
யாழ் மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை பிரித்தானியாவில் உள்ள அதன் பழைய மாணவர்கள் செப்டம்பர் 18-ம், 19-ம் திகதிகளில் கொண்டாடினர். இரு நாளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக சங்கீத் வித்தகியும் திரைப்படப் பின்னணிப்பாடகியுமான சாருலாதா மணி அவர்கள் இசை நிகழ்ச்சி வழங்கினார்.
அவரது கச்சேரி இளம் பிள்ளைகளை கர்நாடக சங்கீதத்தின் பால் கவர்ந்திழுத்தது. சபையில் இருந்த சகலரையும் அவரது நிகழ்ச்சி தாளம் போடவைத்தது. குறிப்பாக அவர் காபி இராகத்தில் பாடியது மிகச் சிறப்பாக அமைந்தது. எழுந்து நின்று ஆட வேண்டும் போல் இருந்தது என்றார் ஒரு முதியவர். காபி இராகப் பாடலைக் கேடதும் சாருலதா காலில் விழுந்து வணங்க வேண்டும் போலிருந்தது என்றார் இன்னொருவர்.
No comments:
Post a Comment