Tuesday 8 January 2013

மேசையாக மாற்றக் கூடிய சீனக் கணனி

மேசைக்கணனி, மடிக் கணனி, பட்டிகைக்கணனி, கைக்கணனி என்று பலதரப்பட்ட கணனிகள் இருக்கையிலேயே சீனாவின் கணனி தயாரிப்பு நிறுவனமான Lenovo மேசையாக மாற்றக் கூடிய ஒரு கணனியை உருவாக்கியுள்ளது. பாரிய ஐ-பாட் போல் செயற்படக்கூடியது இந்தக் கணனி.

IdeaCentre Horizon Table PC எனப்படும் சீனக் கணனி நாலு பேர் ஒரேயடியாகப் பாவிக்கக் கூடியது. இது கணனிகள் பிரித்த குடும்பத்தை மீளவும் இணைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பெரிய தொடு திரையை இந்த Coffee Table computer  கொண்டிருக்கிறது. நான்கு பேர் ஒன்றாக இருந்து இதில் கணனி விளையாட்டுக்களை விளையாடலாம். இதனால் இதை interpersonal computer என்று அழைக்கிறார்கள். IdeaCentre Horizon Table PC எனப்படுக் இக் கணனி 27அங்குல(67செமீ) திரையைக் கொண்டது. ஐ-பாட்டிலும் பார்க்க எட்டு மடங்கு பெரியது.

விண்டோ - 8 இல் இயங்கும் இந்த IdeaCentre Horizon Table PC இரண்டு மணித்தியாலங்கள் செயற்படக் கூடிய பட்டரியைக் கொண்டது.  இதன் விலை 1700 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சீனாவின் Lenovo நிறுவனம் ஐபிஎம்மின் PC பிரிவை விலைக்கு வாங்கி கணனிகளைத் தயாரித்து வருகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...