Thursday, 13 January 2022

"இந்தியாவே வெளியேறு” இயக்கம் மாலைதீவில் தீவிரமாகின்றது

 

 

முன்னாள் மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அவர்கள் “இந்தியாவே வெளியேறு” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அந்த இயக்கத்திற்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. மாலை தீவு இலங்கை நகர் கொழும்பில் இருந்து தென் மேற்காக 843 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 914 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்ற ஒரு சிறிய தீவுக் கூட்டமாகும். இந்து மாக்கடல் பிரதேசத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாகப் போட்டி போடும் நிலையில் மாலை தீவும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது.

மாலைதீவின் வரலாறு

கிமு 300இற்கு முன்பு இருந்தே தமிழர்கள் மாலைதீவில் வாழ்ந்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் ஆளப்பட்ட மாலை தீவு 12-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடாக்கப்பட்து. மாலைதீவை 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் கைப்பற்றி ஆட்சி செய்தனர். 1953-ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் கீழ் ஒரு குடியரசாகியது. 1965-இல் மாலைதீவு முழுமையான சுதந்திர நாடாகியது. சிறிய நாடக இருந்த போதிலும் உலக அரங்கில் அது தனது செயற்பாட்டில் அதிக அக்கறை காட்டியது. பொதுநலவாயம், சார்க், கூட்டுச்சேரா அமைப்பு போன்றவற்றில் உறுப்புரிமையும் பெற்றது. 1980இல் இருந்து அது உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாக மாறியது. அதன் பொருளாதாரம் மீன்வளத்திலும் உல்லாசப் பயணத்திலும் தங்கியுள்ளது. 150 தீவுகளைக் கொண்ட மாலைதீவின் நிலப்பரப்பு 90,000 சதுர கிலோ மீட்டராகும். அங்கு 540,000 மக்கள் வசிக்கின்றனர். மாலை போன்ற தோற்றம் கொண்ட தீவுக் கூட்டம் என்பதால் மாலை என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்தே அது மாலைதீவு என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதேவேளை மஹால் என்ற அரபுச் சொல்லில் இருந்து திரிபடைந்து மாலைதீவு என்னும் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது. மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இருந்தார். 2018இல் நடந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

சீன மாலைதீவு நட்புறவுப் பாலம்

மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் இருந்த போது மாலைதீவின் இரண்டு முக்கிய தீவுகளான மாலேயையும் ஹுல்ஹூலேயையும் இணைக்கும் நீண்ட நான்வழிச் சாலைகளைக் கொண்ட பாலம் ஒன்று சீனக் கடனில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்திற்கு சீன-மாலைதீவு நட்புறவுப் பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது 1972-ம் ஆண்டு உருவான சீன மாலைதீவு நட்புறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. சீனாவின் Belt & Road Initiative திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்ட இந்தப் பாலம் மாலைதீவு மக்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அப்துல்லா யாமீன் அப்துல் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியபடியால் அமெரிக்காவும் இந்தியாவும் அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் இறங்கின. மாலைதீவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல நூறு மில்லியன் டொலர் பெறுமதியான் கடனை சீனாவிடமிருந்து அப்துல்லா யாமீன் அப்துல் பெற்றுக் கொண்டார். அவர் மீது பல மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்த அப்துல்லா யாமீன் அப்துல் 2018 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் தோல்வியடைந்தார். இந்தியாவிற்கு சார்ப்பான மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் இப்ராஹிம் சொலி வெற்றியடைந்து நாட்டின் அதிபரானார்.

சீனக் கடன்

அஹமட் சியாம் என்ற மாலைதீவுத் தொழிலதிபருக்கு மாலைதீவு அரசின் உறுதியின் பேரில் 127.5மில்லியன் டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி ஓர் ஆடம்பர உல்லாச விடுதி கட்டுவதற்கு வழங்கியிருந்தது. தனக்கு வேண்டிய ஆட்சியாளர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதால் விசனமடைந்த சீனா 2020இல் கடனை அஹமட் சியாம் அல்லது மாலைதீவு அரசு திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை செய்தது. 2020இல் கொவிட்-19 தொற்று நோயால் மாலைதீவின் உல்லாசப் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தனியார் கடனுக்கு அரசு உறுதி வழங்குவது எங்கும் எப்போதும் இல்லாத ஒன்றாகும். சீனக் கடன் பொறி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடன் வாங்கிய தொழிலதிபர் அஹமட் சியாமின் கட்சியும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீர் அப்துல்லின் கட்சியும் கூட்டணியாக இயங்கின. இதனால் அரசு வழங்கிய உறுதி ஓர் ஊழலாகக் கருதப்பட்டது. மாலைதீவு அரசுக்கு சீனா வழங்கிய கடன் 1.5 பில்லியன் டொலர். மொத்த தேசிய உற்பத்தியாக 3.9 பில்லியன் டொலரைக் கொண்ட மாலைதீவுக்கு இது ஒரு பாரிய கடன் சுமையாகும். அரசின் உறுதி மொழியில் தனியாருக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு என்பது பற்றி சரியான தகவல் இல்லை.

இந்தியா முதன்மையானது இந்தியாவே வெளியேறு என மாறியது

2018-ம் ஆண்டு சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த இந்திய மற்றும் அமெரிக்க சார்பு இப்ராஹிம் மொஹமட் சொலியின் முதல் வெளிநாட்டுப்பயணம் இந்தியாவிற்கானதே. அவரது கொள்கையும் “இந்தியா முதன்மையானது” என அழைக்கப்பட்டது. இந்தியா அவருக்கு 1.4 பில்லியன் டொலர் கடனை வழங்கியதுடன் மாலைதீவின் கடற்படைத் துறைமுகத்தை அபிவிருத்து செய்யும் பொறுப்பையும் இந்தியா பெற்றுக் கொண்டது. புதிய இந்திய சார்பு அதிபர் பழைய சீன சார்பு அதிபரை 2018-ம் ஆண்டு பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைத்தது. 2021 நவம்பர் மாதம் அந்த சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லாவை மாலைதீவு நீதிமன்றம் விடுதலை செய்தது. 2018-ம் ஆண்டு இந்திய சார்பு அதிபர் மொஹமட் சொலி தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து மாலைதீவில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கு அவ்வப்போது சீன சார்புக் கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சியின் ஏற்பாட்டில் நடந்து வந்தன. அது பின்னர் “இந்தியாவே வெளியேறு” என்ற இயக்கமாக வளர்ச்சி பெற்றது. மாலைதீவுக் கடற்படைத்தளத்தில் இந்தியக் கடற்படையினர் அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து நிலை கொண்டிருப்பதாக மாலைதீவில் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

“இந்தியாவே வெளியேறு” இயக்கத்தை மாலைதீவில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அதிபர் யாமீன் அப்துல் தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு சீனா மறைமுகமாக உதவி செய்தால் அவரால் இதை ஆட்சிக்கவிழ்ப்பு வரைக்கும் இட்டுச் செல்ல முடியுமா?. 2018இல் மாலைதீவில் செய்யப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவும் உறுதுணையாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை பாதுகாக்கவும் அமெரிக்காவின் உதவி அவசியம். இந்தியாவிடம் அதன் சுற்றவுள்ள நாடுகளைக் கையாளும் திறன் இல்லை.

Tuesday, 11 January 2022

மேதகு மோடிக்கு கீழ்தகு தமிழ் அரசியல்வாதிகளின் கடிதம்





ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து இந்திய தலைமை அமைச்சர் திரு மோடி அவர்களுக்கு 2022-01-11-ம் திகதி அனுப்பிய கடிதத்தினை கொழும்பில் இருந்து வெளிவரும் Daily Mirror நாளிதழ் அனுப்ப முதலே அம்பலப் படுத்தியுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திரு சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் சார்பில் திரு மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகம் சார்பில் திரு செல்வம் அடைக்கலநாதன், மக்களாட்சி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் திரு த சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். கடிதம் பகிரங்கப்படுத்தப் பட்டமை தமிழ் அரசியல்வாதிகளிடையே காட்டிக் கொடுப்போர் உள்ளனர் என்பதையும் அவர்களது கீழான நிலையையும் அம்பலப்படுத்துகின்றது.

இந்திய உத்தரவின் படி இந்தியாவிடம் கோரிக்கை

1987-ம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை இந்திய அமைதி உடன்பாட்டின் படி இலங்கை அரசியலமைப்பு யாப்பிற்கான 13வது திருத்தத்தையும் மாகாணசபைச் சட்டத்தையும் அப்போது எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் போராளி அமைப்புக்களும் அவை தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வு அல்ல என நிராகரித்திருந்தன. அதை ஓரளவிற்காகவது நடைமுறைப்படுத்த 26 ஆண்டுகள் எடுத்தன. வடக்கிலும் கிழக்கிலும் மாகாண சபை முதல்வராக இருந்தவர்கள் அதனால் தமிழர்களுக்கு பயனில்லை எனக் கூறியிருந்தனர். ஒற்றையாட்சி அரசியலமைப்பு யாப்பின் கீழ் 13ஐ முழுமையாக நிறைவேற்றும் சாத்தியம் இல்லை என்பதை இரண்டு தட்வைகள் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்தச் சூழலில் 13ஐ முழுமையாக நிறைவேற்றும் படி இந்தியா விடுத்த உத்தரவின் படி இந்தியாவுடம் கோரிக்கை வைப்பது எழு தமிழ் கட்சிகளின் கீழான நிலையை எடுத்தியம்புகின்றது.

