
ஒருவர் தனக்குத் தானே பேசிக் கொண்டால் அது பைத்தியத்தின் ஆரம்பம் என்று சொல்லப்படுவதுண்டு. இதை மனோதத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வின் மூலம் மறுத்துள்ளதுடன் முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். ரொரன்ரோ கனடாவைச் சேந்த ஆய்வுப் பேராசிரியர் மைக்கேல் இங்ஜிலிச் தனது தொடர் ஆய்வுகளின் மூலம் தனக்குத் தானே பேசிக்கொள்பவர்கள் சுய கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
பேராசிரியர் மைக்கேல் இங்ஜிலின் முதல் கட்ட ஆய்வில் கணனியில் தோன்றும் உருவங்களில் வித்தியாசமான உருவங்கள் தோன்றும் போது விசைப்பலகையை அழுத்தக் கூடாது என்றும் வழமையான உருவங்கள் தோன்றும் போது அழுத்தும்படியும் சிலர் பணிக்கப் பட்டனர். இது உள்ளுந்தல் இல்லாமல் சுயகட்டுப்பாட்டுடன் யார் செயற்படுகிறார்கள் என்பதை அறிய மேற் கொள்ளப் பட்டது.
இரண்டாம் கட்ட ஆய்வில் பங்கெடுத்தவர்கள் தங்களது உள்ளகக் குரலைத்(inner voice) தடுக்கும் முகமாக ஒரு சொல்லை மட்டும் அவர்கள்ஆய்வின் போது திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு விசைப்பலகையை அழுத்தும்படி பணிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தமக்குத் தாமே பேசிக்கொண்டு விசைப்பலகையை அழுத்த முடியாது.
முதல் கட்ட ஆய்வில் சிறப்பாகச் செயல்பட்ட தமக்குத் தாமே பேசிக் கொள்பவர்களால் தமக்குத் தமக்குத் தாமே பேசிக் கொள்வதைத் தடுத்தவிடத்தில் சிறப்பாகச் செயற்பட முடியவில்லை.
எமக்கு நாமே பேசிக் கொள்வதால் நல்ல சுய கட்டுப்பாடும் ஏதேச்சையாக முடிவெடுப்பதைத் தடுத்து சிந்தித்து முடிவெடுக்கும் திறமையை எமக்கு வழ்ங்கும் என்கிறார் பேராசிரியர் மைக்கேல் இங்ஜிலிச்.
ஆய்வின் ஆசிரியர் அலெக்ஸா ருலேற் நாம் எப்போது எம்மை நாமே கட்டுப் படுத்தும் முகமாக எமக்கு நாமே தகவல்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் என்கிறார். இத்தகவல்களின் அடிப்படையிலேயே நாம் இயங்குகிறோம் என்கிறார் அலெக்ஸா ருலேற்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு நானே சிறந்த பேச்சுத் துணை.
No comments:
Post a Comment