Friday, 15 January 2010
இந்தியா ஏன் ராஜபக்சவின் பின்னால் நிற்கிறது?
மஹிந்த ராஜபக்சவிற்கு இந்தியா பண உதவி செய்கிறது, ஆயுத உதவி செய்கிறது, படை உதவி செய்கிறது, பன்னாட்டு அரங்கில் பாதுகாக்கிறது. இவை எல்லாம் செய்வது ஒரு அயல் நாடு ஒன்றுடன் நல்ல நட்பு பேணுவது என்ற ரீதியிலா? மஹிந்த ராஜபக்சவிற்கு இந்தியா தேர்தலில் வெற்றி பெறச் செய்வது ஏன்? அது இரண்டு நாடுகளிற்கு இடையில் உள்ள உறவுகளுக்கு அப்பாற் பட்டது. இத்தனைக்கும் ராஜபக்சக்கள் இந்திய விசுவாசிகள் அல்லர். சீனாவின் நல்ல நண்பர்கள். பாக்கிஸ்தானுடன் நல்ல உறவைப் பேணுபவர்கள். இருந்தும் இந்தியா ராஜபக்சவிற்கு பின்னால் நிற்பது ஏன்? இந்திய ஊடகங்கள் ராஜபக்சவின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகும் என்று கூக்குரல் இடுவது ஏன்?
இந்தியாவின் பார்பனர் நிறைந்த South Block
இந்திய மத்திய அரச நிர்வாக கட்டிடத்தின் South Block இல் பிரதம மந்திரி அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு ஆகியன அமைந்துள்ளன. இந்த South Block இந்தியாவின் செல்வாக்கு மிக்க பகுதியாகும். இந்த அமைச்சுக்களின் அதிகாரிகள் முழுக்க முழுக்க பார்ப்பனர்களே. இவர்களுக்கு திராவிடம் தமிழ்த்தேசியம் என்ற வார்த்தைகள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போன்றது. தமிழர்கள் அடக்கி ஆளப் படவேண்டியவர்கள் என்ற அபிப்பிராயம் கொண்டவர்கள். அவாள் பாஷையில் சொல்லுவதனால் தமிழர்கள் சூத்திரர்கள். அவாள் ஆளக்கூடாது.
கருணாநிதியின் பலங்கள் பலவீனங்களை South Block நன்கு அறிந்து கொண்டதுடன் அவரின் செல்வச் சேகரிப்பு பற்றியும் அறிந்து வைத்து அவரை தமது பெருவிரலின் கீழ் வைத்திருக்கின்றன. South Blockஐ மிஞ்சி கருணாநிதியால் ஏதும் செய்ய முடியாது.
இலங்கையில் தமிழர்கள் இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் அதிகமாக எதுவும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது இந்த South Block. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே இருப்பது போல் பார்ப்பன ஆதிக்கம் என்பது அறவே இல்லை. இது பற்றி 1983-84களில் அறிந்து கொண்ட இந்த South Block மிகுந்த ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தது. அன்றிலிருந்து இந்த South Block ஈழ விடுதலைக்கு எதிராகச் செயற்படுகிறது. அதில் ஒரு அம்சமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை சிங்களவர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் திருப்பியது இந்த South Block. இதை அரசியல் அறிவில்லாத ராஜிவ் காந்தி காலத்தில் அது வெற்றீகரமாகச் சாதித்தது.
சிங்களவர்களில் ராஜபக்சவை இந்தியா விரும்புவது ஏன்?
ராஜபக்சே வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை விரோதியாகக் கருதுகிறது. ராஜபக்சவின் வெளியுறவுக் கொள்கை சீனா பாக்கிஸ்த்தானுடன் இந்தியாவையும் இணைத்து நல் உறவைப் பேண முயல்கிறது. ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சரத் பொன்சேக்காவின் ஆட்சி அமெரிக்காவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். சீனாவும் பாக்கிஸ்த்தானும் தமிழர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவை. தமிழர் நலன் பற்றி அக்கறை இல்லாதவை. இலங்கையில் சீனா பாக்கிஸ்த்தான் ஆகியவற்றின் ஆதிக்கம் தமிழர்களுக்கு மிகப் பாதகமானவை. அத்துடன் இலங்கையில் சீனா பாக்கிஸ்த்தான் ஆகியவற்றின் இலங்கை மீதான ஆதிக்கம்இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் விரோதமானதே. இருந்தும் இந்திய நலனைப் பலியிட இந்த South Block தயங்கவில்லை. அமெரிக்காவிற்கு தமிழர்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய அவசியமில்லை. ஐரொப்பிய அமெரிக்க அரசுகளுடன் தமிழ் அமைப்புக்களுக்கு தொடர்பு உண்டு. இந்த தொடர்புகளுக்கு South Block பயப்படுகிறது. அதனால் அமெரிக்க சார்பு சரத் பொன்சேக்கா வெல்லுவதிலும் பார்க்க அமெரிக்க விரோத ராஜபக்சே வெல்லுவதை South Block விரும்புகிறது. அமெரிக்காவின் நோக்கம் இலங்கையில் சீன ஆதிக்கதை ஒழிப்பது. அது இந்தியப் பிராந்திய நலன்களுக்கு சாதகமான கொள்கை. இருந்தும் இந்தப் பார்ப்பன South Block தமது சாதிய நலன்களுக்கு அது சாதகமாக அமையும் என்பதால் அமெரிக்காவின் கொள்கையை விரும்பவில்லை. இதற்க்காக இந்தியா மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கிறது.
இந்தியாவும் ஒரு போர்குற்றவாளி
சரத் பொன்சேக்கா வெற்றி பெற்றால் போர்குற்றம் சம்பந்தப் பட்ட தகவல்கள் பல வெளிவர வாய்ப்புண்டு. அந்தப் போர்குற்றத்திற்கு இந்தியாவின் பங்களிப்பும் வெளிவரும். இதனாலும் இந்தியா பொன்சேக்காவை வெறுக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment