Sunday, 11 November 2012

இந்தியாவின் இராஜதந்திர விபச்சாரம்: இலங்கையில் வருகிறது 19வது திருத்தம்.

இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தைப் பாராளமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய மஹிந்த ராஜ்பக்ச இலங்கையில் அதிகாரப்பரவலாக்கம் பொருள்நிறைந்ததாக இருக்க வேண்டும்என்றும் அதிகாரப்பரவலாக்கம் நாட்டை ஒன்றுபடுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் சிக்கலான ஆட்சி முறை கொண்டதாக இருக்கக் கூடாது என்றும் பாரிய நிதியக் கையாள்வதாக இருக்கக் கூடாது என்றும் சொன்னதை அடுத்து கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

13வது திருத்தத்தின் படியான அதிகாரப்பரவலாக்கங்களை பறிக்கும் சட்டமூலத்திற்கு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று சொன்ன பிரதம நீதியரசரை பதவி நீக்கும் செயலில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இந்தியாவின் தாசித்தனம்
நவம்பர் 1-ம் திகதி ஜெனிவா நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக்த்தின் இலங்கை தொடர்பான காலாந்தர் மாநாட்டில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி இலங்கையில் அதன் அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்படவேண்டும், வடக்கு மாகாண சபைக்கான  தேர்தல் நடாத்தப்பட வேண்டும் மனித உரிமை மீறல்களுக்கான நம்பகரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று முழங்கினார். பின்னர் நவம்பர் 5 - ம் திகதி ஒரு குத்துக் கரணம் அடித்து அந்தப் பரிந்துரைகளை இறுதி அறிக்கையில் இருந்து நீக்கி விட்டது. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா கடந்த பல ஆண்டுகளாக செய்துவரும் திருகுதாளங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால் பல மேற்கு நாட்டு ராசதந்திர்கிகள் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். அங்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில்ஒரு பெரிய டீல் நடந்திருக்கிறது என்று பலரும் கருதுகின்றனர். 2009-ம்  ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. பின்னர் 2012 மார்ச் மாதத்தில் அமெரிக்காவைத் திருப்திப் படுத்த இந்தியா வேறு விதமாக நடந்து கொண்டது. இதுவரை 13வது திருத்தம் என்ற கிலுகிலுப்பையை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்றி வந்த இந்தியாவிற்கு நன்கு தெரியும் இலங்கையில் 13வது திருத்தத்தின்படி தீர்வு காணமுடியாது என்று. சிங்களவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்கள் அதில் போதிய அளவு அதிகாரப்பரவலாக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தமிழர்கள் அதை ஏற்றே ஆகவேண்டும் என இந்தியா தமிழர்களை வற்புறுத்தி வந்தது. 1987இல் இதற்காக இந்தியா ஈழத் தமிழர்கள் மீது அமைதிப்படை என்னும் கொலைவெறி நாய்ப்படை மூலம் மோசமான பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.  1987வரை தமிழர்களுக்கு படைக்கலனும் பயிற்ச்சியும் வழங்கி சிங்களவர்களுடன் மோதலைத் தூண்டிய இந்தியா பின்னர் ஒரு இராஜதந்திரக் குத்துக் கரணம் அடித்தது. அப்போது பல இந்திய இராஜதந்திரிகள் கணிசமான தட்சணையை அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தனேயிடம் இருந்து பெற்றுக் கொண்டனர் என்று சொல்லப்பட்டது. ஒருவரின் மகளின் திருமணமே ஜே ஆரின் செலவில் நடந்ததாம். ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தப்படி தமிழ் அமைப்புக்கள் படைக்கலன்களை முழுமையாக ஒப்படைக்கவில்லை என்று தமிழர்கள் மீது தனது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட இந்திய அரசு அந்த ஒப்பந்தப்படி செய்யப்பட்ட இலங்கை அரசியல்யாப்பிற்கான 13வது திருத்தம் நீக்கப்படும் போது என்ன செய்யப் போகிறது? 13வது திருத்தப்படி செய்யப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு நீக்கப்பட்டபோது இந்தியா வாலைச்சுருட்டிக் கொண்டு மௌனமாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக 13வது திருத்தப்படி இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று கூறி வந்த இந்தியா 13வது திருத்தத்தை 19வது திருத்தத்தின் மூலம் இரத்துச் செய்யும் போது இந்தியா என்ன செய்யப்போகிறது? இந்தியாவின் ஆசியுடன்தான் இந்த இரத்து செய்யப்படப் போகிறதா?

இலங்கையில் தமிழர்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்ற இந்தியா மறைமுகமாக ஆதரவு செய்கிறது. சிங்களவர்களின் போக்கு வரத்திற்கு வசதியாக தொடரூந்து சேவையைப் புனரமைத்து வருகிறது. தமிழர்களை அவர்கள் தாயக பூமியிலேயே சிறுபான்மையினராக்க இந்தியா உதவுகிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...