Thursday, 15 October 2015

இஸ்லாமியத் திவிரவாதிகள் இரசியாவிற்கு எதிராகத் திரும்புவார்களா?

இஸ்லாமிய அரசு அமைப்பு இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் புனிதப் போர் தொடுக்கும்படி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு ஒலிப்பதிவின் மூலம் விடுக்கப்பட்ட இந்த அழைப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவைப் போர் தொடுத்துள்ள இரு நாடுகளுக்கும் எதிராக இஸ்லமிய இளைஞர்களைக் கிளர்ந்து எழும் படி அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை சிரியக் கிறிஸ்த்தவப் பேராயர் Jean-Clément Jeanbart மேற்கு நாடுகள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு துணை நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் சிரியாவில் இரசியத் தலையீட்டையும் வரவேற்றுள்ளார்.

மக்களாட்சி வேண்டி அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக உருவான அரபு வசந்தப் புரட்சி சுனி - சியா முஸ்லிம்களிடையேயான மோதலாக மாறி பிராந்திய நாடுகளின் போட்டிக்களமாகி இப்போது வல்லரசு நாடுகளின் நிகராளி மோதல் (Proxy war) களமாகவும் உருவெடுத்ததுடன் இஸ்லாமிற்கும் கிறிஸ்த்தவத்திற்கும் இடையிலான முறுகல் களமாகவும் திரிவு பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்தே அங்கு வாழும் கிறிஸ்த்தவர்கள் அசாத்தின் ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். அசாத் சிரியாவில் ஒரு மதவாத ஆட்சியை நடத்தவில்லை. 

இரசியத் தலைநகர் மஸ்கோவில் ஐ எஸ் அமைப்பு எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினால் பயிற்றுவிக்கப்பட்ட தாக்குதலாளிகளைக் கைது செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2015 ஒக்டோபர் 11-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மஸ்கோவில் உள்ள ஒரு தொடர் வீட்டுத் தொகுதியில் FSB எனப்படும் இரசிய உளவுத் துறையினர் திடீரெனப் புகுந்து சோதனை நடத்திய போது பதினொரு இறாத்தல் எடையுள்ள வெடி பொருட்களைக் கைப்பற்றினர். இவை கைப்பேசிகளில் வைத்து வெடிக்கச் செய்யத் தயாரான நினையில் இருந்தது. இது தொடர்பாக பத்து முதல் பதினைந்து வரையிலானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அதில் மூவர் சிரியர்கள் ஆகும் என்கின்றது FSB எனப்படும் இரசிய உளவுத் துறை. மஸ்க்கோவின் தொடரூந்துப் போக்குவரத்தை இலக்கு வைத்து இவர்கள் தாக்குதல் செய்யவிருந்தனர் என்றது FSB. இரசியா சிரியாவில் 2015 செப்டம்பர் 30-ம் திகதி ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்க முன்னரே இத் தாக்குதலாளிகள் இரசியாவிற்கு சிரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரசியாவில் இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள்.

இரசியாவின் North Caucasus பிராந்தியத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிரியா சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்து போராடுகின்றார்கள். இவர்களை சிரியாவில் வைத்து அழிப்பதும் இரசியப் படைகள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டதின் ஒரு நோக்கமாகவும் கருதப்படுகின்றது.


இரசியாவின் செஸ்னியப் பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமியப் போராளியான Abu Omar al-Shishani இறப்பதற்கு முன்னர் தனது தந்தையிடம் ஐ எஸ் போராளிகள் இரசியாவிற்குப் படையெடுப்பார்கள் எனச் சூழுரைத்திருந்தார்.                                                                                                                             

சிரியப் படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவால் இரசியப் படைகள் சிரியாவில் தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது ஒரு பேச்சு வார்த்தை மூலம் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் அமெரிக்காவின் சதியைக் குழப்பி விட்டது. இரசியப் படையினர் சிரியாவில் சென்று இறங்கியதுடன் முதல் வேலையாக இந்த ஏவுகணைகளும் அவற்றின் செலுத்திகளும் நிலை கொண்ட இடங்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தின. அதனால் மேற்கத்தைய ஊடகங்கள் இரசியா ஐ எஸ் "பயங்கரவாதிகள்" மீது தாக்குதல் நடத்தாமல் மிதவாதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன என்று குற்றம் சாட்டின. அமெரிக்க ஆதரவு பெற்ற் Tajamu al-Ezzah அமைப்பினரின் மீது இரசிய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியது பல சிரியர்களை ஆத்திரப்படுத்தியது. வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள Talbiseh நகரில் இரசிய விமானங்கள் நடாத்திய குண்டு வீச்சில் பதினேழு அப்பாவிக கொல்லப்பட்டனர். முதலில் எம்மை சிரிய அரச படைகள் கொன்றன. பின்னர் எம்மை ஹிஸ்புல்லா கொன்றது, அதைத்தொடர்ந்து ஈரானியப் படைகள் கொன்றன, இப்போது இரசியர்கள் எம்மைக் கொல்கின்றார்கள். அடுத்து எம்மைக் கொல்ல யார் வருவார்கள். இப்படி ஆத்திர்படுகின்றனர் சிரியர்கள்.

அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜபத் அல் நஸ்ரா அமைப்பினர் இரசியாவின் சிரியத் தலையீட்டை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான போராகப் பார்க்கின்றார்கள். இரசியாவின் மரபுவழித் திருச்சபை இரசியப் படைகளின் சிரியத் தலையீட்டை ஒரு புனிதப் போர் எனக்கருதுவதையும் அவர்கள் ஆத்திரத்துடன் கருத்தில் கொண்டுள்ளார்கள். மேலும் ஆப்கானிஸ்த்தானிலும் செஸ்னியாவிலும் இரசியப் படைகள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல் செய்தமையையும் அவர்கள் ஆத்திரத்துடன் நினைவு கூர்கின்றனர். ஐ எஸ் அமைப்பு மட்டுமல்ல அல் கெய்தா அமைப்பும் இரசியாவிற்கு எதிராகத் திரும்புகின்றது, சிரியாவில் செயற்படுக் ஜபத் அல் நஸ்ராவின் தலைவர் Abu Mohammed al-Jolani இரசியர்களைக் கொல்லும் படி த போராளிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். சிரிய அல் நஸ்ரா அமைப்பில் உள்ள இரசியரான Abu Ubaid al-Madan இரசியர்களுக்கான தனது காணொளிச் செய்தியில் சிரியாவில் இருக்கும் உங்கள் மைந்தர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். அல் நஸ்ராவைத் தொடர்ந்து. நைஜீரியாவில் செயற்படும் பொக்கொ ஹரம், சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் ஆகிய அல் கெய்தாவின் இணை அமைப்புக்களும் இரசியாவிற்கு எதிராகத் திரும்பலாம்.

Tuesday, 13 October 2015

துருக்கிக் குண்டு வெடிப்பு தேர்தலுக்கான சதியா?

துருக்கித் தலைநகர் அங்காராவில் தொழிற்சங்கங்களும் குர்திஷ் மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த சமாதானத்திற்கான ஊர்வலத்தில் இரண்டு குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததால் 95 பேர் கொல்லப்பட்டனர் இருநூற்றைம்பதிற்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டனர். ஊர்வலத்தின் நோக்கம் குர்திஷ்ப் போராளிகளுக்கும் துருக்கிப் படையினருக்கும் இடையில் நடக்கும் மோதலை நிறுத்த வேண்டும் என்பதாகும். அங்காராவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து நகரின் பல பகுதிகளூடாக ஊர்வலம் செல்ல ஏற்பாடாகி இருந்தது. ஊர்வலம் ஆரம்பிக்கும் வேளையில் குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அவசர சேவைகள் குண்டு வெடிப்புக்கள் நடந்த இடத்திற்கு செல்ல விடாமல் அரச படையினர் தடுத்ததாக ஊர்வலத்தில் சென்றவர்கள் குற்றம் சாட்டினர். துருக்கியில் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டு வெடிப்புக் காரணம் அரசுதான் என ஆத்திரப்பட்ட ஊர்வலத்திக் கலந்து கொண்ட மக்களில் சிலர் காவற்துறையினர் மீது தாக்குதல் நடாத்தினர்.