தும்புக்கட்டால் தொடமாட்டேன் என்றவருக்கு Suitcase?

தமிழ் கட்சிகளை கடந்த இரு ஆண்டுகளாக சந்தித்த இந்திய அரசுறவியலாளர்களும் (Diplomats) இந்திய அரசியல்வாதிகளும் எல்லா ஈழத் தமிழ்கட்சிகளும் ஒன்று பட்டு 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியாவிடம் முன் வைக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் உத்தரவிட்டிருந்தனர். நேற்று வரை தமிழ்த்தேசியக் கூட்டமைபின் தலைவர் திரு சம்பந்தன் 13வது திருத்தத்தை தும்புக்கட்டால் (துடைப்பக்கட்டை) கூட தொட மாட்டென் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். 2021 டிசம்பரில் இருந்து ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் இந்தியாவிற்கு எல்லாக் கட்சிகளும் இணைந்து ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அவர்களுடன் இணைய தமிழரசுக் கட்சி மறுத்து வந்தது. ரெலோ முன்னடுப்பதால் அதன் தலைமையில் செயற்பட தமிழரசுக் கட்சி செயற்பட மறுப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. திரு சுமந்திரன் அமெரிக்கா சென்று உரையாடல் நடத்தியமைக்கு போட்டியாக ரெலோ அமைப்பினர் ஒரு நாடகம் அரங்கேற்றி தங்களை மக்களிடையே பிரபலப்படுத்த முயற்ச்சிக்கின்றார்கள் எனவும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

சட்ட அறிவும் பட்டறிவும் உள்ள விக்கி ஐயா

மாகாண சபையின் அதிகாரங்களைப் பற்றி புரிந்து கொள்ளக் கூடிய சட்ட அறிவும் அதில் முதலமைச்சராக இருந்த படியால்  நடைமுறையில் அதற்கு இருக்கும் சிக்கல்கள் பற்றியும் பட்டறிவும் உள்ளவர் விக்கினேஸ்வரன் ஐயா. அவர் மேதகு மோடியைச் சந்தித்த போது பதின்மூன்றாக திருத்தம் தீர்வாகாது என எடுத்து உரைத்தவர் அவர். அவரும் அத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும் படி கோருக் கடிதத்தில் கையொப்பமிட்டமை ஆச்சரியம்ம் அளிக்கின்றது. 2007-2009இல் இனக்கொலை நடந்த போது உறக்க நிலையில் இருந்த விக்கி ஐயா அரசியலுக்கு வந்தவுடன் அவர் குங்குமப் பொட்டு இட்டிருப்பதாலும் சித்தார் வாசிக்கக்கூடியவராக இருப்பதாலும் அவர் நம்மவர் என ஒரு வட இந்திய ஊடகம் எழுதி இருந்தது. அதன் தாற்பரியம் இப்போது புரிகின்றது. சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தீர் ஐயா!

கடிதத்தில் உள்ளவற்றில் கவனிக்கப்பட வேண்டியவை:

1. இந்தியா 40 ஆண்டுகளாக தமிழர்களின் பிரச்சனைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வுகாண சுறுறுப்பாக செயற்பட்டு வருகின்றது. – பந்தி-2

2. 13வது திருத்தம் ஒற்றையாட்சியின் கீழ் அறிமுகப்படுத்தப் பட்டமையினால் அதிகாரப்பரவலாக்கம் செய்யப்படவில்லை. மாறாக பணிப்பரவலாக்கம்தான் செய்யப்பட்டது. – பந்தி-3

3. இணைப்பாட்சி கட்டமைப்பை நோக்கி நகரும் முயற்ச்சிகள் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன – பந்தி 4

இவற்றைத் தொடர்ந்து 13இலும் அதிக அதிகாரம் கொண்ட தீர்வுக்கு எடுத்த முயற்ச்சிகள் கடிதத்தில் அடுக்கிச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியா அவ்வப்போது வெளிவிட்ட கருத்துக்களும் அடங்கியுள்ளன.

கடிதத்தில் 13-03-2015இல் இலங்கை நாடாளுமன்றத்தில் திரு மோடி உரையாற்றும் போது சொன்ன பச்சைப் பொய்யும் உள்ளது:

·         இன்று இந்திய (மாநில) அரசுகளை வலிமையாக்குதல் எனது உயர் முன்னுரிமையாக இருக்கின்றது. நான் கூட்டுறவு இணைப்பாட்சியில் உறுதியான நம்பிக்கை உள்ளவன். நாம் (மாநில) அரசுகளை தேசிய முடிவெடுக்கும் செயற்பாட்டில் முறைசார் பங்காளிகளாக ஆக்குகின்றோம்.

திரு மோடி தொடர்ச்சியாக மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றார். முக்கியமாக இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு யாப்பின் 370து பிரிவினை அவரது அரசி நீக்கி கஷ்மீர் மக்கள் 70 ஆண்டுகளாக வைத்திருந்த அதிகாரத்தைப் பறித்துள்ளார். அவர் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பவர்.

பல வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லுதல் தமிழ் அரசியல்வாதிகள் வழமையாக வைக்கும் ஒப்பாரியாகும். அந்த ஒப்பாரியை திரு மோடிக்கு எழுதிய கடிதத்திலும் உள்ளடக்கியுள்ளனர். அவர்கள் மோடியிடம் வைக்கும் ஒட்டு மொத்தக் கோரிக்கையும் ஒரு பந்தியில் அடங்கியுள்ளது:

 

·         fully implement the provisions of the Thirteenth Amendment to the Constitution 

·         implement the clear commitments made by all sections of government from 1987 onwards and enable the Tamil speaking peoples to live with dignity, self-respect, peace and security in the areas of their historic habitation, exercising their right to self-determination within the framework of a united, undivided country. 

 

இத்தகைய சூழலில் இலங்கை அரசிடம் அதன் வாக்குறுதிகளை காப்பாற்றும் படி வலியுறுத்துமாறு மேதகு தங்களைக் கோருகின்றோம்:

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத நாட்டில் தன்மானத்துடனும், தன்-மரியாதையுடனும், அமைதியாகவும் பதுகாப்பாகவும் தங்கள் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடத்தில் வாழ்வதற்கும் தங்கள் உரிமைகளையும் தன்-முடிபுகளையும் (சுயநிர்ணய உரிமை) செயற்படுத்துவதற்கு 1987இல் இருந்து எல்லா அரசின் பிரிவினரும் செய்த வாக்குறுதிகளின்படி 13-ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தவும்.

கடிதத்தின் பின்னிணைப்பாக அவசரமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஏழு அம்சக் கோரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளன:

1 13திருத்தமும் மாகாண சபையும்

2. மொழி உரிமையும் 16-ம் திருத்தமும்

3. குடிப்பரம்பல், காணி அபகரிப்பு, எல்லை மாற்றம்

4. குடியுரிமையும் சமத்துவமும்

5. பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதியாகவுள்ளோர்

6. தேர்தல் சீர் திருத்தம்

7. ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் எண்ணக்கரு

உண்மையில் பார்க்கப் போனால் கடிதத்தில் உள்ளவற்றிலும் பார்க்க பின்னிணைப்பில் உள்ளவைதான் தமிழ் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. ஒற்றையாட்சிக்குள் இவை எதுவும் நிறைவேற்றப் பட முடியாது. இலங்கை அரசியலமைப்பு யாப்பின் 20-திருத்தம் 13வது திருத்தத்தையும் மாகாணசபைச் சட்டத்தையும் வழுவிழக்கச் செய்து விட்டது. 2003-ம் ஆண்டு மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை எனவும் 2006-ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தவை செல்லுபடியற்றது என்றும் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 13-ம் திருத்தத்தை செல்லாக் காசாக்கிவிட்டது.

கடிதத்தில் விடுபட்டவை.

1. 2009-ம் ஆண்டு முடிவடைந்த இனவழிப்பு போரிற்கு சிங்களத்திற்கு சார்பான இந்தியாவின் பங்களிப்பு தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.

2. 2009-ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் போரின் போது இலங்கைப் படையினர் மனித உரிமைகள் மீறியமையைக் கண்டிக்க கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையை பாராட்டும் தீர்மானமாக இந்தியா மாற்றியமை தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.  

3. இலங்கை அரசு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ச்சியாக மீறுகின்ற போதிலும் இலங்கையுடன் இந்தியா நல்ல உறவை வளர்ப்பதாக இந்தியா சொல்லிக் கொண்டிருப்பது தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.

4. இலங்கைப் போர்க்குற்றவாளிகளை/இனக்கொலையாளிகளை பன்னாட்டு சட்டங்கள் முன்னிறுத்தி தண்டிப்பதற்கு இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு தடையாக இருப்பது தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது

தமிழர்களிடையே உள்ள இந்த விரக்திகளை சீனர்கள் தமக்கு சாதகமாக்கி தமிழர்களை இந்தியாவிற்கு எதிராகத் திருப்பி தமிழர் நிலங்களில் சீனாவின் கேந்திரோபாய நிலைகளை அமைக்கும் அபாயம் உள்ளது.

இவற்றை மேற்கூறிய ஏழு கட்சியினரும் தமது கடிதத்தில் உள்ளடக்கத் தவறியமை அவர்களது அரசுறவியில் அறிவின்மையைச் சுட்டிக் காட்டுகின்றது. அவர்கள் இந்தியாவிடம் ஒரு மண்டியிடுகின்ற நிலையிலேயே தம் கடிதத்தை வரைந்துள்ளனர். 

கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒரே ஒரு வழி நாட்டைப் பிரிப்பதுதான்.

கடிதத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்:

 https://www.dailymirror.lk/recomended-news/Seven-Tamil-Parties-Seek-Modis-Help-for-Implementing-13-A-in-Full/277-228622

Monday, 10 January 2022

சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் ஜப்பான் ஒஸ்ரேலிய ஒப்பந்தம்

  

பெல்ஜியம், நெதர்லாந்து, போலாந்து, ஆர்ஜெண்டீனா, கனடா, பிரேசில், மெக்சிக்கோ, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை நடு-வலிமை நாடுகள் எனச் சொல்லலாம். இந்த நாடுகள் தமக்கு இசைவான வல்லரசு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்கின்றன. அவ்வப்போது நடு-வலிமை நாடுகள் தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்வதுண்டு. இந்தியாவும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தங்களை (Reciprocal Access Agreements) 2020-ம் ஆண்டு செய்தன. அதன் படி இரண்டு நாடுகளும் ஒன்றின் தளங்களை மற்றது தனது படைத்துறையின் வான்கலன்களை, கடற்கலன்களை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும், மீள்நிரப்பல் செய்யவும் பாவிக்க முடியும். இந்தியா இதே போன்ற ஒப்பந்தங்களை அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் செய்திருந்தது. 2022 ஜனவரி 6-ம் திகதி ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தைச் செய்துள்ளன.

ஒஸ்ரேலிய – ஜப்பானிய உறவு

ஒஸ்ரேலியர்களும் ஜப்பானியர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை. ஜப்பான் கிழக்கில் உள்ள ஒரு மேற்கு நாடாக கருதப்படுகின்றது. ஒஸ்ரேலியா மேற்கு நாட்டவர் குடியேறி ஆட்சி செய்யும் கிழக்கு நாடு. 2017-ம் ஆண்டில் இருந்தே ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தை செய்யும் பேச்சு வார்த்தையை செய்து வந்தன. ஆனால் 2020-ம் ஆண்டு அந்தப் பேச்சு வார்த்தை ஜப்பானில் உள்ள இறப்புத் தண்டனைச் சட்டத்தால் தேக்க நிலையை அடைந்திருந்தது. ஆனால் அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தலால் இரு நாடுகளும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் தமக்கிடையிலேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் இன்னும் ஒரு மைல் கல்லைத் தாண்டியுள்ளன.

கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயற்ச்சி

நாடுகளுக்கிடையிலேயான உறவுகளின் உச்ச நிலையை கூட்டு (Alliance) எனவும் அதற்கு அடுதத நிலையை கேந்திரோபாய பங்காண்மை (Strategic Partnership) எனவும். அதனிலும் கீழான நிலையின் உள்ள உறவை பங்காண்மை எனவும். மிகக் குறைந்த உறவை நட்பு நாடு எனவும் வகைப்படுத்தலாம். கூட்டு நாடுகள் எச்சூழலிலும் ஒரு நாட்டுக்கு மற்ற நாடு உதவும். கூட்டு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். எல்லா படைத்துறைத் தொழில்நுட்பத்தையும், உளவுத்தகவல்களையும் அவை தடையின்றிப் பகிர்ந்து கொள்ளும். உதாரணமாக அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ள உறவு கூட்டு உறவாகும். ஆனால் அமெரிக்கா F-22 போர் விமானத்தை பிரித்தானியாவிற்கு விற்பனை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேந்திரோபாய பங்காண்மையில் பல வகையில் இரு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். உதாரணம கட்டார் – அமெரிக்க உறவு. அவை பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பிராந்திய அமைதி தொடர்பாகவும் ஒத்துழைக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கேந்திரோபாய பங்காணமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பங்காண்மையில் இருக்கும் நாடுகள் குறித்த சில வகைகளில் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். நட்பு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உலக அரங்கில் அனுசரணையாக நடந்து கொள்ளும். ஒஸ்ரேலிய ஜப்பானிய உறவு இருபுற அனுமதி ஒப்பந்தம் செய்த பின்னர் கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயர்ந்துள்ளது.

வலிமை மிக்க கடற்படைகள்

எடை அடிப்படையில் ஒஸ்ரேலியாவின் கடற்படை உலகின் 16வது பெரிய கடற்படையாக இருக்கின்ற போதிலும் புதிய படைக்கலன்கள் உபகரணங்கள் அடிப்படையிலும் கடற்போர் அனுபவத்திலும் ஒஸ்ரேலியக் கடற்படை உலகின் முன்னணிக் கடற்படையாகும். தற்பாதுகாப்பு படையான ஜப்பானின் கடற்படை Kaga, Izumo என்னும் இரண்டு உலங்கு வானுர்திக் கப்பல்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களாலும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்விமானமான F-35-Bகளைக் காவிச் செல்ல முடியும். 114 கடற்கலன்களைக் கொண்டது ஜப்பானியக் கடற்படை. ஜப்பானின் நாசகாரிக் கப்பல்களினதும் தரைசார் கப்பல்களினதும் மொத்த எண்ணிக்கை பிரித்தானியாவினதும் பிரான்ஸினதும் மொத்த எண்ணிக்கையிலும் அதிகமானது. தாக்குதிறனின் ஜப்பானியக் கடற்படை சீனாவை விஞ்சக் கூடியது எனக் கருதப்படுகின்றது. ஜப்பானிடம் சிறந்த கப்பல் கட்டுமான வசதிகள் உண்டு. ஜப்பானின் கடற்போக்குவரத்திற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத வகையில் காப்பாற்றும் வலிமை ஜப்பானுக்கு உண்டு எனச் சொல்லப்படுகின்றது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த புவி அதிர்ச்சியின் போது ஜப்பானியக் கடற்படையின் துரித செயற்பாடு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானிய ஒஸ்ரேலியக் கடற்படை ஒத்துழைப்பு கடற்போர் அனுபவமில்லாத சீனாவிற்கு பெரும் சவாலாக அமையும்.

குவாட் படைத்துறை ஒத்துழைப்பை ஆரம்பிக்கவில்லை

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய குவாட் உரையாடல் நாடுகளின் அரச தலைவர்கள் ஒரு கலந்தாலோசனையை நடத்தினர். அந்த ஒன்று கூடலின் முடிவில் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் படைத்துறை ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. குவாட் உரையாடல் நாடுகளின் அமைச்சர்கள் அரசுறவியலாளர்கள் கலந்துரையாடுவாரக்ள் எனக் குறிப்பிடப்படடிருந்தது. ஆனால் படைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக இன்னும் உருவெடுக்கவில்லை என்பது உறுதியாகின்றது. அது மட்டுமல்ல ஒஸ்ரேலியா அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் ஓக்கஸ் என்னும் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை 2021 செப்டம்பரில் செய்துள்ளது. இந்த நிலையில் ஜப்பான் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஓரு பகுதியாக ஒஸ்ரேலியாவுடன் இருபுற அனுமதி ஒப்பந்தத்தை (Reciprocal Access Agreement) செய்துள்ளது.

கொதிக்குக் கடலில் குதிக்கும் நட்பு

கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 2013 நவம்பரில் கிழக்குச் சீனக் கடலில் சீனா பத்து இலட்சம் சதுர மைல்களைக் கொண்ட கிழக்குச் சீனக் கடலுக்கு மேலான வான் பரப்பை தன்னுடைய வான் பாதுகாப்பு பிராந்தியமாகப் பிரகடனப் படுத்தியது. அதை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்க மறுத்ததுடன் தமது போர் விமானங்களை தொடர்ச்சியாக அங்கு பறக்க விட்டு தம் ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் இது போன்ற அச்சுறுத்தலால் ஜப்பான் தற்பாதுகாப்பு படையை மட்டும் வைத்திருக்க முடியும் என்ற அதனது அரசியலமைப்பு யாப்பிற்கு புதிய வியாக்கியானங்களைக் கொடுத்து தன் படைவலிமையைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றது. ஒஸ்ரேலிய ஜப்பானிய நட்பு கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கு பாதகமாக அமையலாம்.

ஆழக் கடல் ஆளப் போகும் ஒஸ்ரேலியா

ஒஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ள அணு வலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்டு பசுபிக்கடல், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், ஜப்பானியக் கடல் ஆகியவற்றினூடாக ஆர்க்டிக் வலயம் வரை தொடர்ச்சியா தங்குமிடமின்றிப் பயணிக்கக் கூடியவை. அவற்றால் ஜப்பானிய துறைமுகங்களைப் பாவிக்க முடியும். பல தீவுகளைக் கொண்ட ஜப்பானுடனான ஒப்பந்தம் ஒஸ்ரேலியாவின் கடற்கலன்கள் மேற்கூடிய ஐந்து கடல்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஏற்படுத்தும்.

மலாக்காவில் சீனா மல்லாக்காக விழுத்தப்படுமா?

சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியாகிய மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் மற்றும் நிக்கோபா தீவுகளை இப்போது இந்தியாவுடன் அமெரிக்கா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் பாவிக்கலாம். அதற்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளை ஒஸ்ரேலியாவுடன் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் படையினர் பாவிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் சீனாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இந்த நான்கு நாடுகளும் இணைந்து மலாக்கா நீர்ணையூடாக சீனாவின் போக்கு வரத்தை துண்டிக்கலாம் என்ற அச்சுறுத்தல் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்குமா?

