Wednesday, 2 February 2011
நகைச்சுவைக் கதை: மன்மோகன் சிங்கின் தலைப்பகை நாறடிக்கப்படுவதைத் தடுத்த சோனியாஜீ
அது ஒரு காங்கிரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். பணமும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து வந்த இலட்சக்கணக்கான தொண்டர்கள் குழுமி இருந்தனர். மேடையில் சில கரை வேட்டிகள் இருந்து தங்கள் சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர். மன்மோஹன் சிங் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்தப் பேமானியக் துரத்துவது எப்போ, ராகுலுக்கு முடி சூட்டுவது எப்போ என்ற கவலையுடன் சோனியா காந்தி உட்கார்ந்து இருந்தார் மேடையில்.
மன்மோஹன் சிங் உரையாற்றுகிறார். என்னை கைப்பொம்மை என்கிறார்கள். நான் உலகத்தின் வலுமிக்கவர்கள் பட்டியலில் 18-ம் இடத்தில் இருக்கிறேன். சோனியாஜீ 9-ம் இடத்தில் இருக்கிறார். அவர் எப்போதும் எனக்கு மேலேதான். உலகத்தலைவர்களிலேயே மற்ற உலக நாட்டுத் தலைவர்களின் விருப்பத்துக்குரியவர் பட்டியலில் நான் முதலாம் இடத்தில் இருக்கிறேன். மற்ற உலகத்தலைவர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாக இருக்கிறேன் என்று பல தலைவர்கள் சொல்கிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தை திறந்து விட்டவன் நான். இந்தியப் பொருளாதாரத்தை தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்த்தவன் நான். லைசென்ஸ் ராஜ் என்று மேற்குலகப் பத்திரிகைகள் விமர்சித்த இந்தியாவை சுதந்திரப் பொருளாதார நாடாக்கிக் காட்டிக் கொண்டிருப்பவன் நான். 1.72இலட்சம் கோடி ரூபாய்கள் கற்றையாக அலையில் அடித்துச் சென்றபோது கற்சிலையாக இருந்தவன் நான் என்று காவிப் பயங்கரவாதிகள் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள். நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல நான்......என்று மன்மோகன் சிங் பேசிக் கொண்டிருக்கும் போது சோனியாஜீ விரைந்து வந்து அவர்காதில் "உன் தலையில் ஒரு புறா அமர்ந்திருக்கிறது. உன் தொப்பியை நாறடிக்க முன் அதை விரட்டித் தொலையய்யா!" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
4 comments:
பேசுகிறார்களா,முத்தம் கொடுக்கிறார்களா?தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது வேறு விதமாக விமர்சிக்கப்படுகிறதே?உண்மையா?இனப் படுகொலைக்கு உதவியதற்காக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமையை இந்திய அரசு கோருவதாக ஒரு செய்தி கசிகிறதே
நான் சொல்லப் போனால் உங்க தளம் ரெம்ப நல்லா சார் இருக்கி எங்களை வந்து பாருங்க..........
www.modelgirlsworlds.co.cc
Publish your comments & jokes it is interesting i also enjoyed a lot,but you have to maintain descent for the article.Even though he is now PM for India,we have to gave for their post not for the person....
Publish your comments & jokes it is interesting i also enjoyed a lot,but you have to maintain descent for the article.Even though he is now PM for India,we have to gave respect for their post not for the person....
Post a Comment