Sunday 26 February 2012

உப்பில்லாத் தீர்மானமும் மார்தட்டும் மஹிந்தரும் கடமை தவறிய கூட்டமைப்பும்.

அமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மஹிந்தர்
இலங்கையில் நடந்த போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையி நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையும் இலங்கை அரசு நியமித்த மீளிணக்க ஆணைக் குழுஇன் அறிக்கையும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டவை. ஐநா நிபுணர் குழு அறிக்கை இலங்கையில் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் இழைக்கப்பட்டமைக்கான காத்திரமான ஆதாரங்கள் உள்ளன என்றது. மீளிணக்க ஆணைக்குழுவினரின் அறிக்கை இலங்கையில் போர்க்குற்றம்பற்றியோ அல்லது மானிடத்திற்கு எதிரான குற்றம் பற்றியோ எதுவும் கூறவில்லை. மீளிணக்க ஆணைக்குழு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்றும் போரின்போது நடந்த சில அத்துமீறல் பற்றி மேலும் விசாரணைகள் தேவை என்றும் பரிந்துரைகள் செய்ந்திருந்தது. ஐநா நிபுணர்குழு அறிக்கை பற்றி ஐநா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி ஐநா செயலர் பான் கீ மூனிடம் வினவியபோது அது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளைப் பொறுத்தது என்றார். இலங்கை அரசும் மீளிணக்க ஆணைக்குழு பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. இலங்கை அரசின் மீளிணக்க ஆணைக்க்குழுவின் அறிக்கையை தமிழர்கள் நிராகரித்து விட்டனர்.

அமெரிக்காவின் உப்புச் சப்பில்லாத் தீர்மானம்
பெப்ரவரி 27-ம் திகதி முதல் மார்ச் 23-ம் திகதி வரை நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக  ஒரு தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முனைப்புக் காட்டி வருகிறது. இந்தத் தீர்மானம் சில நாடுகள் இணைந்து கூட்டாகக் கொண்டுவரவிருக்கின்றன. அத்தீர்மானத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இருக்கின்றன:

1. மீளிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் மேலதிகமாகவும் நிறைவேற்ற உடனடி சட்டப் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுதலும் போரின்போது நடந்த பன்னாட்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்ப்பாக நம்பகரமானதும் சுந்திரமானதுமான விசாரணை மேற்கொண்டு குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க வேண்டுதலும்.
2. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 20வது கூட்டத் தொடருக்கு முன்னர் மீளிணக்க ஆணைக்குழுவினரின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும்  இலங்கையில் நடந்ததாகக் கருதப்படும் பன்னாட்டுச் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் தொடர்பாகவும் இலங்கை அரசு எடுக்கவிருக்கும் படிப்படியான நடவடிக்கைகள் பற்றி ஒரு விரிவான செய்ற்திட்டத்தி சமர்ப்பிக்க வேண்டுதல்.
3. படிப்படியான நடவடிக்கைகள் பற்றி ஒரு விரிவான செய்ற்திட்டங்களிற்கு மனித உரிமை உயர் ஆணையாளரும் மற்றும் மனித உரிமை சம்பந்தப்பட்ட அதிகாரமுடையவர்களும் இலங்கைக்கு ஆலோசனை வழங்க ஊக்குவித்தலும் அவற்றைப் பெற இலங்கையை ஊக்குவித்தலும்.