Friday, 7 January 2022

மக்கள் எழுச்சி கஜக்ஸ்த்தானை ஒரு புவிசார் அரசியல் போட்டிக் களமக்குமா?

 


கஜக்ஸ்த்தானில் உருவாகியுள்ள மக்கள் எழுச்சியை அடக்க இரசியா, ஆர்மீனியா, பெலரஸ், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இருந்து படையினர் அங்கு 2021 ஜனவரி 6-ம் திகதி சென்றுள்ளனர். எரிபொருள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த கஜக்ஸ்த்தானில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையால் உலகச் சந்தையில் யுரேனியத்தின் விலை எட்டு விழுக்காட்டால் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. உலக யுரேனிய உற்பத்தியில் 40% கஜக்ஸ்த்தானில் செய்யப்படுகின்றது. உலக எரிபொருள் உற்பத்தியில் சவுதி அரேபியா செய்யும் ஆதிக்கத்திலும் பார்க்க நான்கு மடங்கு ஆதிக்கத்தை கஜக்ஸ்த்தான் செய்கின்றது. 140 நாடுகளைக் கொண்ட படைவலிமைப் பட்டியலில் கஜக்ஸ்த்தான் 61-ம் இடத்தில் இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பின் தங்கியுள்ள கஜக்ஸ்த்தான் அதை முன்னேற்ற பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. 

பூகோள அமைப்பும் வரலாறும்

உலகிலேயெ தரையால் சூழப்பட்ட நாடுகளில் கஜக்ஸ்த்தான் நிலப்பரப்பில் மிகப் பெரிய நாடாகும். இந்த மத்திய ஆசிய நாடு கிழக்கில் ஆசிய நாடாகிய சீனாவையும் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவின் கஸ்பியன் கடலையும் இரசியாவையும் வடக்கில் இரசியாவையும் தெற்கில் தேர்க்மெனிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான் ஆகியவற்றையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. பத்தொன்பது மில்லியன் மக்களைக் கொண்ட கஜக்ஸ்த்தானில் 3.5மில்லியன் இரசியர்கள் வாழ்கின்றனர். எட்டாம் நூற்றாண்டில் பக்தாத் கலிஃபாவின் படையெடுப்பின் பின்னர் அது ஓர் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடாக மாற்றப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் நடந்த மங்கோலியப் படையெடுப்பின் பின்னர் தேர்கிக் இனக்குழுமம் அங்கு குடியேறியது. அது பின்னர் கஜக் என்னும் இனக்குழுமமாக மாற்றம் பெற்றது.

இரசிய ஆக்கிரமிப்பு

19-ம் நூற்றாண்டில் இரசியர்கள் மொங்கோலிய ஆட்சியை அகற்றி கஜக்ஸ்த்தானை ஆக்கிரமித்துக் கொண்டனர். பின்பு அங்கு பல இரசியர்களும் உக்ரேனியர்களும் குடியேறினர். ஏனைய நடுவண் ஆசிய நாடுகளில் 90%இற்கும் மேற்பட்டவரகள் இஸ்லாமியர்களாக இருக்கின்ற வேளையில் கஜக்ஸ்த்தானில் 70% இஸ்லாமியர்கள் மட்டுமே வாழ்கின்றனர். 23.1% கிருத்தவர்கள் அங்கு வாழ்கின்றனர். 1920இல் கஜக்ஸ்த்தான் சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் நூற்றுக் கணக்கான அணுக்குண்டு பரிசோதனை கஜக்ஸ்த்தானில் செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் ஏவூர்தி (ராக்கெட்) தளமும் அங்கு அமைக்கப்பட்டது. விண்வெளிக்கு முதலில் சோவியத் ஒன்றியம் மனிதனை அனுப்பிய ஏவூர்தி கஜக்ஸ்த்தானில் இருந்து ஏவப்பட்டது. 1986இல் சோவியத் அதிபர் மிக்காயில் கோர்பச்சேவ் கஜக்ஸ்த்தானின் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த கஜக்ஸ்த்தானியரை பதவி நீக்கம் செய்துவிட்டு அந்த ஓர் இரசியரை பதவிக்கு அமர்த்திய போது அங்கு மக்கள் சோவியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சோவியத் வீழ்ச்சியும் தனி நாடாகிய கஜக்ஸ்த்தான்

1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்த போது கஜக்ஸ்த்தான் ஒரு தனி நாடாகியது. இரசியாவின் படைத்தளம், ஏவூர்தித் தளம் போன்றவை அங்கு இன்றுவரை உள்ளன. கஜக்ஸ்த்தானின் முதலாவது அதிபராக நர்சுல்த்தான் நாசர்பாயேவ் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயத்தில் கஜக்ஸ்த்தானும் இணைந்து கொண்டது. 2004-ம் ஆண்டு உருவான இரசியா தலைமையிலான கூட்டு பாதுகப்பு ஒப்பந்த அமைப்பிலும் கஜக்ஸ்த்தான் இணைந்து கொண்டது. 2001-ம் ஆண்டு ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பிலும் அது இணைந்து கொண்டது. கஜக்ஸ்த்தானின் மசகு எண்ணெய் இருப்பு உலகில் 11வது இடத்தில் இருக்கின்றது. 80ரில்லியன் கன அடி அளவு கொண்ட எரிவாயுவும் அங்கு இருக்கின்றது. அத்துடன் குரோமைட், செப்பு, வொல்ஃப்ராம் (Wolfram), ஈயம், துத்த நாகம், யுரேனியம் ஆகியவை உட்பட பல கனிம வளங்களும் நிறைய உள்ளன. அதனால் அங்கு தன் ஆதிக்கத்தை செலுத்த சீனா இரகசியமாக பல நகர்வுகளைச் செய்துவருகின்றது. சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் கஜக்ஸ்த்தானிற்கு முக்கிய இடமுண்டு. சீனாவின் இஸ்லாமியர்கள் வாழும் மாகாணமான சிஞ்சியாங்கில் உள்ள பிரச்சனையால் கஜக்ஸ்த்தான் சீனாவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

இரசிய எதிர்ப்பு

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த பின்னர் கஜக்ஸ்த்தான் இரசியாவுடன் நல்ல நட்புறவைப் பேணுகின்ற வேளையில் தமது நாட்டில் இரசிய ஆதிக்கத்தை அகற்றிக் கொண்டிருக்கின்றது. கஜக்ஸ்த்தானில் இருக்கும் இரசிய ஏவூர்தி தளத்தினால் அங்கு சூழல் மாசுபடுவதாக எதிர்ப்புக் காட்டப்படுகின்றது. துருக்கி, ஈரான், இரசியா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் சிரிய அமைதிப் பேச்சு வார்த்தை கஜக்ஸ்த்தான் தலைநகர் நுர் சுல்த்தானில் (அஸ்டானா) நடக்கின்றது. கஜக்ஸ்த்தான் ஒர் இஸ்லாமிய அரசைக் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என Hizb ut Tahrir என்னும் ஒரு மதவாத அமைப்பு போராட்டம் நடத்துகின்றது.

எரிபொருள் விலை ஏற்றம்

கஜக்ஸ்த்தான் மக்களின் தனிநபர் வருமானம் $24,380 ஆக இருக்கின்றது. இதை இந்தியாவின் தனிநபர் வருமானமான $6,390 உடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாக இருக்கின்ற போதிலும் வருமான சமபக்கீட்டின்மை கஜக்ஸ்த்தானிலும் மோசமாகவே இருக்கின்றது. எரிபொருள் வளம் நிறைந்த கஜக்ஸ்த்தானில் 2022 ஜனவரி 2-ம் திகதி எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக தீவிரமான போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தனர். பல அரச சொத்துக்கள் தீயிடப்பட்டன. காவற்றுறயினருக்கு சொந்தமான பல வண்டிகள் தீக்கிரையாகின. ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரிலுள்ள விமானநிலையத்தைக் கைப்பற்றினர். ஆர்ப்பாட்டம் வெறும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரானதாக மட்டுமாக அமையாமல் நாட்டின் எதிர்காலம், சிறந்த மக்களாட்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. பிராந்திய தலைவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதை விடுத்து தேர்தல் மூலம் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

இரசியாவிற்கு கஜக்ஸ்த்தான் முக்கியம்

நர்சுல்த்தான் நாசர்பாயேவ் தொடரிந்து 28 ஆண்டுகள் கஜக்ஸ்த்தான் அதிபராக இருந்து 2009இல் பதவி விலகிய போதும் நாட்டின் பாதுகாப்புச் சபையின் தலைவராக இருந்து ஆட்சியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வந்தார். 2022 ஜனவரி 5-ம் திகதி நாட்டில் மக்கள் எழுச்சி நடந்து கொண்டிருக்கும் போது அவரை அப்பதவியில் இருந்து அகற்றிய பின்னர் தற்போதைய அதிபர் காசிம் ஜொமாட் தொக்கயேவ் பாதுகாப்புச் சபைத் தலைவரானார். முழு அமைச்சரவையையும் அவர் பதவி நீக்கம் செய்தார். பாதுகாப்புச் சபைத் தலைவராக அவர் செய்த முதல் நகர்வு மக்கள் எழுச்சியை அகற்ற இரசியப் படையினரை நாட்டுக்கு அழைத்தமையே. அழைப்பை மிகத்துரிதமாக ஏற்றுக் கொண்டு புட்டீன் செய்த நகர்வைப் பார்க்கும் போது அது ஏற்கனவே திட்டமிட்டுச் செய்தது போல் இருக்கின்றது. கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் அமைப்பு படையினர் என்ற முகமூடியுடன் ஆர்மேனியா, பெலரஸ், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாட்டுப் படைகளுடன் இரசியப் படையினர் கஜிக்ஸ்த்தான் கிளர்ச்சியை அடக்கச் சென்றுள்ளனர். கஜக்ஸ்த்தானில் உள்ள பைக்கொனூரில் உள்ள ஏவூர்தித் தளத்தையும் பல்வேறு படைத்தளஙக்ளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரசியாவிற்கு உண்டு. இரசியத் தேசியவாதிகள் கஜக்ஸ்த்தானின் வட பகுதியை இரசியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். கஜக்ஸ்த்தானின் எரிபொருள் வளத்தில் 40% அதன் வட பிராந்தியத்தில் இருக்கின்றது. கஜக்ஸ்த்தான் ஆட்சியாளர்கள் இரசிய ஆதரவு உள்ளவர்களாக இருப்பதால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை என்பதால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அதைச் செய்யவில்லை. இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் அடக்கும் முயற்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நிறப்புரட்சியா?

மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆட்சியாளர்கள் இருக்கும் நாடுகளில் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் நடக்கும் புரட்சியை நிறப்புரட்சி என இரசியா, சீனா போன்ற நாடுகள் அழைப்பதுண்டு. ஜோர்ஜியாவில் நடந்ததை ரோஸ் புரட்சி எனவும், உக்ரேனில் நடந்ததை ஒரேஞ் (ஆரேஞ்) புரட்சி எனவும் அழைக்கப்பட்டது. தற்போது கஜக்ஸ்த்தானில் நடப்பதையும் ஒரு நிறப்புரட்சி என்கின்றனர். பெலரஸ்ஸில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இரசிய ஆதரவு ஆட்சியாளர் முறைகேடாக வெற்றி பெற்றார் எனச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மேற்கு நாடுகள் செயற்பட்டன. இரசியாவில் இருந்து சென்ற தனியார் படை (கூலிப்படைக்கான கௌரவர் பெயர்) பெலரஸ் சென்று கிளர்ச்சியை அடக்கியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. கஜக்ஸ்த்தானில் நடக்கும் எழுச்சியும் அடக்கப்படலாம். ஆனால் இலகுவனதாக இருக்காது. தீவிரவான அடக்குமுறை பாவிக்கப்படும் போது கஜக்ஸ்த்தானியர்கள் நடுவே இரசியாமீதான வெறுப்பு அதிகமாகும். 

பனிப்போர்-2?

பனிப்போரில் கிடைத்த வெற்றியை உறுதி செய்ய நேட்டோ நாடுகள் தொடர்ந்து முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. பனிப்போரில் ஏற்பட்ட தோல்வியை ஈடு செய்து இரண்டாம் சோவியத் ஒன்றியத்தை உருவாக்கும் புட்டீனின் முயற்ச்சிக்கு கஜக்ஸ்த்தானில் ஆப்பு வைக்கப்படுவதை அவர் அனுமதிக்க மாட்டார். கஜக்ஸ்த்தான் மக்கள் எழுச்சி எப்படி தீவிரமடைகின்றது எப்படித் திசை திருப்பப்படப் போகின்றது, எப்படி அடக்கப்படப் போகின்றது என்பதில் கஜக்ஸ்த்தானின் எதிர்காலமும் அதை ஒட்டி நிகழும் புவிசார் அரசியல் போட்டியும் அமையப்போகின்றது. பனிப்போர்-2 இரண்டின் ஆரம்பப் புள்ளிகளாக உக்ரேனும் கஜக்ஸ்த்தானும் அமையலாம். கஜக்ஸ்த்தானின் எதிர்க்கட்சிகள் இரசியாவின் ஆதிக்கத்தில் இருந்து தமது நாட்டை மீட்க மேற்கு நாடுகள் உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

துருக்கி தற்போது கஜக்ஸ்த்தான் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்து எதையும் வெளிவிடவில்லை. துருக்கி இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் கஜக்ஸ்த்தான் ஒரு புவிசார் போட்டிக் களமாக மாறும். உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் கஜக்ஸ்த்தானை இரசியாவிற்கு எதிராக மாற்றும் முயற்ச்சியில் துருக்கியுடன் மேற்கு நாடுகள் இணையலாம்.

மத்திய ஆசிய நாடுகள் பற்றிய முன்னைய பதிவு:

https://www.veltharma.com/search/label/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE


Wednesday, 5 January 2022

பல்துருவ ஆதிக்கமும் தமிழர்களும்

  

உலகத்தில் செல்வாக்கும் ஆதிக்கமும் செலுத்துவதற்கு பல நாடுகள் போட்டி போடுதல் பல்துருவ ஆதிக்கம் எனப்படும். இரண்டு நாடுகள் அதில் ஈடுபட்டால் அது இருதுருவ ஆதிக்கம் என்றும் ஒரு நாடுமட்டும் அதில் சிறந்து விளங்கினால் அது ஒரு துருவ ஆதிக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது. பனிப்போரின் பின்னர் சோவியம் ஒன்றியம் வீழ்ச்சியடைந்துடன் அமெரிக்கா ஒரு துருவ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என வாதிடுவோர் உண்டு. அணுக்குண்டு வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் பல்துருவ ஆதிக்கம் செலுத்துகின்றன என்போரும் உண்டு. அணுக்குண்டு வைத்திருந்தால் மட்டும் போதாது அதனால் மற்ற வல்லரசு நாட்டில் கணிசமான அழிவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவற்றை எடுத்துச் சென்று வீசக் கூடிய வலிமையும் இருக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

பொருளாதாரமும் துருவ ஆதிக்கமும்

உலகெங்கும் இருந்து மலிவு விலையில் மூலப் பொருள்களைப் பெற்று அதிலிருந்து குறைந்த செலவில் உற்ப்பத்தி செய்யும் பொருள்களை அதிக விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்வதே உலக ஆதிக்கத்தின் முதன்மை நோக்கம். முதலில் பிரித்தானியா தனது கைத்தொழில் புரட்சி மூலம் இதைச் செய்து உலக ஆதிக்கத்தைச் செய்தது. அதன் கடற்படை வலிமை அதற்கு உறுதுணையாக அமைந்தது. அதேவழியை அமெரிக்கா பின்பற்றி வெற்றிகண்டது. பிரித்தானியாவில் இருந்த கனிம வழங்களிலும் பார்க்க அதிக அளவு கனிம வளம் அமெரிக்காவில் இருக்கின்றது. அதனால் உலகில் பிரித்தானியா செய்த ஆதிக்கத்திலும் பார்க்க அதிக ஆதிக்கத்தை அமெரிக்காவால் செய்யக் கூடியதாக இருக்கின்றது. பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சிக் கொள்கை முறியடிக்கப்பட்டதை தனக்கு ஒரு பாடமாக எடுத்த அமெரிக்கா புதிய குடியேற்றவாதம் எனப்படும் தனக்கு உகந்த ஆட்சியாளர்களை கேந்திர முக்கியத்துவம் வாய்த பிரதேசங்களில் ஆட்சியைல் அமர்த்தும் உபாயத்தை நிறைவேற்றியது. பின்னர் அது சவாலை எதிர்கொள்ளும் போது புதிய தாராண்மைவாதம், உலகமயமாதல் என தனது உபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளது.

சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர்

ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை

உலக வரலாற்றில் ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. சூரியன் மறையாத வல்லரசு எனச் சொல்லுமளவிற்கு கனடா முதல் நியூசீலாந்து வரை உலகின் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருந்த பிரித்தானியாவால் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, இரசியா, சீனா ஜப்பான், சீனா போன்ற நாடுகளைக் கைப்பற்ற முடியவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பின்னர் பல நாடுகளில் தனது மறைமுக ஆதிக்கத்தை செய்த அமெரிக்காவால் நடுவண் ஆசிய நாடுகள், இரசியா, கியூபா, சீனா ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செய்ய முடியவில்லை. 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான நட்புறவையும் பகைமையையும் பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியா, இரசியா, பிரசியா, பிரான்ஸ், டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்ச்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் உலக ஆதிக்கத்திற்கு போட்டி போட்டன.


முத்துருவ ஆதிக்கம் நிச்சயமாக உருவாகிவிட்டது

மேற்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் தேசியவாதப் பிரச்சனைகளையும் சமாளித்து எழுச்சியுறும் போது அவை அமெரிக்கா தலைமையில் ஒரு குழுவாக உலக அரங்கில் செயற்படும் போது அவற்றுக்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியாவோ அல்லது சீனாவோ உருவாகுவதற்கு இரண்டு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. ஆனால் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவை தமது அணுக்குண்டுகள் தாங்கிச் செல்லும் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளால் தாக்கக் கூடிய வலிமையை பெற்றுவிட்டனவோ அப்போது முத்துருவ ஆதிக்கம் தோன்றிவிட்டது. சிரியாவில் பஷார் அசாத் வேதியியல் குண்டுகளைத் தாக்கினால் அது செங்கோட்டைத் தாண்டுவது போலாகும்; அதைத் தண்டிக்கும் முகமாக சிரியாமீது தாக்குதல் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் சூளுரைத்திருந்தார். ஆனால் அதையும் மீறி சிரியாவில் வேதியியல் குண்டு வீச்சு செய்யப்பட்ட போது அசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தடுத்துவிட்டார். சீனா தென் சீனக் கடலில் செயற்கை தீவை அமைப்பதை தடுப்போம் என அமெரிக்கா செய்த சூளுரையையும் மீறி சீனா தீவுகளை அமைத்ததுடன் அவற்றைப் படைத்தளங்களாகவும் மாற்றிவிட்டது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் தற்போது உலக ஆதிக்கத்தில் போட்டி போடுகின்றன. சோவியத் ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட சவாலிலும் பார்க்க மோசமான சவால் சீனாவால் 2020களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்திலும் பார்க்க வலுவான பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடந்த வர்த்தகத்திலும் பார்க்க பல மடங்கு வர்த்தகம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கின்றது.