துருக்கியின் தலைமை அமைச்சர் அஹ்மட் டவுடொக்லு அவர்கள் இது ஒரு தற்கொடைத் தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். துருக்கி அரசு ஐ எஸ் போராளிகள் செய்த தற்கொடைத் தாக்குதல் எனச் சொல்கின்றது.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துருக்கியில் செயற்படும் குர்திஷ் மக்கள் தொழிலாளர் கட்சியினர் ஒருதலைப்பட்டமான போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனாலும் அவர்களது நிலைகள் மீது தொடர்ந்தும் துருக்கிய விமானப் படையினர் தாக்குதல்கள் நடத்துகின்றனர். குண்டு வெடிப்பைச் சாட்டாக வைத்துக் கொண்டு வலதுசாரி தேசியக் கட்சியினர் குர்திஷ் மக்கள் மீது தாக்குதலக்ள் செய்கின்றனர். குர்திஷ் மக்களின் உடமைகள் கொள்ளையிடபட்டன தீக்கிரையாகக்ப்பட்டன. இத்தாக்குதல்கள் குர்திஷ் தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்படு ஊக்க ஊதியம்.
முச்சந்தியில் துருக்கி
ஆசியா ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கு நடுவிலும் ஐரோப்பியர், அரபுக்கள், ஈரானியர் ஆகிய மூன்று ஒன்றுடன் ஒன்று முரண்படும் இனங்களுக்கு மத்தியிலும் துருக்கி இருக்கின்றது. சுனி இஸ்லாமியர், சியா இஸ்லாமியர், குர்திஷ் மக்கள் ஆகிய மூன்று ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருக்கும் பிரிவினருக்கு மத்தியில் துருக்கி இருக்கின்றது. ஈரான், ஈராக், சிரியா ஆகிய மூன்று ஐ எஸ் அமைப்பினருடன் மோதும் நாடுகளுடன் துருக்கி எல்லைகளைக் கொண்டுள்ளது. சிரியாவில் இருந்து பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

நேட்டோக் கூட்டமைப்பில் இணைந்த முதல் இஸ்லாமிய நாடான துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் இணை உறுப்பினராக இருக்கின்றது. அது ஒரு முழு உறுப்பினராக இணைய விரும்புகின்றது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் அமெரிக்காவும் யேமன், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டுப் போரும் உக்ரேனை மேலும் துண்டாட முயற்ச்சிக்கும் இரசியாவும் தென் சீனக் கடலில் பெரும் விரிவாக்கத்தைச் செய்ய முயலும் சீனாவும் உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ள வேளையில் துருக்கியில் ஓர் உறுதியான ஆட்சி அவசியமான ஒன்றாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விரும்பும் துருக்கிய ஆட்சித் தலைவர் ரிசெப் ரய்யிப் எர்டோகான் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்களை துருக்கியினூடாகப் பயணிக்க அனுமதிக்கின்றார்.

துருக்கியில் 2003-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை தலைமை அமைச்சராக இருந்த ரிசெப் ரய்யிப் எர்டோகான் 2014-ம் ஆண்டில் இருந்து ஆட்சித் தலைவராகவும் இருக்கின்றார். அவர் பிரான்ஸில் உள்ளது போல் ஒரு அதிகாரமிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி முறைமையை உருவாக்க முயன்றார்.  550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் தனது கட்சி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் 2015-ஜுன் மாதம் 7-ம் திகதி வெளிவந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. 2011-ம் ஆண்டு ஆட்சித் தலைவர் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 327 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 258 உறுப்பினர்களை மட்டுமே பெற்று மொத்தம் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் உள்ளது. இந்தத் தோல்விக்குக் காரணம் துருக்கிய இடதுசாரிகளும் குர்திஷ் இன மக்களும் இணைந்து செயற்பட்டமையே. துருக்கியின் அரசமைப்பை மாற்றித் தனனை ஒரு பல அதிகாரம் கொண்ட ஒரு அரசத் தலைவராக மாற்ற எர்டோகன் எடுத்த முயற்ச்சி தோல்வி கண்டது. துருக்கியின் புட்டீனாகத் தன்னை மாற்ற எர்டோகான் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது என ஊடகங்கள் கேலி செய்தன.  
வாக்காளர்கள் தவறு செய்து விட்டனர் அடுத்த தேர்தலில் அவர்கள் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் எனச் சொன்ன எர்டோகன் மறு தேர்தலுக்கு 2015 நவம்பர் முதலாம் திகதி மறுதேர்தலுக்கு உத்தரவிட்டார்.

எர்டோகன் தனது Justice and Development Party (the AKP) கட்சியால் மட்டுமே உறுதியான ஓர் ஆட்சியை உருவாக்க முடியுன் என்கின்றார்

மீண்டும் இடதுசாரிகளும் குர்திஷ் மக்களும் இணைவது எர்கோடனுக்கு உகந்த ஒன்றல்ல. சிலர் அரச உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றனர். சிலர் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் குற்றம் சாட்டுகின்றனர். அண்மைக் காலங்களாக நாட்டில் ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதற்கு அதிபர் ரிசெப் ரய்யிப் எர்டோகான்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. குர்திஷ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை துருக்கியர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு ரிசெப் ரய்யிப் எர்டோகான் முயல்கின்றார் எனவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

துருக்கியில் குர்திஷ் மக்களுக்கு எதிராக துருக்கியிலும் ஈராக்கிலும் சிரியாவிலும் செய்யும் தாக்குதல்களால் அவர்கள் தீவிரவாதத் தாக்குதலை துருக்கியில் செய்ய அது துருக்கியப் பேரினவாதிகளையும் தேசியவாதிகளையும் தனது நீதிக்கும் அபிவிருத்துக்குமான கட்சிக்கு ஆதரவு வழங்கச் செய்யும் என எர்டோகன் மனதில் வைத்துச் செயற்படுகின்றார் எனவும் சிலர் வாதிருகின்றனர்.

ஆரம்பத்தில் துருக்கியப் பொருளாதாரத்தையும் அதன் படைத்துறைவலுவையும் பெரிதளவு அபிவிருத்தி செய்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரிசெப் ரய்யிப் எர்டோகான் பின்னர் ஒரு சர்வாதிகாரி போல் மாற்றம் பெற்றார். அதன் அடுத்த கட்டமாக தலைமை அமைச்சரின் ஆட்சியின் கீழ் இருக்கும் துருக்கியை அதிபர் ஆட்சிக்கு மாற்றி தனது அதிகாரத்தை அதிகரிக்கும் எண்ணம் அவரது மதிப்பை மக்கள் மத்தியில் குறைத்தது.

குண்டு வெடிப்பு நடந்தவுடன் நாடெங்கும் மக்கள் கொதித்து எழுந்தர்க்ள். இதனால் சமூக வலைத்தளங்கள் துருக்கிக் குண்டு வெடிப்புத் தொடர்பான செய்திகள் தடை செய்யப்பட்டு விட்டன. எர்டோகானின் ஊடக அடக்கு முறை உலகறிந்த ஒன்றாகும். துருக்கியின் விருது பெற்ற ஊடகவியலாளர் ஒருவர் எர்டோகனைப் பற்றிக் கேலி செய்து எழுதியமைக்காகத் தண்டிக்கப்பட்டார். நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி ஊடகங்களை அடக்கி தேர்தலில் குழறுபடி செய்வது இப்போது பல நாடுகளில் செய்யப்படுகின்றன. அது துருக்கித் தேர்தலிலும் நடக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Saturday, 10 October 2015

Torpedo என்னும் கடலடி ஏவுகணைகளை வீசும் இந்தியாவின் புதிய கப்பல்.

இந்தியா torpedo ஏவுகணை ஏவவும் மீட்கவும் கூடிய ஒரு கடற்படைக் கப்பலை முழுக்க முழுக்க உள்ளூரில் உருவாக்கியுள்ளது. 50 மீட்டர் நீளமான இந்தக் கப்பலுக்கு INS Astradharini எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் உள்ள விசாகப் பட்டனம் துறைமுகத்தில் இருந்து INS Astradharini வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இது மணித்தியாலத்திற்கு 15 கடல் மைல்கள் என்னும் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

மேலும் இந்தக் கப்பலில் உள்ள முக்கிய அம்சங்கள்
1. நவீன வலுப்பிறப்பாக்கலும் விநியோகமும் அதாவது power generation and distribution)
2. சிறந்த கடற்பயணம் (improved navigation)
3. நவீன தொடர்பாடல் முறைமையை(modern communication systems.)

தனது படைக்கல உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்வதை அதிகரிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் இந்தியாவிற்கு INS Astradharini கப்பலின் உருவாக்கம் ஒரு மைல்கல்லாகும்

சீனா அண்மைக்காலங்களாக தனது கடல் வலிமையைப் பெருக்கி வருகின்றது. அதைச் சமாளிக்கும் வகையில் இந்தியாவும் தனது கடற்படையை மேம்படுத்தி வருகின்றது.

செப்டம்பர் 27-ம் திகதியில் இருந்து ஒக்டோபர் முதலாம் திகதி வரை இந்தியக் கடற்படையும் பிரித்தானியக் கடற்படையும் இணைந்து இந்து மாக்கடலில் பயிற்ச்சிகளில் ஈடுபட்டன. Royal Navyயில் frigate வகைக் கப்பலான HMS Richmond உடன் இந்தியாவின் (INS) Betwa பயிற்ச்சியில் ஈடுபட்டது.

பொதுவாக மத்திய கிழக்கில் நிலை கொண்டிருக்கும் HMS Richmond இந்தியாவின் கோவாவில் உள்ள துறை முகத்திற்குச் சென்று பயிற்ச்சியில் ஈடுபட்டது. இரு கப்பல்களும் ஒரு போர் சூழலில் சிறந்த தொடர்பாடலையும் ஒருங்கிணைப்பையும் செய்யக் கூடிய வகையில் பயிற்ச்சி அமைந்திருந்தது. இக்கப்பலுடன் பிரித்தானியாவுன் 820 Naval Air Squadron Merlin Mk 2 உழங்கு வானூர்திகளும் பயிற்ச்சியில் இணைந்திருந்தன.