எமக்கும் அமெரிக்காவிற்கும் நன்கு தெரியும் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசு யாரையும் தண்டிக்காது என்று. பன்னாட்டு நிபுணர்களைக் கொண்ட பகவதி ஆணைக்குழுவிற்கு என்ன நடந்தது என்று எமக்கும் தெரியும் அமெரிக்காவிற்கும் தெரியும். அண்மையில் பதவி விலகிய இலங்கை மனித் உரிமைக் கழக ஆணையர் தான் மனச்சாட்சிப்படி நடக்க முடியவிலலை என திரைமறைவில் கூறி பதிவி விலகிக் கொண்டது. எமக்கும் தெரியும் அமெரிக்காவிற்கும் தெரியும். மேற்படி மூன்று தீர்மாங்களும் இலங்கைக்கு வேண்டுகோள்களே தவிர கட்டளைகள் அல்ல. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க ஒரு பன்னாட்டு மட்ட விசாரணைக்குழுதான தமிழர்கள் வேண்டுவது. அமெரிக்கா முனைப்புக் காட்டும் தீர்மானம் பன்னாட்டு மட்ட விசாரணைக்கு தேவை என்ற கோரிக்கையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. குற்றவாளியையே நீதிபதியாக்குகிறது. தீர்மானத்தில் ஐநா நிபுணர்குழு அறிக்கைபற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்?

மார் தட்டும் மஹிந்தர்
அண்மையில் இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ச தனது கூட்டாளிகளுடன் கதைக்கும் போது தான் எப்படி இந்தியாவை 13வது திருத்தத்திற்கு மேல் தமிழர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன் என்று சொல்லி ஏமாற்றினேன் என்றும் தான் எப்படி ஐநா நிபுணர்குழு அறிக்கையை இழுத்தடித்தேன் என்றும் எப்படி மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இழுத்தடிகிறேன் என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டார் என லங்காஈநியூஸ் விபரித்துள்ளது. அது மட்டுமல்ல மஹிந்தர் தான் தனது நாட்டை பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்த படையினரைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று அடிக்கடி சொல்கிறார்.

கடமை தவறிய கூட்டமைப்பு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடர் நடக்கும் ஜெனிவாவிற்குச் சென்று தமிழர்களுக்கு இழக்கப்பட்ட/இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடுமைகளை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. அரச சார்பு பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் ஜெனிவாவிற்குப் படையெடுத்திருக்கையில் தமிழர்பக்க நியாயங்களை தெரிவிக்கும் கடமை கூட்டமைப்புக்கு இருகிறது. ஆனால் திடீரென்று கூட்டமைப்பு ஜெனீவா செல்ல மாட்டோம் என்று அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கொழும்பில் இருந்து விடுவிக்கப்பட்ட மிரட்டல் மட்டும் காரணமா அல்லது டில்லியில் இருந்தும் கட்டளை பிறப்பிக்கப்பட்டதா? டில்லியின் தயவில்தான் கூட்டமைப்பு இப்போது நடமாடிக்க் கொண்டிருக்கின்றனர். ஜெனிவாப் பயணத்திற்கு டில்லி உதவவில்லையா? வாஷிங்டனில் இருந்து வரும் கட்டளை கூட்டமைப்பின் முடிவை மாற்றலாம்.

மஹிந்தரின் பிரச்சனைக் காலம் ஆரம்பித்து விட்டது
அமெரிக்கா வைத்துள்ள தீர்மான முன் மொழிவில் ஒரு கால அவகாசம் உள்ளது என்பது தான் தமிழர்களுக்கு சாதகமான அம்சம். அதை மஹிந்தர் நிறைவேற்ற வேண்டும் அல்லது அமெரிக்காவிற்கு இலங்கையில் சீனாவிற்கு இணையான அவிற்பாகம்  வழங்கப்பட வேண்டும் அத்துடன் சரத் பொன்சேக்கா விடுவிக்கப்படவேண்டும். இவற்றைச் செய்யும் நிலையில் மஹிந்தர் இல்லை. அவர் இன்னும் மூன்று ஆண்டுகளை தனது இழுத்தடிப்புத் தத்துவங்கள் (Medamulana theories) மூலம் கழிக்கலாம். அதன்பின்னர் அவர் ஒரு பன்னாட்டு விசாரணையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

2 comments:

Anonymous said...

i love you tharma and would like to marry you to fight for the cause of tamil eelam.

Anonymous said...

Having blood relationship with people like you is essential for fighting the cause of a seperate state. I love you though

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...