Saturday 12 January 2013

நகைச்சுவைக் கதை: மூன்று தடவை வழுக்கி விழுந்த மனைவி

அது ஒரு அழகிய சிறு நகரம். பச்சைப்பசேல் என்ற பூமி. நிறைய மரங்கள் பூந்தோட்டங்கள் அங்கு இருந்தன. மொத்ததில் காதலுக்கு உகந்த நிலம். அதனால் ஊர் மக்கள் கன்னாபின்னா என்று முறை தவறிக்காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

திருமணமானவர்களும் யார் யாரோவிடமெல்லாம் உறவு கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அதனால் ஊர் தேவாலயத்துக் குரு மக்களுக்கு முறைதவறிய உறவுகள் பெரும் பாவம் என்றும் அப்படிச் செய்பவர்கள் வந்து தேவனிடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று போதித்தார்.

நாளுக்கு நாள் தமது முறை தவறிய உறவுகளைப் பற்றிப் பாவமன்னிப்புக் கேட்பவர்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. சிலர் தமது பாவங்களை விலாவாரியாகவும் விபரித்தார்கள். சலிப்படைந்த தேவாலாயக் குரு இனி யாரும் முறைதவறிய உறவு கொண்டால் பாதையில் வழுக்கி விழுந்து விட்டேன் என்று வந்து பாவம்ன்னிப்புக் கோருங்கள் என்று சொல்லிவிட்டார். மக்களும் அப்படியே செய்தனர்.

குரு சில மாதங்களில் இறந்து விட்டார். வேறு ஊரில் இருந்து புதிதாக ஒரு குரு வந்து தேவாலயத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு வாரம் கழித்து அவர் நகர மேயரைச் சந்தித்து நீங்கள் தெருக்களை ஒழுங்காகப் பராமரியுங்கள். நிறையப் பேர் வந்து தாங்கள் வழுக்கி விழுந்ததாக என்னிடம் முறையிடுகிறார்கள் என்றார். குருவிற்கு தங்கள் நகரத்து மக்களிற்கு காலம் சென்ற குரு சொன்ன குறியீட்டுச் சொல்லின் அர்த்தம் தெரியவில்லை என்று சிரி சிரி என்று சிரித்தார். அதற்குப் புதுக் குரு சிரிக்காதீர்கள் மேயர் ஐய்யா அவர்களே ஒரு வாரத்தில் உங்கள் மனைவி மட்டும்  மூன்று தடவை வழுக்கி விழுந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்றார். மேயர் கோபத்தில் ஏன் துள்ளிக் குதித்தார் என்று குருவிற்கு விளங்கவில்லை.

1 comment:

Anonymous said...

Please don't publish this type of A jokes. Not good for community.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...