Friday 11 January 2013

கவிதை: காதலென்னும் இசை

தியாகங்கள் சங்கதிகளாக
வீரம் மேடையாக
தாயகத் தாகம் வாத்தியங்களாக
மலரும் விடுதலை இசை

பார்வைகள் சுரங்களாக
ஆசைகள் ராங்கங்களாக்
அன்பு இணைக்கும் தாளமாக
மலரும் காதலென்னும் இசை


பாசம் என்பது பாடலாக
பரிவு என்பது மெட்டாக
நேசமென்பது உடன்பாட
மலரும் குடும்பம் என்னும் இசை

அன்பு பல்லவியாக
உழைப்பு அனுபல்லவியாக
விருந்தோம்பல் சரணங்களாக
மலரும் வாழ்க்கை என்னும் இசை



கல்லைக் கரைத்தெடுக்கும்
அரவத்தையும் ஆடவைக்கும்
நெஞ்சத்தை மகிழவும் வைக்கும்
கண்ணீரையும் வரவைக்கும்

ஓடும் நதியிலும் இசை
ஆடும் அலையிலும் இசை
வீசும் காற்றிலும் இசை
விடும் மூச்சிலும் இசை

நோய்க்கு மருந்தாகும்
காதுக்கு விருந்தாகும்
பிரபஞ்சத்தை இயங்கும்

வலுமிக்க இசை

4 comments:

aravind said...

super kalakuranga poonga

aravind said...

super approach

Gopi deva333 said...

Kadhla isai irandayum ondru Serthiruppathu migavum arumai

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...