Thursday, 17 February 2011
ஆய்வு: ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இல்லை
ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் என்று பலகாலமாக நம்பப்பட்டு வந்தது. அதாவது அவனின் மனைவி இருக்கின்றாள், அவனது துன்பங்களிலும் இன்பங்களிலும், ஒன்றாக பங்கேற்று, அவன் துவளும்போது தன் தோள்களில் தாங்கி, அவனை தேற்றி, அவனது வெற்றிகளில், உலகம் அவனைப் பாராட்டும்போது மகிழ்கிறாள்; என்றெல்லாம் நாம் படித்திருக்கின்றோம், கேள்விப்பட்டும் இருக்கின்றோம்.
சிலர் நகைச்சுவையாகச் சொல்வார்கள் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் அவன் செய்வதைக் எப்போதும் குறை கூறிக்கொண்டு.
அமெரிக்க மனோதத்துவ விஞ்ஞான சஞ்சிகை நடாத்திய ஆய்வின் முடிபுகள் வேறு விதமகச் சொல்கின்றன.
சிலர் தங்கள் சுமைகளைக் குறைக்கவும் தங்கள் இலக்குகளை நோக்கிச் முன்னேறவும் தங்களை அறியாமல் ஒரு அயலாக்கத்தில் ஈடுபடுகிறார்கள்.
(Self regulatory outsourcing - the unconscious reliance on someone else to move your goals forward, coupled with relaxation of your own effort.) மனைவியுடன் எல்லாவற்றையும் கலந்தாலோசித்துச் செய்பவர்கள் மனைவிமார் மீது அதிகம் தங்கி இருக்க வேண்டிவருகிறது. மனைவி மீது அதிகம் தங்கி இருப்பது கணவனின் வெற்றிக்கான பாதையில் ஒரு தடையாக அமைகிறது. கணவனின் சுய முயற்ச்சி சுய சிந்தனைய மழுங்கடிக்கிறது. இது கணவனில் தங்கியிருக்கும் மனைவிக்கும் பொருந்தும். ஒருவர் தனது நடவடிக்ககளுக்கு தனது வாழ்க்கைத் துணையில் அதிகம் தங்கியிருப்பது சில நன்மைகளைச் செய்தாலும் பல தீமைகளைச் செய்கிறது. இது நாளடைவில் ஆதிக்கத்தையும் வளர்க்கிறது. சிறந்த அணுகுமுறை பின்னால் இருந்து தள்ளுவதல்ல; திரைமறைவு பக்கத் துணையாக இருப்பதே சிறந்தது. பின்னால் இருந்து தள்ளுவது நச்சரிப்பை வளர்கிறது.
216பேர்கள் பங்கு பற்றிய மூன்று இணைய ஆய்வுகள் இப்படி முடிக்கின்றன: The secret of success may be a spouse who stands at your side - but keep out of the way. ஒருவரின் வெற்றியின் இரகசியம் அவரது வாழ்க்கைத் துணை அவரது பக்கதில் நிற்பது - ஆனால் வழியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
சிறந்த வாழ்க்கைத் துணை உதாரணமாக முன்னாள் பிரித்தானியப் பிரதம் மந்திரி மார்கரெட் தச்சரின் கணவர் டெனிஸ் தச்சர் காட்டப்படுகிறார். அவர் மார்கரெட்டிற்கு தனது உதவிகள் ஆலோசனைகள் அனைவற்றையும் திரைமறைவிலேயே வழங்கி வந்தார். சிறந்த இன்னொரு துணையாக இப்போதைய பிரித்தானியப் பிரதம் மந்திரி டேவிட் கமரூனின் மனைவி சமந்தா கமரூன் உதரணமாகக் காட்டப்படுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_18.html
Post a Comment