Wednesday, 19 August 2009

தமிழர்களைக் காக்கும் பொறுப்பும் (R2P) சர்வதேசத்தின் மௌனமும்












.
.
.



இலங்கையில் ஆயுத ரீதியாக தமிழர்கள் பலமாக இருந்த போது இணைத் தலைமை நாடுகள் என்று ஒன்று இலங்கைப் பிரச்சனையைத் தீர்பதற்கு ஏற்படுத்தப் பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே என்பன இதில் இணைந்து கொண்டன. இதில் இந்தியாவையும் இணைய அழைத்தபோது அது மறுதுவிட்டது. ஆனால் இலங்கை விவகாரத்தில் இந்தியாவும் இவர்களுடன் இணந்து திரை மறைவில் செயற்பட்டது.

இந்த இணைத் த(றுத)லை நாடுகள் அவ்வப் போது கூடி இலங்கை மக்கள் மீது தமக்கு அக்கறை இருப்பது போலவும் இலங்கையின் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பது போலவும் பாசாங்கு செய்து கொண்டு இலங்கைக்கு நிதியுதவி அழிப்பதிலும் தமிழர்களின் ஆயுத போராட்டத்தைப் பயங்கரவாத முத்திரை குத்துவதிலும் ஈடுபட்டனர்.

ஆனால் இவர்கள் தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனித்ததுடன் தாமும் மௌனித்துக் கொண்டனர். அதன் பிறகு இவர்களது எந்தக் கூட்டமும் நடை பெறவில்லை அறிக்கைகள் விடுவதும் இல்லை.
நோர்வே என்றொரு மாரீசன்
ஜப்பான் என்றொரு நயவஞ்சகன்
அமெரிக்கா என்றொரு அயோக்கியன்
ஐரோப்பிய ஒன்றியம் என்றொரு கயவன்
இத்தறுதலைகள் போதாதென்று
இந்தியா என்றொரு விபீஷணன்
இணைந்தாங்கள் தமிழரை ஏமாற்ற
கதையுங்கள் கதையுங்கள் எனச் சொல்லி
கழுத்தறுத்தாங்கள் ஈழத் தமிழரை
சமாதானம் சமாதானம் எனச் சொல்லி
ஆயுதங்கள் கொடுத்தாங்கள் சிங்களவனுக்கு
சமாதானம் பேசிய சாத்தான்கள்

தமிழன் அழியும் போது மௌனித்தன.

காக்கும் பொறுப்பு - Responsibility to Protect(R2P)
காக்கும்பொறுப்பு என்ற பதம் 2001-ம் ஆண்டளவில் உருவானது. ஒரு நாட்டுக்குள் நடக்கும் அந்நாட்டு மக்களின் ஒரு பிரிவினருக்கு எதிரான அடக்குமுறை, அநியாயம் என்பவற்றை அந்நாடு தடுக்க மீறும் சமயத்தில் சர்வதேச சமூகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ பாதிக்கப் படும் மக்களை காக்க வேண்டிய கடப்பாடுடையது என்பது தான் அப் பதத்தின் முக்கிய அம்சமாகும். நாடுகளுக்கு உள்ளேயான முரண்பாடுகள் மோதல்கள் அதிகரித்த சூழலில் இந்தப் பதம் உருவானது. இனக் கொலைகள் இனச் சுத்தீகரிப்புகள் திட்டமிட்ட கற்ழிப்புகள் போன்றவை நடக்குமிடத்து ஒருநாட்டின் இறைமைக்குள் தலையிட்டு நீதியை நிலை நாட்டுதல் இதன்(R2P) நோக்கமாகும்.

காக்கும் பொறுப்பனது(R2P) முன்கூட்டியே தடுக்கும் பொறுப்பு, உணர்ந்து செயற்படும் பொறுப்பு, மிள் நிர்மாணிக்கும் பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

ருவண்டா ஸ்றேபெணிக்கா போன்ற நாடுகளில் காக்கும் பொறுப்பு சிறிதளவு நிறை வேற்றப் பட்டது.

2009 மே மாதம் நடந்த இனக் கொலையின் போது சர்வதேச் சமூகம் தனது காக்கும் பொறுப்பில் தோல்வியடைந்தது.

இப்போது வன்னியில் வதை முகாம்களில் மக்கள் அவலப் படும் போது நாளந்தம் கொல்லப் படும்போதும் அல்லது இறக்கவிடப்படப் படும் போது சர்வதேசம் மௌனித்திருக்கிறது. மழைக் காலம் வரும் போது வன்னியி வதை முகாம்களின் பேரவலம் மேலும் மோசமடையும் என முன்கூட்டியே மனித நேய அமைப்புக்கள் எச்சரித்திருந்தன. ஊடகங்களும் சுட்டிக் காட்டியிருந்தன. எந்த நாடும் நடவடிக்கை எடுக்க வில்லை. ஐக்கிய நாடுகள் சபை கூட மௌனித்திருக்கிறது.

இந்தியாவின் பொறுப்பு
ஜேஆர்- ராஜீவ் ஒப்பந்தத்தின் படி தமிழ்ர்களைக் காக்க இந்தியாவால் இலங்கைக்கு படை அனுப்ப முடியும். ஆனால் இந்தியா தமிழர்களைக் காக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. மாறாக தமிழ் தேசிய வாதத்தை ஒடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசின் முதலாம் கட்ட நடவடிக்கையான தமிழர் ஆயுத பலத்தை மழுங்கடித்தலுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டது. இலங்கைச் சிங்களப் பேரின வாதிகளின் இரண்டாவது கட்ட நடவடிக்கை தமிழர் தாயக நிலங்களை அபகரித்து சிங்கள மய மாககுதல் அதற்கும் உத்தரப் பிரதேசப் பேரின வாதிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

4 comments:

Anonymous said...

ஆரியப் பேய்களை நம்பினோர் அம்போ...

Anonymous said...

இந்தியா ஒருநாளும் தமிழனை நிம்மதியாக வாழ விடாது....

Anonymous said...

Tamils can live peacefully after a neuclear war among China, India and Pakistan...

Anonymous said...

என்றென்று தமிழ்த் தேசியம் பலம் பெற்று நிலைக்கும் போது அன்றன்று ஆரியப் பேய்கள் தலையிட்டு தமிழ்த் தேசியத்தை அழிக்கும்... அநியாயத்தை நிலை நாட்டும்....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...