பிரித்தானியாவின் 133நீள  Duke-வகுப்பைச் சேர்ந்த  frigate கப்பலான  HMS Richmond  நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போருக்கு என உருவாக்கப்பட்டதாகும். அத்துடன் அது கடல் மேற்பரப்பில் உள்ள கப்பல்களுக்கும் எதிராகவும் போர் செய்யக் கூடியது. சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களைப் பெருமளவில் அதிகரித்து வருகின்றது. அதைச் சமாளிக்க இந்தியாவிற்கு இந்தப் பயிற்ச்சி அவசியமான ஒன்றாகும்.

இந்தியத் தரப்பில் பயிற்ச்சியில் ஈடுபட்ட கப்பலான INS Betwa 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மத்திய தரைக்கடலிலும் இந்து மாக்கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பல தரப்பட்ட படைக்கலன்களைக் கொண்ட இக்கப்பலில் இரண்டு உழங்கு வானூர்திகளும் உண்டு.

பிரித்தானியா அண்மைக்காலங்களாக இந்தியாவுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றது.

Friday, 9 October 2015

சீனா நிர்மாணித்த தீவுகளுக்கு சவால் விடத் தீர்மானித்த அமெரிக்கா

தென் சீனக் கடலில் உள்ள பவளப் பாறைகளின் மேல் கடற்படுக்கையில் இருந்து மணலை வாரி இறைத்துப் போட்டு நிரவி சீனா பல தீவுகளை உருவாக்கி வருகின்றது. இந்தத் தீவுகளில் விமான ஓடுபாதைகளையும் படைத் தளங்சீனா களையும் நிர்மானிக்கின்றது. சீனா தீவுகளைக் கட்டி எழுப்பும் கடற்பரப்பு பன்னாட்டுக் கடற்பரப்பு என சீனாவின் அயல் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. சில நாடுகள் இது தமக்கு சொந்தமான பிரதேசம் எனவும் சொல்கின்றன. இத்தீவுகளைச் சுற்றிய 12 கடல் மைல்கள் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றது சீனா. இதற்குச் சவால்விடும் வகையில் அந்த 12 கடல் மைல் பரப்பினுள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பப் போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.
எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன. தென் சீனக் கடலில் 17.7 பில்லியன் தொன் எரிபொருள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குவைத்தில் உள்ள 13 பில்லியன் தொன்னிலும் அதிகமாகும். சீன அரசு தென் சீனக் கடலின் எரிபொருள் ஆய்விற்க்கு முப்பது பில்லியன் டொலர்களைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது. தென் சீனக் கடலை சீனா இரண்டாவது பாரசீகக் கடல் என்கின்றது. 

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.


The United Nations Law of the Sea Convention
1982இல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி  (The United Nations Law of the Sea Convention) தென் சீனக் கடலில் உள்ள 40 தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என வியட்னாமும் மலேசியாவும் இணைந்து ஐநாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தன. உடனே சீனாவும் தனது ஒன்பது துண்டுக் கோட்டு வரைபடத்தை இணைத்து ஒரு மனுவை ஐநாவிடம் சமர்ப்பித்தது. சீனாவின் மனுவை எதிர்த்து வியட்னாம் தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பித்தது.
தென் சீனக் கடலில் உள்ள பவளப் பாறைகளின் மேல் கடற்படுக்கையில் இருந்து மணலை வாரி இறைத்துப் போட்டு நிரவி சீனா பல தீவுகளை உருவாக்கி வருகின்றது. இந்தத் தீவுகளில் விமான ஓடுபாதைகளையும் படைத் தளங்களையும் சீனா நிர்மானிக்கின்றது. சீனா தீவுகளைக் கட்டி எழுப்பும் கடற்பரப்பு பன்னாட்டுக் கடற்பரப்பு என சீனாவின் அயல் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. இத்தீவுகளைச் சுற்றிய 12 கடல் மைல்கள் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றது சீனா. இதற்குச் சவால்விடும் வகையில் அந்த 12 கடல் மைல் பரப்பினுள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பப் போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.

எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன.

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.


சரித்திரப் பின்னணி
1951-ம் ஆண்டு 48 நாடுகள் சன் பிரான்சிஸ்கோ நகரில் கூடி இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுற்கு கொண்டு வரும் சன் பிரான்சிஸ்கோ உடன் படிக்கையில் கையொப்பமிட்டன.  மாநாட்டில் கலந்து கொண்ட சோவியத் ஒன்றியம், போலந்து, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன. மாவோ சே துங் பெரும் உள்ளூர்ப் போரில் ஈடுபட்டிருந்தபடியால் சீனா கலந்து கொள்ளவில்லை. மாநாடு ஜப்பானிற்கு பாதகமானது என்று சொல்லி இந்தியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஜப்பான் கலந்து கொண்டு கையொப்பமிட்டது. சன் பிரன்சிஸ்க்கோ உடன்படிக்கையின் படி ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து கொரியா, தாய்வான்,  பேஸ்கடோர்ஸ், ஹாங்காங், அண்டார்டிக்கா, ஸ்பிரட்லி தீவுகள், கியூரில் தீவுகள் ஆகியவை உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டன. தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்று சன் பிரான்சிஸ்கோ உடன்படிக்கையில் வரையறை செய்யவில்லை. அப்பகுதியில்  பொனின் தீவுகளும் ஒக்கினாவா அமானி, மியக்கோ யேயாமா ஆகியவற்றை உள்ளடக்கிய ரியாக்கு தீவுகளும் (Bonin Islands and the Ryukyu Islands, which included Okinawa and the Amami, Miyako and Yaeyama Islands groups) அமெரிக்காவின் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டன.



 பசுபிக் மாக்கடலின் இரு புறமும் உள்ள 12 நாடுகள் இணைந்து  பசுபிக்தாண்டிய கூட்டாண்மையை Trans Pacific Partnership (TPP ) உருவாக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன.  ஐக்கிய அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தென் சீனக் கடல் ஒரு ஆபத்து நிறைந்த ஆரம்பப் புள்ளியாகும்.   சீனாவிற்கு எதிரான  பொருளாதார, பூகோள அரசியல், மற்றும் கேந்திரோபாய நகர்வுகளின் முக்கிய பகுதியே இந்தக் கூட்டாண்மை உருவாக்கமாகும்.

 ஐக்கிய அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தென் சீனக் கடல் ஒரு ஆபத்து நிறைந்த ஆரம்பப் புள்ளியாகும்.  சீனா உருவாக்கிய தீவுகளுக்கு அண்மையாக அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார். Trans Pacific Partnership உடன்படிக்கை கைச் சாத்திட்ட பின்னரே வெள்ளை மாளிகை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அஸ்டன் கார்ட்டர் அமெரிக்கப் படைகள் பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய உலகின் எப்பாகத்திற்கும் செல்லும் என்றார். ஒஸ்ரேலியாவில் நடந்த கடற்பயணம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின்  பசுப்பிராந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் Scott Swift சில நாடுகள் பன்னாட்டுச் சட்டத்திற்கு அமையாமல் செயற்படுகின்றன என்றார். அந்த நாடுகள் கடற்போக்கு வரத்திற்கு கண்டபடி கட்டுப்பாடுகளும் எச்சரிக்கைகளும் விடுக்கின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமேரிக்காவிற்கு சவால் விடக் கூடிய வகையில் வட துருவத்தில் உள்ள அமெரிக்காவிற்குச் சொந்தமான அலாஸ்க்காவிற்கு பராக் ஒபாமா வடதுருவ நாடுகளின் கூட்டத்திற்குச் சென்ற போது சீனா தனது ஐந்து கடற்கப்பல்களை அலாஸ்க்காவை ஒட்டிய கடற்பிராந்தியத்திற்கு அனுப்பி இருந்தது.

சீனாவின் எதிர்வினை
தான் நிர்மாணிக்கும் தீவுகள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்கனவே பல பேச்சு வார்த்தைகள் நடத்திவிட்டோம் என்கின்றது சீனா. அமெரிக்கா தனது தீவுகளுக்கு அண்மையாக தனது கடற்படைக் கப்பல்களை அனுப்புவது தொடர்பாக தனது ஆட்சேபனையை ஏற்கனவே அமெரிக்காவிற்கு சீனா தெரிவித்து விட்டது. சீனாவும் தனது கடற்படைக்கப்பல்கலை தனது தீவுகளுக்கு அனுப்பும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சுதந்திரக் கடற்பயணம் என்னும் பெயரில் தனது கடல் எல்லைக்குள்
 

Monday, 5 October 2015

மத்திய கிழக்கில் அகலக் கால் பதிக்கும் இரசியா

இரசியா மத்திய கிழக்கில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தனது உளவு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தை ஈராக்கில் அமைத்துள்ளது. தகவல் நிலையம் என்னும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இத் தலைமையகம் இரசியா, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் படைகளுக்கிடையில் உளவுத் தகவல்களைத் திரட்டுவதையும், பகுப்பாய்வு செய்வதையும் பரிமாறிக் கொள்வதையும்  ஒன்றிணைக்கும் என இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கான தலைமைப் பொறுப்பை இந்த நான்கு நாடுகளின் பிரதிநிதிகளில் ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை சுழற்ச்சி முறையில் ஏற்றுக் கொள்வார். புட்டீனின் நகர்வுகள் அவரது புவிசார் அரசியல் வித்துவத்துவமா அல்லது உள்நாட்டுப் பிரச்சனை திசைதிருப்பும் முயற்ச்சியா என்பதில் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

ஹிஸ்புல்லாவும் வரவேற்பு
இரசியாவின் அதிரடி நகர்வுகளை லெபலானிய சியா முஸ்லிம் அமைப்பான ஹிஸ்புல்லாவும் வரவேற்றுள்ளது. ஈரானிய ஆதரவு அமைப்பானா ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு ஐ எஸ் அமைப்பைத் தோற்கடிக்கத் தவறிவிட்டது என்று கூறிய அவர் அமெரிக்காவின் நோக்கங்களில் தனக்கு ஐயம் இருப்பதாகவும் தெரிவித்தார். அண்மைக்காலங்களாக ஹிஸ்புல்லா அமைப்பினர் 4+1 என்னும் பெயரில் இரசியா, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நான்கு நாடுகளும் தமது அமைப்பும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்து வந்தனர்.  அந்தக் கூட்டமைப்பின் முதற்பணி சிரியாவின் அல் அசாத் ஆட்சிக்கு ஆதரவாகப் போராட படையினரை அனுப்புவதாக இருக்க வேண்டும் எனவும் ஹிஸ்புல்லாவின் ஊடகங்கள் பரப்புரை செய்து கொண்டிருந்தன.

