இலங்கையின் வெளியுறவுச் செயலாளராக இருந்தவரும் இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரப் பிரதிநிதியாக பதவி ஏற்கவிருப்பவருமான பாலித ஹொகன்னவிற்கு பிரித்தானிய அரசு பயண அனுமதி(விசா) வழங்க மறுத்துள்ளது.
தமிழர் விவகாரத்தில் பலத்த பொய்களை பன்னாட்டு அரங்கில் அவிழ்த்து விடுபவர் என பல தமிழ் ஊடகங்கள் இவரைப்பற்றி விமர்சிப்பதுண்டு.
தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை எனவும் சொன்னவர்இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹன.
சிறிலங்காவில் போர் நடைபெற்ற போது வெளி நாட்டு அமைச்சில் பணியாற்றி தற்போது ஐ. நா வுக்கான நிரந்தர அலுவலராக செல்லவிருக்கும் கலாநிதி பாலித ஹொகன்னவை அவுஸ்ரேலிய அரசாங்கம் விசாரணை செய்யவேண்டும் என குரலற்றவர்களிற்கான ஆஸி மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக்கொண்டது.
ஸ்ரீலங்காவில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அவுஸ்ரேலிய அரசாங்கம் இலங்கை வெளி நாட்டமைச்சின் ஊடாக சில உதவி திட்டங்களை அங்கு மேற்கொண்டது. அந்த நேரம் திரு பாலித கேகன்ன அவர்களே வெளி நாட்டமைச்சிற்கு செயலாளராக இருந்தார். தவிர அவர் தனது தொலை காட்சி நேர்முகம் ஒன்றில் 20,000 மக்கள் பாதுகாப்பு வலயத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை நியாயப்படுத்த முற்பட்டுள்ளார். எனவும் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலயத்தில் அணு குண்டை போடவில்லையே என கூறியதன் மூலம் அவர் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலயத்தில் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பதனை ஒத்து கொண்டுள்ளார். மேலும் வெற்றி பெற்ற நிலையில் இருந்த இராணுவம் நினைத்திருந்தால் ஒவ்வொரு பெண்களையும் பாலியல் வல்லுறவு கொண்டிருக்கலாம் ஆனால் செய்யவில்லை என்று கூறியதன் மூலம் போரில் வெற்றி பெற்றவர்கள் எதையும் செய்யலாம் என்ற கருத்துப்பட கூறியமை போர் விதிகளுக்கு முரணானவை எனவே இவர் விசாரிக்கப்பட வேண்டும் என அஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு விட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவித்தது.
ஆத்திரமடைந்த இலங்கை வெளிவிவகார அமைச்சு
பாலித ஹொகென்னவிற்கு பயண அனுமதி வழங்க மறுத்ததால் இலங்கை அரசு ஆத்திரமடைந்தது. அது பிரித்தனியத் தூதுவரை 10-09-2009 தனது வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்து விசாரிக்கவிருக்கிறது.
No comments:
Post a Comment