. அடுத்த பிரச்சனைக்குரிய நாடு
வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாலியாகும்.
விடியலுக்கு வெகுதூரம்
ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனை 2013ஐயும் தாண்டிச் செல்லும் என
எதிர்பார்க்கப்படுகிறது. வேலையற்றோரின் அதிகரிப்பு 20141-ம் ஆண்டு வரை
தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. யூரோ வலய நாடுகளில் 11.8% ஆக
இருக்கும் வேலையற்றோர் தொகை 2011இல் 12.5%இற்கு மேல் உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கடுமையான சிக்கன
நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய நிலையில் இருக்கின்றன. அரச செலவீனங்கள்
குறைக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும். அரசுகள்
வரிகளை அதிகரித்தும் சம்பளங்களையும் ஓய்வூதியங்களையும் குறைத்தன. இதனால்
மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது.இதனால் அவர்களின் கொள்வனவுத்
திறன் குறைகிறது. இது உற்பத்தித் துறையைப் பாதிக்கும். அது வேலையில்லாப்
பிரச்சனையை அதிகரிக்கும். இத் தொடர் வீழ்ச்சியை நிறுத்தி பொருளாதாரத்திற்கு
ஒரு உந்து வலுவை எப்படிக் கொடுப்பது என்று தெரியாமல் அரசுகளும் பொருளாதார
நிபுணர்களும் கையைப் பிசைகின்றனர். வங்கிகள் கடன் கொடுக்க அஞ்சுகின்றன.
மக்கள் கடன் பட அஞ்சுகின்றனர். இது வளர்ச்சியடைந்த பொருளாதார முறைமையைக்
கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு உகந்ததல்ல.
வெளியில் இருந்து வரும் உந்து வலு
ஐரோப்பிய
ஒன்றியத்துக்குள் இருந்து ஒரு உந்து வலு இல்லாத நிலையில் வெளியில் இருந்து
ஒரு உந்து வலு கிடைக்குமா என்ற கேள்விக்கும் நல்ல பதில் இல்லை. பெரும்
பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் ஜப்பானும் தமது பிரச்சனையைச் சமாளிக்க
முடியாமல் தடுமாறுகின்றன. வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரங்களான சீனாவும்
இந்தியாவும் 2012இல் வேகக் குறைப்பைக் கண்டுள்ளன. அதற்கான முக்கிய
காரணங்களில் ஒன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்று மதியில்
வீழ்ச்சியடைந்தமையே. 2007இற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலில்
இருந்து இன்னும் உலகம் விடுபடாமைக்குக் காரணம் ஒரு சரியான உந்து வலு
எங்கிருந்தும் கிடைக்காமையும் பின்னிப் பிணைந்த நெருக்கடிகளுமே. அமெரிக்க
fiscal cliff என்னும் அரச நிதிப் படுகுழி கடைசித் தருணத்தில்
தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் பங்குச் சந்தையில் ஒரு
நிம்மதிப் பெருமூச்சு விடப்பட்டது. எரி பொருள் விலை அதிகரித்தது. ஆனால்
அமெரிக்கா தனது நிதிப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை ஒத்தி வைத்துள்ளது.
2013இல் செய்யப்படவிருக்கும் வரி
அதிகரிப்பால் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இது அரச
வருமானத்தைக்
குறைக்கும். அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் 1% குறைப்பை அரச நிதிப்
படுகுழித் தவிர்ப்பு உடன்பாடு ஏற்படுத்தும். 2013 மற்ற நாடுகளுடன்
ஒப்பிடுகையில் அமெரிக்கா பரவாயில்லாமல் இருக்கும் எனப்படுகிறது.
குத்து விளக்குக்கீழ் பிரித்தானியப் பிரச்சனை
உலகிலேயே
சிறந்த வங்கிக் கட்டமைப்பைக் கொண்ட பிரித்தானியாவிலும் வங்கிகள்
தடுமாறுகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்திற்கு எதிர்பார்த்தது போல்
ஒரு உகந்த உந்து வலுவைக் கொடுக்கவில்லை. 2015இல் தமது கடன் பிரச்சனையில்
இருந்து விடுபடலாம் எனக் கணக்குப் போட்டிருந்த பிரித்தானிய அரசு இப்போது
குத்துவிளக்குக் கீழ் இருந்து அந்தக் கணக்கை மறுபரிசீலனை செய்கிறது.
பழமைவாதக் கட்சியினதும் தாராண்மை வாதக் கட்சியினதும் கூட்டணி அரசு தனது
சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாக உறுதியுடன்
இருக்கிறது. பிரித்தானிய நிதியமைச்சர் தனது நாட்டுப் பொருளாதாரப்
பிரச்ச்னைக்கு உடனடித் தீர்வு இல்லை என்கிறார். 2012இல் 0.8% வளர்ச்சியைக்
காணும் என எதிர்பார்க்கபட்ட பிரித்தானியப் பொருளாதாரம் 0.1%
சுருங்கியிருக்கலாம் எனப்படுகிறது. அரசு கீன்சியப் பொருளாதாரத் தத்துவப்படி
சிக்கன நடவடிக்கைக்களைக் கைவிட்டு கடன் வாங்கி அதிகம் செலவளித்தால்
பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்று சிலர் வாதாடுகின்றனர். ஆனால்
நிதியமைச்சர் இதை நிராகரிக்கிறார். நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்
அத்துடன் நாட்டின் கடன்படு திறன் குறையும் என அவர் அஞ்சுகிறார். சில
பொருளாதார நிபுணர்கள் 2013இலும் 2014இலும் பிரித்தானியப் பொருளாதாரம்
வளர்ச்சியடையும் ஆனால் அந்த வளர்ச்சி போதுமானதாக இருக்காது என்கின்றனர்.
