
சீனாதொடர்பான அமெரிக்காவின் குறுகிய காலக் கொள்கை அதன் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவது. நீண்டகாலக் கொள்கை அதனுடன் ஒரு பங்காளனாக மாறுவது. பங்காளன் என்னும் போது உயர் தொழில் நுட்பங்களை மேற்குலகின் செல்வந்த நாடுகளும் நடுத்தரத் தொழில் நுட்பங்களை மற்றைய நாடுகளும் உருவாக்கி உலகெங்கும் விற்பனை செய்யவும் சீனா பாவனையாளர் பொருள்களை உற்பத்தி செய்து உலகெங்கு விற்பனை செய்வதும் போன்ற ஒரு ஏற்பாட்டை மேற்குலகம் விரும்புகிறது. இந்தச் சமன்பாட்டில் இந்தியா எங்கே? இந்தியாவில் உருவாகி உள்ள பாரிய எண்ணிக்கையிலான மத்தியதர வர்கத்தை வர்தக ரீதியில் சுரண்டிக் கொள்ள மேற்குலகம் விரும்புகிறது. அதனால் இந்தியாவை குறுங்காலத்தில் ஒரு நண்பனாகவே மேற்குலகம் காட்டிக் கொள்கிறது. நீண்டகால் அடிப்படையில் இந்தியாவிலும் பார்க்க சீனாவிற்கே மேற்குலகம் முக்கியத்துவம் கொடுக்கும்.
இந்தியாவை சுற்றியுள்ள சகல நாடுகளும் இந்தியாவை ஒரு விரோதியாகவே பார்க்கின்றன. இந்தியாவுடன் கலாச்சாரத் தொடர்புள்ள நாடுகளில் இந்திய விரோதப் போக்கு மிக அதிகம்.
மேற்குலகின் பொருளாதார மற்றும் படைத்துறை வல்லுனர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவுடன் பாரிய முரண்பாட்டை வளர்க்க வேண்டாம் என்று மேற்குலக அரசுகளுக்கு அறிவுரை கூறி விட்டனர். அதன் அடிப்படையிலேயே ஹொங்ஹொங் மீண்டும் பிரித்தானியாவால் சீனாவிடம் கையளிக்கப்பட்டது. அல்லது அங்கு ஒரு தனிநாட்டுப் போராட்டமே தொடங்கியிருந்திருக்கும்.
இந்தியா ஒரு பெரிய மக்களாட்சி நாடாக இருந்த போதும் அது ஒரு குழப்பமான மக்களாட்சியே. இந்திய ஆட்சியாளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாதவர்களாகவே என்றும் இருக்கிறார்கள். மேற்குலக நாடுகள் தீர்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய மக்களாட்சியில்லாத சீனாவை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சிறந்த நண்பனாகவே கருதுகிறார்கள்.
சீனா மேற்குலகப் பங்காளிகளை எப்படிப் பாவிக்கும்? அது செய்யவிருக்கும் விட்டுக் கொடுப்புகள் என்ன? சீனா ஒரு பிராந்திய வல்லரசாகவே இருக்கும். அதன் ஆதிக்கம் ஆபிரிக்காவைத் தாண்டிச் செல்லாது. இதனால்தானா சீனா தனது கடற்படைப் பலத்தை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் வைத்திருக்கிறது? இதனால்தானா சீனாவிடம் விமானம் தாங்கிக் கப்பல்கள் இல்லை? சீனா ஒரு பிராந்திய வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்படுமிடத்து இந்தியாவின் நிலை என்ன? இலங்கை, பாக்கிஸ்த்தான், நேப்பாளம், பங்களாதேசம், மியன்மார் ஆகியவை சீனாவின் செய்மதி நாடுகளாகிவிடும். அந்தக் கட்டத்தில் சீனா இந்தியாவை என்ன செய்யும்? சீனா இந்தியாவை துண்டாடும். இதை மேற்குலகம் தடுக்க முடியுமா? தடுக்கும் கட்டத்தில் பங்காளி உறவு பாதிப்படையும். சீனா அப்போது மேற்குலகுடன் ஒரு உடன்பாட்டைச் செய்து கொள்ளும். அது இந்தியாவைத் துண்டாடி மேற்குலகுடன் பங்கு போட்டுக் கொள்வது.
தொடர்புடைய பதிவுகள்:
இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு
இலங்கையில் இறுகும் சீனப் பிடி
பரிதாபகரமான நிலையில் இந்தியா
சீன ஆயுத வலிமையும் இந்திய மடைமையும்
2 comments:
அப்போ இத்தாலிச் சனியாளும் கூட்டா?
I am anxiously waiting for the day, when India collapse and divide into many small countries.
Indians are very stupid bunch on earth, who wants to rule by white skin people.
Chinese Yellow skin and European white skins will rule sub-continent in next century.
Post a Comment