Monday 1 November 2010

இலங்கையில் சீனாவால் அசௌகரியப்படும் இந்தியா - கொழும்பு ஊடகம்.


கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று இப்படி தனது வராந்தப் பதிப்பில் தெரிவித்துள்ளது:

  • The relationship between China and Sri Lanka is deemed to be one of mutual benefit but there is undeniably a balance-of-power component that Colombo needs to take into account. Even Indian diplomats are now willing to confess — strictly confidentially — that the excessive closeness between Beijing and Colombo is breaching comfort levels in New Delhi.
  • இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு ஒருவர்க் கொருவர் நன்மையளிப்பதாகக் கருதப்பட்டாலும் அங்கு மறுக்கப்படமுடியாத அதிகாரச் சமநிலை பங்கு ஒன்று இருப்பதை கொழும்பு கவனத்தில் கொள்ளவேண்டும். கடுமையான அந்தரங்கமாக இப்போது இந்திய அரச தந்திரிகள் கூட கொழும்பிற்கும் பீஜிங்கிற்கும் இடையிலான மிகையான நெருக்கம் டெல்லியின் சௌகரிய நிலையை தகர்கிறது.
அப்பத்திரிகை மேலும் சொல்கிறது:

  • “We don’t for a minute doubt the sovereign right of the Government of Sri Lanka to engage with foreign partners in any manner it deems fit,” a source from the Indian diplomatic corps told this newspaper. “But we have only pointed out to the Government of Sri Lanka that given the history and closeness of our relationship and the geographical location in which we find ourselves... in taking decisions the Government of Sri Lanka will keep our interests in mind, and will do nothing that compromises the security of India.”
இப்படிச் சொல்கிறது ஒரு கொழும்புப் பத்திரிகை. இதன் பின்னணி என்ன? இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிப்பதில் இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவின. பின்னர் இலங்கையை சுரண்டுவதில் சீனாவிற்கு அதிக பங்கு வழங்கப் படுகிறது. இந்தியா தன்னைச் சூழவுள்ள பல நாடுகளில் சீன ஆதிக்கத்தை தடுக்க முடியாமல் தவிக்கிறது. இலங்கையிலும் அத்தகைய நிலை உருவாகிவிட்டது. சோதிடர்கள் சொல்லுவார்கள் சந்திரன் ஒரு சிறிய உப கிரகம் ஆனாலும் அது பூமிக்கு அண்மையில் இருப்பதால் அதன் தாக்கம் பூலோக வாசிகள்மீது அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையின் நிலையும் அதுதான். ஒரு படைத்துறை ஆய்வாளர் கருத்துப் படி இந்தியாவைச் சூழவுள்ள நாடுகள் சீனாவை பிராந்திய வல்லரசாக ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவை இந்தியாவை தமக்குச் சமமான நாடாகவே பார்க்கின்றன.

இலங்கையில் சீனா முன் வைக்கும் திட்டங்கள் விரைந்து அனுமதிக்கப் படுகின்றன. இந்தியாவின் சம்பூர் திட்டமும் இந்திய இலங்கைக்கிடையிலான் பொருளாதார ஒப்பந்தத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. சீனத் தொழிலாளர்கள் பலர் இலங்கையில் வேலை செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.

2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது.

ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை உரையாடும் உறுப்பினராகச் சேர்க்கப் பட்டமை இலங்கையில் சீனாவின் பிடி இறுகுகின்றதென்பதற்கு மேலும் ஒரு அறிகுறியாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு சபை சீனா, கஷகஸ்த்தான், இரசியா, தஜிகிஸ்த்தான் உஷ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பில் இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் பார்வையாளராக கலந்துகொள்ளும் உரித்துடையன. இலங்கைக்கு இந்த அமைப்பில் உரையாடும் உறுப்புரிமை வழங்கப்பட்டமை இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டது.
.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை சீனா நன்கு உணர்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் சீனா பலமான ஒரு வர்த்தக உறவை 1960களில் இருந்தே ஏற்படுத்தி வருகிறது. ஆபிரிக்காவின் மூலவளமும் மத்திய கிழக்கின் எரிபொருள் வளமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின , பங்காற்றி வருகின்றன. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் வழியாக இலங்கையைக் கடந்தே செல்ல வேண்டும். இதனால் இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா விரும்புகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை இணைந்து கொண்டமை மேற்குலகிற்கு எதிராக இலங்கை எடுத்து வைக்கும் ஒரு அடி அல்ல என்று இலங்கை வெளியுறவுச்செயலர் தெரிவித்திருந்த போதிலும் அதுதான் உண்மை என்றும் கருதப்பட வேண்டியுள்ளது. மேற்குலகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுப்பும் போர் குற்றச்சாட்டிலிருந்து தப்ப இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு புகலிடம் தேவை. அது ஐநாவில் இரத்து (வீட்டோ) அதிகாரம் கொண்ட சீனாவைத்தவிர வேறு எந்த நாட்டாலும் முடியாது. உண்மையில் இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவின் தீவிரஆதரவாளர்களாக இருப்பதால்தான் மேற்குலகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்குற்றம் என்ற ஆயுதத்தை எடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இந்தியா இலங்கையில் சீன ஆதிக்கத்தைப் பற்றி தனது கரிசனையை பலதடவை எடுத்துச் சொல்லிவிட்டது. இது பற்றி கதைக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவின் இலங்கைப் பயணத்தை இலங்கை தள்ளி வைத்துவிட்டு மஹிந்த ராஜபக்சே இப்போது சீனப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நிச்சயம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கை பயணத்தை எப்படிக் கையள்வது இந்திய வலியுறத்தல்கள் அழுத்தங்களை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றித்தான் சீனாவுடன் கலந்துரையாடியுள்ளார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

இன்னொரு ஊடகம் இலங்கைப் போரில் வென்றது சீனா என்கிறது:

  • MJT: So you just got back from Sri Lanka. What did you see there? What did you learn?
  • Kaplan: The biggest takeaway fact about the Sri Lankan war that’s over now is that the Chinese won. And the Chinese won because over the last few years, because of the human rights violations by the Sri Lankan government, the U.S. and other Western countries have cut all military aid. We cut them off just as they were starting to win. The Chinese filled the gaps and kept them flush with weapons and, more importantly, with ammunition, with fire-fighting radar, all kinds of equipment. The assault rifles that Sri Lankan soldiers carry at road blocks throughout Colombo are T-56 Chinese knockoffs of AK-47s. They look like AK-47s, but they’re not. What are the Chinese getting out of this? They’re building a deep water port and bunkering facility for their warships and merchant fleet in Hambantota, in southern Sri Lanka. And they’re doing all sorts of other building on the island.

இந்தியா தொடர்பான இலங்கையின் உண்மை நிலை இனி வரும் காலங்களில் வெளிவரும்.
.

1 comment:

Anonymous said...

“We don’t for a minute doubt the sovereign right of the Government of Sri Lanka to engage with foreign partners in any manner it deems fit,” a source from the Indian diplomatic corps told this newspaper. “But we have only pointed out to the Government of Sri Lanka that given the history and closeness of our relationship and the geographical location in which we find ourselves... in taking decisions the Government of Sri Lanka will keep our interests in mind, and will do nothing that compromises the security of India.”

ஆஹா காட்சி ஆரம்பிச்சுடுசுடா!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...