
பாராளமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கு வசதியாக அவர்க்ளுக்கு இலவச i-Padகளை அரசு வழங்கியது. அதை வைத்துக் கொண்டு ஒரு பாராளமன்ற உறுப்பினர் நாட்டில் என்ன நடக்கிறது, பொருளாதாரம் எங்கு போகிறது, வேலையில்லாத் திண்டாட்டம் எப்படி இருக்கிறது அல்லது எகிப்திய அரசு கவுழுமா, வன்முறை வெடிக்குமா, என்று அறிய முயலவில்லை. பெண் துணைகளை வாடகைக்கு ஒழுங்கு செய்யும் நிறுவனத்தின் வலைத் தளத்தில் உள்ள பெண்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இவர்ஏற்கனவே மூன்று தடவை திருமணமான 66வயது இத்தாலியப் பாராளமன்ற உறுப்பினர் சைமன் டி கங்கோ அப்ரெசிக்கா என்பவர். அதுவும் பாரளமன்ற அமர்வின் போது. சாதாரண அமர்வல்ல ஆளும் கட்சியின் மந்திரி ஒருவருக்கு எதிரான நம்பிக்கை இல்லப் பிரேரணை விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது. உபரித் தகவல்: ஒரு இரவிற்கு ஒரு பெண்ணுக்கான கட்டணம் £1000.
இத்தாலியப் பாராளமன்ற உறுப்பினர் சைமன் டி கங்கோ அப்ரெசிக்கா என்பவர் i-Padஇல் பெண்கள் படத்தைப்பார்த்துக் கொண்டிருந்தபோது படம்பிடிக்கப் பட்டுள்ளார். அவர் கொடுத்த விளக்கம் தான் தனக்கு வந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விரஒ ஒரிடத்தில் பட்ட போது வந்த ஒரு pop out windowவில் இருந்த அழகிகளைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அதனால் அந்த அழகிகளைப் பார்ப்பதற்காக அந்த வலயத் தளத்திற்கு சென்றதாக அவர் கூறுகிறார்.
5 comments:
இதுவே இலங்கையாயின் இதைப் படம் பிடித்தவர் வெள்ளைவானில் கடத்தப் பட்டு மறு நாள் அமரர் ஊர்தியில் வந்து இறங்குவார்.
ஐம்பதிலும் ஆசை வரும்!அதற்குப் பின்னும் "சும்மா" தன்னும் பார்க்கக் கூடாதா?என்ன கொடுமை சரவணா,இது??????????????
அதெப்புடி,அமர் ஊர்தியில் வருவார்?ஓஓஓஓஓ...........இப்போ கொண்டு வந்து வேற குடுக்கிறாங்களோ?(யாழ்.கோட்டைப் பகுதியிலும் புதைகுழி கண்டு பிடித்திருக்கிறார்களாம்!)
இப்படி காமப்படம் பார்த்தா அப்புறம் நம்ம ராஜா கதிதான் உனக்கும்
Free online job details visit www.realonlinejob.weebly.com
Post a Comment