Monday, 14 February 2011
சைவக் கோழியின் முட்டை சாப்பிட்டால் ஆரோக்கியம்.
கோழி முட்டை ஒரு காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவாகக் கருதப்பட்டது. பின்னர் அது கெடுதலான கொழுப்பு நிறைந்தது என்று கூறப்பட்டது. இப்போது கதை மீண்டும் மாறிவிட்டது.
அமெரிக்க அரசு நடாத்திய ஆய்வின் படி இப்போது உள்ள கோழி முட்டைகள் பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த கோழி முட்டைகளிலும் பார்க்க 13% கொழுப்பு (cholesterol) குறைந்தவை என்றும் 64% விட்டமின் D அதிகம் கொண்டவை என்றும் அறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இப்போது கோழிகளுக்கு பண்ணைகளில் கொடுக்கப்படும் உணவில் அரசுகள் செய்துள்ள கட்டுப்பாடுகளாகும். முன்பு கோழுகளுக்கு மிருகங்களின் எலும்பில் செய்த உணவுகள் கொடுக்கப்பட்டன. இப்போது அவை தடை செய்யப்பட்டுள்ளன. இப்போது பண்ணைகளில் கோழிகளுக்கு சோழம் கோதுமை கொண்ட புரோட்டீன் நிறைந்த உணவுகள் கொடுத்து வளர்க்கப்படுவதால் கோழிகள் இடும் முட்டைகளும் ஆரோக்கியமானவையாகின்றன.
ஒரு நடுத்தர அளவான முட்டையில் 100மில்லி கிராம் கொழுப்பு(cholesterol) இருக்கிறது. இது நாளாந்தம் ஒருவர் உட் கொள்ளக் கூடிய 300மில்லி கிராம் கொழுப்பிலும் பார்க்கக் குறைவானது.
ஒரு வருடத்திற்கு முன்னர் கனடிய அரசு செய்த ஆய்வின் பிரகாரம் முட்டை உண்பது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்கும் என்று கூறப்பட்டது. முட்டை சமிபாடடையும்போது எமது உடலுள் உருவாகும் புரதம் Ace inhibitors எனப்படும் இரத்த அழுத்தம் குறைக்கும் மருந்தைப் போல் செயற்படுகிறதாம். இதனால் தினமும் முட்டை உண்ணுதல் இரத்த அழுத்தத்தை குறக்க உதவுமாம் என்றது கனடிய அரசு.
பிரித்தானிய சறே(Surrey) பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி காலையில் ஒன்று அல்லது இரண்டு முட்டை உண்டால் அது எமது உடலின் புரதச் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்து வயிற்றுப் பசியைக் குறைக்கிறது. இதனால் நாம் அதிகம் உண்பதைக் குறைக்கிறோம். இதனால் எமது எடை குறைக்க முட்டை உண்ணுதல் உதவுகிறது. 12 வாரங்களாக சிலருக்கு தொடர்ந்து காலை உணவில் இரண்டு முட்டைகள் சேர்த்து உண்டவர்களினது எடை குறைந்திருப்பதை ஆய்வில் கண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
3 comments:
நல்ல தகவல்.. வாழ்த்துக்கள்..
இனி நித்தம் ஒரு முட்டை
நல்ல தகவல்..
பின்பு வாக்குகளும்..
கவிதை வீதி தங்களை அன்போடு வரவேற்கிறது..
Post a Comment