
இனிவரும் காலங்களில் உலகம் நகர மயமாகப் போகிறது என்று கூறப்படுகிறது. பல கிராமத்தவர்கள் நகரங்களை நோக்கி நகரப் போகிறார்கள். பல கிராமங்கள் நகரங்களாக மாறப் போகிறது. ஆசிய மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் இந்த இரு வகையான நகர மயமாக்கல்களுக்குள்படப் போகிறார்கள். ஒரு பில்லியன் மக்கள் ஆசியாவில் நகரங்களை நோக்கி நகரப் போகிறார்கள். இதை எதிர்கொள்ள ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் தேவைப் படப் போகிறது.
நகரமயமாகலை எதிர் கொள்ள ஆசிய நாடுகள் தயாராக இருக்கிறதா? இனிவரும் இருபது வருடங்களில் சீனாவில் அமெரிக்க மக்கள் தொகையிலும் அதிகமான மக்கள் (400 மில்லியன் மக்கள்)நகரங்களை நோக்கி நகரப் போகிறார்கள். அதே காலத்தில் இந்தியாவில் இருநூற்றிப் பதினைந்து மில்லியன் மக்கள் நகரங்களை நோக்கி நகரப் போகிறார்கள். இது ஸ்பெயின் தேசத்து மக்கள் தொகையிலும் அதிகமானவர்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் சீனாவிற்கு 40 பில்லியன் சதுர மீட்டர்களும் இந்தியாவிற்கு 20 பில்லியன் சதுர மீட்டர்களும் தேவைப்படும். சீனா நாற்பத்தி நான்கு நகரங்களை உருவாக்க்ப் போகிறது. இந்தியா பதினொரு நகரங்களை உருவாக்கப் போகிறது. இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காக இருக்கப் போவது போக்கு வரத்துத் துறை. இதில் சீனா இந்தியாவிலும்பார்க்க அதிக் தொலை நோக்கோடு செயற்படுகிறது. இந்தியா தனது போக்குவரத்து துறையின் அபிவிருத்தியில் உடன் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
சக்தி வளத்திற்கு இந்தியாவும் சீனாவும் போட்டியிடும்
நகரமயமாக்கலில் அடுத்த முக்கிய தேவை சக்தி வளமாகும். சீன நகரங்களுக்கான சக்திவளத் தேவை இப்போது உள்ளதிலும்பார்க்க இரு மடங்காக அதிகரிக்கப் போகிறது. உலக சக்தி வளத் தேவையில் 20% சீன நகரங்களுக்குத் தேவைப் படும். இந்தியாவின் சக்தி வளத் தேவையும் மிக அதிகரிக்கும். சக்தி கொள்வனவில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பலத்த போட்டி நிலவி மோதலாகவும் வெடிக்கலாம். இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றம் ஏழு மடங்காக அதிகரிக்கலாம்.
இந்தியா இன்னும் செலவு செய்ய வேண்டும்
சீனா ஒரு நகரவாசிக்கு 117 அமெரிக்க டொலர்களையும் இந்தியா 17 அமெரிக்க டொலர்களையும் செலவழிக்கிறது. நியூயோர்க் நகர் ஒரு நகரவாசிக்கு 292அமெரிக்க டொலர்களைச் செலவு செய்கிறது. பன்னாட்டு தரத்திற்கு வர இந்தியா தனது செலவை பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும்.
மத்திய தர வர்க்க மக்கள்
மேற்கத்திய முதலாளிகள் பார்த்து நாக்கு வடிப்பது இந்தியாவிலும் சீனாவிலும் உருவாகியுள்ள உருவாகிக் கொண்டிருக்கிற பல கோடிக் கணக்கான மத்திய தர வர்க்க மக்களைத்தான். இவர்களை எப்படிச் சுரண்டுவது என்பதில்தான் அவர்களின் முழுக்கவனமும். சீன மத்திய தர வர்க்க மக்கள் ஐந்து மடங்காக அதிகரிக்கும் வேளையில் இந்தியாவில் அது நான்கு மடங்காக இருக்கும். இந்தியாவில் 11 மில்லியன் பேரின் வருமானம் ஆண்டொன்றிற்கு பத்து இலட்சத்திற்கு மேல் இருக்கும்.
போக்கு வரத்து நெருக்கடி
சீனாவிலும் இந்தியாவிலும் ஒரு அம்சம் பொதுவானதாக இருக்கும். அதுதான் போக்குவரத்து நெருக்கடி. அது அடுத்த இருபது ஆண்டுகளில் மோசமடையும். சராசரியாக ஒருவர் வேலைக்குச் செல்ல எடுக்கும் நேரம் 5 மணித்தியாலங்களாக அதிகரிக்கலாம்.
நீர் வழங்கல்
சீனாவும் இந்தியாவும் நீர் வழங்கலில் பெரும் பிரச்சனையை எதிர் நோக்கும். இதுவும் இரு நாடுகளுக்குமிடையிலான ஒரு முரண்படு நிலையை உருவாக்கும். சீனாவில் இருந்து உருவாகும் இந்தியாவின் பிரம்ம புத்திரா நதி தமிழ்நாட்டின் காவேரியாகும்.
1 comment:
உலகம் நரகமயமாகுதப்பா.....
Post a Comment