Tuesday, 28 February 2012

கணனிகளிலும் கைப்பேசிகளிலும் உங்கள் தகவல் "திருடுபவர்கள்" யார்?

விற்பனைக்கும் விளம்பரத்திற்கும் உங்களது மின்னஞ்சல் முகவரிகளும் தொலைபேசி இலக்கங்களும் மிகவும் பயன்படும். பெருவாரியான மின்னஞ்சல் முகவரிகளும் தொலைபேசி இலக்கங்களும் திரட்டி வைத்திருந்தால் அவற்றின் மூலம மலிவாகவும் இலகுவாகவும் விற்பனைகளையும் விளம்பரங்களையும் செய்யலாம். இதனால் பலரும் உங்களதும் உங்கள் மூலமாக உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களினதும் மின்னஞ்சல்களையும் தொலைபேசி இலக்கங்களையும் பெற பலவழியான தந்திரங்களை மேற் கொள்கின்றனர். சிலரால் உங்கள் வங்கி கணக்குகள் கடன் அட்டை விபரங்களையும் சேகரிக்க முடியும்

நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய தகவல் திருடர்கள்:
  1. முகவேடு(Facebook): கணனியில் முகவேடு உங்களை உங்கள் நண்பர்களுடன் இலகுவில் இணைப்பதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் கேட்டும்.  நீங்கள் கொடுத்தவுடன் உங்கள் நண்பர்களுகு முகவேடு உங்களுடன் நண்பர்களாக முகவேட்டில் இணையும்படி மின்னஞ்சல் அனுப்பும். அத்துடன் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தான் திரட்டிச் சேகரித்துக் கொள்ளும். உங்கள் கைப்பேசியிலும் முகவேட்டுச் செயலி (application) இருந்தால் அது உங்கள் கைபேசியில் உள்ள மற்றவர்களின் தொலைபேசி இலக்கங்கள் மூலம் உங்கள் நண்பர்களை உங்களுடன் இணைப்பதற்கு அனுமதி கேட்கும். நீங்கள் அனுமதித்தால் உங்கள் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களை அது திரட்டிச் சேகரித்துக் கொள்ளும்.
  2. டுவிட்டர்: இதுவும் மற்ற பல சமூக வலைத் தளங்களும்முகவேட்டின் தந்திரத்தைக் கையாள்கின்றன.
  3. Foursquare: இத்தளமும் சமூக வலைத்தளங்கள் போலவே உங்கள் தகவலகளைத் திரட்டும்.
  4. Free Applications for your Smartphones: பல நவீன கைப்பேசிகள் அதில் உள்ள செயலிகள் (Applications) உங்கள் கைப்பேசிகளில் உள்ள தகவல்களை இலகுவில் சேகரிக்கக் கூடிய வகையில் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகளை உங்கள் கைப்பேசிகளில் பதியும் முன்னர் அவை கூறும் நிபந்தனைகளை யாரும் வாசித்துப் பார்ப்பதில்லை. அதில் உங்கள் தகவல் திரட்டும் உரிமையை அச்செயலிகளுக்கு நீங்கள் வழங்குகிறீர்கள் என்ற வரி உண்டு. சில செயலிகள் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகள் தொலைபேசி இலக்கங்களுடன் நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களையும்(SMS) திருடுகின்றன.
  5. யாஹூ: யாஹூவின் செயலியை உங்கள் கைப்பேசியில் இணைத்தால் அது உங்கள் குறுந்தகவல்கள் உடபடப் பலவற்றைச் சேகரிக்கும் வாய்ப்பு உண்டு.
  6. Flicker: இந்த வலைத்தளத்தின் செயலி உங்கள் கைப்பேசியில் இருந்தால் அதுவும் குறுந்தகவல்கள் உடபடப் பல தகவல்களைத் திரட்டும்.
நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய செயலிகள்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...