
செய்தி வாசிப்பவளுக்கு
பிழையாக முத்தம் கொடுத்தால்
இத்துடன் முடிந்தது வணக்கம் என்பாள்
கர்நாடக சங்கீதப் பாடகிக்கு
பிழையாக முத்தம் கொடுத்தால்
மங்களம் பாடிவிடுவாள்
சினிமா நடிகைக்கு
பிழையாக முத்தம் கொடுத்தால்
"கட்" சொல்லிவிடுவாள்
காவற்துறைப் பெண்ணுக்கு
பிழையாக முத்தம் கொடுத்தால்
கைது செய்து விடுவாள்
பள்ளி ஆசிரியைக்குப்
பிழையாக முத்தம் கொடுத்தால்
மீண்டும் பல தடவை செய்யச் சொல்வாள்
No comments:
Post a Comment