கள்ளத்தனமாகப் பார்த்த
பல நாட்கள்
விழியால் பேசிய
பல நாட்கள்
உடல்கள் உரசிய
பல நாட்கள்
உணர்வுகள் இணைந்த
பல நாட்கள்
எல்லாம் ஈடாகுமா
உண்மை அன்பு காட்டிய
ஒரு கணத்திற்கு
================
வென்றேன் எனத்
திமிரடையவும் வேண்டாம்
தோற்றேன் எனத்
துவளவும் வேண்டாம்
உழைத்தேனா என்பதை மட்டும்
எண்ணிப்பார்.
ஓர விழிப் பார்வை
என்னை ஒளிப்பதிவு செய்யும்
கமராவானது
நேர் விழிப்பார்வை
மலரம்பு வீசும்
எறிகணையானது
பார்க்காமல் நீ இருப்பது
உன்கண்களை
வதை முகாமாக்கியது
கனிவான இருவர் பார்வைகளின்
இனிய மோதலில்
இணைந்தன இரு இதயங்கள்


1 comment:
அழகான புகைப்படமும் அசத்தலான கவிதையும் சூப்பர் . உங்களின் கவிதைகளுக்கு சினிமா புகைப்படங்களை பயன்படுத்தவுதை தவிர்க்கலாமே !? புரிதலுக்கு நன்றி
Post a Comment