Sunday 21 August 2011

நகைச்சுவை: சனியாளைக் காப்பாற்றிய மருத்துவரின் வேண்டுகோள்

இத்தாலிச் சனியாளுக்கு கடுமையான புற்று நோய். அதுவும் வெளியில் சொல்ல முடியாத இடத்தில் புற்று நோய். இரகசியமாக அமெரிக்காவில் சிகிச்சையளிக்கப்பட்டது. மூன்று மருத்துவர்கள் மிகவும் பாடுபட்டு சகல அசிங்கங்களையும் பொறுத்துக் கொண்டு சிகிச்சையளித்தனர். மூன்று மருத்துவர்களில் ஒருவர் அமெரிக்கர், ஒருவர் ஆபிரிக்கர், ஒருவர் இந்தியர்.

குணமாகிய பின்னர் சனியாள் தனக்குச் சிகிச்சை அளித்த மூன்று மருத்துவர்களையும் அழைத்து  உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றாள். அமெரிக்க மருத்துவர் எனக்கு உங்கள் ஆட்டோக்கிராஃப் வேண்டுமென்றார். உடனடியாக அவர் தேவை நிறைவேற்றப்பட்டது.

ஆபிரிக்க மருத்துவர் எனது மகள் உங்களுடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்புகிறாள் என்றார். அவரது கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மருத்துவர் எனது தாயாருக்கு சுகமில்லை. நான் நாளை இந்தியா போகிறேன் அங்கு எனக்கு ஒரு சக்கர நாற்காலி(Wheel chair) வேண்டுமென்றார். ஏற்பாடு செய்கிறேன் என்று அவருக்குப் பதிலளிக்கப்பட்டது. ஏன் சக்கர நாற்காலி(Wheel chair) வேண்டுமென்று கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை. அவர் யார் உயிரைக் காப்பாற்றினார் என்று தெரிந்தால் இந்திய மக்கள் அவருக்கு என்ன செய்வார்கள் என்று அவருக்குத்தான் தெரியும்.


பி. கு: இக்கதையில் வந்த கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்கள் அல்லது இருக்கக் கூடாதவர்கள் யாராவது இத்துடன் சம்பந்தப்பட்டது போல் தோன்றினால் அது வெறும் பிரமையே.

ராகுல் காந்தி கிளியல்ல.
இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிரான அன்ன ஹசாரேயின் உண்ணாவிரதப்போராட்டம் பற்றி ஆளும் காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஏன் வாய் திறக்கவில்லை என்று நிருபர்கள் கேட்டபோது காங்கிரசின் பேச்சாளர் ரேணுகா சௌத்திரி "He (Rahul), too, is entitled to Freedom of Expression. He will speak when he will feel like it. He is not a parrot," "அவருக்கும்(ராகுல்) பேச்சுச் சுதந்திர உரிமையுண்டு. அவர் பேச விரும்பும்போது பேசுவார். அவர் கிளியல்ல." என்றார்.

தான் பேசவிரும்பும் போது பேசுபவன் தலைவன் அல்ல. மக்கள் விரும்பும் நேரமெல்லாம் பேசுபவனே தலைவன். மக்கள் ஒரு பெரும் பிரச்சனை மத்தியில் இருக்கும் போது பேசாமல் இருப்பவன் தலைவன் அல்லன். கிளியாவது சொல்லிக் கொடுத்ததை ஒழுங்காகச் சொல்லும்.

2 comments:

BGN said...

உங்களது நகைசுவையில் சனியால் என்றும் சனியே என்றும்
சொல்வது தவறு .சனீஸ்வரன் போகும் பொது நல்லதை செய்வராம் .
இவள் செய்வது எல்லாமே காவாளித்தனம் , படுகொலை , துரோகம் .
இவள் இந்தியாவிற்கு வந்த நாதாரி , திட்டுவதற்கு எதாவது கேவலமான
வார்த்தை இருந்தால் சொல்லுங்கள் தயவுசெய்து .இத்தாலிகாரி இப்படினா
இத்தாலிகாரன் காமிக்கிற படம் தாங்கமுடியலப்பா !இந்த நாய்ங்க இந்தியாவ விட்டு போனாதான்
இந்தியாவிற்கு விடுதலை .அண்ணா ஹசாரே லோக்பால் கொண்டு வருவத விட
காங்கிரஸ் குட்டத்திடம் இருந்து இந்தியாவ மீடார்ணா இந்தியாவில் உழல் இருக்காது

Unknown said...

//இந்திய மக்கள் அவருக்கு என்ன செய்வார்கள் என்று அவருக்குத்தான் தெரியும்// தமிழக மக்கள் என சொல்வது சரி

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...