Tuesday 12 January 2010

கூட்டமைப்பு சரத்திற்காக பிரச்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியுமா?


மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு தமிழனுக்கும் சந்தேகம் இருக்க முடியாது. சந்தேகம் இருக்கவும் கூடாது.

மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க ஒரே வழி சரத் பொன்சேக்காவிற்கு வாக்களிப்பதுதான். தமிழ் மக்கள் அதைச் செய்வாரகள்.

சரத்திற்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்த ஒரு வழி மட்டுமே. அவர்கள் கையில் இருக்கும் ஒரு ஆயுதம் தான் தேர்தல் வாக்கு. சரத்திற்கு வாக்களிப்பது என்பது அவரது தலைமையில் தமிழர்களுக்கு விடிவும் கிடைக்கும் என்பதல்ல.

மஹிந்த கொழுக்கட்டை என்றால் சரத் மோதகம். இருவரும் இனக் கொலையாளிகள் என்றுதான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இருவர் கைகளிலும் இரத்தக் கறை உண்டு என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.

தமிழர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கித் தேர்தலில் வென்றவர்கள் தேர்தலில் வென்றபின் தமிழர்களுக்கு எதிராக பல தீங்குகள் செய்வது என்பதுதான் இலங்கையின் அரசியல் வரலாறு.

தமிழர்களின் தாயகம், தன்னாட்சி, சுய நிர்ணய உரிமை ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்க மறுக்கும் எவரையும் நாம் ஆதரிக்க முடியாது.

சரத் பொன்சேக்கா இப்போது ஒரு ஓய்வு பெற்ற தளபதி..அவன் தோற்றாலும் ஒரு
ஒரு ஓய்வு பெற்ற தளபதி. மஹிந்த இபோது குடியரசுத் தலைவர். அவன் தோற்றால் செல்லாக்காசாவான். தமிழர்கள் மஹிந்தவைத் தோற்கடிப்பதால் அவனுக்கும் அவர் சகோதரர்களுக்கும் பலத்த இழப்பை ஏற்படுத்த முடியும். இப்போது தன்னை அரசன் என்று கருதிக் கொண்டிருப்பவனை நடுத் தெருவில் நிற்பாட்டுவது அவனால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு சிறு மகிழ்ச்சியைக் கொடுக்கும். சரத்தை தோற்கடிப்பதால் சரத்திற்கு ஏற்படும் பாதிப்பை விட மஹிந்தவைத் தோற்கடிப்பதால் மஹிந்தவிற்கு ஏற்படும் பாதிப்பு பன்மடங்கானது. இதற்காக மட்டுமே சரத்திற்கு வாக்களித்து மஹிந்தவைத் தோற்கடிக்க வேண்டும்.

சரத் வென்றபின் அவனுக்கு ஜேவிபி யூஎன்பி ஆகிய இரு முரண்பட்ட கட்சிகளிடையே சிக்கித் தவிப்பதுதான் அவன் பெரும் பாடாக இருக்கும். சரத்திற்கு என்று சொந்தமாக ஒரு கட்சியுமில்லை. அரசியல் அனுபவமும் இல்லை. ஒரு நல்ல நிர்வாகியுமல்ல. அவனால் நாட்டுக்கு எந்த நன்மையும் வரப் போவதுமில்லை. அவனது நிர்வாகத்தில் இன்னோரு இனவாதியாகக் கருதப் படும் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் சரத் என் சில்வாவை நியமிக்க ஜேவீபீ வற்புறுத்தும். மொத்தத்தில் சரத்தால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.

மஹிந்த வென்றால் அவன் தனது தமிழ்த் தேசியத்தின் வேரை அறுக்கும் திட்டத்தை தொடருவான்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மஹிந்தவிற்கு வாக்களிக்காமல் சரத்திற்கு வாக்களித்து மஹிந்தவைத் தோற்கடியுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் எடுத்துச் சொல்லலாம். தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழத் தேசியக் கூட்டமைப்பு மேடைகளில் ஏறி சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

6 comments:

Yoga said...

பகிரங்க அறிக்கைகள் பத்திரிகைகள் மூலமாகவும்,வேறும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும் விடலாம்.மேடையேறி பிரசாரம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.அவர்களும் அவ்வாறான வேண்டுகோளை விடுத்தது போலும் தெரியவில்லயே?

Anonymous said...

தமது அரசியல் இருப்பைத் தக்கவைக்கத்தான் அவர்கள் முயல்கிறார்கள்...

Anonymous said...

If they campaign for Sarath Fonseka, they endorse what he did in the past

எல்லாளன் said...

விமர்சனங்களை எல்லாம் தகர்த்தெறிந்து கூட்டமைப்பின் சரியான முடிவு--

உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய முடிவு தொடர்பில் ஒவ்வொரு ஊடகவியலாளர்களும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் ஒவ்வொரு தமிழ் மக்களும் மாறுபாடான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். இந்தநிலையில் அந்த விமர்சனங்களை எல்லாம் தகர்த்தெறிந்து சரியான காரணங்களுடன் தமது நிலைப்பாட்டினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எட்டியிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இராவணேசன் -ஈழநேசன்
http://tamilthesiyam.blogspot.com/2010/01/blog-post_5951.html

Anonymous said...

வரலாற்றில் மிக மோசமான போரினால் திணறுண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உடனடியாக ஒரு மூச்சு விடும் இடைவெளி(breathing space) தேவை. அதற்கேற்ப கூட்டமைப்பு செயற்படுகிறது என்று நம்புவோமாக.

pandiyan said...

கவிஞர் வேல் தர்மா.. ஏறக்குறைய தமிழ்நாட்டின் நிலைமைக்கே கொண்டுவந்துவிட்டான் இந்திகாரன் அதாவது ஜெயலலிதா-கருநாகம் மற்றும் காங்கிரசு-பிஜேபி... ஈழத்தவர்கள் புத்திசாலிதனமாக சகுனி போன்று ராஜ தந்திரத்தை உபயோகிக்கவேண்டும்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...