
மின்னலாய் வந்த உன் நட்பு
மேகமாயேன் நிலைக்கவில்லை?
மழையாய் பொழிந்த அன்பு
காற்றாகிப் போனதேனோ?
மெல்லிய மெழுகு திரியொளியில்
ஒன்றாய் உண்ட உணவுகளில்
பகிர்ந்து கண்ட சுவைகள்
நெஞ்சகத்தில் நிலைக்காததேனோ?
துள்ளும் இசைக்கு கையிணைய
ஆடிய நடனங்கள் செய்த அசைவுகள்
எம் இதயத் துடிப்புகளில்
ஒத்திசைய மறுத்ததேனோ?
கடலாய் வந்த எங்கள் காதல்
அலை போலேன் அடிக்கவில்லை?
வழித்துணையாய் வந்தவள்
ஏன் வாழ்க்கைத் துணையாகவில்லை
2 comments:
nalla comedy
வழித்துணை எப்படி வாழ்க்கைத்துணை..?ஆசை அதிகம் தான் . கவித்துவாமாய் சொல்லியிருக்கிறீர்கள்
Post a Comment