இரசிய சீன ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கும்

2030இல் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளான ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் படைத்துறை ரீதியிலும் பொருளாதார ரிதியிலும் தமக்கு இடையிலேயான ஒத்துழைப்பை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தை இரசியாவினதும் சீனாவினதும் படைத்துறை வளர்ச்சி ஏற்ப்படுத்தியுள்ளது.. இரசியாவினது படைத்துறை வளர்ச்சியும் சீனாவினுடைய பொருளாதார வளர்ச்சியும் இரண்டு நாடுகளது தொழில்நுட்ப ஒத்துழைப்பும் ஒரு குறித்த அளவிற்கு மேல் போக முடியாது. இரசியாவும் சீனாவும் ஒன்ற்றின் வளர்ச்சியை மற்றது ஐயத்துடன் பார்க்க வேண்டிய நிலை உருவாகும்.

இருதுருவ ஆதிக்கமும் தமிழர்களும்

1980களில் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த இருதுருவ ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்தது. அப்போது சீனா அமெரிக்காவுடன் இணைந்து “அமைதியான எழுச்சி” என்னுக் கொள்கையுடன் செயற்பட்டது. பங்களாதேசம் பிரிக்கப் பட்ட பின்னர் இரசியாவுடன் ஒத்துழைக்கும் இந்தியாவை அடக்குவதற்கு இலங்கையில் தனக்கு என சில படைத்துறை வசதிகளை ஏற்படுத்த அமெரிக்கா முயன்றது. அதைத் தடுக்க இந்தியா தமிழர்களைத் தனது துருப்புச் சீடாக பயன்படுத்தியது. தமிழர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு மிக அச்சுறுத்தலாக உருவாகினர். 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னரும் அமெரிக்க இந்திய முறுகல் இலஙகையில் தொடர்ந்தது. அமெரிக்க ஆதிக்கம் உலகில் அதிகரித்தும் இரசியா ஆதிக்கம் சரிந்தும் சீன ஆதிக்கம் அதிகரிக்கும் நிலை 1999-ம் ஆண்டு உருவானது. அப்போது அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவிற்கு எதிராக ஒன்றுபட வேண்டிய நிலை உருவானது. 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்த ஹிலரி கிளிண்டன் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் புவிசார் உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்தியாமீதான பொருளாதாரத் தடை அமெரிக்காவால் நீக்கப்பட்டது. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி 2009இல் பேரழிவில் முடிந்தது.

வரவிருக்கும் பல்துருவ ஆதிக்கம்

இந்தியாவின் பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சி ஒரு சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவும் உலகில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாடாக மாறும். உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் உலக ஆதிக்கத்தில் பெரும் பங்காற்றுவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருக்கும் கொள்கையை மாற்றி தனக்கு என ஒரு படையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை வலுவடையும் போது. அது ஒரு உலகப் பெருவல்லரசாக உருவாகும். ஏற்கனவே பிரான்ஸ் என்ற வல்லரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், 2030அளவில் அமெரிக்கா, இரசியா, சீனா, இந்தியா என்ற ஐந்து துருவங்கள் உலகில் உருவாகும் போது தமிழர்கள் தமக்கு என ஒரு நட்பு நாட்டை பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்படும். தற்போது பல நாடுகளில் இளையோராக இருக்கும் தமிழர்கள் அப்போது சிறப்பாக செயற்பட்டால் ஈழவிடுதலை சாத்தியமாகும். இதனால் தான் 2008 மாவிரர் நாள் உரையில் இனி எமது விடுதலைப் போராட்டத்தை புலம் பெயர் இளையோர் முன்னெடுப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டது.

Sunday, 2 January 2022

2022இல் உலகம் எப்படி இருக்கப் போகின்றது?

 



முன்னைய ஆண்டுகளில் இருந்து 2022இலும் தொடரும் பிரச்சனைகள்: 1. உக்ரேன் எல்லையில் இரசியப் படைக்குவிப்பு, 2. தைவானை ஆக்கிரமிக்க முயலும் சீனா, 3. செல்வாக்கிழந்த ஆட்சியாளரகள்,4. பணவீக்கமும் அரச நிதிப்பற்றாக்குறையும் 5. பெருந்தொற்று நோய், 6 பொருளாதாரப் பிரச்சனை.

உக்ரேன்

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு செய்தால் அமெரிக்கா இருமுனைப் போரை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டு திணறும் எனக் கருதப்பட்டது. இரசியா உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு கடும் குளிர் நிலவும் ஜனவரி இறுதி உகந்ததாக இருக்கும். ஆனால் சீனாவின் 2022 பெப்ரவரியில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முதல் சீனா தைவானை ஆக்கிரமித்தால் மேற்கு நாடுகள், ஜப்பான், கொரியா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் போட்டியைப் புறக்கணிக்கும். அதனால் சீனா பெரும் இழப்பீட்டைச் சந்திக்க வேண்டிவரும். நேட்டோ நாடுகள் உக்ரேனைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றாலும் உக்ரேன் மீது இரசியா போர் தொடுக்கும் போது நேரடியாக நேட்டோப்படையை களமிறக்குவதற்கான வாய்ப்பு குறைவு. இரசிய படைகளை உள்ளே வரவிட்டு கரந்தடித் தாக்குதல் செய்வதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம். அத்தாக்குதலில் போலந்து மற்றும் துருக்கியப் படைகள் பெருமளவில் இரகசியமாகப் பங்கேற்பர். நேட்டோ நாடுகளின் புதிய படைக்கலன்களுடன் மரபு வழிப்போர்ப் பயிற்ச்சி பெற்ற படையினர் இரசிய ஆக்கிரமிப்பு படையினர் மீது தாக்குதல் செய்யும் போது பெருமளவு ஆளணி இழப்புக்களும் படைத்துறைப் பார ஊர்தி இழப்புக்களும் ஏற்படும். அமெரிக்காவின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் உக்ரேனின் தாங்கிகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக உக்ரேன் மாறலாம். 2022  பெப்ரவரி இறுதியில் உக்ரேனில் ஒரு மோதல் நடக்கும். 

தைவான்

சீனாவின் தைவான் ஆக்கிரமிப்பு நடப்பதற்கு பல வழிகள் உண்டு. தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் சீனா தைவானை ஆக்கிரமிக்க முயலலாம். அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. தைவானியர்களிடையே சீன எதிர்ப்பு மோசமாகிக் கொண்டே போகின்றது. சீனாவிற்கு அடிபணிய வேண்டும் என்ற எண்ணம் இளம் தைவானியர்களிடையே இல்லை. மிக அதிக ஏவுகணைகளை தைவான் மீது ஒரேயடியாக வீசி தைவானை தரை மட்டமாக்கி அடிபணிய வைக்க முயற்ச்சிக்கலாம். தைவான் சீனாவின் மேற்குகரையோர நகரங்கள் மீது தனது ஏவுகணைகளை வீசி சீனப் பொருளாதாரத்தை சிதைக்க முயலலாம். ஹொங் கொங்கையும் ஷாங்காயையும் இலக்கு வைத்து தைவான் பல ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தைவான் தனிய தன்னைப் பாதுகாக்க மாட்டாது. ஜப்பான் தைவானை ஆக்கிரமிக்கும் படைகளை இலக்கு வைத்து தைவானுக்கு அண்மையாக உள்ள தீவுகளில் பெருமளவு ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தைவான் நீரிணையக் கடக்க முயலும் சீனப் படைகளை ஜப்பானியக் கடற்படைகளும் அமெரிக்க கடற்படைகளும் இணைந்து முதலில் தடுக்கும். தடையை மீறிச் சீனப் படையினர் செல்ல முயன்றால் பெரும் கடற்போர் நடக்கலாம். அது முற்றிய நிலையில் அமெரிக்க நகரங்களையும் ஜப்பானையும் இலக்கு வைத்து சீனா தனது மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை வீசலாம். அது பல நேட்டோ நாடுகளையும் ஒஸ்ரேலியாவையும் தென்கொரியாவையும் வியட்னாமையும் சீனாவிற்கு எதிரான போரில் ஈடுபட வைக்கும். சீனாவின் இந்த போர்ச் சூழலைப் பயன்படுத்தி இந்தியா முழுக் கஷ்மீரையும் கைப்பற்ற முயலலாம். ஒது ஓர் உலகளாவிய போராக மாறும் இடர் உண்டு.

