இலங்கை அரசு தனது கொடுமையில் வயது வேறுபாடு காட்டுவதில்லை. பச்சிளம் குழந்தைகள் தள்ளாடும் வயோதிபர் என எல்லோரையும் கொன்று குவித்ததுண்டு. சண்டைக்கு நிற்பவர்களையும் கொல்வார்கள். சரணடையச் செல்பவரையும் கொல்வார்கள். சிறையில் அடைப்பதும் அப்படியே வயது வேறுபாடின்றிச் சிறையில் அடைத்தார்கள். இதனால்தான் சர்வதேச் நெருக்கடிக் குழுவின் இணைத் தலைவர் கிறிஸ் பற்றேண் அவர்கள் இலங்கையில் ஒருவரை ஒருவர் போர்க் குற்றவாளிகள் எனக் குற்றம் சுமத்தும் இருவரில் ஒருவரை குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப் போகிறார்கள் என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையும் தாயும் மற்ற மூன்று இலட்சம் தமிழர்களைப் போலவே சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை அடைத்துவைத்தது கொடுமைக்குப் பெயர் போன பனாகொட இராணுவ முகாமில். வேறு முகாம்களில் வைத்திருந்தால் யாராவது உடைத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம்.
பிரபாகரனின் தந்தையின் இறுதிநாட்கள் பற்றி சில கதைகள் கொழும்பில் பேசப் படுகின்றன. அது இப்படிப் போகிறது:
- பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் அவர்கள் கடுமையாக நோய் வாய்ப்பட்டு இறக்கப் போகிறார் என்று அறிந்து அவரை வந்து அழைத்துச் செல்லும்படி இலங்கை திருமாவளவனைக் கேட்டதாம். தேர்தல் காலத்தில் தமிழர்களின் தேச பிதா சிறையில் இறப்பதை ராஜபக்சேக்கள் விரும்பவில்லை. இரு தரப்பும் இதில் ஒரு விதமாக நடந்து கொண்டார்கள். திருமாவளவன் இலங்கைக்கு சந்திரசேகரனின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள வருவது போல் வருவார். அவர் தேச பிதாவை தன்னிடம் ஒப்படைக்கக் கேட்க அதை தாராள மனதுடன் ராஜபக்சே ஒத்துக் கொள்வார். திருமா தாயையும் தந்தையையும் இந்தியா அழைத்துச் செல்வார். ஆனால் திருமா இலங்கை வந்தவுடன் தேச பிதா திருவேங்கடம் அவர்கள் காலமாகிவிட்டார்.
பிரபாகரனுக்காக அழவில்லை.
இலங்கையில் ஒரு மரண விட்டில் அழும்போது அதற்கு முன் அந்த வீட்டில் யாராவது இறந்திருந்தால் அவருக்கும் சேர்த்து அழுவார்கள். திருவேங்கடம் அவர்களின் கிரியையில் பிரபாகரனின் தாய் அப்படியாருக்காகவும் அழவில்லை. மாறாக தனது மகன் பிரபாகரன் பத்திரமாக இருப்பதாக கூறினாராம் பார்வதி அம்மாள்.
கருவில் உருவான எல்லாளன்.
தேச பிதாவின் மரணத்தை ஒட்டி ஜிரிவி தொலைக்காட்சியில் அரது உறவினர் ஒருவர் சொன்ன தகவல்:பிரபாகரன் பார்வதி அம்மாளின் கருவில் உருவாகும்போது அவர்கள் குடும்பம் அநுராதபுரத்தில் இருந்ததாம். அவர்கள் இருந்த வீட்டிற்கு முன்னால் எல்லாளனின் சிலை இருந்ததாம் நாள் தோறும் வெளியில் செல்லும் போது எல்லாளனின் சிலையை பார்வதி அம்மாள் தரிசித்துச் சென்றமையால் அப்படி ஒரு பிள்ளை உருவாகினானான்.
1 comment:
பிரபாகரனுக்கு அழிவில்லை
அதனால் அழவில்ல்.
Post a Comment