Tuesday 24 August 2010

DNAபடி ஹிட்லர் யூதராம். இலங்கை இனக்கொலையாளிகளும் அப்படியா?


ஜெர்மனிய சர்வாதிகாரியும் இனக்கொலையாளியுமான அடொல்f ஹிட்லர் ஒரு ஜெர்மானியர் அல்லராம் என டி.என்.ஏ சோதனைகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

அடொல்f ஹிட்லரின் உறவினர்கள் 39பேரிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளை Jean-Paul Muldersஎன்ற பத்திரிகையாளரும் Marc Vermeeren என்ற சரித்திர அறிஞரும் இணைந்து நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

அடொல்f ஹிட்லரின் உறவினர்கள் 39பேரிடமிருந்து பெறப்பட்ட Haplopgroup E!b1b (Y-DNA) எனப்படும் Chromosome என்னும் டி.என்.ஏ மாதிரி ஜெர்மனியரிடமோ அல்லது மேற்கு ஐரோப்பியரிடமோ காணப்படுவதில்லையாம். மாறாக இவை ஆபிரிக்கர்களிடமும் யூதர்களிடமும் மட்டுமே காணப்படுகிறதாம்


அடொல்f ஹிட்லர் யாரை தனது வாழ்நாளில் வெறுத்தாரோ அவர்களின் உறவினரா அடொல்f ஹிட்லர்?

அடொல்f ஹிட்லர் ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்படுவது இது முதல் தடவையல்ல. ஹிட்லரின் மருமகன் ஒருவர் அவரை அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையை வெளியிடப்போவதாக மிரட்டியதாக தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தது.

அடொல்f ஹிட்லரின் தந்தை அலொய்ஸ் மரியா சிக்கெல்கிறூபர் என்ற பணிப்பெண்ணிற்கும் பிரான்கென்பேர்கர் என்னும் யூதருக்கும் பிறந்தவர் என்று ஏற்கனவே பலர் கூறியிருந்தனர். முதல் முறையாக விஞ்ஞான பூர்வமாக நிறுவ சிலர் முயற்சித்துள்ளனர்.

இலங்கையில் 1950களின் பிற்பகுதியில் மொழிப்பிரச்சனையை முன்வைத்த ஒரு சிங்களத் தலைவர் ஒரு தமிழ் வம்சா வழியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் எல்லாம் புத்தி விருத்தியற்றவர்களாக இருந்தபடியால் அவரது தாயை அவர்கள் குடும்பத் தோட்டத்தில் வேலை செய்த வேலு என்பவருடன் உடலுறவு வைக்கச் செய்து பிறந்தவர்தான் அந்த இனக்கொலையாளி.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பேரன் ரத்வத்த பிரித்தானியருடன் செய்த கண்டி உடன் படிக்கையில் தமிழிலேயே கையொப்பமிட்டுள்ளார். இதனால் இவர் தமிழரா என்ற சந்தேகம் இன்றும் உண்டு.

இன்னொரு 1977, 83 இனக் கொலையாளிச் சிங்களத் தலைவர் ஒரு முஸ்லிம் என்று குற்றம் சாட்டுப்படுபவர்.

ராஜராஜ சோழன் இலங்கையின் உருகுணு பிரதேசத்தைத் தவிர்ந்த மற்றப் பகுதிகளைக் கைப்பற்றினான். உருகுணு மன்னனிடம் பாண்டியர்களின் முடியும் செங்கோலும் இருந்தது. அதனால் பாண்டிய அரசுரிமை தங்களுடையது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தனர். ராஜராஜ சோழனின் மகன் இராசேந்திர சோழன் உருகுணப் பிரதேசத்தையும் கைப்பற்றினான். உருகுணுப் பிரதேசம் அம்பாந்த்தோட்டையையும் உள்ளடக்கியது. உருகுணுப் பிரதேச மீன்வளங்கள் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதைப் பார்த்த சோழ அரசு அப்பகுதியில் தமிழ் மீனவர்களைக் குடியேற்றியது. இதனால் கரவ என்று அழைக்கப்படும் கரைநாட்டுச் சிங்களவர்கள் தமிழ் மீனவர்களே என்று சொல்வோரும் உண்டு. . அப்படியானால் ராஜபக்சேக்கள்????

1 comment:

Yoga.fr said...

இந்தப் பதிவை எடுத்து விடுங்கள் வேல் தர்மா!அடிவருடிகளும்,புல்லுருவிகளும் எங்கே சேறு பூச முடியுமென்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்!!இல்லாவிட்டால்,சில சொற்களையாவது நீக்கி விடுங்கள்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...