உலகப் பொருளாதாரம்

கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 2022இல் ஆறு மாதங்களாவது எடுக்கும். நோய்க்கான மருந்தும் 2022இல் பரவலாக பாவனைக்கு வந்துவிடும். உலகில் பல நாடுகளில் அரச துறையில் ஆட்குறைப்பு செய்யப்படும். ஓய்வூதியங்கள் பெறுவோர் சிக்கல்களைச் சந்திப்பார்கள். பணிபுரிவோர் வீட்டிலும் பணிமனையிலும் இருந்து செயற்படுவது 2022இல் நிரந்தரமாகிவிடும். 2022இல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல சிரமங்களை அரசுகள் எதிர் கொள்ளும். அதனால் உலகெங்கும் வட்டி விழுக்காடு அதிகமாக இருக்கும். பல நாடுகளின் திறைசேரிகள் விற்பனை செய்யும் கடன் முறிகள் எதிர்பார்த்த அளவு நன்மையத் தாராது. 2009இன் பின்னர் நடந்தது போல் அளவுசார் தளர்ச்சி எதிர்பார்க்கும் நன்மையைத் தராது.

சூழல் பாதுகாப்பு

மேற்கு நாடுகள் புவிப்பந்தை அசுத்தப்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் சீனா இந்தியா போன்ற நாடுகள் தாமும் தொடர்ந்து அசுத்தப்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. இதனால் சூழல் வெப்பமாதலும் மாசுபடுத்தப் படுவதும் தேவையான அளவு குறைக்க முடியாமல் இருக்கும். புதுப்பிக்கக்கூடிய வலு (Renewable Energy) உற்பத்தியில் அதிக முதலீடுகள் செய்யப்படும். பசுமைக் கொள்கை பல நாடுகளில் வலிமையடையும்.

இந்தியா

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு 2022 ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருக்கின்றது. 2022இன் ஆரம்பத்தில் கோவா, மணிப்புரி, பஞ்சாம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கின்றது. நல்ல தலைவர் இல்லாத காங்கிரசுக் கட்சி ஆளும் பரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான வெற்றியின் இரகசியம் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியின் வலுவற்ற தலைமையில் தங்கியுள்ளது. இந்தியா 2022இல் சீனாவிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்க வாய்ப்புண்டு.

இலங்கை

2021இல் இலங்கை அரசின் நடுவண் வங்கி அந்நியச் செல்வாணிக் கையிருப்பு இன்மையால் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டி ஏற்பட்டது. 2022 இலங்கையின் அரசுக்கு சொந்தமான வர்த்தக வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவை செயற்படா கடன்களால் நெருக்கடியை எதிர் நோக்கலாம். அவற்றுடன் ஹட்டன் நஷனல் வங்கி, வர்த்தக வங்கி போன்றவையும் நிதி நெருக்கடியைச் சந்திக்கலாம். அவற்றை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க முடியாமல் இலங்கையின் நடுவண் வங்கி திணறலாம். பெருமளவு நன்கொடை அல்லது உள்நாட்டுச் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து தப்ப முடியும். அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வதும் அதை அரசு இரும்புகரங்களால் அடக்குவதும் நடக்கும். இலங்கை ஆட்சியாளர்கள் படைத்துறையினரின் ஆட்சி வரும் என மிரட்டுவார்கள். ராஜபக்சே குடும்பத்தினர்களின் ஊழல்கள் பலவற்றை மேற்கு நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசியல்வாதிகள் அம்பலப் படுத்துவர். ஆட்சி கலையும் வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வார்கள். அமெரிக்காவுடனான SOFA ஒப்பந்தம் வேறு பெயரில் இலங்கையால் கைச்சாத்திடப்படலாம். இந்தியாவுடனான இலங்கையின் CEPA ஒப்பந்தம் மீளவும் காலம் கடத்தும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

ஈழத் தமிழர்கள்

மீண்டும் ஈழத்தமிழர்களை 13இற்குள் முடக்கும் முயற்ச்சி 2022இல் உறுதியாக முன்னெடுக்கப்படும். ஏற்கனவே பல அரசியல்வாதிகள் அதற்கு விலைபோன நிலையில் மேலும் பல அரசியல்வாதிகள் விலைபோக வாய்ப்புண்டு. இலங்கையை 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கும் ஆற்றல் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவைக் கையாளும் திறனை இலங்கை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டே வருகின்றது. எல்லாத் தமிழர்களும் இணைந்து இந்தியாவிடம் 13ஐ முழுமையாக நிறைவேற்ற வைக்கும் கோரிக்கை இறுதியில் இந்தியாவிற்கு ஒரு பெரும் சவாலாகவே அமையும். வலுவிழந்த நிலையில் இருக்கும் இலங்கை அரசு சிங்கள மக்கள் நடுவில் மேலும் செல்வாக்கு இழக்க வைக்கும் நகர்வான 13ஐ முழுமையாக நிறைவேற்றுவதைச் செய்ய மாட்டாது. இந்தியாவை ஏமாற்றுவதற்காக அரச ஆதரவுடன் 13இற்கு எதிரான கிளர்ச்சிகளை பிக்குகள் தலைமையில் பெருமளவு சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். இலங்கையில் உள்ள இந்தியாவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். அதனால் 13-ம் திருத்தம் மேலும் வலுவிழந்து பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம். இந்தியாவிற்கு எதிராக சிங்களவர்கள் செய்யும் கிளர்ச்சியை அமெரிக்கா ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும். காணாமற் போனோர் பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது. காணி அபகரிப்பு தொடர்ந்து நடக்கும். ஜெனீவா இழுத்தடிப்பு தமிழர்களுக்கு பயனின்றி தொடரும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க அமெரிக்கா தமிழரகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் என்பது மனப்பாலாகவே இருக்கும்.

சீனா

சீனா செய்ய முயலும் பொருளாதாரச் சீர்திருத்தம் சீன மக்களுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கும். சீன அதிபரின் பொதுச் செழுமைத் திட்டம் பல பணமுதலைகளின் மறைமுக எதிர்ப்புக்கு உள்ளாகும். உலக அரங்கில் சீனாவின் ஏற்றுமதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம். மோசமடைந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் சீர்திருத்தப்பட முடியாமல் இருக்கும். உள்நாட்டு நிறுவனங்களும் உள்ளூராட்சிச் சபைகளும் பட்ட கடன்களை அடைக்க முடியாமல் திணறும். ஜீ ஜின்பிங் ஆட்சியிலும் கட்சியிலும் தன் பிடியை இறுக்க எடுக்கும் முயற்ச்சிகள் எதிர்ப்பை சந்திக்கும்.

இரசியா

பெலரஸ் மற்றும் மோல்டோ நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க இரசியா தொடர்ந்து முயற்ச்சி செய்யும். இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனை சீர் செய்யப்படும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி அதிகரிக்கும். தனது எரிவாயு ஏற்றுமதியை இரசியா அரசுறவியல் கருவியாக (Diplomatic Tool) மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாவிக்கும்.

படைக்கலப் போட்டி

உலக நாடுகளிடையே படைக்கலப் போட்டி மேலும் தீவிரமடையும். முன்னணி நாடுகள் எல்லாம் தமது படைத்துறைச் செலவை அதிகரிக்கும். அமெரிக்காவின் தொலைதூரக் குண்டு வீச்சுமானமன B-21 Raider, ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள், Ford Class விமானம் தாங்கிக் கப்பல்கள், இரசியாவின் எஸ்-500 ஏவுகணை எதிர்ப்பு முறைமை, சீனாவின் அடுத்த மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகள், இந்தியாவின் அக்னி-6 ஏவுகணைகள் 2022-ம் ஆண்டு முழுமையான பாவனைக்கு வரும். ஜப்பான் தனது படைவலிமையைப் பெருக்கும். அமெரிக்காவுற்கு அடுத்தபடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உற்பத்தி செய்யும் நாடாக ஜப்பான் இருக்கும். ஆனால் அம்முயற்ச்சி 2022இல் நிறைவடைவதற்கான வாய்ப்பு குறைவு.

துருக்கி ஒரு குழப்படி பிள்ளை போல் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரியும். சவுதி அரேபியா அடங்கும். இஸ்ரேல்-ஈரான் முறுகல் மேலும் தீவிரமடைந்து அவை இணையவெளியில் மோசமாக மோதிக் கொள்ளும். செயற்கை விவேகம் பல மடங்கு முன்னேற்றம் அடையும். துளிம கணினித்துறை (Quantum Computing) பெருமளவு முன்னேற்றமடையும். ஈரன் – அமெரிக்க யூரேனியப் பதப்படுத்தல் பேச்சு வார்த்தை இழுபறியில் இருக்கும்.

நாடுகளிடையே முறுகல்கள் தீவிரமடைவதும், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறுவதும், உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் புதிய படைக்கலன்களும், இயற்கை அனர்த்தங்களும் 2022இன் அம்சங்களாக இருக்கும்.

Friday, 31 December 2021

இந்தியாவை ஒரம் கட்டுவதே தமிழ், சிங்கள உய்விற்கு வழி

 


தமிழர்களுக்கு உதவ இந்தியா இருக்கின்றது என்ற மூடத்தனமான அச்சம் சிங்களவர்களிடையே உண்டு. 1987 அமைதிப்படை என்னும் பெயரில் வந்த கொலைவெறி நாய்ப்படைகளில் இருந்து 2009இனக் கொலைவரை இந்தியா சிங்களவர்களுக்கு பல உதவிகள் செய்த பின்னரும் இந்தியா தமிழர்களுக்கு உதவும் என நம்பும் முட்டாள்கள் சிங்களவர்களிடையே இன்றும் உண்டு என்பது ஆச்சரியத்துக்கு உரியது. அப்படி நம்பும் சில தமிழ் மூடர்களும் இருப்பதுதான் ஆச்சரியப்பட வைக்கின்றது.