ஈரானும் மறுக்கிறது இரசியாவும் மறுக்கிறது
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கு பற்றச் சென்ற ஈரானிய அதிபர் ஹஸன் ரௌஹானி இரசியா, ஈரான், சிரியா, ஈராக் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதை மறுத்துள்ளார். இரசிய அரசுறவியலாளர்களும் மத்திய கிழக்கில் தமது நாடு ஒரு தீவிர ஈடுபாடு செலுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஈராக்கில் எமக்கென்று ஒரு பணி இல்லை, நாம் ஈராக்கில் தலையிடப்போவதில்லை என்கின்றனர். அவர்கள். அத்துடன் மத்திய கிழக்கில் இரசியாவினதும் ஈரானினதும் நிலைப்பாடுகள் வித்தியாசமானவை இரண்டும் நெருங்கி இணைந்து அங்கு செயற்பட வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஈரானிய சிறப்புப் படையான கட்ஸ் படையின் (Quds Force) தளபதி ஹஸ்ஸெம் சொலைமானி 2015 ஓகஸ்ட் மாதம் இரசிய சென்று பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பயணத் தடையையும் மீறி இவர் இரசியா சென்றிருந்தார். சிரிய விவகாரத்தில் இரசியாவிற்கும் ஈரானிற்கும் தொடர்புகள் இருப்பதை மறுக்க முடியாது. ஈராக்கியத் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாதி 2015 மே மாதம் மொஸ்க்கோ சென்று இரசியாவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தார்.

சுருங்கும் அசாத்தின் ஆதிக்கப் பரப்பு

மூன்று இலட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இடப்பெயர்வுக்கும் உள்ளாகி இருக்கும் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நான்கில் ஒரு பங்கு நிலப்பரப்பு மட்டும் இருக்கின்றது. சிரியப் பிரச்சனையால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் தஞ்சம் கோருவோரின் பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்றன. இவை யாவற்றிற்கும் பராக் ஒபாமாவின் பிழையான வெளியுறவுக் கொள்கையும் அவர் சிரிய விவகாரத்தைக் கையாண்ட விதமும் தான் என விள்டிமீர் புட்டீன் ஐக்கிய நாடுகள் சபையில் வைத்துத் தெரிவித்தார். இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஈராக்கின் மீதான சட்ட விரோதப் படையெடுப்பே உருவாக்கியது என்பதையும் புட்டீன் தெரிவிக்கத் தவறவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரசியாவின் உதவியின்றி ஐ எஸ் என்னும் பேயை ஒழிக்க முடியாது எனக் கருதுகின்றன என வரும் செய்திகளும் பராக் ஒபாமாவிற்கும் அமெரிக்காவிற்கும்பேரிடியாகும். ஜேர்மனியும் இத்தாலியும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான இரசியாவின் படை நடவடிக்கைகளை இரகசியமாக வரவேற்றுள்ளன.

இரசியாவிற்கும் ஒரு களமுனை தேவை
சிரியாவின் சியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் உள்ள லதக்கியா விமானப்படைத் தளத்தில் இரசியா தனது படையினரையும் போர் விமானங்களையும் முதலில் தரையிறக்கியது. அமெரிக்காவின் உளவுத்துறைகளில் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இரசியா இந்த நகர்வுகளைச் செய்ததால் இது மேற்கு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்துடன் இரசியாவின் கடற்படையினரின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிலையமாக இருந்த சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் இரசியக் கடற்படைக் கப்பல்கள் சென்று நிலை எடுத்துள்ளன. இரசியாவின் கருங்கடல் கடற்படையணியின் முக்கிய கலமான The Moskva missile-carrying cruiser என்னும் ஏவுகணைதாங்கிக் கப்பலும் நாசகாரிக் கப்பல்களும்  சிரியாவை ஒட்டிய மத்திய தரைக்கடலில் நிலை எடுத்துள்ளன. அமெரிக்காவின் செய்மதிப் படங்களின் படி 28 போர் விமானங்கள் 26 தாக்குதல் உலங்கு வானூர்திகள், பல துருப்புக் காவி வண்டிகள், பல தரையில் இருந்து வானிற்கு ஏவும்கணைகள், பல தாங்கிகள் ஆகியவற்றுடன் இரண்டாயிரம் இரசியப் படையினர் லதக்கியாவில் நிலை கொண்டுள்ளனர். நேட்டோ நாடுகள் பல நாடுகளுக்கு தமது படைகளைப் போர் செய்ய அனுப்பி அவர்களுக்கு களமுனை அனுபவத்தை வழங்குவதுடன் தமது படைக்கலன்களின் பயன்பாட்டையும் பரீட்சிக்கின்றன. இரசியா 1990இல் இருந்து அப்படி ஒரு பரந்த அனுபவம் இன்றி இருக்கின்றன. ஜோர்ஜியாவுடன் நடந்த போரில் வலுவற்ற ஜோர்ஜியாவை அது துரிதமாக அடக்கி விட்டது.அண்மைக்காலங்களாக ஐக்கிய அமெரிக்கா தரைப்படைகளை அனுப்பாமல் வான் தாக்குதல்கள் மூலம் போர் புரியும் திறனையும் அனுபவத்தையும் வளர்த்துள்ளது. அதே அனுபவத்தையும் திறனையும் அமெரிக்கா பெறத் துடிக்கின்றது.

மத்திய கிழக்கில் இடைவெளிகளை நன்கு பயன்படுத்திய இரசியா!

சியா மற்றும் சுனி இஸ்லாமியர்களிற்கு இடையே உள்ள முறுகல் நிலை என்று பார்க்கும் போது  ஐக்கிய அமெரிக்காவின் நட்பு சுனி முஸ்லிம்கள் நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், கட்டார், குவைத் போன்ற நாடுகளுடனேயே சிறப்பாக இருக்கின்றன. சியா முஸ்லிம் நாடான ஈரான் அமெரிக்காவை வெறுக்கும் ஒரு நாடாக இருக்கின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானினதும் ஈராக்கினதும் நட்பை இரசியாவால் இலகுவாகப் பெற முடியும். ஐக்கிய அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து ஈரானை தம்முடன் ஒரு உடன்பாட்டுக்கு கொண்டு வருமுன்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது காய்களை நகர்த்தி விட்டார். மத்திய கிழக்கில் உள்ள அடுத்த இடைவெளி ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் தமது படைகளின் காலடிகள் அங்கு படக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தமையாகும். அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள் ஐ எஸ் போராளிகளின் நடமாட்டங்களுக்கு தடையாக அமைந்தன ஆனால் அவர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கவில்லை. அவர்கள் கால நிலை மாற்றங்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இஸ்ரேலுக்குப் பேரிடி
இரசியா சிரியாவில் தரையில் இருந்து வான் நோக்கி ஏவும் ஏவுகணைகளையும் விமானத்தில் இருந்து விமானத்தை நோக்கி ஏவும் ஏவுகணைகளையும் இறக்கி இருப்பது இஸ்ரேலுக்குப் பேரிடியாகும். 2010-ம் ஆண்டு சிரிய உள் நாட்டுக் குழப்பம் ஆரம்பமானதில் இருந்து இஸ்ரேல் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லாவிற்கு பெரும் படைக்கலன்கள் அனுப்பப் படுவதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றது. மூன்றிற்கு மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து தாக்குதல்களும் செய்துள்ளன.சிரியா கோலான் குன்றுகளை மீளக் கைப்பற்ற இரசியப் படைகள் உதவுமா என்ற அச்சமும் இஸ்ரேலில் சிலரிடம் தோன்றியுள்ளது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரில் கோலான் குன்றை இஸ்ரேல் சிரியாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. 1981-ம் ஆண்டு இஸ்ரேல் கோலான் குன்றை தன்னுடன் ஒரு தலைப்பட்சமாக இணைத்துக் கொண்டது. இதைப் பன்னாட்டு சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இருபதினாயிரம் இஸ்ரேலியர்கள் கோலான் குன்றில் குடியேற்றப்பட்டனர். இந்தக் கோலான் குன்றில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணை மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இலகுவாகச் செய்ய முடியும். இந்தக் குன்றுகள் ஹிஸ்புல்லாவின் வசமானால் அதனால் இஸ்ரேல் பேரழிவை ஏற்படுத்த முடியும்.

