Sunday 21 March 2010

காத்தருள்வாய்


காலை வீட்டிலிருந்து வேலைக்கென்று வெளியே வந்தால் - தன்
காலை மெட்டாக அசைத்து முன் மெல்லெனப் போவாள்
பாலைக் கடைந்தாற்போல் மேனியுடன் ஒரு குஜராத்திக் குமரி – என்
வாலை மனதைச் சிதறாமல் காப்பாய் மஞ்சவனப் பதி கந்தா கடம்பா

பேருந்து தரிப்பிடத்தில் கரிபியக் கன்னி யொருத்தி – சிலையென
இருந்து கையில் ஓர் காதல் நாவல் கையேந்தி – போதை
மருந்து போலொரு கண்ணால் ஓரப் பார்வை விடுகிறாள் - என்
குருத்து மனதைச் சிதறாமல் காப்பாய் நல்லைக் குமரா வேலா

வேலையில் போய் அமர்ந்தால் ஆங்கொரு ஐரிஸ் பெண்
வேலைக் கண்ணில் எடுத்து உரசிக் கொண்டு அருகில் வந்து
கொலை செய்கின்றாள் ஐயா என்தன் வாலிபத்தை – என்
காளை மனதைச சிதறாமல் காப்பாய் சந்நிதி முருகா முருகா

இத்தாலி உணவகம் மதியம் சென்றால் அங்கொரு – போலந்து
இளவழகி உணவுதரக் குனிந்து பவள மார்பு காட்டி
களவுவழி என்னை மனதைக் கவர்கின்றாள் ஐயா – என்
சிறு மனதைச சிதறாமல் காப்பாய் மாமங்காடு ஆண்டவா


Facebookஇல் பேசி எனை வாட்டுகிறாள் ஒரு பிரெஞ்சுப் பெண்
சொற்களால் செய்யும் சில் மிஷங்கள் சொல்வொணாது
வார்த்தைகளால் காட்டுகிறாள் அவள் இங்கு நீலப் படம் - வாலிப
மனதைச சிதறாமல் காப்பாய் கோணமாமலை அமர்ந்த ஈசா

1 comment:

ஆர்வா said...

எல்லாத்தையும் ரசிச்சிட்டு கடைசியில ஏன் நல்ல பிள்ளையாய் வேஷம்? நல்லா இருந்துச்சு

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...