
டோக்கியோ நகரில் பல இடங்களில் மிதி வண்டியில் மோட்டார் வாகனங்களிலும் பார்க்க விரைவாகப் பயணம் செய்யலாம். (ஜப்பானியர்கள் அதிலும் வேகமாக நடப்பார்களே!0
வண்ணத்துப் பூச்சிகள் தமது கால்களினால் சுவையை உணர்கின்றன.( போய் உட்கார்ந்தவுடன் ருசிக்க வசதியாக் இருக்க இந்த ஏற்பாடோ)
இணையத் தளங்களில் ஆண்கள் பெண்களிலும் பார்கக் ஆறு மடங்கு அதிகமாக பாலியல் சம்பந்தமான சமாச்சாரங்களைப் பார்க்கிறார்களாம்.( நான் பார்த்ததையும் கணக்கெடுத்தாங்களோ. களவாணிப் பயலுக)
பிரித்தானிய இளவரசர்கள் சார்ல்ஸும் வில்லியமும் ஒரே விமானத்தில் பயணம் செய்வதில்லை. விபத்தில் இருவரும் இறக்கக் கூடாது என்பதற்காகவாம்.( மோட்டார் வண்டியில் போனால் புகைப்படக்காரர்கள் துரத்திக் கொண்டுபோய் சாகடிக்க மாட்டார்களா?)
56% ஆண்கள் வேலை செய்யுமிடத்தில் அந்த மாதிரி சமாச்சாரங்கள் செய்கிறார்களாம்(பெண்கள் எந்தனை விழுக்காடு?)
வாத்தின் சத்தம் எதிரொலிக்காதாம். அதற்கான காரணம் யாருக்கும் தெரியாதாம்.( வாத்துச் சத்தத்தை ஒரு தடவையே கேட்க கொடூரமாக இருக்கும் என்பதால் இப்படி ஆனதோ)
எமது உடல் ஒரு நொடியில் ஒன்றரைக் கோடி உயிரணுக்களை(cells) உற்பத்தி செய்கிறது. அதே தொகை அழிக்கிறது. ( எப்படி எண்ணினார்கள்?)
பத்து மணித்துளிகளில் சுழல் காற்று வெளிவிடும் சக்தி உலகில் உள்ள மொத்த அணுக்குண்டுகள் வெளிவிடும் சக்தியிலும் அதிகம். ( எத்தனை பேரைக் கொல்லும் என்பது தானய்யா முக்கியம்)
உலகில் அதிகமான மக்கள் இறப்பிலும் பார்க்க சிலந்திக்கு அதிகமாகப் பயப்படுகிறார்கள்.(மனைவிமாருக்கு பயப்படுவோரைக் கணக்கில் எடுக்க்கவில்லையா?)
லஸ் வேகஸ்ஸில் உள்ள சூதாட்ட நிலையங்களில் கடிகாரங்கள் வைத்திருக்கப்படுவதில்லை. (நேரம் போவது தெரியாமல் பணத்தைத் தொலைக்க வேண்டுமே)
காதலி தேவை என்று விளம்பரம் கொடுப்பவரில் 35% மானோர் ஏற்கனவே திருமணமானவர்கள். ( கிளிமாதிரிப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு சின்ன வீடு தேவையோ?)
மோனா லிசா புருவத்தை மழித்துள்ளார். அக்காலத்தில் அது ஒரு நாகரீகமாம்.( எப்படி மழித்திருப்பார்?)
மிருகங்களில் யானையால் மட்டும் தாவ முடியாது.( யானையை தமது சின்னமாகக் கொண்ட இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியினர் இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்)
ஐஸ்லாந்தில் உணவகங்களில் பரிமாறும் பணிபுரிவேருக்கு நன்கொடை(tips) கொடுப்பதை அப்பணியாளர்கள் அவமானப் படுத்துதலாக கருதுவார்களாம்.
அமெரிக்க இந்தியானா மாநிலத்தில் உள்ள பொது நூலகம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு அங்குலம் நிலத்துக்குள் செல்கிறதாம். அக்கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் அங்கு வைக்கப்படும் புத்தகங்களின் பாரத்தை கருத்தில் கொள்ளவில்லையாம். ( பிரம்மனும் மனிதனைப் படைக்கும் போது சிறு பிள்ளைகள் சுமக்கும் புத்தகங்களின் பாரத்தைக் கணக்கில் எடுக்கவில்லை)
ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் நித்திரை செய்யுமாம். ( அரச உழியர்கள் எத்தனை ஆண்டுகளாக இதைச் செய்கிறார்கள்?)
நோபல் பரிசாக வழங்கப்படும் பதக்கத்தில் மூன்று நிர்வாண ஆண்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டபடி நிற்கும் வடிவம் உள்ளதாம்.
ஒரு போயிங் 747 விமானம் 57,585கலன்கள் எரிபொருளைக் கொண்டுள்ளது.
எமது காதும் மூக்கும் நாம் வளரும்போது வளர்கின்றன. கண்கள் வளர்வதில்லையாம்.
1 comment:
நல்ல தகவல்கள்...சிரிக்கும்படியான கமெண்ட்ஸ்
Post a Comment