புட்டீனின் கேந்திரோபாயமா தந்திரமா

சிரியாவில் சுதந்திர சிரியப் படை என்னும் அமைப்பு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அமைப்பாகும். அதற்குப் படைக்கலன்களும் பயிற்ச்சியும் அமெரிக்கா வழங்கி வருகின்றது. அவர்கள் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினருக்கு எதிராகவும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். இந்த அமைப்புக்களுக்கு எதிராக இரசியா தாக்குதல் நடத்தக் கூடும். இது அமெரிக்காவின் சிரியா தொடர்பான அரசுறவியலுக்கு பெரும் இழுக்காக அமையும். வெள்ளை மாளிகையில் சிலர் புட்டீன் தனது இரசியப் பார்வையாளர்களைத் திருப்திப் படுத்த சும்மா "சீன் போடுகின்றார்" எனச் சொல்வதும் உண்டு. 13 விழுக்காடு சியா முஸ்லிம்களையும்74விழுக்காடு சுனி முஸ்லிம்களையும் கொண்ட சிரியாவில் சியா ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் சுனி முஸ்லிம்களின் அமைப்பான ஐ எஸ் இற்கு எதிராகவும் இரசியா களமிறங்கியுள்ளது. அது அமெரிக்காவின் DIPLOMATIC MANEUVER ஐ முற்றாக checkmate செய்துவிட்டபோதிலும் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இரசியா இருக்கின்றதா? சவுதி, கட்டார், ஐக்கிய அமீரகம், துருக்கி ஆகியவை அசாத்தை அகற்றுவதில் உறுதியாக நிற்கின்றன. இரசியாவிடம் சிரியாவில் உறுதியாக நிலைகொள்ளக் கூடிய logistic support  வளங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. உலகெங்கும் உள்ள சுனி முஸ்லிம்கல் மட்டுமல்ல இரசியாவில் உள்ள சுனி முஸ்லிம்களின் வெறுப்பை இரசியா சம்பாதிப்பது இரசியாவிற்கு உகந்ததா? புட்டீனின் நகர்வுகள் இரசியாவிற்கும் அவர் தலையிடும் நாடுகளுக்கும் செழிப்பை கொண்டுவருமா? இரசியாவின் நட்பு நாடுகளின் வட்டடத்தை விரிவாக்குமா? இது போன்ற கேள்விகளுக்குச் சரியான விடையைக் காலம் தான் கூறும்.

மேற்கின் குற்றச் சாட்டும் இரசியாவின் பதிலும்
 ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல் செய்யச் சென்ற இரசியப் படையினர் அதைச் செய்யாமல் மற்ற அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் செய்வதாக அமெரிக்கா முதலில் குற்றம் சாட்டியது. இரசியா முதல் தாக்குதல் செய்த இடமான சிரியாவின் ஹொம்ஸ் நகரில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சுந்ததிர சிரியப் படையினரும் இருக்குக்கின்றனர். 2015-ஒக்டோபர் 3-ம் திகதி இரசியப் படையினர் ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக கடுமையான விமானத் தாக்குதல்களை நடாத்தினர். ரக்கா நகரில் உள்ள ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாடு-கட்டளைப் பணியகத்தை தாம் நிர்மூலமாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். BETAB-500 எனப்படும் கொங்கிறீட் சுவர்களைத் துளைத்துச் செல்லும் குண்டுகள் Su-34 போர்விமானங்களில் இருந்து வீசப்பட்டன. இதனால் நிலத்தின் கீழ் இருந்த ஐ எஸ்ஸின் படைக்கலக் குதமும் அழிக்கப்பட்டது. சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள ஐ எஸ்ஸின் படைக்கலக் குதமும் இரசியாவின் Su-24M tactical bombers களால் அழிக்கப்பட்டன. இரசியாவின் KAB-500 missilesகள் பரவலாகப் பாவிக்கப்பட்டன. இரசியப் படைத்தளபதி ஐ எஸ் அமைப்பின் போராளிகள் தமது தாக்குதல்களால் பெரும் கலவரமடைந்துள்ளனர் என்றும் பலர் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பி ஓடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

குர்திஷ் மக்களுக்கு இரசியா விடுதலை பெற்றுக் கொடுக்குமா?
சிரியாவில் வாழும் குர்திஷ் மக்களின் Democratic Union Party, (or PYD) இரசியப் படைகளின் தாக்குதல்களுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. துருக்கியப் படைகளின் தாக்குதல்களுக்கு அண்மைக்காலங்களாக உள்ளாகி வரும் குர்திஷ் போராளிகளுக்கு இரசியாவின் சிரிய வருகை ஆறுதலாக அமைந்தது. இதுவரைகாலமும் அமெரிக்கப் படைகளுக்குத் தேவையான ஐ எஸ் தொடர்பான உளவுத் தகவல்களை குர்திஷ் போராளிகளே வழங்கி வந்தனர். ஆனால் துருக்கியப் போர் விமானங்கள் குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா அதைத் தடுக்கவில்லை. குர்திஷ் போராளிகள் இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற சிரியப் பிரதேசத்தை தனதாக்க துருக்கி அவர்களின் பிரதேசத்தை விமானப் பறப்பற்ற பிரதேசம் ஆக்க முயன்றது. அதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது. சிரியாவில் குர்திஷ் மக்கள் இராசியாவின் ஆதரவுடன் தன்னாட்சி பெற்றால் அதை வைத்துக் கொண்டு நோட்டோப் படைக் கூட்டமைப்பில் இரண்டாவது பெரிய படையினரைக் கொண்ட நாடான துருக்கிக்கு இரசியா பெரும் தலையிடியைக் கொடுக்கலாம். துருக்கியில் உள்ள குர்திஷ் மக்கள் தமக்கு என ஒரு தனிநாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாட்டு அரசுகளும் குர்திஷ் மக்களை அழிக்கத் துடிக்கின்றனர்.

சவுதி அரேபியாவின் ஏதிர் வினை என்ன?
சுனி முஸ்லிம் நாடான சவுதி அரேபியா சியா முஸ்லிம் நாடான ஈரானின் ஆதரவுடன் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையகக் கொண்ட சிரியாவில் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தைச் சேர்ந்த பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை கடுமையாக எதிர்க்கின்றது. சவுதி, கட்டார், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளின் அரபுச் செல்வந்தர்கள் அசாத்திற்கு எதிராகப் போராடும் தீவிரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதி உதவி செய்கின்றனர். இரசியப் படைகளின் சிரிய வருகை அசாத்தின் ஆட்சியைத் தக்க வைப்பதை வளைகுடா ஒன்றிய நாடுகளிற் பெரும்பான்மையாவை விரும்பப் போவதில்லை. இதே நிலையில்தான் எகிப்தும் துருக்கியும் இருக்கின்றன. இந்த நாடுகள் இரசியாவின் அசாத்தின் ஆட்சியை தக்கவைக்கும் முயற்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்பதை அடித்துச் சொல்லலாம்.

விமானப் பறப்பற்ற பிரதேசம்
சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்க வேண்டுமென்பது துருக்கியின் நீண்ட நாள் கோரிக்கை. பிரித்தானியாவின் முன்னாள் படைத்தளபதி சேர் கிரஹாம் லாம்ப் சிரியாவில் ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசம் அமைக்கப் படவேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார். மும்மர் கடாஃபிக்கு எதிரான நேட்டோ நாடுகளின் படை நடவடிக்கை ஒரு விமானப் பறப்பாற்ற பிரதேசம் என்னும் போர்வையில்தான் நடந்தது. அதையே சாட்டாக வைத்துக் கொண்டு கடாஃபியின் முழு வான்படையையும் நேட்டோ அழித்து விட்டது. சிரியாவில் இரசியப் படையினர் நிலை கொண்டிருப்பதால் அப்படி ஒரு விமானப் பறப்பற்ற பிரதேசத்தை அங்கு உருவாக்குவது சாத்தியமற்ற ஒன்றாகி விட்டது, சிரிய மருத்துவர்களைக் கொண்ட சிரியாவிர்கான மருத்துவ நிவாரண அமைப்பு  சேர் கிரஹாம் லாம்பினின் விமானப் பறப்பற்ற பிரதேசம் உருவாக்கும் கருத்தை   வரவேற்றுள்ளது. அதன் மூலம் காயப்பட்டவர்களிற்கு மருத்துவ உதவிகள் வழங்கலாம் என அது கருத்து வெளியிட்டுள்ளது.

இன்னும் ஓர் இடைவெளி

மத்திய கிழக்கில் அரபு வசந்தத்தின் பின்னர் நிலை குலைந்து போய் இருக்கும் ஒரு நாடாக லிபியா இருக்கின்றது. மும்மர் கடாஃபியின் ஆட்சியின் கீழ் இரசியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த லிபியாவில் இரசியாவிற்குப் பழக்கப்பட்ட பல நண்பர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அங்கும் ஐ எஸ் அமைப்பு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. ஈரானின் ஆதிக்க நிலப்பரப்பு விரிவாக்கத்தில் லிபியாவிற்கு முக்கிய இடமுண்டு. இந்த இடைவெளியைப் பாவித்து லிபியாவின் தனக்கு சாதகமான ஓர் ஆட்சியாளரை பதவியில் அமர்த்தும் முயற்ச்சியில் இரசியா ஈடு படலாம். அது இரசியாவின் நட்பு வட்டத்தை பரந்ததாக்கும்.