தமிழர்கள் மீதான இந்திய வெறுப்பை இலங்கையர்கள் உணருங்கள்

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பல இலட்சம் இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் காரணம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுதான். தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் அவர்கள் அதை வைத்துக் கொண்டு இந்தியாவின் உதவியுடன் நாட்டைப் பிரித்து விடுவார்கள் என்ற எண்ணத்தை முதலில் சிங்களவர்கள் கைவிட வேண்டும். உலகத்திலேயே பிராமணர்களின் ஆதிக்கம் இல்லாத இந்துக்கள் இலங்கையில் உள்ள இந்துக்களே. 1980களில் இலங்கைப் பிரச்சனையைக் கையாள வந்த இந்தியப் பிராமண அரசுறவியலாளர்களும் உளவுத்துறையினரும், ஊடகர்களும் இதை அவதானித்து இலங்கைத் தமிழர்கள் மீது கடும் சினம் கொண்டனர். தமிழர்கள் என்றாலே சூத்திரர்கள். அவர்களை அடக்க சிங்களவர்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டனர்.  அவர்களுடன் தமிழரகள் மேல் பொறாமை கொண்ட சில மலையாளிகளும் இணைந்து கொண்டனர். இந்தியாவில் 4%இலும் குறைவான பிராமணர்கள் இந்தியாவை ஆளவும் ஆட்டிப்படைக்கவும் செய்கின்றார்கள். இந்தியா பிராமணர்களால் ஆளப்படவேண்டும் அல்லது அவர்களின் ஆலோசனைப்படி நடப்பவர்களால் ஆளப்பட வேண்டும் என்பது இந்துத்துவா கும்பலின் கொள்கை மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியில் பெரும்பாலோர்களின் கொள்கையுமாகும். அதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால்தான் ராகுல் என்கின்ற மொக்கை காந்தியும் தன்னை பார்ப்பான் என்கின்றார்; வங்கத்து மம்தா அக்காவும் தன்னைப் பாப்பாத்தி என்கின்றார்.

தமிழர்கள் திருந்த வேண்டும்

இந்தியாவால் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய நலனும் தமிழர்களின் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும் என சில ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிக அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கையில் செய்யக் கூடாது என்ற கொள்கையில் இந்தியா இருக்கும்வரை இந்திய நலனும் தமிழர்களின் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்க முடியாது என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். அவர்களின் அடிமனதில் பதிந்து போயுள்ள இந்திய நேயம் அவர்களை சரியான வழியில் சிந்திக்க விடாது. இந்தியாவின் அடுத்த பொய்மையான நிலைப்பாடு இலங்கையில் தமிழ் ஈழம் பிரிந்தால் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து விடும் என்பது. இது சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது என்ற இந்துக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட போலி அச்சம். நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம், சிறீமா-சாஸ்த்திரி ஒப்பந்தம், கச்ச தீவுக் கையளிப்பு, அமைதிப்படை, 13 என்னும் தீர்வுப் பொறி, ரணில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை அமைக்க முற்பட்ட போது நிருபாம ராவ் சீறி எழுந்து அவரது ஆட்சியைக் கலைத்து மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தியமை, 2009 இனக்கொலை, ஐநா மனித உரிமைக் கழகத்தில் இந்தியாவின் செயற்பாடு ஆகியவற்றை பற்றி உணர முடியாதவர்கள் தான் இந்தியாவால் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும், இந்திய நலனும் தமிழர்கள் நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் எனவும் சிந்திக்கின்றனர். இவர்களில் சிலர் கொடுத்த காசுக்கும் அதிகமாக கூவுகின்றனர். பலர் காசு கொடுக்காமலே கூவுகின்றனர். இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசல்ல

ஒரு பிராந்திய வல்லரசு என்றால் அதன் ஆதிக்கத்தில் ஒரு பிராதியம் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதிக்கத்தில் ஒரு பிராந்தியமும் இல்லை. இந்தியாவின் சொந்த நிலப்பரப்பு எனச் சொல்லப்படும் பிராந்தியத்திலேயெ இந்தியாவின் கட்டுப்பாடு இல்லை. இந்தியாவின் அரசியலமைப்பு இந்தியப் பிராந்தியம் எனச் சொல்லும் இடங்களில் ஒன்றான கஷ்மீரில் ஒரு பகுதியை பாக்கிஸ்த்தானும் இன்னொரு பகுதிய சீனாவும் ஆக்கிரமித்துள்ளன. இந்திய எல்லைகளில் பல இடங்களில் சீனா அத்து மீறி பல இடங்களை கைப்பற்றி வைத்துள்ளது. இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே அமைத்துள்ளது. இந்திரா காந்தி பாக்கிஸ்த்தானைப் பிரித்து சிக்கிம் நாட்டை இந்தியாவுடன் இணைத்து இலங்கையை அச்சுறுத்தி ஒரு பிராந்திய வல்லரசாக இந்தியாவை உருவாக்க முற்பட்ட போது அவர் கொல்லப்பட்டார். அவருக்குப் பின் வந்த ராஜிவ் அனுப்பிய இந்தியப் படையினர் இலங்கையில் இருந்து வெளியேறும் போது இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாகும் தகமையை இழந்தது. தொடர்ந்து இலங்கைக் குடியரசுத் தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாசாவை பதவியில் இருந்து விலக்க இந்தியா காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோரூடாக முயற்ச்சித்து படு தோல்வியடைந்த பின்னர் இந்தியாவும் ஒரு மூன்றாம் தர நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்தியாவின் தனிநபர் வருமானம் பங்களாதேசத்தின் தனிநபர் வருமானத்திலும் குறைந்த நிலையில் இருக்கும்போது அது பிராந்திய வல்லரசு எனச் சொல்ல முடியாது. ஆனாலும் இந்தியாவிடம் ஒரு வலிமை மிக்க படைத்துறை உண்டு. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் எந்த வெளிநாட்டு வல்லரசின் பக்கம் இந்தியா இருக்கின்றதோ அந்த வல்லரசுக்கு சார்பாக அப்பிராந்திய படைத்துறை சமநிலை மாறும். அதனால் இந்தியா ஒரு சமநிலைப்படுத்தும் வல்லரசு (Balancing Power) என அழைக்கபடுகின்றது. இந்திய வாற்பிடிகள் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்று கூவுவதை தமிழர்களோ சிங்களவர்களோ கணக்கில் எடுக்கக் கூடாது.

இந்தியாவை ஓரம் கட்டவும்

ஒரு புளியமரம் தன் நிழலில் வேறு தாவரங்களை வளரவிடாது என்பது போல் இந்தியாவின் நிழலில் இலங்கை விமோசனமடையாது என்ற மறைந்த ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை உருவாக்கிய ரோஹண விஜயவீராவின் கூற்றை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். சிங்கள மக்கள் திம்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த முனையில் தான் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்று பட முடியும். இந்தியாவை தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து ஓரம் கட்ட வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பிற்கு சீனாவின் உத்தரவாதம் தேவைப்படலாம்

இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா நேரடியாக பங்கேற்றது. சீனா சிங்களவர்களுக்கு உதவியது ஆனால் பின் கதவால் பத்தாயிரம் படையினரை இனக்கொலைக்கு உதவி செய்ய அனுப்பவில்லை. சீனாவிற்கும் தமிழர்களுக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. சீனர்களை தமிழரகள் வெறுத்து ஒதுக்க வேண்டியதில்லை. தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்று பட்டு சீனாவின் நட்புடன் இலங்கையின் பாதுகாப்பை மட்டுமல்ல இலங்கை பிளவு படாமலும் பார்த்துக் கொள்ளலாம். அது தமிழர்களையிட்ட சிங்களவர்களின் அச்சத்தைப் போக்கும்.

காலங்கள் மாற களம் மாறும்

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 1980களில் கடும் போட்டி இருந்தது. இன்று அவற்றிடையே ஒத்துழைப்பு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க-சீன முரண்பாடு தீவிரமடைந்து கொண்டே போகின்றது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது. இன்று சீனா மீது அமெரிக்கா கொண்டுள்ள அச்சம் போல் இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியா மீது கொள்ளும். இன்று இரு தரப்பு போட்டியாக இருப்பது அப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா என முத்தரப்பு போட்டியாக மாறும். அப்போதும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து பேரினவாத இந்தியா மாறாது. ஆனால் தமிழர்களும் சிங்களவர்களும் இந்தப் போட்டியில் கருவிகளாக இருக்காமல் இவற்றில் இருந்து விடுபடும் வழியைத் தேட வேண்டும். இருவருக்கும் எதிரியான இந்தியாவை ஓரம் கட்டி விட்டு சிங்களவர்களுக்காவது நட்பாக இருக்கும் சீனா தன்னை தமிழர்களும் நட்பான நாடாக மாற்ற வேண்டும். ஆனால் இலங்கையை போட்டிக்களமாக மாற்றக் கூடாது.

வட்டுக்கோட்டை விட்டுக் கொடுப்பு, திம்புக் கோட்பாடு ஏற்பு, இந்தியாவை ஓரம் கட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் ஒற்றுமை காணப்பட வேண்டும். மாற்றிச் சிந்திக்காமல் மாற்றமில்லை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...