பணப்புழக்க அதிகரிப்பின் மூலம்(quantitative easing) பொருளாதார வளர்ச்சித்
தூண்டல் செய்வதற்கு பிரித்தானிய மத்திய வங்கி தயக்கம் காட்டுகிறது.
பிரித்தானிய வங்கி 0.25% வட்டியுடன் தனது நாணயத்தின் பெறுமதியை நிலை
நிறுத்துவதில் வெற்றி கண்டுவருகிறது. 2012 நவம்பரில் தொழில் துறையில்
முன்னேற்றம் ஏற்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றம்
தொடர வேண்டும். அது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய வர்த்தகப் பற்றாக்
குறையிலும் நவம்பரில் முன்னேற்றம் காணப்பட்டது. பிரித்தானிய தொழில்
கொள்வோர் மத்தியிலும் நம்பிக்கை வளர்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சமூகப் பிரச்சனையாக உருவெடுக்குமா?
2011இல் இங்கிலாந்து
நகரங்களில் நடந்த கலவரத்திற்கு பொருளாதாரப்பிரச்சனையும் ஒரு காரணமாக
அமைந்தது. தெற்கு ஸ்பெயினில் 57வயதான வேலையற்ற ஒருவர் தனக்குத் தானே தீ
மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இப்படி
நடப்பது ஒரு அசாதாரண நிகழ்ச்சியே. இதே போல முயன்ற 63 வயதான இன்னும் ஒருவர்
தப்பித்துக் கொண்டார். ஸ்பெயினில் 350,000 குடும்பங்கள் தமது வீடுகளை
இழந்துள்ளன. இவை அரபு வசந்தம் ஐரோப்பாவிற்கும் வருமா என்ற அச்சத்தை
ஏற்படுத்துகிறது. துனிசியாவில் ஒரு இளைஞர் தனக்குத் தானே தீ மூட்டித்
தற்கொலை செய்தது அந்த நாட்டு அரசைக் கவிழ்த்ததுடான் மற்ற நாடுகளுக்கும்
பரவி எகிப்திலும் லிபியாவிலும் ஆட்சியாளர்களை விரட்டியது. சிரியாவில்
பெரும் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது. ஐரோப்பாவிலும் ஒரு மக்கள் புரட்சி
வெடிக்குமா என்பதில் ஐரோப்பிய அரசுகள் கவனத்துடன் இருக்கின்றன. அது
மட்டுமல்ல குடியேற்ற வாசிகளிடையும் உள்நாட்டுக்காரர்களிடையும் மோதல்கள்
உருவாகுமா என்ற அச்சமும் உண்டு.
சீரடையும் சீனா
2013இல் சீனப் பொருளாதாரம் 2012இலும் பார்க்க 2013இல் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல சீனாவின் பொருளாதாரம் தொடர்பான நிபுணர்கள் சீனப் பொருளாதாரம் 2013இல் சீரடையும் என்கின்றனர். சீனாவின் புதிய தலைமை சீனப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கும் ஊழலையும் தேசிய வருமானப் பங்கீட்டுப் பிரச்சனையையும் ஓரளவு தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த அளவில் இருக்கும் வேலையில்லாப் பிரச்சனையும் குறைக்கப்பட்டுள்ள பணவீக்கமும் சீனாவின் பலமாகும்.
சற்று நிமிரும் இந்தியா
2014இல் தேர்தலை எதிர்கொள்ளும் இந்தியாவிற்கு 2013 ஒரு முக்கிய மான ஆண்டு. 2011இல் 7.3% வளர்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் 2012இல் 7.1% வளர்ச்சியை மட்டுமே கண்டது. 2013இல் இந்தியப் பொருளாதாரம் 7.7% வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பிறக்கம், பணவீக்கம், அதிகரித்த வெளிநாட்டு வர்த்தகப் பற்றாக் குறை (current account deficit) ஆகிய பிரச்சனைகளுடன் இந்தியா 2013இல் காலடி எடுத்து வைத்துள்ளது.
நம்பிக்கை தளராத மக்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்களின் பொருளாதாரம் தொடர்பான உணர்ச்சிவயக்கருத்துச் சுட்டி (sentiment
index) 1.3% விழுக்காட்டால் உயர்ந்து 87% ஐ எட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய
நாடுகள் ஒன்றிணைந்து நிதிப் பிரச்சனைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக
எடுத்து வரும் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை பெற்றுள்ளனர் எனப்படுகிறது.
நம்பிக்கையே உயர்ச்சிக்கு வித்தாகும். இந்த நம்பிக்கைக்கு வளர்ந்துவரும்
சந்தை ப் பொருளாதாரங்களின் வளர்ச்சி 2013இல் கைக் கொடுக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு உந்து வலு
கிடைப்பதென்றால் அது வளர்ந்துவரும் சந்தை ப் பொருளாதாரங்களிடமிருந்தே
கிடைக்கும். ஆனால் எரிபொருள் பிரச்ச்னை தொடந்து எரிந்து கொண்டிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
Nice Article
Post a Comment