விளடிமீர் புட்டீனும் பராக் ஒபாமாவும்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஐக்கிய நாடுகள் சபையின் 70வது ஆண்டு நிறைவை ஒட்டிய பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது இருவரினதும் உரைகள் ஒன்றிற்கு ஒன்று கடுமையாக முரண்பட்டதாக இருந்தன. தற்போது இருக்கும் முக்கிய முரண்பாடு பஷார் அல் அசாத் பதவியில் தொடருவதா இல்லையா என்பதாகும். அசாத்துடன் தமக்கு எந்தவித தனிப்பட்ட தொடர்பும் இல்லை என்னும் இரசியா அவரைப் பதவியில் இருந்து வெளியார் அகற்றுவதைத் தான் எதிர்ப்பதாகச் சொல்கின்றது. அசாத்தைப் பதவியில் இருந்து விலக்கியே சிரியாவில் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அமெரிக்கா சற்று விட்டுக் கொடுத்து தீர்வு காணும் வரை அவர் பதவியில் இருக்கலாம் எனச் சொல்கின்றது. தனது மக்கள் மீது வேதியியல் குண்டுகளையும் பீப்பாய் குண்டுகளையும் வீசிய அசாத் தண்டிக்கப் படவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகின்றது. இந்த இழுபறி சிரியாவில் தொடர்ந்து அவல நிலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பல இலட்சம் அப்பாவிகளைப் பற்றி எந்தத் தரப்பினரும் கவலை கொள்ளவில்லை.

Tuesday, 29 September 2015

அமெரிக்காவின் விமான மேலாதிக்கம் தொடருமா?

வாஷிங்டனில் நடந்த வான் மற்றும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பாவிற்கும் ஆபிரிக்காவிற்குமான அமெரிக்க வான் படைத் தளபதி ஜெனரல் பிராங் கொரேங் இரசியா அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான வான்வலு இடைவெளியை தனது புதிய தரையில் இருந்து வானை நோக்கிச் செலுத்தும் ஏவுகணை முறைமை மூலம் குறைத்து விட்டது என்றார். நீண்ட காலமாக உலக வான் பரப்பில் தன்னிகரில்லாமல் இருந்த அமெரிக்காவிற்க்கு இரசியாவும் சீனாவும் பெரும் சவால் விடக்கூடிய வகையில் தமது வான் படைகளை வலிமை மிக்கதாக்கிக் கொண்டிருக்கின்றன.

சிக்கனமும் படை வலிமையும்
ஐக்கிய அமெரிக்காவின் விமானப் படை உலகில் தனது மேலாதிக்கத்தைத் தக்க வைக்கப் பெரும் பாடு படுகின்றது. அமெரிக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு மத்தியில் விமானப் படைத்துறையினர் தமது உலக மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண்டியுள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரும் அமெரிக்கப் பாராளமன்றமும் வெள்ளை மாளிகையும் பாதுகாப்புச் செலவீனம் தொடர்பாக நீண்ட விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். வெள்ளை மாளிகையின் பாதுகாப்புச் செலவில் பத்து பில்லியன்களை குறைக்கப் பட வேண்டும் என பாராளமன்றம் வலியுறுத்துகின்றது      

அமெரிக்காவை வென்ற இந்தியா
2014-ம் ஆண்டு அமெரிக்க விமானப் படையின் தாக்குதல் கட்டளையகத்தின் தளபதி ஹால் எம் ஹோர்ண்பேர்க் இரசியப் போர் விமானங்கள் அமெரிக்கப் போர் விமானங்களிலும் பார்க்க மேன்மையானவை என்றார். இரசியப் படைத்துறையினரையே இந்தக் கூற்று ஆச்சரியப்படவைத்தது. அமெரிக்க விமானப் படையினரும் இந்திய விமானப் படையினரும் நடாத்திய போர் ஒத்திகையின் போதே தான் இதை உணர்ந்து கொண்டதாக ஹோர்ண்பேர்க் தெரிவித்தார். அமெரிக்காவின் F-15 C/D Eagle விமானங்களும் இந்தியாவிடமுள்ள இரசியத் தயாரிப்பு Sukhoi Su-30 MKI  போர் விமானங்களும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் போர் ஒத்திகை நடாத்திய போது 90 விழுக்காடு தருணங்களில் இந்திய விமானங்கள் வெற்றியடைந்தன.                                                                                                

சாம் - இரசியாதான் முன்னோடி
இரசியா தனது சாம் எனப்படும் தரையில் இருந்து வான் நோக்கி ஏவும் ஏவுகணை முறைமைகளை மேம்படுத்தியதன் பின்னர் அமெரிக்காவின் F-22, F-15, A-10 ஆகிய போர்விமானங்கள் இரசியாவின் ஆதிக்கத்திலுள்ள கலினின்கிராட் மற்றும் கிறிமியாப் பகுதிகளை ஒட்டிப் பறக்கும் போது மிகவும் கவனத்துடன் பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வியட்னாம் போரின் போது  ஐக்கிய  அமெரிக்காவின் 250இற்கு மேற்பட்டா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய இரசியாவின் S-75A Dvina என்னும் சாம் ஏவுகணைகளை இரசியா இப்போது மிகவும் மேம்படுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கும் அவற்றை விற்றுள்ளது.

தொடரும் தலைமுறைகள்
இரசியாவின் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் அமெரிக்காவின்  ஐந்தாம் தலை முறை விமானமான F-35ஐ விட மேன்மையானது எனப்படுகின்றது. படைக்கலங்களை ஏந்திச் சென்று வீசக்கூடிய ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளைக் கொண்டதுடன் மிகப் புதிய ரகக் கணனிகளைக் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக்கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை. பறப்பு வேகம், பறக்கக் கூடிய ஆகக் கூடிய தூரம் ஆகியவை அமெரிக்காவின் F-22இலும் இரசியாவின் T-50 இலும் ஏறக் குறைய சமமாகவே இருக்கின்றன. T-50இன் எடை 37,000கிலோவாகவும் F-22இன் எடை 38,000 கிலோவாகவும் இருக்கின்றன. இரசியாவின் SU-35 என அழைக்கப்படும் Sukhoi Su-35S Flanker-E என்னும் போர்விமானங்கள் பல மேற்று நாட்டு விமானப் படையினரை கலங்க வைத்துள்ளது.

சீனாவின் விமானத் தொழில்நுட்பம்
தொன்மையான தனது விமானப் படையை கடந்த இருபது ஆண்டுகளாக புதுயவையாக்குவதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. சீனா இரசியாவைப்போல் விமானத் தொழில்நுடப்பத்தில் ஒரு முன்னணி நாடாக இருந்ததில்லை. ஆனால் அது ஒரு முன்னணி நாடாக தன்னை மாற்ற முயற்ச்சிக்கின்றது.

சீன மக்கள் விடுதலைப் படையின் விமானப் படை - China’s People’s Liberation Army Air Force (PLAAF)

அண்மைக்காலங்களாக பல முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை சீனா 2012-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் நடாத்திய விமானப்படை ஒத்திகை எடுத்துக் காட்டியது. பதின்நான்கு பல்வேறுபட்ட விமானப் படையணிகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள் சீன விமானப்படையின் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். சீன விமானப்படை வரலாற்றில் இது ஒரு பெரிய ஒத்திகையாகும். இது பதினொரு நாட்கள் நீடித்தது. 30-11-2012இல் சீனா அரங்கேற்றிய விமானப்படை ஒத்திகை பல படைத்துறை ஆய்வாளர்கள் சீன விமானப்படையின் வல்லமையை குறைத்து மதிப்பிட்டிருந்தனர் என்று நிரூபித்தது. நவீன போர் விமானங்கள் எதிரி இலக்குகளை இனம் காண்பதற்கு இரு தொழில் நுட்பங்களைப் பாவிக்கின்றன. ஒன்று Electro-optical sensor மற்றது infrared sensor.  சீனாவின் J-20 போர் விமானங்கள் இரண்டு தொழில் நுட்பத்தையும் பாவிக்கின்றன. ராடார்களுக்கு தென்படாத stealth fighter விமானங்கள் வைத்திருக்கும் மூன்றாவது நாடாக சீனா 2010இல் இணைந்து கொண்டது. ஆப்கானிஸ்த்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு அமெரிக்க stealth fighter விமானத்தை சீனா விலைக்கு வாங்கி stealth தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சீனா அமெரிக்காவின் ரடார்களுக்குத் தென்படாத ஸ்ரெல்த் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் இணையவெளிகளில் ஊடுருவி திருடிப் பெற்றுக் கொண்டதாக இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் F-35 விமானங்களின் இரகசியங்கள்தான் சீனாவின் J-20 விமானமாக உருவாக்கப்பட்டது எனப்படுகின்றது. இக் குற்றச் சாட்டை சீனா வன்மையாக மறுக்கின்றது. சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின்கள் இரசியாவிடமிருந்தே வாங்கப்பட்டன. இது சீனா இன்னும் விமான உருவாக்கற் துறையில் பின் தங்கியே இருக்கின்றது எனக் காட்டுகின்றது என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டனர்.

சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் உருவாக்கப் பட்ட மிக்-29 போர் விமானங்களின் எஞ்சின்களே. இவை விமானப் படைத்துறையில் நாய்ச் சண்டை என விபரிக்கப்படும் குறுதிய தூரத்தில் இருந்து கொண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று போர் புரியும் பணிகளுக்கு உகந்தவை அல்ல. பின்னர் சீனா இரசியாவின் SU-35 என்னும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இருபத்தி நான்கை வாங்கும் ஒப்பந்தத்தை 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்திட்டது. இது சீன விமானப் படைக்கும் அமெரிக்க விமானப் படைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது. ஆனால் சீனா விமான உருவாக்கற் தொழில்நுட்பத்தை அதிலும் எஞ்சின்கள் உருவாக்கும் வல்லமையை எப்படியாவது வளர்த்திட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனை கொண்டுள்ளது. 

துல்லிய வழிகாட்டி படைக்கலன்கள் - Precision-Guided Munitions (PGM)
ஐக்கிய அமெரிக்கா சிறந்த துல்லிய வழிகாட்டி ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் அவை பெருமளவில் பயன் படுத்தப்பட்டன. வானில் இருந்தும் தரையில் இருந்தும் கடற்கலன்களில் இருந்தும் வேறு வேறுவகையான துல்லிய வழிகாட்டி ஏவுகணைகள் அமெரிக்காவால் பயன்படுத்தப் பட்டன. இவ் ஏவுகணைகள் போரை இலகுவாக்கின. அமெரிக்கப் படைகளின் இழப்பைக் குறைத்தன. கணனியில் விளையாடுவது போல் இந்த ஏவுகணைகளை இயக்கலாம். ஈராக்கியப் படையினருக்கு இவை பலத்த இழப்புக்களை ஏற்படுத்தின. ஆனால் ஈராக்கியப் படைகளை முற்றாக ஒழித்துக் கட்டவுமில்லை அவர்களின் போராட்ட மனப்பாங்கை சிதைக்கவுமில்லை.

அடையாளத்துக்கு முந்து
விமானத் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அம்சம் ஒரு விமானம் எவ்வளவு தொலைவில் வைத்து எதிரி விமானங்களை இனம் காணும் என்பதாகும். எதிரி விமானம் தன்னை இனம் காணமுன்னர் எதிரிவிமானத்தை இனம் காண்டு கொண்டால் எதிரியை முந்திக் கொண்டே அதை நோக்கித் தாக்குதலைத் தொடுக்கலாம். அமெரிக்காவிடம் இந்த துரித இனம்காணும் தொழில்நுட்பம் இரசியாவிலும் பார்க்கவும் சீனாவிலும் பார்க்கவும் சிறந்தவையாக இருக்கின்றது. இரசியாவின் SU-35 விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களை இனம் காணுவதற்கு நூறு மைல்களுக்கு முன்னதாகவே F-35 விமானங்கள் அவற்றை இனம் கண்டுவிடும்.

அடுத்த தலைமுறைக்கான திட்டம்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அல்லது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க விமானங்கள் எண்ணிக்கை அடைப்படையில் அதிக விமானங்களைக் கொண்ட எதிரியைச் சமாளிக்க வேண்டும். அதற்கு எதிரியிலும் பார்க்க மிக மேன்மையான தொழில்நுட்பத்தைக் கொண்ட விமானங்கள் அமெரிக்கப் படையினருக்கு அவசியம் என்பதை அமெரிக்காவின் பாராளமன்றமும் உணர்ந்துள்ளது. தனது விமானப் படையின் மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண அமெரிக்கா The Next-Generation Air Dominance program என்னும் திட்டத்தை வரைந்துள்ளது. பல உட் பிரிவுகளை இத் திட்டம் கொண்டுள்ளது. 2030-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் இத்திட்டம் வரையப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மொத்த செலவீனத்தில் 25 விழுக்காடு வெட்டு தேவை என அறிவுறுத்தியுள்ளது. இருந்தும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை அமெரிக்க விமானப்படைக்கு புதிய தொலைதூரத் தாக்குதல் விமானங்களை உருவாக்குவதற்கான செலவீனங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அமெரிக்கப் போர் விமானங்களில் தற்போது Lockheed Martin  நிறுவனம் தயாரித்த F-22 Raptor போர் விமானங்களே தற்போது ஓரளவுக்கு சீனா மற்றும் இரசியப் போர் விமானங்களுடன் நின்று பிடிக்கக் கூடியவை.

ஆறாம் தலைமுறைப் போர் விமானங்கள்
அமெரிக்காவின் வான் படையினர் 2030-ம் ஆண்டு தாம் உலக வான் பரப்பில் ஆதிக்கம் முழுமையாகச் செலுத்தக் கூடிய திட்டத்தை வரைந்துள்ளனர். இத் திட்டத்தின் முக்கிய அம்சமாக ஆறாம் தலைமுறைப் போர் விமானங்கள் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை 2025-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் உருவாக்க விருக்கின்றது. ஆறாவது தலைமுறை விமானங்களில் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் கருக்கி விழுத்தப்படும். சில வையானவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக அதாவது ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். பி-3 வகையறாக்கள் ஒலியிலும் குறைவான கதியில் பறக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் உன்னத தகவல் பரிமாற்றமும் இருக்கும். சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க வேகமாக இயங்காது. சீனாவின் J-20 ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கும் ஆனால் திடீரெனத் திருப்ப முடியாத்து. திரும்ப முன்னர் 300மைல்கள் பறக்க வேண்டும். இதனால் அமெரிக்கா தனது ஆறம் தலைமுறைப் போர் விமானங்களை வானில் இருந்து வேறு விமானங்களுடன் சண்டை செய்யக் கூடிய வகையில் இலகுவாகவும் துரிதமாகவும் திரும்பிப் பறக்கக் கூடிய வகையில வடிவமைக்கின்றது. அமெரிக்கா உருவாக்க விருக்கு பி-3 போர் விமானங்கள் பி-2 விமானங்களிலும் பார்க்கக் குறைந்த அளவு எடையுள்ள படைக்கலன்களையே தாங்கிச் செல்லும். ஆனால் தொடர்ந்து 5000 மைல்கள் பறக்கக் கூடியவை. இதனால் பல அமெரிக்கத் தளங்களில் இருந்து இரசியாவையோ அல்லது சீனாவையோ ஒரே பறப்பில் சென்றடையும்.
பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைக்கும் முகமாக அமெரிக்காவின் கடற்படையும் விமானப் படையும் இணைந்து ஆறாம் தலைமுறை விமானங்களை உருவாக்கவிருக்கின்றன.

இரசியாவின் எதிர்வினை எப்படி?
2014-ம் ஆண்டு இரசியா தனது 6-ம் தலைமுறைப் போர்விமான உருவாக்கத்தை அறிவித்தது.  விமானத்தின் உடல் எடையில் இரசியா அதிக கவனம் செலுத்துகின்றது. குறைந்த எடையில் நீண்டகாலம் பாவிக்கக் கூடிய வகையில் உலோகக் கலவையை அது உருவாக்குகின்றது. காற்றில்லாத வானவெளியிலும் பறக்கக்கூடியதாக இரசியாவின் 6-ம் தலைமுறைப் போர் விமானங்கள் அமையவிருக்கின்றன. இவையும் சிறப்பான இலத்திரனியல் தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும். முழுமையான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் விமான ஆதிக்கப் போட்டி தீவிரமடையும் போது சீனா ஒன்றில் பின் தங்க வேண்டும் அல்லது இரசியாவுடன் இணைந்தும் சார்ந்தும் செயற்பட வேண்டும். மூன்றாவது தெரிவு இணைய வெளியூடாக 6-ம் தலைமுறை விமானங்களின் தொழில்நுட்பங்களைத் திருட வேண்டும். இருந்தும் 2015 டிசம்பரில் சீனா ஆறாவது தலைமுறைப் போர்விமானங்களைத் தானும் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது.

Saturday, 26 September 2015

சீனாவில் இருந்து வெளியேறும் மூலதனங்கள்

சீனாவில் இருந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து 2015-ம் ஆண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலத்தில் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனங்கள் வெளியேறின. பின்னர் 2015 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 141.66 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனம் சீனாவில் இருந்து வெளியேறியது. நான்கு ரில்லியன் டொலர்களாக இருந்த சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இப்போது 3.6 ஆகக் குறைந்து விட்டது. நாட்டை விட்டு மூலதனங்கள் வெளியேறுவதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக் குறையைத் தவிர்க்க சீன மைய வங்கி தனது வட்டி விழுக்காட்டை 2014 நவம்பரில் இருந்து எட்டு மாதங்களில் ஐந்து தடவைகள் குறைத்துள்ளது.

சீனாவின் சொத்துக் கரைகின்றது
சீனாவின் பெரும் சொத்தாக இருக்கும் அதன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு தொடர்பான தகவல்களும் நம்பகத் தகுந்ததாக இல்லை. அத்துடன் அதில் பெரும் பகுதி திரவத்தன்மை குறைந்த நீண்டகால முதலீடுகளில் முதலிடப்பட்டுளது. இதனால் சீனப் பொருளாதாரக் கப்பலில் ஓட்டை விழும் போது உடனடியாக அதை அடைக்கக் கூடிய நிலையில் சீனா இல்லை. 3.6 ரில்லியன் டொலர்களில் 667 பில்லியன்கள் மட்டுமே தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. ஏற்றுமதியை ஒட்டி வளர்ந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்றுமதி பெருமளவு வீழ்ச்சியைக் கண்டது. இதனால் ஏற்பட்ட உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சியை நிரப்ப சீன அரசு பெருமளவு முதலீடுகளைச் செய்தது. பிக்கிங் பல்கலைக்கழகத்தின் அரசியற்பொருளாதாரப் பேராசிரியர் கிறிஸ்டபர் பொல்டிங்கின் கருத்துப்படி சீனாவின் முதலீட்டுக் கூட்டுறவு வங்கி  தனது மூலதனத்தை சீன மைய வங்கியிடமிருந்து அமெரிக்கக் கடன் முறிகளாகவே கடன் பெற்றது. இதனால் சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருபது முதல் இருபத்தைந்து வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்கின்றார் அப்பேராசிரியர். ஆனால் உள்ளூரில் செய்யப்பட்ட பல முதலீடுகள் இலாபத் திறன் குறைந்தவனவாகவே இருந்தன. சீனாவில் வெற்றுக் கட்டிடங்கள் மைல்கணக்கில் நீண்டு இருக்கின்றன. அது போலவே பயன்படுத்தப்படாத பல புதிய விமான நிலையங்கள் பெருந்தெருக்கள் பல இருக்கின்றன.
தனது பெருமளவு ஏற்றுமதியால் கிடைத்த மிகையான அமெரிக்க டொலர்களை அமெரிக்காவின் கடன் முறிகளை வாங்குவதிலும் சீனா ஆபிரிக்க நாடுகளில் விவசாயங்களை வாங்குவதிலும் பாக்கிஸ்த்தானிலும் இலங்கையிலும் துறைமுகங்களைக் கட்டுவதிலும் நியூசிலாந்தில் பாற்பண்ணைகளை வாங்குவதிலும் கனடாவில் எரிபொருள் நிறுவனங்களை வாங்குவதிலும் ஐஸ்லாந்தின் வடதுருவப் பிரதேசத்தில் பனிப்பாறைகளை ஆய்வு செய்வதிலும் செலவழித்தது. அத்துடன் புதிய அபிவிருந்தி வங்கி, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி எனப் பன்னாட்டு வங்கிகளையும் ஆரம்பித்தது. மேலும் பட்டுப்பாதை, புதியபட்டுப்பாதை, பட்டுப்பதையை ஒட்டிய பொருளாதார வலயம் எனவும் பெரும் நிதிகளை முதலீடு செய்தது.

சீனாவால் உலத்தில் காசுத் தட்டுப்பாடு ஏற்படுமா?
சீனாவின் வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்து கொண்டு போவது உலக அரங்கில் ஒரு நாணயத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தைக் கூட உருவாக்கியுள்ளது. Quantitative Easing எனப்படும் நாணயங்களுக்கான அளவுசார் தளர்ச்சி இனி quantitative tightening என்னும் அளவுசார் இறுக்கம் என ஆகிவிடுமா என எண்ணத் தோன்றுகின்றது.

கடந்த ஓராண்டு காலமாகச் சீனப் பொருளாதரத்தின் நகர்வுகள் இப்படி இருந்தன:

சீனப் பங்குகள் 12 மாதத்தில் 150விழுக்காடு விலை அதிகரிப்படைந்தன. பின்னர் 30 விழுக்காடு வீழ்ச்சியைக்கண்டன. சீனா தனது நாட்டின் 97 விழுக்காடான பங்குகளின் விற்பனையைத் தடை செய்தது. சீனா 1.2 ரில்லியன் டொலர்களை பெரிய பங்குகளின் விலைகள் சரியாமல் இருக்கச் செலவிட்டது. சீனா தனது பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைவதாக அறிவித்தது. சீன நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியைத் தக்க வைக்க பெருமளவு செலவு செய்தது. இந்தக் காட்சித் தொடர் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் காட்டியது. ஏற்கனவே சீனாவின் உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பைச் சந்தித்துள்ளனர்.

சீனாவில் இருந்து மூலதனம் பெருமளவில் வெளியேறுவதற்கான காரணங்கள்:
1. நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள்
சீன அரசு அதனது நாணயத்தின் பெறுமதியையும் அதன் பொருளாதார வளர்ச்சியையும் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தமது முதலீடுகளை விற்று விட்டு சீனாவில் இருந்து வெளியேறுகின்றன. தென் கொரியா உட்படப் பல ஆசிய நாடுகள் தமது பங்குச் சந்தை விலையை நிலைப்படுத்த என நிதியங்களை உருவாக்கியுள்ளன. பங்குச் சந்தை விலைச் சரிவைச் சந்திக்கும் போது அந்த நிதியங்கள் பங்குகளை வாங்கும். விலை ஏறும் போது விற்கும். இப்படி ஒரு நிதியம் சீனாவில் இல்லாதது சீனாவில் முதலீடு செய்பவர்களைத் தயங்க வைக்கின்றது.
2. சீன நாணயம் மேலும் மதிப்பிழக்கலாம் என்ற அச்சம்.
றென்மின்பி என்றும் யூவான் என்றும் அழைக்கப்படும் சீன நாணயத்திண் பெறுமதியை முன்னர் அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயித்து வந்தது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இப்போது இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. இந்த முடிவால் சீன நாணயத்தின் பெறுமதி குறையலாம் என்ற அச்சம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இதனால் அவர்கள் சீனாவில் தாம் செய்த முதலீடுகளை சீன நாணயத்தின் பெறுமதி மேலும் வீச்சியடையும் முன்னர் அதை விற்றுக் கொண்டு அமெரிக்க டொலர்களாக மாற்ற முயல்கின்றனர். 
3 ஏறு முகமாக நிற்கும் அமெரிக்க டொலர்
அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அங்கு வேலையற்றோர் தொகை வீழ்ச்சியடையும் அதேவேளை ஊதியம் உயர்வடையாமல் இருக்கின்றது. இது போன்ற காரணிகளால் அமெரிக்க டொலரின் மதிப்பு இனி ஏற்றத்தையே அடைந்து கொண்டிருக்கும் எனப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் அதனால் அவர்கள் சீனாவில் முதலிடுவதிலும் பார்க்க அமெரிக்காவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள்.
4. வளர்ச்சி வேகம் குறையும் சீனப் பொருளாதாரம்.
சீன 2015-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7.5விழுக்காட்டில் இருந்து 7.4 விழுக்காடாகக் குறைத்துள்ளது. 2015 ஓகஸ்ட் மாதத்திற்கான சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும்(10.9%) தொழிற்சாலைகளின் உற்பத்தியும்(6.4%) ஏதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே அமைந்திருந்தன. சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி (Purchasing Managers’ Index) ஜுலை மாதம் 50ஆக இருந்து ஓகஸ்ட் மாதம் 49.7 ஏழாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் வெளிவந்த பின்னர் 2015 செப்டம்பர் மாதம் 14-ம் திகதி சீனப் பங்குச் சந்தையும் வீழ்ச்சியைக் கண்டது. சீன உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை பெரிய அளவில் குறைக்கின்றார்கள். இதனால் சீனாவில் இலாபத் திறன் குறைகின்றது. பொருளாதாரத்தில் இலாபத் திறன் குறையும் போது முதலீடுகளுக்கான கவர்ச்சி குறைகின்றது. பொருளாதாரப் புள்ளி விபரங்கள் மோசமாக இருப்பதால் சீன அரசு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்ட எடுத்த முயற்ச்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. ஏற்கனவே சீனாவின் புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை என்ற கருத்துப் பரவலாக நிலவுகின்றது.
5. சீனாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்கள்
சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.  சீனாவில் இருந்து ஒருவரி ஐம்பதியானையிரம் டொலர்களை மட்டுமே வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 200-ம் ஆண்டிற்கும் 2014-ம் ஆண்டிற்கும் இடையில் சீனாவில் இருந்து 3.7 ரில்லியன் டொலர்கள் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி சீனாவைப் பெருமளவு பாதித்த 2011-ம் ஆண்டு மட்டும் 600பில்லியன் டொலர்கள் சீனாவில் இருந்து கடத்தப்பட்டுள்ளன.

ஏற்றுமதியிலும் உள்ளூர் முதலீட்டிலும் தனது பொருளாதாரத்தை வளர்த்து வந்த சீனா இப்போது உள்நாட்டுக் கொள்வனவை அதிகரித்து அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கின்றது. தனிநபர் வருமானம் குறைவாக உள்ளதும் இப்போதும் ஒரு வளர்முக நாடாகவும் இருக்கும் சீனாவில் இது மிகவும் சிரமமான காரியம். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எண்ணத்தில் அங்கிருந்து மூலதனம் வெளியேறும் போது நாணயத்தின் பெறுமதி மேலும் மோசமகக் குறைவடையும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...